சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German trade union officials and academics publish defense of European Union

ஜேர்மனிய தொழிற்சங்க அதிகாரிகளும் உயர்கல்விக் கூடத்தினரும் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பிற்கு அறிக்கை வெளியிடுகின்றனர்

By Johannes Stern
5 April 2012

use this version to print | Send feedback

மார்ச் 26ம் திகதி, பல முக்கிய ஜேர்மனிய தொழிற்சங்க அதிகாரிகளும் இடது சமூக அறிவியல் வல்லுனர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஐரோப்பாவை ஒரு புதிய அஸ்திவாரத்தில் நிலைநிறுத்துக என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்; இது ஐரோப்பிய ஒன்றியம் (EU) பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுக்கிறது. ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் இடையே வெகுஜன வேலை நீக்கங்கள் மற்றும் சமூகப் பணிகளில் வெட்டுக்கள் குறித்து பெருகும் எதிர்ப்பிற்கு விடையிறுப்பு ஆகும்.

இந்த வாரம் முன்னதாக, யூரோஸ்டாட் என்னும் புள்ளிவிபர நிறுவனம் புதிய வேலையின்மை விபரங்களை அறிவித்தது; இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் வேலையின்றி உள்ளனர் எனக் காட்டப்பட்டுள்ளது. 1997ல் இருந்து தற்போதைய வேலையின்மை விகிதமான 10.2 சதவிகிதம் என்பது மிகவும் அதிகமானது ஆகும்.

 

Le Monde நேபிள்ஸிலும் மற்ற வறிய பகுதிகளிலும் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரித்து வருகிறது என அதிர்ச்சிதரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

EU மற்றும் அதன் நிறுவனங்கள் ஒவ்வொரு நாடாக பொதுநலத் திட்டங்களில் கடுமையான வெட்டுக்களை சுமத்துதல், வெகுஜனப் பணிநீக்கம் பொதுத்துறையில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதை மில்லியன் கணக்கான மக்கள் காண்கின்றனர். கிரேக்கத்தை பேரழிவிற்கு தள்ளியபின், முக்கூட்டான ஐரோப்பிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை இப்பொழுது ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்த்துக்கல் மீது இலக்கு கொண்டுள்ளன. EU விற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு பெருகிய முறையில் வளர்ந்துள்ளது.

இந்நிலைமையில், பல ஜேர்மனிய தொழிற்சங்க அதிகாரிகளும் உயர்கல்விக் கூடத்தினரும்தத்துவவியலாளர் யூர்கென் ஹபெர்மாஸ் உட்படஐரோப்பிய ஒன்றியம் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பியத் திட்டம்..... ஒரு விளிம்பில் நிற்கிறது என்று கவலையுடன் அவர்கள் எழுதியுள்ளனர். மக்கள் பெருகிய முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தங்கள் பரிவுணர்வு, ஒப்புதலிலிருந்து விலகுகின்றனர். இந்த அறிக்கையானது ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளின் பாதிப்புக் குறித்துக் குறைகூறுவதுடன், ஐரோப்பா மீது (நிதியச்) சந்தைகளின் மேலாதிக்கத்தையும் கண்டிக்கிறது. அது தொடர்ந்து எழுதுகிறது: ஊதியங்கள், சமூக நலன்கள் ஆகியவற்றின் பொதுச் செலவுகள் மிகத் தீவிரமாகக் குறைக்கப்படுகின்றன.... வருமானம் ஈட்டுபவர்கள், வேலையின்மையில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பிணை எடுப்பின் செலவுகளைச் சுமக்குமாறு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த நிலைமையை பிரஸ்ஸல்ஸிலுள்ள நிறுவனங்களின் பிற்போக்குத்தனத்திற்கு சான்று எனக் கருதாமல், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும், உயர்கல்விக் கூடத்தினரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுக் குறைப்புக் கொள்கைக்கு எதிரான சமூக இணக்கம் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் என்னும் கருப்பொருள் இலக்கை முன்வைக்கின்றனர். இந்த உயர்சிந்தனை இப்பொழுது காணப்படவில்லை, உண்மையான வாழ்வில் எப்பொழுதுமே இருந்தது இல்லை.

இந்த அறிக்கை திசை மாற்றத்திற்கான வாய்ப்பு குறித்துப் பேசுகிறது. நிதிய செயற்பாடுகளின் மீது வரி சுமத்துவதின் மூலம், யூரோப் பத்திரங்கள் தோற்றிவிக்கப்படல், மற்றும் பணவீக்கம் கொண்ட நிதியக் கொள்கை ஏற்கப்படல் ஆகியவற்றின் மூலம் இது சாதிக்கப்படலாம் என்று அது வாதிடுகிறது. இது ஜனநாயகத்தின் தாக்குதலுக்கும் அழைப்பு விடுகிறது. ஐரோப்பாவிற்கு ஒரு வருங்காலம் தேவை என்றால், மக்களுடைய இசைவு, உடன்பாடு ஆகியவை தீவிரமாக நாடப்பட வேண்டும்.” “ஐரோப்பிய பொது அரங்கில் உள்ளவர்கள் அனைவரும் சமூக, ஜனநாயக ஐரோப்பா என்பதுதான் மத்தியக் கருத்தாக இருக்க வேண்டும் என்பதற்கு உடன்பட வேண்டும் என்று அது மேலும் கூறியுள்ளது.

இந்த மாற்றீட்டுப் பொருளாதாரக் கொள்கை, ஜனநாயகம் பற்றிய வெற்று வனப்புரை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முற்றிலும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நலன்களுக்குத்தான் செயல்படுகிறது என்னும் உண்மையை மறைக்கிறது. இது ஐரோப்பாவின் ஆளும் வர்க்கத்தின் கருவிபெரும் வர்க்கப் போராட்டத்தை ஒரு நூற்றாண்டு காலம் நடத்தி அதன் மூலம் அடையப்பட்ட எல்லா சமூக, ஜனநாயக உரிமைகளையும் அழிப்பதற்கான கருவிதான்.

EU வைப் பாதுகாப்பதற்கானவர்களின் வாதங்கள் அனைத்தும் அபத்தமானவை. இவர்கள் ஜனநாயகத்தின் தாக்குதல் என்று முக்கூட்டும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களும் கிரேக்கத்திலும் இத்தாலியிலும் முற்றிலும் ஜனநாயகமற்ற வழிவகைகளில் அரசாங்க மாற்றத்தைக் கொண்டுவந்து தொழில்நுட்பவாத அரசாங்கங்களை இருத்தியுள்ளபோது கூறுகின்றன. அந்த அரசாங்கங்கள் அந்நாடுகளில் பரந்த மக்கள் பெரும்பான்மையின் விருப்பத்திற்கு எதிராக, நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்காக மிருகத்தன பொதுநலச் செலவுகளைக் குறைக்கும் வெளிப்படையான பணியைத்தான் கொண்டுள்ளன.

ஏதென்ஸ் மற்றும் ரோமில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நியமிக்கபட்டுள்ள அரசாங்கத் தலைவர்கள்முறையே லூகாஸ் பாப்படெமோஸ், மரியோ மோன்டிமுன்னாள் வங்கியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் ஆவார்கள். இவர்களுடைய அரசாங்கங்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஐரோப்பிய வங்கிகள் மற்றும் நிதிய உயரடுக்கின் நலன்களுக்குப் பகிரங்கமான ஈடுபாட்டைக் கொண்டவை.

EU நிதி மந்திரிகள் நிதிய உடன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுத்தனர்; அதில் ஜேர்மனிய மாதிரியை பின்பற்றிக் கடன் உச்சவரம்பு ஒன்று உள்ளது. இது கூட்டாட்சி, மாநில, உள்ளூராட்சி அளவில் சட்ட மன்ற உறுப்பினர்களைக் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் எடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. இச்சமூகப் பேரழிவுக் கொள்கையை அவர்கள் எதிர்த்தால், மக்கள் அழுத்தத்தையொட்டி கைவிட்டால், குற்ற விசாரணைக்கு உட்பட நேரிடும்.

ஐரோப்பிய ஒன்றிய கொள்கை ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகளின் ஆணைகளில் உருவாகிறது. முதலில் நிதிய உயரடுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை மக்கள் வரிப் பணத்தால் நிறைந்த அரசாங்கக் கருவூலங்களில் இருந்து வங்கிகளுக்கும் ஊக வணிகர்களுக்கும் 2008 நிதியச் சரிவை அடுத்து வந்த பிணை எடுப்புக்களின் மூலம் பெற்றது. அதன்பின் அவர்கள் மக்கள் தங்கள் தகுதிக்கு மீறி வாழ்க்கை நடத்துகின்றனர் என்று கூறி பல அரசாங்கங்களையும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர். இப்பொழுது அவர் பொருளாதார நடவடிக்கை மற்றும் வெகுஜன வேலையின்மையை பயன்படுத்தி தொழிலாள வர்க்கம் கடந்த காலத்தில் போராடிப் பெற்றுள்ள அனைத்து சமூக நலன்களையும் அழிக்குமாறு உத்தரவிடுகின்றனர்.

இச்சூழ்நிலையில் EU வை ஜனநாயகப்படுத்துவது குறித்துப் பேசுபவர்கள் ஒன்று முட்டாள்கள் அல்லது அரசியல் சாத்தான்கள். எவ்வகையிலும் அவர்கள் EU உடைய வலதுசாரிக் கொள்கைகளை இடதுசாரிச் சொற்றொடர்கள் மூலம் மூடிமறைக்கத்தான் பார்க்கின்றனர்.

அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள தொழிற்சங்க அதிகாரிகளும் கட்சி உறுப்பினர்களும் தற்போதைய EU கொள்கைகள் வளரவும், செயல்படுத்தப்படுவதற்கும் துணை நின்றவர்கள், ஈடுபட்டு ஒத்துழைத்தவர்கள். மேலும் அவர்கள் வழிநடத்தும் நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பெருகிய மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கும் அதைச் சிதைப்பதற்கும் பயனற்ற எதிர்ப்புக்களை நடத்தியதின் மூலம் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. அறிக்கை வெளிவருவதற்கு சில நாட்கள் முன்புதான் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் முக்கிய ஐரோப்பிய தொழிற்சங்கத் தலைவர்களை, அவர் கூறியதுபோது வருங்காலத்திற்கான போக்கில் இருத்துவதற்காகச் சந்தித்தார்.

இந்த அறிக்கையே தொழிற்சங்கங்கள் கொள்கையளவில் சமூக வெட்டுக்கள் ஐரோப்பா முழுவதும் நடத்தப்படுவதற்கு ஆதரவு கொடுப்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது. இதன் பொருளுரை நிதிய உடன்பாட்டை அதன் தற்பொழுதைய வடிவமைப்பில் [வலியுறுத்தல் நமது] நிராகரிக்க வேண்டும் என்றும் நிதியக் கொள்கையின் வடிவமைப்பு மறு பேச்சுக்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறது. சாராம்சத்தில், தொழிற்சங்கங்கள் அவர்கள் வெட்டுக்களை இயற்றுவதிலும், செயல்படுத்துவதிலும் இன்னும் நேரடியாகத் தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டுமென்று தான் கோருகின்றனர்.

இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்ட சமூகத் தாக்குதல்களில் முதிர்ந்த ஒத்துழைப்பாளர்கள் ஆவார்கள். ஜேர்மனிய தொழிற்சங்கங்கள் சமூக ஜனநாயக, பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கமான சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடருடையதுடன் இணைந்து செயல்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் காணப்படாத அளவிற்கு சமூகக் குறைப்புக்களை அறிமுகப்படுத்தியவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள், EU மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்த ஜேர்மனிய மாதிரியைத்தான் இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களை ஐரோப்பா முழுவதும் கொண்டுவருவதற்கு வடிவாகக் கருதுகின்றன.

கையெழுத்திட்டவர்கள் பட்டியல் ஜேர்மனிய தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் முக்கிய நபர்கள் பட்டியல்போல்தான் உள்ளது. இந்த அழைப்பைத் தொடக்கியவர்களில், வெர்டியின் தலைவரான Frank Bsirske, ஜேர்மனிய கூட்டமைப்புத் தொழிற்சங்கத்தின் (DGB) Annelie Buntenbach என்பவர் பசுமைக்கட்சி மற்றும் Attac இன் உறுப்பினராகவும் இவர் உள்ளார், IG Metall சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான Hans-Jürgen Urbahn ஆகியோர் உள்ளனர். முதலில் கையெழுத்திட்டவர்களுள் DGB தலைவர் மைக்கேல் சோமரும், முன்னாள் IG Metall தலைவரும் இப்பொழுது சொத்துக்கள், வணிக ஆலோசகராக உள்ளவருமான Franz Steinkühler ஆகியோர் உள்ளனர்.

இப்பட்டியலுடன் இணைக் கையெழுத்திட்ட சில உயர்கல்விக் கூடத்தினரும் உள்ளனர். ஹாபெர்மஸைத் தவிர, சமூக அறிவியல் வல்லுனர்களான Elmar Altvater, Frank Deppe ஆகியோர் உள்ளனர்; இவர்கள் இருவரும் இடது கட்சியின் உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு ஜனநாயக மறைப்பைக் கொடுப்பதுதான் அவர்கள் பணி என்று நீண்ட காலமாகக் காணப்படுபவர்கள்.

ஆனால் உண்மைகள் உறுதியானவை;  துவக்கத்தில் இருந்தே ஒவ்வொரு நாளும் EU ஒரு ஆளும் வர்க்கங்களின் முனைப்புச் செயல் என்பது தெளிவாகத்தான் அறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய பொதுச் சந்தை ஒன்றை நிறுவியது மேற்கு ஐரோப்பாவை சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பனிப் போர்க் காலத்தில் வலுப்படுத்துவதற்குத்தான் 1970 களில் இது வேலைநிறுத்தங்கள், தொழிலாளர்கள் இயக்கங்களை நசுக்குவதற்கு ஒரு கருவியாயிற்று. அதுவும் குறிப்பாக ஜேர்மனிய மறு இணைப்பிற்குப்பின், 1990களில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின், ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பியப் பெரும் சக்திகளால் மாறிய உலக நிலைமையில் தங்கள் நலன்களை உறுதிப்படுத்துவதற்குக் கருவியாகத்தான் பயன்படுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடு என்பது 1992ல் மாஸ்ட்ரிச்சில், சோவியத் ஒன்றியம் சரிந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் கையெழுத்தானது. ஆரம்பத்தில் இருந்தே, ஐரோப்பிய ஒன்றியம் அதன் பணி ஐரோப்பியப் பெருநிறுவனங்கள் சர்வதேசப் போட்டிக்கு எதிராக வலுப்பெறுவதற்கு உதவுதல் என்று கண்டது. லிஸ்பன் மூலோபாயம் என்று அழைக்கப்பட்ட, 2000ம் ஆண்டில்  ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரகால உச்சி மாநாட்டில் தலைவர்களால் போர்த்துக்கல்லில் ஏற்கப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியம் உலகிலேயே மிகவும் போட்டித் தன்மை உடைய அறிவுச்சார்பு இயக்கமுறையை தளமாக கொண்டிருக்க வேண்டும் என்ற இலக்கை ஏற்றது.

நடைமுறையில் இதன் பொருள் என்ன என்பது தற்போதைய கிரேக்கத்தில் காணப்படலாம். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகள் நாட்டை முற்றிலும் பேரழிவிற்கு உட்படுத்தி கிரேக்க மக்களின் பரந்த பிரிவுகளை வறுமையிலும், இழிவிலும் தள்ளியது. மிகப் பெரிய வேலை நீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் எனக் கிரேக்கப் பொருளாதாரத்தில் நடத்தப்பட்டவைகள் நாட்டை ஆழ்ந்த மந்தநிலையில் தள்ளிவிட்டன. இதன் விளைவுகள் பசியும், ஏதென்ஸில் இலவச சூப் வழங்குமிடத்தில் பெரிய வரிசைகள் நிற்பதும்தான். உத்தியோகபூர்வ வேலையின்மை 23%க்கும் அதிகமாக உள்ளது; இளைஞர் வேலையின்மை கிட்டத்தட்ட 60% இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தச் சமூகத் தீயகனாவை நிறுத்துவதற்கு, ஐரோப்பியத் தொழிலாளர்கள் முழு நனவுடன் ஐரோப்பிய ஒன்றியம், அதன் நிறுவனங்கள் மற்றும்அரசியல் ஆதரவாளர்களுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்த வேண்டும். ஐரோப்பிய தொழிலாளர்களினதும் மற்றும் அனைத்து மக்களின் ஐக்கியமும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தோற்றுவிக்கப்படாது, அதற்கு எதிரான போராட்டத்தின் மூலம் தான் தோற்றுவிக்க முடியும்.

ஐரோப்பிய ஒன்றியம் கீழிறக்கப்பட்டு அதற்குப் பதிலாக தொழிலாளர்களின் அரசாங்கங்கள் ஐரோப்பா முழுவதும் நிறுவப்பட வேண்டும். ஹாபெர்மாஸின் ஐரோப்பிய ஒன்றியத்தை ஜனநாயகப்படுத்துதல் என்ற சொற்றொடர்கள் ஒருபுறம் இருக்க, உண்மை என்ன என்றால் ஐரோப்பா முதலாளித்துவத்தின் அடிப்படையில் ஜனநாயக ரீதியாக ஐக்கியப்படுத்த முடியாது. ஒரு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் மூலம் தான் அது முடியும்.