சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Full rights for immigrant workers!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முழு உரிமைகள்!

Statement by Jerry White, SEP candidate for US president
7 April 2012

use this version to print | Send feedback

அமெரிக்க ஜனாதிபதிப் பதவிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் என்னும் முறையில், இதுவரை ICE என்னும் குடியேற்ற, சுங்கச் செயற்பாட்டுப்பிரிவின் சுற்றிவளைப்பிலேயே மிகப் பெரிதாக உள்ள 3,000 புலம்பெயர்ந்தவர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளதை நான் கண்டிக்கிறேன்.

ஒபாமா நிர்வாகத்தால் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் நீண்ட தொடர்ச்சியான ஆத்திரமுட்டல் நடவடிக்கைகளில் சமீபத்தியதுதான் இத்தாக்குதல். அரசாங்கத்தின் குடியேற்ற-எதிர்ப்பு நடவடிக்கைகள் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை இராணுவமயமாக்கியிருத்தல், மிக அதிக தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது மற்றும் ஆவணமற்ற தொழிலாளர்களை நியமித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் வணிக நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானவற்றிற்கு எதிரான கூட்டாட்சிச் சோதனைகள் ஆகியவை அடங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தின் மையம் சர்வதேசியமாகும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் முழு உரிமைகளுடன் வாழ்வதற்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் எங்கும் உரிமை இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அவர்களுக்கும் நல்ல ஊதியமளிக்கும் வேலைகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் வீடுகள் போன்ற அடிப்படை உரிமைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல், முழுத் தொழிலாள வர்க்க தொகுப்பின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலை ஆழப்படுத்தப்படுவதின் ஒரு பாகமாகும். ஒபாமா நிர்வாகம் இருகட்சிகள் சார்ந்த உந்துதல் ஒன்றை ஊதியங்களைக் குறைப்பதற்கும், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு உட்பட மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் சமூகப் பணிகளை தாக்குவதற்கும் தலைமை தாங்கி வருகிறது.

ICE சோதனைகளின் நோக்கம், இடைவிடா அச்சம், அடக்குமுறைச் சூழ்நிலையை தக்க வைத்தல் என்பதாகும். நாடு கடத்தப்படுதல், குடும்பங்கள் உடைக்கப்படுதல் என்னும் பயமுறுத்தலும் புலம்பெயர் தொழிலாளர்களின் வறுமை நிலை ஊதியங்களும் மிருகத்தனமான சுரண்டலைத் தடுக்க முயலுதலை தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

2006ம் ஆண்டில் மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவில் குடியேறுவோர் உரிமைகள் பற்றிய வரலாற்றில் மிகப் பெரிய எதிர்ப்புக்களில் பங்கு பெற்றனர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையை இராணுவப்படுத்திவிடத் திட்டமிடப்பட்டிருந்த சட்டம் குறித்து பரந்த மக்கள் சீற்றம் வெளிப்பட்டது; அதேபோல் ஆவணமற்ற  பாதுகாப்புக் கொடுக்கும் எவரையும் குற்றச்சாட்டிற்கு உட்படுத்திவிடும் சட்டத்திற்கும் எதிர்ப்பு இருந்தது.

இந்த எதிர்ப்புக்களில் பல்லாயிரக்கணக்கான ஆவணமற்ற தொழிலாளர்கள் இருந்தனர்; அவர்கள் தங்கள் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் அச்சறுத்தல்களைத் தைரியமாக எதிர்த்து நின்றனர்அந்த நேரத்தில் புஷ் நிர்வாகம் ஆட்சியில் இருந்தது.

ஆனால் அரசியல் நடைமுறைக்குப் பின் இந்த ஆர்ப்பாட்டங்கள் திசை திருப்பப்பட்டன. ஜனநாயகக் கட்சி சார்புடைய குழுக்களும் ஹிஸ்பானிய அடையாள அரசியல் வளர்க்கும் நபர்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலன்கள், ஜனநாயகக் கட்சியை, 2008ல் பாரக் ஒபாமாவை வெற்றி அடையச் செய்வதின்மூலம் முன்னேற்றுவிக்க முடியும் என்று வாதிட்டனர்.

இப்பொழுது அச்சட்டத்தின் பல பிரிவுகள் கூட்டாட்சி அளவில் இயற்றப்பட்டுவிட்டன. ஏனைய பகுதிகள் 2010ல் அரிசோனாவில இயற்றப்பட்ட கடுமையான குடியேற்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இடைவிடாச் சோதனைகள் தெளிவாக்குவது போல், நிர்வாகம் அரிசோனாச் சட்டத்தைக் குறைகூறுதல் என்பது புலம்பெயர்வோர் உரிமைகளைக் காப்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

மில்லியன் கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் 2008 தேர்தலில் ஒபாமாவிற்கு வாக்களித்தனர்; நாட்டின் முதல் சிறுபான்மை ஜனாதிபதி தங்கள் நிலைமைகளில் முன்னேற்றம் கொண்டுவருவார் என்று நம்பினர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, ஒபாமா குடியரசுக் கட்சியினரைப் போலவே பழிவாக்கும், வலதுசாரி, புலம்பெயர் எதிர்ப்புக் கொள்கைகளைத்தான் தொடர்ந்து வருகிறார்.

2009ம் ஆண்டில் இருந்து, ஆண்டு ஒன்றிற்கு நாடுகடத்தப்பட்ட தொழிலாளர்களின் சராசரி எண்ணிக்கை 400,000 என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவிக்கிறது. இது ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் முதல் வரைக்காலத்தில் இருந்த சராசரி ஆண்டு வெளியேற்றத்தைப் போல் இரு மடங்கு ஆகும்; அவர் பதவியை விட்டு விலகியபோது இருந்த சராசரியை விட 30% அதிகம் ஆகும்.

மோசமாகிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமைகளில், ஆளும் அரசியல் கட்சிகளும் வணிகச் சங்கங்களும் ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர் தொழிலாளர்களை பலிகடாக்கள் ஆக்குவதுடன், அனைத்து பணிகள், முக்கியமான வேவைகள் ஆகியவற்றைப் பறித்துக் கொள்கின்றனர் என்ற குற்றத்தையும் சாட்டுகின்றன. ஆனால் இந்த நெருக்கடி ஒன்றும் புலம்பெயர் தொழிலாளர்களால் தோற்றுவிக்கப்படவில்லை; ஆனால் முதலாளித்துவத்தாலும் ஆளும் வர்க்கத்தாலும் தோற்றுவிக்கப்பட்டதுதான்!

அரசியல் நடைமுறையின் அனைத்துப் பிரிவுகளும் தொழிலாளர்களை தேசிய எல்லைகள் வழியே பிரிப்பதற்கு எதிராகவும் நாட்டை விட்டு அகற்றும் முயற்சிகளுக்கு எதிராவும், புலம்பெயர் தொழிலாளர்களை தீண்டத் தகாதவர்கள் எனக் கருதும் நிலைக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி அவர்களுடைய பொது நலன்களுக்காக அனைத்துத் தொழிலாளர்களிடையே மிக நெருக்கமான ஐக்கியத்திற்கு அழைப்பு விடுகின்றது.

அமெரிக்காவில் பிறந்த தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த வேண்டும், அமெரிக்காவில் குடியேறும் தொழிலாளர்கள் மீதான எந்தத் தாக்குதலும் முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களைப் பிடிக்கும் பொலிஸ்-அரச நடவடிக்கைகள் பிரஜைகள் அனைவருக்கும் எதிராகவும் திருப்பப் படலாம்.

கிரேக்கம், எகிப்து, சீனா, இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா அல்லது எந்த நாடுகளாயினும் அனைத்து தேசிய மற்றும் இன தொழிலாளர்களும் ஒரே நலன்களையும்  ஒரே நிறுவனங்களின் சுரண்டலையும் எதிர்கொண்டுள்ளனர். பெருநிறுவனங்களுக்கு எதிராகக் போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச அடிப்படையில் அமைக்கப்பட்டால்தான் வெற்றிகரமாகப் போராட முடியும்; நிறுவனங்களோ விரும்பும் எந்த நாட்டிலும் அமைப்புக்களை நிறுவச் சுதந்திரம் பெற்றுள்ளன.

போதியவேலைகள் இல்லை, புலம்பெயர் தொழிலாளர்கள் உள்நாட்டில் பிறந்த தொழிலாளர்களின் வேலைகளைத் திருடுகின்றனர் என்ற கூற்றுக்களை நாம் நிராகரிக்கிறோம். முதலாளித்துவத்தின் நேரடி விளைவினால்தான் தொழிலாளர்கள் குறைவூதியவேலைகளுக்கான போட்டியில் தள்ளப்பட்டுள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி பல டிரில்லியன் செலவு உடைய பொதுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுகிறது; அவைதான் வேலை வேண்டும் என விரும்புவோர் அனைவருக்கும் வேலைகளை தோற்றுவிக்கும் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகள், கல்வி ஆகியவற்றை அனைவருக்கும் அளிக்கும்.

எல்லை உடனடியாக இராணுவமயத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும், அனைத்துச் சோதனைகளும், புலம்பெயர்வோருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், அமெரிக்காவில் வசிக்கும் அனைவருக்கும் முழுக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாம் அழைப்பு விடுகிறோம்.

புலம்பெயர் தொழிலாளர்களுடைய இரண்டாந்தர அந்தஸ்த்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களுக்கு எந்நாட்டிலும் வாழும், வேலை செய்யும் அடிப்படை உரிமையை காப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்தான் திறன் உடையதாகும். உழைக்கும் மக்களை வறிய நிலையில் தள்ளி இலாபத்தைப் பெறும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தேசியமயமாக்கல், அவற்றின் சொத்துக்களை பறித்தெடுத்து பொது நலனுக்குப் பயன்படுத்துதல் என்பதுதான் சோசலிசம் ஆகும். இந்த அமைப்புக்கள் ஜனநாயக ரீதியாகவும், அனைத்து மக்களின் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கத்துடனும் நடத்தப்பட வேண்டும்.

என்னுடன் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உள்ள பிலிஸ் ஷேரரும் நானும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கம் அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்து  சமூகத்தை அதன் நலன்களுக்கு ஏற்ப மறுகட்டமைக்க.இத்தேர்தலில் ஒரு பரந்த, சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் பாகமாக சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் பங்குபற்றுகிறோம். இத்திட்டத்திற்கு ஆதரவு தரும் அனைவரையும் இப்போராட்டத்தில் இணையுமாறும் எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும் ஊக்குவிக்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் பற்றிக் கூடுதல் தகவல் அறியவும், ஈடுபாடு கொள்ளவும், socialequality.com என்னும் வலைத் தளத்தை காணவும்.