சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

International issues in the French elections

பிரெஞ்சுத் தேர்தலில் சம்பந்தப்பட்ட சர்வதேசப் பிரச்சினைகள்

By Alex Lantier and Johannes Stern in Paris
11 April 2012

use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதிப் பதவியின் மிகக் குறிப்பிடத்தக்க அதிகாரம் என்பது வெளியுறவுக் கொள்கை மீது அது கொண்டிருக்கக் கூடிய அதிகாரம் தான் என்கின்ற நிலையிலும், இந்த ஆண்டின் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் சர்வதேச அரசியல் கண்ணில் தென்படாதிருப்பது மிகவும் புலப்படத்தக்க விடயமாய் உள்ளது. இத்தேர்தல் பெரிதாய் பேசப்படவில்லை என்று இது விடயத்தில் எழுதக் கூடிய வெகு குறைந்த செய்தியாளர்களில் ஒருவரான Le Figaro இன் அலெக்சாண்டர் ஆட்லர் தான் எழுதிய ஒரு சமீபத்திய பத்தியில் சுருக்கமாய் குறிப்பிட்டிருந்தார்.

ஐரோப்பா இப்போது நிதி நெருக்கடியாலும் போர்நிலை அதிகரிப்பாலும் சூழப்பட்டு நான்காண்டுகளாகி விட்டிருக்கும் நிலையில் இந்நிலை இன்னும் குறிப்பிடத்தகுந்ததாய் ஆகிறது. பிரான்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் போர்களில் பங்கேற்று வருகிறது, சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிரான கூலிப்படை கெரில்லா சக்திகளை ஆதரிக்கிறது, அத்துடன் ஈரானைத் தாக்க மிரட்டல் விடுக்கும் அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாய் இருக்கிறது. மக்களில் சுமார் 76 சதவீதம் பேர் பிரெஞ்சுப் படைகள் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளதை எதிர்க்கின்றனர், 51 சதவீதம் பேர் லிபியாவிலான போரை எதிர்க்கின்றனர்.

எப்படியிருந்தபோதிலும், தற்போதைய ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் பிரதான முதலாளித்துவ இடது போட்டி வேட்பாளரான சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரான்சுவா ஹாலண்ட், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் நேட்டோவின் இராணுவத் தலைமையில் பிரான்சை மீளஒன்றிணைத்த 2009 ஆம் ஆண்டின் சார்க்கோசி முடிவைத் திரும்பப் பெறும் எண்ணமில்லை என்று சென்ற மாதத்தில் தெரிவித்து விட்டார்.

தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பை முகம் கொடுக்கும் நிலையில் சார்க்கோசியின் கொள்கைகளைத் தொடர்வதற்கே ஆளும் உயரடுக்கு விரும்புகிறது என்பதையே பிரான்சை நேட்டோவுக்குள் மீளஒன்றிணைப்பு செய்வது குறித்த ஹாலண்டின் கருத்துகளும் சார்க்கோசியின் போர்கள் குறித்து முதலாளித்துவ அல்லது குட்டி முதலாளித்துவ இடதுகளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமையும் தெளிவாக்குகின்றன. இதன்மூலமாக சார்க்கோசி தனக்கு முன்னால் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கொள்கைகளுடன் ஒப்பிடுகையில் வெளியுறவுக் கொள்கையில் கொண்டுவந்திருக்கக் கூடிய ஒரு மிகப் பெரும் மாற்றத்திற்கு ஓசையில்லாமல் இவை ஆதரவளிக்கின்றன.

சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்ட 1991க்குப் பிந்தைய முதல் ஜனாதிபதி பதவிக்காலமான 1995-2007 வரையான ஜனாதிபதிக் காலப் பகுதி பிரான்சின் பனிப் போர் கொள்கைகள் உடைந்து போனதால் குறிக்கப்பட்டது. 1998 இல் வெளியுறவு அமைச்சரான ஹூபர்ட் வெட்ரன் அமெரிக்காவை ஒரு மிதமிஞ்சிய சக்தி (hyper-power என்று விமர்சனம் செய்ததில் பிரதிபலித்ததான ஒரு பன்-துருவ உலகிற்கான பிரான்சின் அழைப்புகள் அமெரிக்காவுடன் மோதல்களுக்கு இட்டுச் சென்றன - முதலில் ஈரானில் பிரெஞ்சு நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதன்பின் இன்னும் தீவிரமாக 2003 இல் ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமித்ததை எதிர்ப்பதில் ஜேர்மனி மற்றும் ரஷ்யாவுடன் பிரான்ஸ் கைகோர்த்தது தொடர்பாகவும்.

ஐரோப்பாவில் பிரெஞ்சுக் கொள்கையை அபிவிருத்தி செய்யும் சிராக்கின் முயற்சிகள் முழுகிப் போயின. 2002 இல் பொது யூரோ நாணயமதிப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போதே அதை ஏற்றுக் கொண்ட பன்னிரண்டு நாடுகளில் இதுவும் ஒன்று என்ற போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் பெருகும் எதிர்ப்பை பிரான்சும் கண்டது. இது ஐரோப்பாவெங்கிலும் ஊதியங்களும் சமூக உரிமைகளும் கீழ்நோக்கிச் சரிய இட்டுச் செல்லும் என்கிறதான நியாயமான அச்சத்தின் இடையே ஐரோப்பிய ஒன்றியம் என்கிற வரைவுக்கான எதிர்ப்பு பிரான்சில் 2005 இல் நடந்த கருத்துக்கணிப்பில் அதன் தோல்விக்கு கொண்டு சென்ற போது சிராக் திகைத்துப் போனார்.   

அடுத்து வந்த சார்க்கோசி நிர்வாகம் துரிதமாய் அமெரிக்காவுடனான உறவுகளை மறுஸ்தாபகம் செய்தது; 2009 இல் நேட்டோவில் முழுமையாக மீளஒன்றிணைப்பு காண்பதற்கு முன்னதாய் அமெரிக்க ஆக்கிரமிப்பிலான ஈராக்குக்கு அதிகாரிகளைப் பயணம் அனுப்பியது; 2007 இல் ஈரானைப் போர் அச்சுறுத்தல் செய்தது. ஆயினும் அமெரிக்காவே ஒரு ஆழமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத சமூக நெருக்கடிக்குள் பிரவேசித்திருந்த நிலையில் அதனுடனான உறவுகளை இது மறுஸ்தாபகம் செய்தது.

2008 ஆம் ஆண்டின் அமெரிக்க நிதி உடைவு ஐரோப்பாவுக்குள்ளான உறவுகளை உருமாற்றம் செய்தது. கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலியின் தொழிலாளர்கள் மீது ஆழமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதில் ஜேர்மனியும் பிரான்சும் ஒன்றுபட்ட அதே சமயத்தில் அவர்களிடையேயான உறவுகள் பெருகியமுறையில் பதட்டத்திற்குள்ளானது. நெருக்கடியில் சிக்கித் தவித்த கிரீஸுக்கு கடன் வழங்கியிருந்த பிரெஞ்சு வங்கிகளுக்கு பணம் திருப்பிச் செலுத்துவதற்கான பிணையெடுப்புக்கு நிதி வழங்க ஜேர்மனிக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் 2010 இல் சார்க்கோசி யூரோவில் இருந்து பிரான்சை திரும்ப அழைத்துக் கொள்ளவிருப்பதாய் மிரட்டுவதில் இறங்கினார்.

எல்லாவறுக்கும் மேல், சென்ற ஆண்டில் எகிப்திலும் துனிசியாவிலும் புரட்சிகரமான தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடித்ததற்கான பதிலிறுப்பாய் பிரான்ஸ் லிபியாவிலும், ஐவரி கோஸ்டிலும், இப்போது சிரியாவிலும் இன்னும் மாலியிலும் கூட தொடர்ச்சியாய் போர்களிலும் தலையீடுகளிலுமாய் இறங்கியது. இது தான் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியான கொள்கையாக இருக்கப் போகிறது என்பதை சார்க்கோசி தெளிவாக்கி விட்டார். லிபியாவுடன் போருக்குச் சென்ற சமயத்தில் - லிபிய அரசின் தலைவராய் இருந்த முகமது கடாபியின் மரணத்தில் இந்தப் போர் முடிந்தது - அவர் பட்டவர்த்தனமாய் தெரிவித்ததாவது: இந்தத் தருணத்தில் இருந்து சர்வதேச சமுதாயத்தின் மற்றும் ஐரோப்பாவின் எதிர்வினை என்பது ஒவ்வொரு முறையும் இதேவகையில் தான் இருக்கப் போகிறது என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும், அதிலும் குறிப்பாய், ஒவ்வொரு அரபு ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வதேசப் பொருளாதார மற்றும் இராணுவக் கொள்கையின் அடிப்படை அம்சங்கள், தேர்தல்களின் திட்டநிரலில் இல்லை என்ற உண்மையானது அவற்றின் மோசடித் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. PS, ஸ்ராலினிசத் தலைமையிலான இடது முன்னணியைச் சேர்ந்த, புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியைச் சேர்ந்த, மற்றும் தொழிலாளர் போராட்டம் அமைப்பைச் சேர்ந்த குட்டி-முதலாளித்துவ இடது வேட்பாளர்கள் போர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல்ரீதியாக வாக்குரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது

பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முன்னெப்போதையும் விட மூர்க்கமான வெளியுறவுக் கொள்கையானது மத்திய கிழக்கு மக்களை மட்டும் அச்சுறுத்தவில்லை, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் போலவே, வெளிநாட்டிலான போர்கள் தாயகத்தில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும், அதிகரிக்கும் பாதுகாப்பு செலவினங்களைக் காரணம் காட்டி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களின் மீது இன்னும் கூர்மையான தாக்குதல்களைத் திணிப்பதற்கும் பயன்படுத்தப்படும். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் அமெரிக்கப் போர்களுக்கு ஆகும் செலவு 3.7 டிரில்லியன் டாலர்களில் இருந்து 4.4 டிரில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இது கிரீஸ் மற்றும் ஸ்பெயின் இரு நாடுகளின் மொத்தக் கடன்களின் கூட்டுத் தொகையைக் காட்டிலும் அதிகமானதாகும்.

பாரிஸில் ஏப்ரல் 5 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஜனாதிபதி அறிவிக்கையில், சில நாடுகள் இன்று பாதாளத்தின் விளிம்பில் நிற்கின்றன. போட்டித்திறன், புதுமை படைக்கும் திறன் மற்றும் பொதுச் செலவினத்தைக் குறைப்பது ஆகியவற்றில் வரலாற்றுத் தெரிவினைச் செய்ய நாம் மறுக்க முடியாது. நமது ஸ்பெயின் நண்பர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைமை, நமது கிரேக்க நண்பர்கள் அனுபவித்த நிலைமை நமக்கு யதார்த்தங்களை நினைவூட்டுகிறது.

ஊடகங்களில் பெருமளவில் விளக்கங்களைப் பெற்ற சார்க்கோசியின் இந்த அறிக்கை அளித்த அச்சுறுத்தல் என்னவென்றால், வரவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி போதுமான அளவு வலது-சாரிக் கொள்கையை பின்பற்றத் தவறுவாரேயானால், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் மீது வங்கிகள் திணித்த கதி தான் (அந்த நாடுகளில் பாதி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளனர், ஊதியங்கள் 30 முதல் 50 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருக்கின்றன, வீடின்மையும் மருத்துவ வசதி கிட்டாமையும் அதிகரித்துச் செல்கிறது)பிரான்சுக்கும் நேரும் என்பது தான்.

அமெரிக்க வங்கியான மெரில் லிஞ்சில் பணிபுரியும் ஒரு பொருளாதார நிபுணரை மேற்கோள் காட்டி ஃபைனான்சியல் டைம்ஸ் கூறியது: சந்தைகளுக்கு தனது திட்டங்கள் குறித்து நம்பிக்கை ஏற்படுத்த புதிய பிரெஞ்சு அரசாங்கத்திற்கு மிகக் குறுகிய கால அவகாசம் தான் இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

கடந்த பத்து வருடங்களில், பிரெஞ்சுப் பொருளாதாரம் ஐரோப்பாவில் அதன் பிரதான போட்டியாளரான ஜேர்மனியின் பொருளாதாரத்திற்கு எதிராய் வலிமை குன்றி விட்டிருக்கிறது. 2000 இல் பிரான்சின் தொழிலாளருக்கான மணி நேர செலவுகள் ஜேர்மனியில் இருப்பதைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவாய் இருந்தது; 2012 இல் அவை 10 சதவீதம் அதிகமென்று ஆகி விட்டது. 1999 முதல் 2008 வரையான காலத்தில், ஜேர்மனியில் ஒரு தொழிலாளிக்கு ஆகும் செலவுகள் மற்ற யூரோ வலய நாடுகளுடன் ஒப்பிடுகையில் 20 முதல் 30 சதவீதம் வரை வெட்டுக்குள்ளாகியிருந்தது, அதனையடுத்து ஜேர்மன் ஏற்றுமதிகள் எழுச்சி பெற்றிருந்தன.

தொழிலாள வர்க்கத்தின் மீது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியதன் மூலம் தான் ஜேர்மனி அதன் மிக உயர்ந்த பொருளாதார நிலையை சாதித்திருக்கிறது. கெஹார்ட் சுரோடரின் சமூக ஜனநாயகக் கட்சி - பசுமைக் கட்சி அரசாங்கம், தொழிற்சங்கங்களுடன் கூடி வேலை செய்து, சமூகச் செலவினங்களையும் ஊதியங்களையும் வெட்டியது, உழைப்புச் சந்தைகளை தாராளமயமாக்கியது, பெருநிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் வரிகளை வெட்டியது. ரைன் நதிக்கு அப்பால் பொறாமை விழிகளுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பிரெஞ்சு முதலாளித்துவம் பிரான்சிலும் அதேபோன்ற வெட்டுகளைத் திணிக்க விரும்புகிறது. வங்கிகள் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராய் நிறுத்தி ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் விடயத்தில் அதல பாதாளத்திற்கு செல்ல அவர்களை விரைந்தோடச் செய்கின்றன

பிரான்சில் தொழிலாள வர்க்கம் பிரம்மாண்டமான வர்க்க யுத்தங்களின் தருணத்தில் நின்று கொண்டிருக்கிறது. இதில் தொழிலாளர்கள் போர் மற்றும் சமூகச் சிக்கன நடவடிக்கைக்கு எதிரானதொரு போராட்டத்தில் ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஐக்கியத்தை ஸ்தாபிக்க போராட வேண்டும்.