சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

What are the politics of French Left Front candidate Jean-Luc Mélenchon?

பிரெஞ்சு இடது முன்னணி வேட்பாளரான ஜோன்-லூக் மெலன்சோனின் அரசியல் என்ன?

By Alex Lantier in Paris 
10 April 2012

use this version to print | Send feedback

பிரெஞ்சு அரசியல் ஸ்தாபக இடதுகளின் அரசியல் வேட்பாளராக இடது முன்னணியின் ஜோன்-லுக் மெலன்சோன் எழுந்திருக்கிறார். அவர் 13.5 சதவீத வாக்குகள் பெறுவதாய் வாக்கெடுப்புகள் காட்டுகின்றன, இது டிசம்பர் வாக்கெடுப்பைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். மார்ச் 18 அன்றுபாஸ்டியைக் கைப்பற்றுவோம்என்ற அணிவகுப்பை அவர் ஒழுங்கமைத்ததன் பின்னர் பிரான்ஸ் எங்கிலும் அவர் தொடர்ச்சியான பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.

செய்தி வெளியீடுகள் எல்லாம் மெலன்சோனையும், மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தில் €1,700 (US$2,230) ஆக குறைந்தபட்சம் 20 சதவீத அதிகரிப்பு, வருடாந்திரம் €360,000 (US$472,000)க்கு அதிகமான வருமானம் பெறுவோருக்கு 100 சதவீத வரி,   வங்கிகள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களை தேசியமயமாக்குதல் ஆகிய அவரது முக்கியமான சமூகக் கோரிக்கைள் பற்றியும் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடுன்றன. இவர், அமெரிக்காவை உலகத்துக்கான முக்கிய அச்சுறுத்தலாய் கூறியிருப்பதோடு, வங்கியாளர்களை தொடர்ந்து கண்டனம் செய்து வருகிறார்.

இவரால் கவனத்தை ஈர்க்க முடிகிறதென்றால் அதன் காரணம் இப்போது தேர்தலில் வெல்ல எதிர்பார்க்கப்படும் பிரதான முதலாளித்துவஇடதுவேட்பாளரான சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹாலண்ட்டின் கோரிக்கைகளை விட மேற்கூறிய இவரது கோரிக்கைகள் போன்றவற்றுக்குத் தான் மிக அதிக வெகுஜன ஆதரவு இருக்கிறது. ஹாலண்ட் நிதிநிலையை சமப்படுத்த விரும்புகிறார், நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் சமூக வெட்டுகள் பலவற்றையும் தொடர்வதற்கு விரும்புகிறார், பிரான்சு நேட்டோவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறார்.

32 வருடங்கள் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தவரும் ஹாலண்டை நன்கு அறிந்தவருமான மெலன்சோன், ஹாலண்டைகதகதப்பான நீர் கொண்டதொரு பெரிய பாத்திரம்என்று அழைத்திருக்கிறார். ஆயினும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அவருடன் ஒரு உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தை எதையும் மெலன்சோன் நிராகரித்து விடவில்லை

உரத்துப்பேசக்கூடிய ஆயினும் பிரெஞ்சு குடியரசின் அனுபவமிக்க அரசியல்வாதியாக இருக்கக் கூடிய தன்னைப் போன்ற ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் மேம்பட்ட ஊதியங்களையும், வாழ்க்கை நிலைமைகளையும் மற்றும் பொதுச் சேவைகளையும் பெற முடியும் என்பது மெலன்சோன் தொழிலாளர்களுக்கு கூறும் செய்தியாகும். அவர் La Voix du Nord விடம் கூறினார்: “நாங்கள் தீவிர இடது அல்ல, உறுதியான முழுமாற்றத்தின் இடது பக்கத்தில் நாங்கள் இருக்கிறோம்.”

எப்படியிருப்பினும் அவரது அரசியல் வரலாற்றை ஆய்வு செய்து பார்த்தால் மெலன்சோனின் வாக்குறுதிகள் வெறுமையானவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். பிரான்சின் சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் மேலதிகமான நிதி வெட்டுகளுக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் தயாரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஒரு போலியான தீவிரமய மேற்பூச்சை அளிக்கும் பொருட்டு தான் செய்ய நோக்கம் கொண்டிராத கொள்கைகளை அவர் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

கிழக்கத்திய பிரெஞ்சு நகரமான பெசன்சோனில் 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் மாணவர் அரசியலில் மெலன்சோன் தன் அரசியல் வாழ்க்கையை தொடக்கினார். 1972 இல் சர்வதேசக் கம்யூனிஸ்ட் அமைப்பு(OCI), இன்று உலக சோசலிச வலைத் தளத்தை வெளியீடு செய்து வருகின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்டதற்குப் பிந்தைய வருடத்தில் OCI இல் அவர் இணைந்தார். 1976 இல் சோசலிஸ்ட் கட்சியில் (PS) இணையும் பொருட்டு OCI இல் இருந்து அவர் விலகினார்.

பிரான்சை மையமாகக் கொண்டு ஒரு புரட்சிகரத் தொழிலாள வர்க்க இயக்கத்தை அபிவிருத்தி செய்து, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சி(PCF)மற்றும் புதிதாய் உருவாகியிருந்த சோசலிஸ்ட் கட்சி(PS)ஆகிய கட்சிகளுக்கு அழுத்தமளித்து ஒருஇடது கூட்டினைஉருவாக்கி அதிகாரத்தைப் பிடிக்கலாம் என்பதான ஒரு பிழையான கருத்தாக்கத்தின் மீது அந்த சமயத்தில் OCI இன் முன்னோக்கு மையப்பட்டிருந்தது. உண்மையில் இது PS தலைவர் ஃபிரான்சுவா மித்திரோனின் திட்டங்களில் கருதலுக்கு உட்பட்டிருந்தது. முன்னாளில் விச்ஷி ஒத்துழைப்பு நிர்வாகியாக இருந்த மித்திரோன் ஒரு சமூக ஜனநாயகக் கட்சி மனிதராக தன்னை மறு அடையாளப்படுத்திக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் வாக்கு வங்கியைப் பெற்று ஜனாதிபதிப் பதவியை வெல்வதற்கு பிரெஞ்சு கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணிக்கு முனைந்தார்.

இடது கூட்டுமுன்னோக்கின் மீது தான் மெலன்சோன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார், தான் முதன்முதலில் மித்திரோன் பொதுவில் பேசக் கேட்க நேர்ந்தபோது அசந்து போனதாய் அவர் கூறிக் கொள்கிறார்: “அவர் மகிழ்ச்சி குறித்து பேசினார், அரசியல் குறித்து பேசினார், பனியின் அழகு குறித்து பேசினார். அது என்னை விடுதலை செய்தது. அதற்கு முன்னால்நான்என்று பேச நாங்கள் ஒருபோதும் துணிந்ததில்லை. நான் சோசலிஸ்ட் கட்சியில் நுழைந்தபோது, அது ஒரு புரட்சிகரக் கட்சியாய் இருந்தது.”

உண்மையில், சோசலிஸ்ட் கட்சி 1968க்குப் பிந்தைய தொழிலாள வர்க்கத் தீவிரமயத்தை மூச்சுத்திணறடிக்கும் பொருட்டு தயாரிப்பு செய்து கொண்டிருந்த ஒரு முதலாளித்துவக் கட்சியாக இருந்தது. மெலன்சோன் குட்டி முதலாளித்துவஇடதுஅரசியலில் இருந்து உயர்ந்த அரசுப் பதவி நோக்கி எழுந்து வந்து கொண்டிருந்தார். இருப்பினும், OCI இல் இருந்த காலத்தில் இருந்தே மெலன்சோனுக்கு பிரெஞ்சு மேலாதிக்க உணர்வையும் சரி, ஒரு முன்னாள் தீவிர மாணவரின் விரைவாக பேசும்தன்மை மற்றும் பொறிபறக்கும் கோபப் பேச்சையும் சரி இரண்டையுமே அவரால் பராமரித்து வர முடிந்தது.

1981 இல் மித்திரோன் அதிகாரத்திற்கு வந்தபோது தேசியமயமாக்கலின் ஒரு அலையை அவர் நடத்தினார், அத்துடன் தொழிலாளர்களின்வாங்கும் திறனைதற்காலிகமாய் மேம்படுத்த செலவின நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். முதலாளி வர்க்கம் பிரான்சில் இருந்து பணத்தை வெளியே எடுப்பதன் மூலம் பதிலிறுப்பு செய்தது. இது பிரெஞ்சு பிராங்கை மதிப்பிழக்கச் செய்து யூரோவுக்கு முன்னோடியாக இருந்த ஐரோப்பிய நாணய அமைப்புமுறையால் வரையறுக்கப்பட்ட ஜேர்மன் மார்க் உடனான ஒப்பீட்டு மதிப்பை  உடைத்தது.

மித்திரோன் 1983 இல் தனது சீர்திருத்த அரசியலைத் தூக்கிப் போட்டு விட்டுசிக்கன நடவடிக்கைத் திருப்பத்தைமேற்கொண்டார். தொழிற்சங்க அதிகாரத்துவமும் குட்டி முதலாளித்துவஇடதுகட்சிகளும் இதற்கு ஆதரவளித்தன. வாங்கும் திறனைக் குறைக்கிற, இரும்பு மற்றும் வாகனத் தொழிற்சாலைகளை மூடுகின்ற மற்றும் தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறைகளைத் தனியார்மயமாக்குகின்ற கொள்கைகளை அவர் அமல்படுத்தினார்.

மித்திரோனின் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு என்ன பேரழிவான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது என்பதைப் பார்த்தால், அச்சமயத்தில் மித்திரோனுடனான தனது உறவு குறித்து மெலன்சோன் கூறிய பின்வரும் கருத்து ஆச்சரியமூட்டும்: “பாச உணர்வும் அவருடன் நெருக்கமாய் இருக்கிறேன் என்கிற ஒரு பரவசமான உணர்வும் என் கண்ணை மறைத்தன. ஆயினும் எது குறித்தும் எனக்கு வருத்தமேதும் இல்லை.”

சீர்திருத்தவாத வேலைத்திட்டம் எதனையும் கைவிட்டமைக்கு Mélenchon the Plebeian என்ற அவரது வாழ்க்கை சரிதத்தில் மெலன்சோன் தரும் விளக்கம் முக்கியமானது. “சால்வடார் ஆலண்டே வியாதியைக் குறைகூறிய அவர்எங்கள் எல்லோருக்கும் சிலியின் தோல்வி மூளையில் இருந்ததுஎன்று கூறிக் கொண்டார்.

மித்திரோனின் வழியைப் பின்பற்றி, ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்த சீர்திருத்தவாத கொள்கைகளை PS கைவிடாது போனால், சிலியில் ஜனாதிபதி சல்வடார் ஆலண்டே இன் கீழான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு நேர்ந்த கதியே நேரும் என்று தான் அஞ்சியதை அவர் குறிப்பிடுகிறார். 1973 இல் ஜெனரல் அகஸ்டோ பினோசே தலைமையில் நடந்த அமெரிக்க ஆதரவுடனான இராணுவக் கவிழ்ப்பில் ஆலண்டே தூக்கிவீசப்பட்டார். ஆயிரக்கணக்கில் சிலி நாட்டு தொழிலாளர்களும் இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டனர், ஆலண்டே சுட்டுக் கொல்லப்பட்டார்.

நவீன சமூகத்தில் வர்க்க உறவுகளின் நிலை குறித்து மெலன்சோன் நிகழ்த்தும் தேர்தல் உரைகளைக் காட்டிலும் ஒரு மிகத் தெளிவான எதார்த்த சித்திரத்தை இது வழங்குகிறது. ஆளும் வர்க்கம் தனது சொத்துகளையும் சமூகச் சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்ள மிக இரக்கமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தும். 1983 ஆம் ஆண்டின் அனுபவம் தெளிவாக்குவதைப் போல, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சீர்திருத்தவாத வேலைத்திட்டம் என்பது குழப்பத்தையும் விரக்தியையும் விதைப்பதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசியல் பொய். தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அரசியல்ரீதியாய் சுயாதீனப்பட்ட, புரட்சிகரத் தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே தனது நலன்களுக்கு உகந்த கொள்கைகளைக் கொண்டுவர முடியும்.

இது 1983 இல் மித்திரோனுக்கு பொருத்தமாக இருந்ததுசென்ற இலையுதிர் காலத்தில் கிரேக்க பிரதமரான ஜோர்ஜ் பாப்பன்ரூ இராணுவக் கவிழ்ப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கிய சற்று காலத்தின் பின், வங்கிகளால் பதவியிலிருந்து துரத்தப்பட்டதை கண்ட ஐரோப்பிய கடன் நெருக்கடிக்கு மத்தியில் 2012 மெலன்சோனுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

ஆயினும் 1983 முதலாக, மெலன்சோனும் அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூக அடுக்கும் இன்னும் கூர்மையாக வலதின் பக்கம் திரும்பியிருக்கின்றனர். “சிக்கன நடவடிக்கைத் திருப்பத்தின் சமயத்தில் பாரிஸ் பகுதியில் PS பெருநிறுவன உறவுகள் விவகாரங்களில் வேலை செய்த இந்த இடது முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் ஒரு நல்ல இலாபகரமான பதவியை நாடிச்சென்றவர். மித்திரோன் அவருக்குநான்என்பதை நன்கு சொல்லக் கற்றுக் கொடுத்திருந்தார். கூட்டுரிமை கழக நிறுவனத்தில் இணைந்து, செனட்டரானார் (இது ஒருபொன்னான வேலைஎன்பது அவர் கருத்து), 1990களின் போது தனது இடது வார்த்தைஜாலத்தை PS இன் வலதுசாரி கொள்கைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டார்.

ஈராக்குக்கு எதிராய் 1991 அமெரிக்க தலைமையிலான வளைகுடாப் போரில் மித்திரோன் பங்குபெற்ற சமயத்தில், மித்திரோனை மெலன்சோன் மூன்றுமுறை சந்தித்தார், வெற்றுத்தனமான அவரதுபோர்-எதிர்ப்புநிலைப்பாட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்கு. 1992 இல் மித்திரோனுக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய சுதந்திர-சந்தை மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்தை இவர் ஆதரித்தார். அதற்கு அவர் கையிலெடுத்த சுலோகம்: “ஐரோப்பாவை கட்டியமைப்போம், சமூக விடயங்கள் உடனடியாய் பின்னர் வரும்.” மறுபடியும் 1997 இல் ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியின் லியோனல் ஜோஸ்பனுக்கு உதவும் வகையில் 1996 இல் ஐரோப்பிய நிதி ஒப்பந்தங்களுக்கான தனது ஆட்சேபனைகளை இவர் கைவிட்டார்.

2002 ஜனாதிபதித் தேர்தலில் ஜோஸ்பனின் பரிதாபகரமான தோல்வியை அடுத்து சோசலிஸ்ட் கட்சிக்குள் ஒதுக்கப்பட்ட நிலையில் மெலென்சோன் அக்கட்சியை விட்டு விலகுவது குறித்து சிந்திக்கத் தொடங்கினார். 2008 நவம்பரில், அவரது ஆதரவாளர்கள் PS இல் இருந்து உடைத்துக் கொண்டு இடது கட்சியை (PG)உருவாக்கினர். அதனையடுத்து அவர்கள் ஸ்ராலினிச PCF உடனும் சிறிய குட்டி-முதலாளித்துவக் குழுக்களுடனும் கூட்டணி சேர்ந்து இடது முன்னணியை உருவாக்கினர்.

என்றாலும், இத்தகைய அமைப்புரீதியான கைப்புரட்டுகள் எல்லாம் மெலென்சோனின் பிற்போக்கு அரசியலை மாற்றி விடவில்லை. பிரெஞ்சு மேலாதிக்க உணர்ச்சி பொங்க அமெரிக்க எதிர்ப்பு வாய்ஜாலத்தை அவர் காட்டினாலும் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு அடிவருடியே. இவர் 2003 இல் அமெரிக்க தலைமையிலான ஈராக் போரை ஆதரித்தார்; சென்ற ஆண்டில் லிபியாவில் நேட்டோ போரை ஆதரித்தார். இவர் கட்டியெழுப்ப உதவிய ஐரோப்பிய ஒன்றிய ஸ்தாபனங்களைப் பொறுத்த வரை, கிரேக்க கடன் நெருக்கடியில் இவை தான் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகள் ஒடுக்குவதற்குப் பயன்பட்ட முக்கியக் கருவிகளாய் எழுந்திருக்கின்றன.  

மில்லியன்கணக்கான மக்கள் ஒரு  இடது-சாரிக் கொள்கைக்காக இவர் மீது எந்த நம்பிக்கையைக் கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்களோ அந்த நம்பிக்கையை மெலென்சோன் தவிர்க்கவியலாமல் ஏமாற்றித் தான் ஆக வேண்டும். ஆனால் முக்கியமான ஆபத்து என்னவென்றால், அவர் இடதுகளிடம் இருந்தான ஒரு சவால் மூலம் அரசியல்ரீதியாய் அம்பலப்படுத்தப்படாமல் போனால்,   இந்த நம்பிக்கை பொய்ப்பதன் மூலம் எழுகின்ற கோபமும் விரக்தியும் ஒரு சக்தி-வாய்ந்த அதி-வலது கட்சி எழுவதற்கான அடிப்படையை வழங்கி விடும் என்பது தான்.