சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Troika gives green light for Greek election

கிரேக்கத் தேர்தலுக்கு முக்கூட்டு பச்சை விளக்கு காட்டுகிறது

By Stefan Steinberg
13 April 2012

use this version to print | Send feedback

புதன் அன்று பிரதம மந்திரி லூகாஸ் பாப்படெமோஸ் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கிரேக்கப் பொதுத்தேர்தல் மே 6ம் திகதி நடக்கும் என்று அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படாத வங்கியாளர் நியமனத்தைப் போலவே, கிரேக்கத் தேர்தலின் திகதியும் சர்வதேச உயர் நிதியத்தின் பிரதிநிதிகளால் முடிவெடுக்கப்பட்டது.

கிரேக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைத்தலைவருமான பாப்படெமோஸ் ஐரோப்பிய தலைவர்களாலும் சர்வதேச நாணய நிதியினாலும் (IMF) கடந்த நவம்பர் மாதம் அப்பொழுது இருந்த PASOK சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திர ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். பாப்பாண்ட்ரூ முக்கூட்டு கோரியிருந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு பொதுஜன வாக்கெடுப்பு தேவை என அழைப்பு விடுத்திருந்தார்.

ஐரோப்பியத் தலைவர்கள் நாட்டின் விதியைப் பற்றி பெரும்பாலான கிரேக்க மக்களின் கருத்து  ஏதும் தேவையில்லை என்று கருதினர். பெருகும் மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்து கடுமையான சிக்கன நடவடிக்கைகளை விரைவில் சுமத்தும் ஆணையுடன் பாப்படெமோஸை அவர்கள் பிரதம மந்திரியாகப் பதவியில் இருத்தினர்.

இந்த இலக்கின் அடிப்படையில், பாப்படெமோஸ், PASOK, எதிர்க்கட்சியாக இருந்த பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் பாசிச லாவோஸ் கட்சி ஆகியவற்றைக் கொண்ட ஒரு மூன்று கட்சிக் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார். ஒரு புதிய மந்திரி சபையை, லாவோஸ் கட்சியில் இருந்து நான்கு உறுப்பினர்களையும் பழைமைவாத புதிய ஜனநாயகக் கட்சியில் இருந்து முக்கிய உறுப்பினர்களையும் PASOK கட்சியின் முக்கிய உறுப்பினர்களை உள்துறை அமைச்சரகம் உட்பட முக்கிய பதவிகளில் இருத்திய வகையில் அவர் நிறுவினார்.

வங்கியாளர்களின் செயற்பட்டியலைச் செயல்படுத்தியபின், பாப்படெமோஸிற்கு இப்பொழுது முக்கூட்டால் புதிய தேர்தல்கள் நடத்த பச்சை விளக்குக் காட்டப்பட்டுள்ளது.

Kathimerini  பத்திரிகையில் சமீபத்தில் வந்துள்ள கட்டுரை இதைத் தெளிவாக்குகிறது. அதில் மூன்று வாரங்களுக்கு முன்பே பாப்படெமோஸ் தேர்தல் நடத்துவதற்கான தேதியை முடிவெடுத்துவிட்டார் என்றும், பாராளுமன்றத்தின் மூலம் இன்னும் கூடுதலான சமூகப் பாதுகாப்பு வெட்டுக்கள் இயற்றப்படும்வரை அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

தேர்தல் திகதியை நிச்சயப்படுத்துவதற்கு முக்கிய காரணியாக இருந்தது அடுத்த மாதம் நடக்க இருக்கும் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ள ஐரோப்பிய உச்சிமாநாடுகளை காரணமென கூறுகிறது. இவற்றில் புதிய கிரேக்க அரசாங்கம் சுமத்த வேண்டிய அதிக சிக்கன நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. ஆதாரங்களின்படி, பிரதம மந்திரி ஜூன் மாதம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம்  என  முக்கூட்டு என்று அழைக்கப்படும் பிரதிநிதிகள் ஜூன் மாதம் வருகை தர இருப்பதையும் கருத்திற்கொண்டார். கிரேக்கம் 2013, 2014ம் ஆண்டுகளில் 11 பில்லியன் யூரோக்கள் சேமிப்பையும் காட்ட வேண்டும் என்றால், புதிய அரசாங்கம் இந்த ஆண்டும் கூடுதலான நடவடிக்கைகளை ஏற்க வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கட்டுரை கூறுகிறது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பதவிக்காலம் முடிவதற்கு 18 மாதங்களுக்கு முன்பே புதிய தேர்தல்களுக்கு அறிவித்திருப்பதை தொடர்ந்து, பாப்படெமோஸ் தன் அரசாங்கத்தைத் தான் கலைப்பதாக இல்லை என்றும் அறிவித்துள்ளார். கிரேக்க அமைச்சரவை தேர்தல் வரை தேவைப்படும்போது இன்னும் அதிக சிக்கன நடவடிக்கைகள் பற்றி முடிவெடுப்பதற்குக் முறையாக, வழமைபோல் கூடும்.

இதுவரை சுமத்தப்பட்டுள்ள வெட்டுக்களே கிரேக்க மக்களின் பரந்த பிரிவுகளுக்குப் பேரழிவு விளைவுகளைக் கொடுத்துள்ளன. வெகுஜன வேலையின்மை என்பது தற்பொழுது கிரேக்கத்தில் ஒரு நிரந்தர நிலைமை என ஆகிவிட்டது. உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் என்பது இப்பொழுது 21% க்கும் மேல் உள்ளது; இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்தடவையாக வரலாற்றில் இளைஞர்களில் 50%க்கும் அதிகமானவர்கள் வேலையில் இல்லை. கிட்டத்தட்ட 500,000 மக்களுக்கு எந்த வருமானமும் இல்லை; நிலைமையின் மோசமான தன்மை கிட்டத்தட்ட அதே அளவு, அரை மில்லியன், முக்கியமாக இளைஞர்கள், நாட்டை விட்டு நீங்கி தங்கள் வாழ்வு வெளிநாடுகளில் அமையுமா எனச் சென்றுள்ளனர்.

நாட்டில் உயரும் சமூக நெருக்கடியின் தன்மை ஒரு வாரம் முன்பு 77 வயது டிமிட்ரிஸ் கிறிஸ்ரோலாஸ் எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிரேக்கப் பாராளுமன்றத்தின் முன் தன்னை ஒரு கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளுவதற்கு முன், கிறிஸ்ரோலாஸ் ஒரு குறிப்பை எழுதி வைத்தார்; அதில் உணவிற்காகக் குப்பைத் தொட்டிகளைத் தேடுவதை விட, கௌரவத்துடன் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தான் விரும்புவதாக கூறியிருந்தார்.

நான்கு ஆண்டு காலம் மந்தநிலை மற்றும் பாராளுமன்றத்தின் மூலம் சிக்கன நடவடிக்கைகள் என்பது அது சர்வதேச நிதியத்தின் மழுங்கிய ஆயுதம் என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளது. இதுதான் நாட்டின் ஆளும் கட்சிகளுக்கான ஆதரவைப் பெரிதும் கரைத்துவிடுவதற்கு வழிவகுத்துள்ளது.

சமீபத்திய Public Issue  கருத்துக் கணிப்பின்படி, முன்னாள் வெளியறவு மந்திரி ஆன்டோனிஸ் சமாரஸ் வழிநடத்தும் ஆளும்  புதிய ஜனநாயகக் கட்சிக்கான -ND- ஆதரவு 19% சரிந்துவிட்டது. பெப்ருவரி மாதம் புதிய ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவு கிட்டத்தட்ட 30% என இருந்தது. அதுகூட கடந்த தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சிக்கு இருந்த ஆதரவைவிடக் குறைவாகும்.  அப்பொழுது அது PASOK  இடம் மோசமாகத் தோற்கையில் 33.5% வாக்கைப் பெற்றிருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சமூகப் பேரழிவுடன் முதலும் முக்கியமானதாகவும் தொடர்பு கொண்ட கட்சியும், இப்பொழுது பாப்பாண்ட்ரூவின் நிதி மந்திரி எவான்ஜிலோஸ் வெனிஜெலஸின் தலைமையில் இருப்பதுமான PASOK இரண்டாம் இடத்தில் 14.5% வாக்குகள் பெற்று நிற்கிறது. இது 2009 தேர்தல்களில் அது பெற்ற 44% த்தில் மூன்றில் ஒரு பகுதிதான். இதன் பொருள் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்பு கிரேக்க அரசியலை அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஆதிக்கம் கொண்டிருந்த இரு கட்சிகளும் அவற்றிற்கு இடையே 33% ஆதரவைத்தான் திரட்ட முடிந்துள்ளது என்பதாகும்.

கிரேக்கத்தின் மரபார்ந்த இடது அரசியலுடன் தொடர்புடைய மூன்று எதிர்க்கட்சிகளுடைய மொத்தம், அவை இப்பொழுது ND, PASOK இணைந்த எண்ணிக்கையைவிட அதிகம் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. முற்போக்கு இடதின் கூட்டணி (SYRIZA) 13 சதவிகித வாக்குகளைக் கொண்டுள்ளது (2009 தேர்தலில் 4.6%), சமீபத்தில் SYRIZA இடம் இருந்து விலகி வலதிற்கு வந்துள்ள ஜனநாயக இடது 12% இனை கொண்டுள்ளது, KKEKKE எனப்படும் ஸ்ராலினிச கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி 11% (2009 தேர்தலில் 7.5%) பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.

அரசாங்கம் பற்றி எப்பொழுதேனும் விமர்சனங்கள் இருந்தாலும், இந்த அமைப்புக்கள் அனைத்துமே PASOK மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உள்ளடுக்குகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இதையொட்டி சிக்கனக் கொள்கைகளைச் செயல்படுத்துதல் என்று வரும்போது மேசையில் தங்களுக்கு இடம் இருக்கும் என்பதை உறுதிபடுத்துகின்றன.

SYRIZA மற்றும் ஜனநாயக இடது இரண்டும் கிரேக்கம் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவநாடாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கின்றன. ஓராண்டிற்கு முன் Fotis Kouveniz இனால் நிறுவப்பட்டுள்ள ஜனநாயக இடது ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத்துவம் யூரோப்பகுதியில் கிரேக்கத்தின் அங்கத்துவத்தை வலியுறுத்துகிறது. சமீபத்தில் WSWS நிருபர்களுடன் கருத்துப் பறிமாற்றம் கொண்டிருந்த SYRIZA தலைவர் Alelx Tsipras ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதைக் கடுமையான எதிர்த்தார். மாறாக இரு கட்சிகளும் இருக்கும் நிதிய உடன்பாடுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகின்றன.

நேற்றைய வானொலிப் பேட்டி ஒன்றில் Kouvelis தன் கட்சி ND மற்றும் PASOK உடன் ஒரு கூட்டணியில் சேராது என்றும் PASOK மற்றும் பிற இடது உள்ள கூட்டணியில் சேரும் வாய்ப்பு திறந்திருக்கிறது என்றும் கூறினார்.

SYRIZA மற்றும் ஜனநாயக இடது இரண்டும் கிரேக்க சமூக ஜனநாயகம் என்னும் தேங்கி நிற்கும் நீரில் மீன்பிடிக்க முயல்கின்றன. சமீபத்தில் Tsipras தன்னுடைய மத்தியில் இடதுடனான அதிகாரக் கூட்டணியில் பல புதிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களை அறிவித்தார். இதில் இரு முன்னாள் PASOK பாராளுமன்ற உறுப்பினர்களும், மூத்த PASOK உறுப்பினரான அலெக்சிஸ் மிட்ரோபௌலோஸும் அடங்குவர்.

தன்னுடைய பங்கிற்கு Kouvelis ஐந்து PASOK எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர்களை ஈர்க்க முடிந்தது. அவர்கள் கடைசிப் பிணை எடுப்புப் பொதியில் எதிராக வாக்களித்ததற்காகக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.

முக்கிய ஸ்ராலினிச KKE ஒரு தேசியவாத, முதலாளித்துவத் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவநாடு என்று கிரேக்கம் உள்ளதை நிராகரித்துள்ளது; இதில் ட்ராக்மா மீண்டும் நாணயமாக வரவேண்டும் என்பதும் அடங்கியுள்ளது. இந்த அடிப்படையில் KKE மற்றொரு போலி இடது அமைப்பான ANTARSYA (கிரேக்க முதலாளித்துவ எதிர்ப்பு இடது முன்னணி) இனால் ஈர்க்கப்பட்டுள்ளது; இது சமீபத்தில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இடதின் கூட்டு நடவடிக்கையில் பங்கு பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. KKE, ஜனநாயக இடது இவற்றுடன் ஒரு பொது முன்னணிக்காகவும் Tsipras அழைப்பு விடுத்தார். இரு அமைப்புக்களுமே இதுவரை இந்த அழைப்பை நிராகரித்துள்ளன.

ND, PASOK ஆகியவற்றிற்கு ஆதரவு சரிந்துள்ளது என்றால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போலி இடது கட்சிகளுடன் சேர்ந்து கூட்டமைக்க முடியவில்லை என்றால், அதன் அர்த்தம் அவர்கள் அதிகரித்தளவில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தீவிர வலதை நம்பியிருக்க வேண்டும் என்பதாகும். அரசாங்கத்தில் குறுகியகாலம் இருந்ததைத் தொடர்ந்து Popular Orthodox Rally (Laos) தன் ஆதரவுத் தளம் 2009 ல் இருந்த 5.6%ல் இருந்து சமீபத்திய கருத்துக் கணிப்புக்களில் 3% எனக் குறைந்துவிட்டதைக் கண்டுள்ளது (கிரேக்கப் பாராளுமன்றத்தில் இடம் பெறுவதற்கு 3% என்பது ஆகக்குறைந்த அளவு ஆகும்.)

இன்னும் கூடுதலான வகையில் கூட்டணிப் பங்காளியாக வரும் வாய்ப்பு உடையது தீவிரவாத வலது, தேசிய, Independent Greeks க்கு ஆகும். சமீபத்தில் இந்த அமைப்பு முன்னாள் ND ஒருவரால் நிறுவப்பட்டுள்ளது. இது ND, Laos முகாம்களில் இருந்து ஆதரவைப் பெற முடிந்துள்ளது. தற்பொழுது 11% ஆதரவு இதற்கு உள்ளது. மற்றும் ஒரு புதிய பாசிச அமைப்பான Golden Dawn 5% ஆதரவைக் கொண்டுள்ளது. லூகாஸ் பாப்படெமோஸின் அரசாங்கம் நடத்தும் இனவெறிப் பிரச்சாரத்தால் பாசிசக் கட்சிகள் ஆதரவைப் பெற முடிகின்றது. அரசாங்கம் கடந்த சில வாரங்களில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பங்களைச் சுற்றி வளைத்துப் பிடிப்பதற்கு சிறப்புப் பொலிஸ் பிரிவுகளை அனுப்பியுள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமை கிரேக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு ஆபத்தைக் கொடுக்கும் வகையில் உள்ளது. கிரேக்கப் போலி இடது அமைப்புக்கள் தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பிய ஒன்றியம், நடைமுறைத் தொழிற்சங்கம் மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவத்துடன் பிணைந்துவிட முயல்வதில் முக்கிய பங்கினை கொண்டுள்ளன.

அவர்களால் எவ்வளவிற்கு தொழிலாள வர்க்கத்தை இயங்கவிடாது செய்து மற்றும் ஒரு உண்மையான சோசலிச மாற்றீட்டை நசுக்குவதில் வெற்றிபெறுமோ அந்தளவிற்கு மரபார்ந்த வலதுசாரிகள் ஒரு புதிய ஆட்சியை மறுகட்டமைத்து, நிறுவ தீவிர வலதிற்கு உதவும். இக்கட்சிகள் உண்மையில் அதற்குத் தேவையான சர்வாதிகாரத்தைக் கொடுக்கத்தான் முற்படுகின்றன; அத்தகைய ஆட்சிமுறைதான் சர்வதேச வங்கிகள் கோரும் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தேவையாகும்.