சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Left Front candidate holds presidential election rally in Marseille

பிரான்சின் இடது முன்னணி வேட்பாளர் மார்சையில் ஜனாதிபதித் தேர்தல் பேரணி நடத்துகிறார்

By Alex Lantier in Marseille
16 April 2012

use this version to print | Send feedback

Marseille
மார்சையில் நடந்த பேரணி

சனியன்று இடது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோன்-லூக் மெலன்சோன் நடத்திய தேர்தல் பேரணியில் பங்கேற்பதற்காக பத்தாயிரக்கணக்கான மக்கள் மார்சையின் பிரடோ அவென்யூ பகுதிக்கு பயணப்பட்டனர். ஏப்ரல் 22 அன்று நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கும் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்டுக்கும் அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வேட்பாளர் பாரிஸ் மற்றும் துலூஸ் ஆகிய இடங்களில் நடத்திய பேரணிக்கு அடுத்ததாய் நடத்தும் மூன்றாவது பேரணியாகும் இது.

மார்சைக்கு வருகை தந்த மக்கள் கூட்டம் வங்கிகளுக்கு எதிரான ஒரு இடது-சாரிக் கொள்கைக்கான பரவலான கோரிக்கைகளையும், அத்துடன் மெலன்சோனின் தேர்தல் வேலைத்திட்டம் (குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது, சுகாதார பராமரிப்புக்கான அணுகலை பரவலாக்குவது அத்துடன் சமூக ஏற்றத்தாழ்வினை மட்டுப்படுத்துவது ஆகியவற்றுக்கு இது அழைப்பு விடுக்கிறது) எழுப்பியிருக்கின்ற நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கின்றது.

ஆயினும் இந்தப் பேரணியின் கீழமைந்திருக்கும் ஒரு மாபெரும் முரண்பாடு என்னவென்றால், இந்தக் கோரிக்கைகள் எல்லாம் இடது முன்னணியின் மீது வைக்கப்படுகின்றன. அதுவோ, அரசியல் ஸ்தாபகத்தின் பாகமாக இருந்து கொண்டிருப்பதன் காரணத்தால் அந்த அரசியல் ஸ்தாபகத்திற்கான எந்தத் தீவிரமான எதிர்ப்பிற்கும் திறனற்றதாய் இருக்கும் சக்திகளைக் கொண்டதாய் இருக்கிறது. இந்த முன்னணி, இடது கட்சியையும், அதன் தலைவராய் இருக்கும் முன்னாள் PS தலைமையிலான பன்முக இடது அரசாங்கத்தில் (2000-2002) அமைச்சராக இருந்த மெலன்சோனையும், அத்துடன் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியையும் (PCF) கொண்டதாய் இருக்கிறது. PS, PCF மற்றும் அவர்களது கூட்டாளிகள் எல்லோருக்குமே அவர்கள் அரசாங்கத்தில் இருந்த 1980கள் மற்றும் 1990களில் ஆளும் உயரடுக்கினால் கோரப்பட்ட சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை நடத்திய நெடும் வரலாறுகள் இருக்கின்றன. இத்தகைய மதிப்பிழந்த சக்திகளின் மீது தான் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான வெகுஜன நம்பிக்கைகள் இருக்கிறது என்பது பிரான்சில் இடதில் இருக்கும் வெற்றிடத்தையே சுட்டிக் காட்டுகிறது.

சனியன்று மெலன்சோன் தனது உரையை மத்திய தரைக்கடல் பிராந்தியம் பற்றியும் மற்றும் எகிப்து, துனிசியாவிலான சென்ற ஆண்டின் புரட்சிகள் பற்றியும் குறிப்பிட்டுத் தொடங்கினார். துனிசியாவின் கடனை இரத்து செய்ய அவர் அழைப்பு விடுத்தார்: “மக்கள் இயக்கத்தால் எடுக்கப்படும் திசையை நாம் பார்க்கிறோம். இந்த மக்களின் சுமையை, குறிப்பாக துனிசியாவில் இருக்கும் நமது சகோதர சகோதரிகளின் சுமையை, நாம் குறைத்தாக வேண்டும்.”  மத்திய தரைக் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னத்தை விமர்சனம் செய்த அவர் அது ஒருஅமைதி பிராந்தியமாகஆக வேண்டும் என்றார். அத்துடன் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் அவர் கண்டனம் செய்தார்: “மதத்தைப் பற்றி, எல்லா மதங்களைப் பற்றியும், பேச வேண்டாம், வாயை மூடுங்கள்

அவர் தொடர்ந்தார்: “நாங்கள் இடது வரலாற்றில், காட்டிக் கொடுக்காத இடது வரலாற்றில், ஒரு பக்கத்தை எழுதிக் கொண்டிருக்கிறோம்.” ”ஒதுக்கப்படுபவர்களை, உதாசீனப்படுத்தப்படுபவர்களை மற்றும் அவமதிக்கப்படுபவர்களைபாதுகாக்க அவர் வாக்குறுதியளித்தார். ”நாங்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் என்றெல்லாம் போதுமான அளவுக்கு கேட்டாயிற்று. இந்த நாட்டில் செல்வந்தர்கள் தான் பிச்சையெடுக்கும் ஒரே மக்கள்”. தொழிலாள வர்க்கம்பொது [தேசிய] நலனுக்கான வர்க்கம், தேசப்பற்று மிக்க வர்க்கம்”, அத்துடன் ஒருசூழல் அக்கறைமிக்கவர்க்கமும் கூட என்று அவர் புகழ்ந்தார்.

பிரான்ஸ் நாட்டின் அரச கடன்கள் மீது ஊகவணிகம் செய்வதற்கான நிதிச் சாதனங்களை ஜேர்மன் பங்குச் சந்தையில் உருவாக்கியிருப்பதை மேற்கோள் காட்டி அவர் எச்சரித்தார்: “ஏப்ரல் 16 அன்று நிதி தாக்கவிருக்கிறது, [ஜேர்மன் பங்குச் சந்தையின் துணை நிறுவனமான யூரெக்ஸ் பிரெஞ்சு அரசாங்கப் பத்திரங்கள் மீதான ஒரு எதிர்காலக் கொள்முதல் பங்குகளை (futures contract) அறிமுகம் செய்கிறது], பிரான்ஸ் அதற்கு வளைந்து கொடுக்காது.” போராட்ட வேலைநிறுத்தங்களுக்கு சங்கங்கள் விடும் அழைப்புக்கு பதிலிறுக்குமாறு தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்ட அவர், அவர்கள்பண்பட்டவர்களாகபோராட்டத்தின் ஒருஒழுங்கமைந்த சக்தியாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். “குடியரசு வாழ்க, பிரான்ஸ் வாழ்க!” என்று கூறி அவர் முடித்தார்.

நிதிமூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் மெலன்சோனின் முன்னோக்கு ஒரு முட்டுச் சந்தாகத் தான் ஒவ்வொரு முறையும் நிரூபணமாகியிருக்கிறது. அரச கொள்கையில் செல்வாக்கு செலுத்தும் வகையில் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் பின்பற்றி தொழிலாளர்கள் வரம்புபட்ட ஆர்ப்பாட்ட வேலைநிறுத்தங்களை நடத்த வேண்டும் என்று அவர் சுருங்கக் கூறும் கொள்கையானது வங்கிகளால் குறிவைக்கப்பட்டிருக்கும் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சமூக-ஜனநாயக அரசாங்கங்களின் கீழ் ஸ்ராலினிச மற்றும் குட்டி-முதலாளித்துவஇடதுகட்சிகள் மேற்கொண்டு வரும் நிலைப்பாடு தான். இந்த அரசாங்கங்கள் வெகுஜன எதிர்ப்புகளை உதாசீனப்படுத்தி விட்டு அந்நாடுகளின் தொழிலாளர்களை வறுமையில் தள்ளி விட்டு சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து  நடைமுறைப்படுத்தின.

இடதுபூச்சுடன் இருந்தாலும் கூட, மெலன்சோன் ஊக்குவிக்கும் தேசியவாதமும் தேசப்பற்றுவாதமும் தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் அந்நியமான மற்றும் குரோதமான சமூக நலன்களையே வெளிப்படுத்துகின்றனஅவரது தேசியவாதக் கண்ணோட்டங்களில் சம்பந்தப்பட்ட மேலாதிக்கவாத மற்றும் ஏகாதிபத்திய விடயங்களை - லிபியப் போரில் பிரான்ஸ் பங்கேற்றதற்கு இவரளித்த ஆதரவு அல்லது பர்க்காவுக்குத் தடை செய்து சட்டம் கொண்டு வரும் ஆலோசனையில் PCF இன் பாத்திரம் போன்று - மறைப்பதில் அவர் கவனமாக இருந்தார். அதனால் தான் அவரால் அவரது அரசியலுக்கும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும்இடதுஅரசியல்வாதிகளின் - அவர்கள் தொழிலாள வர்கக்த்தை காட்டிக் கொடுத்திருந்தனர் என்பதை அவரேயும் மறைமுகமாய் ஒப்புக் கொண்டிருக்கிறார் - அரசியலுக்கும் இடையிலான வித்தியாசத்தை அதிக விபரமாய் அவரால் விளக்க முடியவில்லைஉண்மையில் மெலென்சோனின் அரசியலும் பெருமளவில் அவர்களுடையதைப் போன்றதே ஆகும், அதற்கும் நெருக்கடியில் தவிக்கும் பிரெஞ்சு முதலாளித்துவத்தை எதிர்த்து கண்ணியமான வேலைகளையும், வாழ்க்கைத் தரங்களையும் அடிப்படை உரிமைகளையும் வெல்வதற்கு அவசியமாயிருக்கும் புரட்சிகரப் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Farid
ஃபரிட்

மார்சை பகுதி மருத்துவமனை ஒன்றில் டெக்னீசியனாக இருப்பவரும் PCF காவல் குழுவில் ஒரு உறுப்பினருமான ஃபரிட்டிடம் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் பேசினர். மெலன்சோன்ஜனாதிபதித் தேர்தலில் நன்கு வாக்குகள் பெற்று அரசியல் பிரச்சினைகளில் செல்வாக்கு செலுத்துவார், விவாதத்தை மாற்றுவார்என்று தான் நம்புவதாய் அவர் கூறினார். “ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது கிரீஸில் போல் இருக்காது; ஹாலண்ட் இடதுகளால் நன்கு கட்டுப்பாடு செலுத்தப்படுபவராய் இருப்பார்.”

மருத்துவர்கள் ஒவ்வொரு ஆலோசனைக்குப் பின்னரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என்பது போன்ற சார்க்கோசியின் சமூகப் பாதுகாப்பு சீர்திருத்தங்கள், ”மக்களின் கணிசமான பகுதியினருக்கு பராமரிப்பு கிட்டாமல் செய்து ஏற்றத்தாழ்வைஉருவாக்கியிருப்பதாக அவர் கூறினார். மார்சையில் Lafarge சிமெண்ட் தொழிற்சாலை, குல்மன் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் கப்பல் கட்டும் ஆலைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிற்துறை வேலைகள் இழக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். “வங்கிகள் தேசத்திற்கு சேவை செய்வதாய் இருப்பது நமக்கு அவசியம். வங்கி அமைப்பின் ஒரு பாதி தொழிற்துறைக்கு சேவை செய்வதாகவும், இன்னொரு பகுதி நிதிச் சேவைகள் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். எளிமையான விடயம், தெளிவான விடயம்என்றார் அவர்.

சோவியத் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியில் இருந்து எழுந்ததைப் போன்றதொரு தொழிலாளர்அரசு அமைய வேண்டுமென்று நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஃபரிட் அளித்த பதில்: “எங்களுக்கு தொழிலாளர்அரசு வேண்டாம், ஆனால் மக்களை சரியாய் நிர்வகிப்பதற்காக இந்த இலட்சியம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

எற்றியான் என்கிற ஒரு மாணவர் கூறுகையில், மெலன்சோனின் வேலைத்திட்டத்தில் இருக்கும்ஏறக்குறைய ஒவ்வொன்றும்தனக்கு ஏற்புடையது என்று தெரிவித்தார். இந்த இடது கட்சி அரசியல்வாதி ஹாலண்டின் ஜனாதிபதி வேட்புநிலையில் செல்வாக்கு செலுத்துவார் என்று தான் நம்புவதாய் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். “அவர் வெல்லவில்லை என்றபோதும் கூட, ஹாலண்டின் வேலைத்திட்டத்தில் அவரது செல்வாக்கு இருக்கும்.” வருடத்திற்கு 1 மில்லியன் யூரோக்களுக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 75 சதவீதம் வரை வரிவிதிக்கும் ஹாலண்டின் ஆலோசனையை PS மீது மெலன்சோன் செலுத்தும் செல்வாக்கிற்கு உதாரணமாய் அவர் மேற்கோள் காட்டினார்

ஹாலண்ட் அரசாங்கத்தின் கொள்கையில் மெலன்சோன் நிஜமாகவே செல்வாக்கு செலுத்த முடியும் என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது அவர் கூறினார்: “உறுதியாகக் கூறுவது கடினம்.” PS ஜனாதிபதியான பிரான்சுவா மித்திரோனின் அரசியல் அணியில் மெலன்சோன் ஒரு பகுதியாக இருந்த சமயத்தில் எல்லாம் தான் ரொம்ப சிறு வயதில் இருந்ததாய்க் குறிப்பிட்ட எற்றியான், “அதன்பின் மெலன்சோன் தன்னை மாற்றிக் கொண்டிருப்பார்என்று நம்புவதாய் மேலும் சேர்த்துக் கொண்டார்.

பிரெஞ்சு போர் ஜெட் விமானங்களை பழுதுநீக்கும் Arsenal ஆலையில் வேலை செய்பவரும் PCF அனுதாபியுமான ஜோன்-மார்க் உடனும் WSWS பேசியது. “நமது அரசியலைப் பாதுகாக்கவும், சொத்துகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவும், ஓய்வூதியங்கள் மற்றும் பொதுச் சேவைகளுக்காகவும்இந்தப் பேரணியில் தான் பங்கேற்பதாய் அவர் கூறினார். “கிரீஸில் செய்தது போல் நம்மை இங்கு வீதிகளில் நிறுத்தக் கூடிய ஒட்டுமொத்த ஐரோப்பிய நிதிக்கு எதிராகவுமான ஒரு மாற்றத்தைஅவர் விரும்பினார்.

Jean-Marc
ஜோன்
-மார்க்

லிபியப் போரில் பிரான்ஸ் பங்கேற்றது குறித்து - மெலன்சோன் இந்தப் போருக்கு ஆதரவளித்திருந்தார் - ஜோன்-மார்க் கூறியதாவது: “அது எனக்குப் பிடிக்கவில்லை. நம்மைப் பாதுகாத்துக் கொள்வது தான் நம் வேலை, போர் செய்வதல்ல, பிரான்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகவில்லையே. முதலாளித்துவத்தைத் தோற்கடிக்க நான் இடது முன்னணியைக் காட்டிலும் PCFக்கு தான் நெருக்கமானவன். ஆனால் ஸ்ராலினிச ஆட்சிகள் செய்தவற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது, அது கம்யூனிசமும் கிடையாது, அவை மார்க்ஸ் விபரித்திருந்தவை அல்ல, அங்கே பாரிய தவறுகள் இருந்தன.” 

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேசியவாதத்திற்கும் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலம் பரிந்துரைக்கும் புரட்சிகர சர்வதேசக் கொள்கைகளுக்கும் இடையிலான ஆழமான வித்தியாசத்தை WSWS செய்தியாளர்கள் குறிப்பிட்டுக் காட்டினர். சொல்லப்போனால், இந்த ஸ்ராலினிச நிலைப்பாடு தான், 1936 இல், PCF தலைவராய் இருந்த மொரிஸ் தோரெஸ்,  20 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலான மிகக் குறிப்பிடத்தக்க போராட்டம் என்று கூறத்தக்கதான  சமூக ஜனநாயகக் கட்சியின் லியோன் புளோமின் மக்கள் முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான பொது வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கு எதிராகவும் அதற்குப் பதிலாக தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தவும் இட்டுச் சென்றது.

இதற்குப் பதிலளித்த ஜோன்-மார்க் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பாய் நாஜிக்களுக்கு எதிரான பிரான்சின் தேசியப் பாதுகாப்புக்குத் தயாரிப்பு செய்வதற்கே தோரேஸ் முனைந்து கொண்டிருந்தார் எனப் பதிலளித்தார். அவர் தொடர்ந்து கூறினார்: “எதிர்ப்புக்கான தேசியக் குழுவின் சமூக வெற்றிகளை, ஊதியங்களுடனான விடுமுறைகளை [1936 பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பிரதிபலனான சலுகையாகப் பெறப்பட்டது] நான் பாதுகாக்கிறேன், இதற்கெல்லாம் PCFக்கு நான் நன்றிக்கடன் கொண்டிருக்கிறேன். ஸ்ராலினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் ஒரு பெரும் வேறுபாடு இருந்தது. நான் ஒரு ட்ரொட்ஸ்கிசவாதி இல்லை, ஆனால் நான் ஸ்ராலினிஸ்டும் இல்லை.”

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை பிரான்சில் தொழிலாள வர்க்கத்திற்கு என்ன பாதிப்பைக் கொண்டிருப்பதாய்க் கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் கூறினார்: “1980களில் இருந்து நிலைமைகள் தொடர்ந்து சீரழிந்து தான் வருகின்றன. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில், மருந்துக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது, யூரோவின் அறிமுகம், உங்கள் தேவைகளனைத்தையும் வாங்குவதென்பதே கடினமாய் விட்டிருப்பது என, விடயங்கள் மோசம் என்பதில் இருந்து படுமோசம் என்கிற நிலைக்குச் சென்றுள்ளன.”

இடது முன்னணியில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக் கொள்வதன் மூலம், அவர் மெலன்சோனை முழுக்க நம்பவில்லை என்பதைக் காட்டுகிறார் என்பதை WSWS செய்தியாளர்கள் குறிப்பிட்டபோது ஜோன் மார்க் அளித்த பதில்: “மெலன்சோன் PS அமைச்சராய் இருந்தவர், அதனால் தான். ஹாலண்ட் இன்னும் கூடுதலாய் வலதின் திசையில் நிற்கிறார். அவர் எதையும் மாற்றப் போவதில்லை. மெலன்சோன் அவரது இப்போதைய அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பார் என்று நான் நம்புகிறேன்.”