சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French president and Socialist Party candidate hold Paris rallies

பிரெஞ்சு ஜனாதிபதியும், சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரும் பாரீஸில் பேரணிகளை நடத்துகின்றனர்

By Antoine Lerougetel and Johannes Stern
18 April 2012

use this version to print | Send feedback

ஞாயிறன்று பாரீஸில் நடத்திய வெட்டவெளி பேரணிகளின் போட்டாபோட்டியில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்டும் ஏப்ரல் 22இல் நடக்கவுள்ள முதல் சுற்று ஜனாதிபதி தேர்தல்களில் முந்துவதற்காக அவரவர்களின் பிரச்சாரங்களை முன்னுக்குத்தள்ள முயன்றனர். Place de la Concorde என்னும் இடத்தில் சார்க்கோசி பேசினார்; அதேவேளை ஹாலண்டின் பேரணி Château de Vincennes என்னும் இடத்தில் நடந்தது.

இரண்டு தரப்பும் அவர்களின் பேரணிகளில் 100,000 பேர் பங்கு பெற்றதாக மிகைப்படுத்தி தெரிவித்திருந்தன.

தற்போது கருத்துகணிப்புகள் முதல் சுற்றில் 27 சதவீதத்தில் இருக்கும் சார்கோசிக்கு மிக நெருக்கத்தில் ஹாலண்டை கொண்டு வந்து நிறுத்துகின்றன. இருந்தபோதினும், அவை தற்போதைய ஜனாதிபதியை விட 56 சதவீதத்திற்கு 44 சதவீதம் என்றளவில் ஹாலண்ட் முந்தி செல்வதற்கு வாய்ப்பளிக்கின்றன.  

நிதியியல் சந்தைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) கோரப்பட்ட சிக்கன முறைமைகளைத் தேர்தலுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்த விரும்புவதாக அந்த இரண்டு பிரதான வேட்பாளர்களுமே தொடர்ந்து தெளிவுபடுத்துகின்றனர். பிரான்ஸின் பற்றாக்குறையை பூஜ்ஜியமாக குறைக்கவும், பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும் (இது தொழிலாள வர்க்கத்தை மேலும் வறுமையில் மட்டுமே தள்ளக்கூடியவையாகும்) அவர்கள் இருவருமே அறைகூவல் விடுக்கின்றனர்.

சனியன்று நிகழ்த்திய அவருடைய உரையில் ஹாலண்ட் சில ஜனரஞ்சக வார்த்தைஜாலங்களுக்கு பின்னர் அவருடைய சிக்கன முறைமை சார்ந்த நிகழ்ச்சிநிரலை மறைக்க முயன்றார். “அதிகரித்துவரும் அநீதி, உலக ஒழுங்கமைப்பின் உடைவு, நம்முடைய பூமி சூறையாடப்படுவது மற்றும் சந்தையின் மீதான வெறுப்பு ஆகியவற்றிற்கு எதிரான கோபத்தை நான் கேட்கிறேன்,” என்று தெரிவித்த அவர், “தனிச்சலுகைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஜனாதிபதியாக" நான் இருப்பேன் என்றும் பிரகடனப்படுத்தினார்.   

முதல் சுற்று தேர்தல் நடக்கவிருப்பதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில், ஹாலண்ட் இடது முன்னனியின் (இடது கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கூட்டணி) வேட்பாளரான ஜோன்-லூக் மெலன்சோனின் வார்த்தைஜாலங்களோடு இணங்கி வருகிறார். அதிகப்படியான குறைந்தபட்ச கூலி மற்றும் செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பு போன்ற அவருடைய அறிக்கைகளால் மெலன்சோன் தொடர்ந்து அதிகளவில் ஆதரவைப் பெற்று வருகிறார். கணித்துகணிப்புகளில் அவர் தற்போது சுமார் 15 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார்.  

சார்கோசிக்கு மாற்றாக இருக்கக்கூடிய ஒரே எதார்த்தமான "இடது" தாம் மட்டுமே என்பதாக காட்டிக்கொண்டு, இடது முன்னனியின் வாக்காளர்களை வென்றெடுப்பதே ஹாலண்டின் நோக்கமாக உள்ளது. முதல் சுற்றில் மெலன்சோனுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு "எதிர்காலமற்றதில் வாக்களித்து புகலிடம் தேடாதீர்கள்" என்று கூறி அழைப்புவிடுத்தார். அவர் வாதிட்டது: “பிரான்ஸிற்கு தலைமை அளித்து எடுத்து செல்லவும், மக்களின் கோபத்தை அரசு சட்டங்களாக மாற்றவும் நான் மட்டுமே ஒரே இடது வேட்பாளர் இருக்கிறேன்,” என்றார்.

சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான அவரது வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே மெலன்சோனின் வாக்காளர்களுக்கு ஹாலண்டால் முறையீடு செய்ய முடிகிறதென்பது முதலாமவரின் அரசியல் மீதும் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ "இடதின்" மீதும் ஒரு குற்றபத்திரிகையாக உள்ளது. இந்த சக்திகள், சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, தொழிற்சங்கங்களோடு சேர்ந்து வேலை செய்து, தங்களால் ஹாலண்ட்டிற்கு அழுத்தம் அளிக்க முடியுமென்ற பிரமைகளை ஊக்குவிக்கின்றன.  

இந்த வாதங்கள் எரிச்சலூட்டுவதும், பொய்யானவையும் ஆகும். சார்கோசியைப் போலவே, ஹாலண்டும் பிரெஞ்சு முதலாளிகளின் மற்றும் வங்கிகளின் ஒரு வேட்பாளர் ஆவார். மெலன்சோனே மறைந்த ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் மற்றும் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் பன்முக இடது அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளின் ஒரு ஆதரவாளர் ஆவார். அவரால் முன்மொழியப்பட்ட எந்தவொரு முறைமைகளையும் நடைமுறைப்படுத்துவது அவருடைய நோக்கமல்ல. ஹாலண்டிடம் பிரமைகளை உருவாக்குவதன் மூலம், உண்மையில் சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாள வர்க்க விரோத வேலைத்திட்டத்தை அவர்கள் ஆதரிப்பதையே மிலென்சோனும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியும் தெளிவுபடுத்துகின்றன.

அவரது சிக்கன முறைமைகளின் உட்கூறுகளில் இருந்து (ஏனைய சமூக வரவு-செலவு கணக்குகளில் இருந்து நிதிகளை பெருமளவிற்கு மாற்றுவதிலிருந்து) பகுதியாக வெளியேறுவதற்கான ஹாலண்டின் முன்மொழிவை கடந்த புதனன்று சார்க்கோசி தாக்கினார்: “நாம் மக்கள் பணியாளர்களை நியமிக்க தொடங்கினால், மீண்டும் நாம் செலவு செய்ய தொடங்கினால், ஓய்வூதிய சீர்திருத்தத்தை கேள்விக்கு இடமாக்கிவிட்டால், வட்டிவிகிதம் உயரும் என்பது வெறுமனே ஓர் அபாயமாக இருக்காது, அது நிச்சயமாக அவ்வாறு தான் நடக்கும். அது உடனடியாக நம்பிக்கை இழப்பு நெருக்கடியை (crisis of confidence) தோற்றுவிக்கும்,” என்றார்

ஞாயிறன்று சார்க்கோசி அவருக்கு எதிரான சோசலிஸ்ட் போட்டியாளரின் வார்த்தைஜாலத்தோடு ஓரளவிற்கு வரிசைகட்டி நின்று, ஐரோப்பிய மத்திய வங்களின் மீதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசியலின் மீதும் ஒரு விமர்சனத்தை முன்வைக்கவும் முயன்றார். Place de la Concorde இல் அவருடைய ஆதரவாளர்களிடம் அவர் கூறியது: “மத்திய வங்கி வளர்ச்சியை ஆதரிக்கவில்லையென்றால், நம்மால் போதியளவிற்கு வளர்ச்சியை எட்ட முடியாது.” யூரோவை மறுமதிப்பீடு செய்யவும் அல்லது "ஐரோப்பிய ஏற்றுமதியை அதிகரிக்கும் விதத்தில் யூரோவிற்கான செலாவணி விகிதத்தை சாத்தியமான அளவிற்கு இன்னும் கூடுதலாக்கவும்" அவர் அழைப்புவிடுத்தார். பணப்புழக்கத்தைத் தளர்த்தும் முறையை (deflation) ஐரோப்பா தேர்ந்தெடுக்கின்றதென்றால், "அது இடந்தெரியாமல் போய்விடும்; நாம் 30களை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்,” என்றார்.   

Le Monde குறிப்பிட்டது: “மரியோ மொண்டியின் [ஐரோப்பிய ஒன்றியத்தால் நியமிக்கப்பட்ட இத்தாலியதொழில் உத்தியமைபொருந்திய பிரதமர்] முன்னிலையில் நவம்பர் 24இல் ஸ்ட்ராஸ்பேர்க்கில் ஜேர்மன் சான்சிலர் ஆங்கேலா மேர்கெலுடன் நடந்த மாநாட்டில் மூடி வைக்கப்பட்டிருந்த மௌன உடன்படிக்கையை, அதாவது ஐரோப்பிய மத்திய வங்கியை ஒருபோதும் குறிப்பிடக் கூடாது, அது அதன் வேலையைச் செய்யட்டும் என்பதை நிக்கோலா சார்க்கோசி உடைத்துள்ளார்.”

திங்களன்று France Info radioஇல் நேர்காணல் செய்யப்பட்ட ஒரு பொருளாதார நிபுணர் கூறுகையில், இதுபோன்றவொரு கொள்கை "வடக்கு ஐரோப்பா மீதான ஒரு யுத்த பிரகடனத்திற்கு" ஒப்பானதாகும் என்றார். அனைத்திற்கும் மேலாக அது ஐரோப்பிய மத்திய வங்கியின் பண-அச்சடிப்பை காரணமாக அச்சுறுத்துகிறது என்ற அதீத-பணவீக்கத்தைத் தவிர்க்க விரும்புகிறது

முதலாளித்துவத்தின் சார்பாக பிரெஞ்சு தேசபற்றுவாத (French chauvinism) முறையீடுகளைத் தூண்டிவிட்டு சார்க்கோசி சமூக நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார். “பிரான்சின் ஆத்மார்த்த" பாரம்பரியத்தை சிதைக்க சோசலிஸ்ட் கட்சியை தாம் அனுமதிக்க போவதில்லை என்று அவர் அவருடைய ஆதரவாளர்களிடம் கூறினார்.   

அதை விஞ்சி நிற்காமல், ஆனால் அப்பட்டமான தேசபற்றுவாத முறையீடுகளுக்கும் குறைவில்லாமல்" ஹாலண்டும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார் என்று Le Nouvel Observateur குறிப்பிட்டது.