சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

IMF insists austerity drive must be intensified

சிக்கன நடவடிக்கைகளுக்கான உந்துதல் தீவிரப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச நாணயநிதியம் வலியுறுத்துகிறது

By Nick Beams
19 April 2012
use this version to print | Send feedback

அரசாங்கங்கள் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வங்கிகளுக்குக் கொடுக்கையில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக நிலைமைகளைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்படுவது முறையாக நோக்கம் கொள்ளப்பட்டுள்ளது. இதுதான் சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் வெளியிட்டுள்ள இரண்டு முக்கிய அறிக்கைகளின் மையத் தகவல் ஆகும். இது இந்த வார இறுதியில் நடக்க இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த காலக் கூட்டத்திற்கு முன்பாக வெளிவந்துள்ளது.

செவ்வாயன்று சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார நோக்கில் - World Economic Outlook-  சிக்கனத் திட்டம் தொடர வேண்டியதின் அவசியம் தெளிவுபடுத்தப்பட்டது. இது ஒருகாலத்தில் பொருளாதார மீட்பிற்கான இயல்பான வடிவமைப்பு என்று முன்பு கருதப்பட்டதுபோல் இப்பொழுது ஏதும் இல்லை என்பதைக் கூறுகிறது. உலக ஸ்திரப்படுத்தல் அறிக்கையும் -Global Stability Report- புதன் அன்று வெளியிடப்பட்டது, ஐரோப்பிய வங்கிகள் தங்கள் இருப்பு நிலைக் குறிப்புக்களை (Balance sheets) $2.6 டிரில்லியன் குறைக்க இருப்பதாகத் தெரிவிக்கிறது. இது வணிகத்திற்குக் கொடுக்கப்படும் கடன், வீடுகள் வாங்கும் கடன் ஆகியவற்றிற்கு பெருத்த அடியாக இருக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுனர் ஒலிவியே பிளோஞ்சார்ட் இன்னும் அதிக அரசாங்க நிதிமூலம் வங்கிப் பிணை எடுப்பு நடவடிக்கைகள் தேவை என்னும் அழைப்பை விடுக்க இது வழிவகுத்துள்ளது என்றார்.

 

இரண்டு அறிக்கைகளும் 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவு, அதைத்தொடர்ந்த நிதிய நெருக்கடி ஆகியவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குரிய சரிவைப் பிரதிபலிக்கவில்லை (அதில் இருந்து உண்மையான மீட்பு இருக்கும்), மாறாக முதலாளித்துவ ஒழுங்கின் நிலைமுறிவுவை, இதுதான் சமூக மற்றும் பொருளாதார உறவுகளை அடிப்படையில் மறு கட்டமைக்க வழிவகுக்கும் என்பதைத்தான் எடுத்துக்காட்ட உதவுகின்றன. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பின், தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் தீவிர விளைவுகளைக் கொடுக்கும் வகையில் மறு கட்டமைப்பு சிறிதும் இரக்கமின்றித் தொடரப்படுகிறது. உலக பொருளாதார நோக்கில் உலக வளர்ச்சி ஏற்கனவே மிகக் குறைந்த தரமான 2011ல் 4% என்பதில் இருந்து 2012ல் 3.5% எனக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. முக்கிய முதலாளித்துவ நாடுகளின் வளர்ச்சி இன்னும் குறைவாக இருக்கும்.

அரசாங்கக் கடன் நெருக்கடி மற்றும் பொதுவாக நம்பிக்கையற்ற நிலையில், உண்மைப் பொருளாதாரத்தில் வங்கிகள் அதிகம் தலையிடாத விளைவுகளினாலும், சந்தை அழுத்தங்களை முகங்கொடுக்கும் வகையில், நிதிய ஒருங்கிணைப்பின் பாதிப்பாலும் [அரசாங்கங்கள் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளினாலும்] யூரோப் பகுதியில் மந்தநிலைதான் வரும் என்று அறிக்கை கணித்துள்ளது.

மீட்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று கூறப்படும் அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி  2011ல் 1.7% என்று கூறப்படுகிறது. 2012ல் சற்றே கூடுதலாக 2.1% என இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது; 2013ல் இது 2.4% என உயரக்கூடும். இப்புள்ளிவிவரங்கள் அனைத்தும் உலகமகா யுத்தத்திற்கு பிந்தைய கால மீட்சிகளைவிட மிகவும் குறைவாகும்.

தற்பொழுதுள்ள தேக்க நிலையின் முக்கிய காரணங்களில் ஒன்று இப்பொழுது நிதியச் சந்தைகளின் ஆணையில் எல்லா அரசாங்கங்களாலும் சுமத்தப்படும் சிக்கனத் திட்டங்கள்தான். உலக பொருளாதார நோக்கு யூரோப் பகுதியில் நிதியம் திரும்பிப் பெறப்படல் என்று கூறப்படுவது கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% இருக்கலாம். இது 2011ல் இருந்த 1% விட அதிகம் என்று கணித்துள்ளது. அமெரிக்காவில் ஒத்த புள்ளி விவரங்கள் 1.25 மற்றும் 0.75% ஆகும்.

 இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொருளாதார உறுதிப்பாட்டைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இவற்றின் பாதிப்பு மிகத் தெளிவாக கிரேக்கத்தில் காணப்படமுடியும். அங்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவு பெற்ற சிக்கன நடவடிக்கைகள் திட்டம் பேரழிவைத்தான் ஏற்படுத்தியுள்ளன. உலக பொருளாதார நோக்கு, 2011இல் சுருக்கம் 7% என்று இருந்தபின், கிரேக்கப் பொருளாதாரம் 2012ல் இன்னும் 4.6% கூடுதலாகச் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் வர்க்க உள்ளடக்கம் சர்வதேச நாணய நிதியத்தினாலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொழில் சந்தை நிலைமைகள் பல முன்னேற்றமடைந்த நாடுகளில் கடினமாகத்தான் இருக்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது: அதாவது ஐரோப்பாவில் சில பகுதிகளில் 20% என அடைந்துள்ள வேலையின்மை விகிதத்தில் குறைவு ஏதும் இருக்காது. அதே நேரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் பெரும்பகுதி, இலாபம் அடைந்தவர்களின் இலாபங்களாகத்தான்  சென்றுள்ளது என அது சுட்டிக்காட்டியுள்ளது. உண்மையான ஊதியம் உயர்வு பெறுவது என்பது நடப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றும் அறிக்கை அறிவித்துள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், நடைபெற்றுக் கொண்டிருப்பது மீட்சி அல்ல; செல்வம் மிகப்பெரியளவில் அதிக வருமானம் பெறும் குழுக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுவதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

அறிக்கையை முன்வைத்த செய்தியாளர் கூட்டத்தில், பிளாஞ்சார்ட் சிக்கன நடவடிக்கைகளே நிதியச் சந்தைகளுக்கு சமூக நிலைமைகள்மீது இன்னும் ஆழ்ந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதைத் தோற்றுவிக்கின்றன என்பதைத் தெளிவாக்கினார். நிதியக் கொள்கை சந்தைகள் ஓரளவிற்கு நிதிய உறுதிப்படுத்தலை கேட்டு அதே நேரத்தில் இந்த உறுதிப்படுத்தல் குறைந்தப்பட்ச வளர்ச்சியைக் கொடுத்தால் எதிர்மறையாக செயல்படும் வகையில் மனநிலை பாதிக்கப்பட்டது போல் நடந்து கொள்கின்றன என்பதால் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார்.

ஆனால் இந்தப் பைத்தியக்காரத்தனம் ஏதோ கொள்கைத் தோல்வி என்பதின் விளைவு அல்ல. நிதியச் சந்தைகளின் செயற்பாடுகளிலேயே இது இயைந்துள்ளது. அரசாங்கக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்களுக்கு உயர்த்துவது, வங்கிப் பிணையெடுப்புக்கள் அரசாங்கம் கொடுப்பதால் ஏற்படுவது, நிதியச் சந்தைகளில் இன்னும் அதிக வெட்டுக்களுக்கான கோரிக்கையை எழுப்புகிறது. இத்தகைய வெட்டுக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவை ஏற்படுத்துகின்றன, அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்களுக்கேற்ப உயர்கிறது. இது நிதியச் சந்தைகள் இன்னும் அதிக வெட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கோருகிறது.

மனநிலைபாதிப்புப் பற்றிய குறிப்பைப் பற்றிக் கேட்கப்பட்ட ஒரு வினாவிற்கு, பிளாஞ்சார்ட் நிதியச் சந்தைகள் எப்படியும் திருப்திப்படப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சந்தைகள் கவனித்துக் கேட்கின்றன, நீங்கள் நம்பகத்தன்மை உடையவர் என்று அவற்றை நம்ப வைக்க வேண்டும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்து செய்ய வேண்டும். என்றார் அவர். இந்த இலக்கை அடைவதற்கான வழிவகைகளுள் ஒன்று உலக பொருளாதார நோக்கின் சுருக்க உரையில் கொடுக்கப்பட்டுள்ளது; இது மூப்படைவதுடன் தொடர்புடைய செலவுகளைக் குறித்த சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை சந்தையின் நம்பிக்கையை மறு கட்டமைப்பதில் இருப்பதை வலியுறுத்தினார்.

வேறுவிதமாகக் கூறினால், சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், வயதானவர்கள் மற்றும் சமூகத்தில் பாதிப்பிற்குட்படக்கூடிய பிரிவுகள் நிதிய மூலதனத்தின் தீர்க்க இயலாத கோரிக்கைகளை திருப்திப்படுத்துவதற்கான வீணான முயற்சிக்கு தியாகம் செய்யப்பட வேண்டும் என்பதே.

பல பண்டைய சமூகங்களின் மனித உயிர்களை கடவுள்களுக்காக வேள்விகளில் பலி கொடுத்துத் தியாகம் செய்யும் பழக்கம் இப்பொழுது காட்டுமிராண்டித்தனம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இன்று நிதியச் சந்தைகளுக்கும் அவர்களின் நலன்களுக்காக சேவை செய்யும் மிகச்சிறிய பெரும் செல்வக்கொழிப்பு உடைய உயரடுக்கிற்கு மனித உயிர்களைத் தியாகம் செய்வது என்பது மிகப் பெரியளவிலான காட்டிமிராண்டித்தனம் என்றுதான் கூறப்பட வேண்டும்.

சமூகத்தில் எந்தப் பிரிவிற்கும் விலக்கு கிடையாது. உலக பொருளாதார நோக்கின் அறிக்கை ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், தொழிலாளர்துறை, பொருட்கள் விற்பனைச் சந்தைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றில் அடிப்படைச் சீர்திருத்தங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளது. நிதியத் துறையில் சீர்திருத்தம்தேவை என்னும் கட்டாயக் குறிப்பும் உள்ளது, ஆனால் அது வெறும் தோற்றப்பொலிவிற்கு மட்டும்தான்.

சர்வதேச நாணய நிதியம் ஜனவரி மாதம் வெளியிட்ட கருத்தில் உலகப் பொருளாதாரத்திற்கு சற்றே முன்னேற்றமான நிலைமையை முன்வைத்துள்ளபோது, உலகப் பொருளாதார நோக்கின் அறிக்கை நலிந்த செயற்பாடுகள், கீழ்நோக்கியுள்ள அபாயங்கள், உறுதியற்றதன்மை மற்றும் பூகோளஅரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை பற்றி அதிகளவில் குறிப்பிட்டுள்ளது.

2008ல் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வெடித்த எந்த முரண்பாடும், கடக்கப்படுவது ஒரு புறம் இருக்க, இன்னும் தீர்க்கப்படக்கூட இல்லை என்பதையும் இது தெளிவாக்கியுள்ளது. உண்மையில், அரசாங்கங்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாக எடுக்கும் நடவடிக்கைகள் அவற்றை ஒரு புதிய நிதிய நெருக்கடியைச் சமாளிக்கக் குறைந்த திறனுடையதாக ஆக்கிவிட்டன. அந்த அறிக்கை கூறுகிறது: தற்போதைய குறைந்த கொள்கை செயற்பாட்டுச் சூழலில், ....பல மோசமான அதிர்ச்சிகள் வருவதற்கு வாய்ப்புக்கள் உண்டு... [யூரோப் பகுதியில் ஒரு நெருக்கடி, ஒரு எண்ணெய் விலை உயர்வு ஆகியவை உதாரணம்]; இவற்றின் இடைத்தொடர்பினால் 1930களை நினைவுபடுத்தும் மிகப் பெரிய முக்கியமான மந்தநிலை தோன்றலாம்....