சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Socialist Party candidate Hollande, Sarkozy advance in French presidential elections

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹாலண்ட் மற்றும் சார்க்கோசி அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றனர்

By Alex Lantier
23 April 2012
use this version to print | Send feedback

ஞாயிறன்று நடைபெற்ற பிரெஞ்சு ஜனாதிபதிக்கான முதல் சுற்றுத் தேர்தலில், சோசலிஸ்ட் கட்சி(PS)வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்டும் நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் மிக அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று மே 6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றுத் தேர்தலுக்கு முன்னேறினர்.

ஹாலண்ட் சுமார் 28 சதவீத வாக்குகளைப் பெற்றார், சார்க்கோசி 27 சதவீத வாக்குகளுடன் அடுத்து வந்தார். நவ பாசிச வேட்பாளரான மரின் லு பென் 19 சதவீத வாக்குகளைப் பெற்றார். இது தேர்தல் கருத்துக் கணிப்புகளின் மதிப்பீட்டை விஞ்சிய அளவு என்பதோடு அவரது தந்தையான ஜோன்-மரி லு பென் 2002 தேர்தலில் பெற்ற (16.8 சதவீதம்) வாக்குகளையும்விட அதிகமானதாகும். இடது முன்னணி வேட்பாளரான ஜோன்-லூக் மெலன்சோன் (இவர் 11 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். 14 முதல் 15 சதவீத வாக்குகள் வரை பெறுவார் என மதிப்பிடப்பட்டிருந்த கணிப்புடன் ஒப்பிடுகையில் இது சரிவாகும்) மற்றும் ஜனநாயக இயக்கத்தைச் (MoDem) சேர்ந்த வலதுசாரிமத்தியவாத வேட்பாளரான பிரான்சுவா பாய்ரூ (இவர் 9 சதவீதம் வாக்குகள் பெற்றார்) ஆகியோர் கணிசமான வாக்குகள் பெற்ற மற்ற இரண்டு வேட்பாளர்கள் ஆவர்

ஐரோப்பா-சூழலியல்-பசுமைக் கட்சியின் (EELV) வேட்பாளர் எவா ஜோலி 2 சதவீத வாக்குகளையும், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் (NPA) வேட்பாளரான பிலிப் புட்டு 1 சதவீத வாக்குகளையும், தொழிலாளர் போராட்டக் கட்சி (LO) வேட்பாளர் நத்தலி ஆர்தோ 0.6 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

நடப்பு நிலவரப் படி சார்க்கோசியுடனான போட்டியில் ஹாலண்ட் இலகுவாக வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவர் குறைந்தபட்சம் 56 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பிரான்சின் ஐந்தாம் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி முதல் சுற்றில் தோற்பது இதுவே முதல் முறை. அத்தகைய பலவீனமான நிலையில் முதல் சுற்று வாக்கெடுப்பில் சார்க்கோசி நிற்கிறார்

வாக்காளர்களின் பங்கேற்பு 80 சதவீதம் என்பது எதிர்பார்த்ததை விட அதிகமான அளவே ஆகும். சார்க்கோசியின் சமூக சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கும் மத்திய கிழக்கிலான போர்க் கொள்கைகளுக்கும் பரந்த அளவில் மக்கள் வெறுப்புற்றுள்ளதையும், அத்துடன் பிரெஞ்சு மக்கள் ஒரு ஆழமான சமூக மற்றும் சர்வதேச நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்கிற உணர்வு அம்மக்களிடையே எழுந்துள்ளதையும் தான் இது பிரதிபலிக்கிறது. வாக்காளர்களால் இரு வேட்பாளர்களின் கொள்கைகளுக்கும் இடையே தெளிவாகப் பிரித்தறிய முடியாத நிலையிலான ஒரு மந்தமான பிரச்சாரமாகப் பரவலாய் வருணிக்கப்பட்ட நிலையிலும், வாக்காளர்களை வாக்களிக்கச் செலுத்தியது அதுதான். வாக்காளர்களில் சுமார் 38 சதவீதம் பேர் தேர்தலுக்கு முன்பாக, தாங்கள் எந்தவொரு வேட்பாளரையும் உறுதிபட ஆதரித்து நிற்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தனர். பல வாக்காளர்கள் முன்பிருந்த எண்ண ஓட்டத்தின் படி வாக்களித்தனர்.  

வரவிருக்கும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில், தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆழமான தாக்குதல்களுக்கும், வெடிப்பு மிகுந்த வர்க்கப் போராட்டங்களுக்கும் தயாரிப்பு செய்து வருகின்ற போர்-ஆதரவு, சிக்கன-நடவடிக்கை ஆதரவு வேட்பாளர்கள் இருவருக்கும் இடையிலான ஒரு பந்தயத்திற்கு நேற்றைய தேர்தல்முடிவு மேடையமைத்துத் தந்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க 115 பில்லியன் யூரோவுக்கு (152 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவினங்களை வெட்டுவதற்கும் லிபியாவிலும் சிரியாவிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போர்களை ஆதரிப்பதற்கும் ஹாலண்ட் உறுதி பூண்டிருக்கிறார்.

மெலன்சோனுக்கு ஒப்பீட்டளவில் வாக்குகள் குறைந்ததும், அத்துடன் NPA மற்றும் LO வினது வீழ்ச்சியானதும், இந்த சக்திகள் எல்லாம் அடிப்படையாக சோசலிஸ்ட் கட்சியின் முகாமில் தான் இருக்கின்றன, சோசலிஸ்ட் கட்சியைத் தான் அவை ஆதரிக்கவிருக்கின்றன என்பது பரந்த மக்களின் உணர்வுகளில் உள்ளதையே பிரதிபலிக்கின்றன. ஹாலண்டினுடையது ஆழமான பிற்போக்குத்தனமான வேலைத்திட்டமாக இருக்கின்ற போதிலும், எதிர்பார்க்கக் கூடிய வகையில் குட்டி முதலாளித்துவஇடதுகள் தமது முழு ஆதரவையும் PS இன் பின்னால் அமர்த்துகிறது.

தேர்தலைத் தொடர்ந்து முதல் பகிரங்க அறிக்கை மெலன்சோனிடம் இருந்து தான் வந்தது. முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் அமைச்சரான இவர், இடது முன்னணியின் (இது பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மெலன்சோனின் இடது கட்சி (PG)போன்று PS இல் பிரிந்த மற்ற கட்சிகள் மற்றும் கிறிஸ்டியன் பிக்கே தலைமையிலான NPA இன் பிரிவு ஆகியவற்றிடையேயான கூட்டணி) வேட்பாளரும் ஆவார்.

பாரிஸில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில், மே 6 அன்றுசார்க்கோசியைத் தோற்கடிக்கும்படி மெலன்சோன் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார். வாக்களிக்கச் செல்லும் பாதையில்உங்கள் கால்கள் தடுமாற்றம் என்பதைக் காணக் கூடாது என்றும் அவர் தனது வாக்காளர்களிடம் தெரிவித்தார். தேர்தலில் மெலன்சோனுக்கும் ஹாலண்டுக்கும் ஆதரவாய் நிற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஏற்பாடு செய்கின்ற மே 1 ஆர்ப்பாட்டத்தில் மிகப் பெருமளவில் பங்கேற்பதற்கும் அவர் தனது வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இருவரிடையேயான பந்தயத்தில்சார்க்கோசியைத் தோற்கடிக்க மெலன்சோன் அழைப்பு விடுப்பதென்பது ஹாலண்டின் வேலைத்திட்டத்திற்கு முழு அரசியல் பொறுப்புடைமை ஏற்காமல் ஹாலண்டை ஆதரிப்பதற்கு அவர் செய்யும் ஒரு சிடுமூஞ்சித்தனமான முயற்சியே ஆகும். ஆயினும் PCF தலைவரான பியர் லோரென் ஊடகங்களிடம் பேசுகையில், ஹாலண்டிற்கு வாக்களிக்கஎவ்வித குழப்பமுமின்றி தான் அறைகூவல் விடுப்பதாக கூறினார். அவரின் வழிமொழிவுக்கும் மெலன்சோனின் நிலைப்பாட்டுக்கும் இடையில் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என்று BFM-TV  கேட்டபோது, இல்லை என்று லோரென் பதிலளித்தார்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், மெலன்சோனும் சரி லோரெனும் சரி தங்களின் வழிமொழிவுக்குப் பிரதிபலனாய் எந்த கொள்கை உத்தரவாதங்களையோ அல்லது ஒரு வருங்கால அரசாங்கத்தின் கொள்கைகள் மீதான செல்வாக்கையோ கேட்கவில்லை. இதன்மூலம் அவர்கள், வங்கிகளின் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு ஹாலண்டுக்கு ஒரு தொகை நிரப்பாத கையெழுத்திட்ட காசோலையை அளித்திருக்கின்றனர். EELV வேட்பாளரான ஜோலியும் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விட்டுள்ளார்.

இதர குட்டி முதலாளித்துவஇடது கட்சிகளும் ஹாலண்டுக்கு வாக்களிப்பதற்கான மெலன்சோனின் அழைப்பை எதிரொலித்தன. பிரான்ஸ்2 தொலைக்காட்சியில், NPA வேட்பாளரான பிலிப் புட்டு பின்வருமாறு கூறினார்: “மே 6 அன்றான தேர்தல் ஒரு நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும், அது நிக்கோலோ சார்க்கோசியை தூக்கியெறிவதாகும்”.

LO வேட்பாளரான நத்தலி ஆர்தோ விடுத்திருக்கும் செய்திக் குறிப்பு கூறுகிறது: “எந்தவொரு நனவான தொழிலாளியும் செல்வந்தர்களின் ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசிக்கு வாக்களிக்க முடியாது என்பது வெளிப்படை.” அதனால் தனக்கு வாக்களித்தவர்கள் வெற்று வாக்கினை அளிப்பார்கள், அல்லது ஹாலண்டுக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் இடது கட்சிகள் ஹாலண்டுக்கு அளிக்கும் வழிமொழிவு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். ஹாலண்டின் வலது-சாரிக் கொள்கைகளுக்கு பரந்த மக்களின் எதிர்ப்பு அபிவிருத்தி கண்டு வரும் நிலையில், தொழிலாள வர்க்கம் சோசலிஸ்ட் கட்சி மட்டுமல்லாமல், இடது முன்னணி மற்றும் அத்தகைய பிற கட்சிகளின் குரோதத்திற்கும் முகம் கொடுக்கும்.

நேற்று இரவு ஹாலண்ட் வழங்கிய சுருக்கமான உரையில், தனது பிரச்சாரத்தை ஆதரித்ததில் குட்டி முதலாளித்துவஇடது கட்சிகள் வகித்த பாத்திரத்தை வெளிப்படையாகப் பாராட்டினார். தனது பிரச்சாரத்திற்குக் கிடைத்திருக்கும் தேர்தல் முடிவு சார்க்கோசியின் பதவிக் காலத்திற்கானதண்டனை என்று வருணித்த அவர், “இரண்டாம் சுற்றில் எனக்கு வாக்களிப்பதற்கு தெளிவாகவும் எந்தவித நிபந்தனைகள் இன்றியும் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கும் மெலன்சோன் மற்றும் எவா ஜோலிக்கு தான் வணக்கம் செலுத்துவதாய் அவர் குறிப்பிட்டார்.  

சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் ஒட்டுவாலாகவே போலி-இடதுகளை பரந்த மக்களின் மிகப் பெரும்பான்மையோர் கருதுகின்ற நிலையில், இடதின் பக்கத்தில் ஒரு வெற்றிடம் நிலவுகின்றதான சூழ்நிலைகளின் கீழ், சமூகக் கோபத்தின் பிரதானமான ஆதாயதாரர்களில் ஒருவர் யாரெனப் பார்த்தால் புதிராகத் தோன்றும் வகையில் லு பென்னின் அதி வலது தேசிய முன்னணி (FN) நிற்கிறது. நாஜி-ஆதரவுக் கண்ணோட்டம் மற்றும் அல்ஜீரிய சுதந்திர எதிர்ப்புக் கண்ணோட்டங்களை எல்லாம் மறைத்து பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கான சமூகச் செலவினங்களை ஆதரிக்கும்(புலம் பெயர்ந்தவர்களை நோக்கி ஆவேசத்துடனான குரோதத்தைப் பாவிக்கிற போதிலும்) ஒரு கட்சியாக காட்டிக் கொண்டு இவற்றின் மூலம் FN இன் பிம்பத்தை மாற்றுவதற்கு மரின் லு பென் கணிசமாய் வேலை செய்திருக்கிறார்.

லு பென் பெற்றிருக்கும் வாக்குகள் ஹாலண்டுக்குஎதிர்க்கட்சித் தலைவராக அவரை ஆக்கியிருப்பதாய் லு பென்னின் பிரச்சார மேலாளரும் உள்துறை அமைச்சக அதிகாரியுமான ஃபுளோரியன் பிலிப்போ கூறினார்.

லு பென் அளித்த சுருக்கமான உரையில், தனக்குக் கிடைத்த வாக்குகளைவலதிலும் இடதிலும் இருக்கக் கூடிய தேசப்பற்றினர் பரந்துபட்ட அளவில் ஒன்றிணைந்து வருவதன் ஆரம்பம் என்று அழைத்த அவர், “வங்கிகளது இரு கட்சிகளின் ஏகபோகத்தை” FN அழித்திருப்பதாய் கூறினார். “அதிதீவிர-சுதந்திர-சந்தை இடதினை கண்டனம் செய்த அவர் தனக்குக் கிடைத்த வாக்குகள்வாங்கும் திறனையும் வேலைகளையும் மீட்டெடுப்பதை சாத்தியமாக்கியிருப்பதாகக் கூறிக் கொண்டார்

லு பென்னும் சமூக அதிருப்திக்கு அவர் விடுகின்ற விண்ணப்பங்களும் அழுத்தம் திருத்தமாய்க் காட்டுவது என்னவெனில், தொழிற்சங்க அதிகாரத்துவமும் மற்றும் உத்தியோகபூர்வஇடது கட்சிகளும் ஆற்றுகின்ற பிற்போக்குத்தனமான அரசியல் பாத்திரத்தையே ஆகும். இவை, வங்கிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைக்கு ஒரு போர்வையாக நவ-மார்க்சிச வார்த்தைஜாலங்களையும், அவ்வப்போதான தொழிற்சங்க எதிர்ப்புப் பேரணிகளையும் பயன்படுத்துகின்றன. இவை சிக்கன நடவடிக்கைகளுக்கான உண்மையான வெகுஜன எதிர்ப்பை ஒடுக்குகின்றன என்பதோடு அரசியல் களத்தை நவ-பாசிசவாதிகளுக்குத் திறந்த நிலையில் விடுகின்றன.