சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

IMF secures additional bank bailout funds

சர்வதேச நாணய நிதியம் கூடுதல் பிணையெடுப்பு நிதிகளை வங்கிகளுக்கு வழங்குகின்றது

By Nick Beams
23 April 2012

use this version to print | Send feedback

சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் (IMF, World Bank)   வசந்த காலக் கூட்டம் கடந்த வார இறுதியில் வாஷிங்டனில் நடைபெற்றபோது, உலகப் பொருளாதாரம் பற்றிய இரு முக்கிய விடயங்கள் வெளிப்பட்டன.

முதலாவது உலக நிதிய முறை மிகவும பலமற்ற நிலையில் உள்ளது என்பதாகும். ஸ்பெயின், இத்தாலி அல்லது வேறு ஏதேனும் நாட்டில் உள்ள நெருக்கடி ஒரு சர்வதேசக் கொந்தளிப்பைத் ஆரம்பிக்கும் அச்சத்தைக் கொண்டுள்ளது. இது செப்டம்பர் 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவிற்குப் பின் அனுபவிக்கப்பட்ட நிதிய கரைப்பினை தாண்டிய பெரும் குழப்பங்களை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக, முக்கிய முதலாளித்துவச் சக்திகளிடையே பொருளாதார, நிதியக் கொள்கை பற்றிய வேறுபாடுகள் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட், கூட்டத்திற்குப் பின் வெளிப்படுகையில், சர்வதேச நாணய நிதியத்திற்கு கூடுதல் நிதிகள் வழங்குதல், இதனால் நிதிய நெருக்கடிக்கு எதிராக ஒரு பாதுகாக்குசுவர் கட்டமைக்கப்படும், அல்லது அவர் கூறியபடி நிதிய முறையை புயலுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கு ஒரு குடை திறக்கப்படுவதற்கான அழைப்பிற்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறினார்.

சர்வதேச நாணய நிதிய,  உலகவங்கி விவாதங்களுக்கு முந்தைய தினம் நடைபெற்ற G20 நிதி மந்திரிகள் கூட்டத்தில், லகார்ட் கூடுதல் உதவியான $430 பில்லியன் வழங்குவதற்கு உத்தரவாதங்களைப் பெற்றார். இது தற்பொழுது சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பிற்குக் கிடைக்கும் நிதியைப் போல் கிட்டத்தட்ட இருமடங்கு ஆகும்.

இந்த உறுதிமொழிகள் சர்வதேச் சமூகம் உலக நிதிய உறுதிப்பாட்டை அடைவதற்குக் கொண்டுள்ள வலுவான தீர்மானத்தையும், உலகப் பொருளாதாரத்தை உறுதியான அடித்தளத்தில் இருத்துவதற்கான உறுதியையும் அடையாளம் காட்டுகின்றன என்று லகார்ட் கூறினார். ஐரோப்பாவிற்கு மட்டுமே குறிப்பாக நிதிகள் சேர்க்கப்படுகின்றன என்னும் குறைகூறல் குறித்து, அவர் நிதிகள் நெருக்கடியை தடுத்தலுக்கு பயன்படுத்தப்படும் என்றும் இவை அனைத்து சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்களின் சாத்தியமான நிதியத் தேவைகளையும் தீர்ப்பதற்கு கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால் இந்த பிற்சேர்க்கையை எவரும் ஒரு போலிமறைப்பு என்பதை தவிர வேறொன்றுமில்லை என எடுத்துக் கொள்ளவில்லை.

கூட்டம் நடைபெறுவதற்கு முன், லகார்ட் உலகப் பொருளாதாரத்தின் அபாயங்களுக்கு ஐரோப்பாதான் நிலநடுக்க மையம் என்று விவரித்து, தொடுவானத்தில் இருண்ட மேகங்கள் காணப்படுகின்றன என்றும் எச்சரித்தார். கூட்டத்திற்குப் பல நாட்கள் முன்னரே, ஸ்பெயினின் கடன்பற்றிய வட்டிவிகிதங்கள் கிட்டத்தட்ட 6% உயர்ந்துவிட்டன; பொதுவாக அந்த விகிதம் ஆபத்தான அளவு என்று கருதப்படுவது ஆகும். வட்டிவிகிதங்களில் ஏற்றம் என்பது முன்னதாக 1 டிரில்லியன் யூரோக்களை ஐரோப்பிய மத்திய வங்கி ஐரோப்பிய நிதிய முறைகளில் உட்செலுத்தி நிதியச் சந்தைகளுக்கு ஏற்றம் கொடுத்தமை தோற்றுப்போய்வருகிறது என்ற அடையாளத்தைக் காட்டுவதாகப் பரந்த அளவில் விளக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதிய மற்றும் முதலீட்டுச் சந்தைகள் துறையின் தலைவரான ஜோஸ் வினல்ஸின் கருத்துக்களையும் லகார்ட்டின் கருத்துக்கள் பிரதிபலித்தன. அவர் தற்போதைய கொள்கைகள் இதுவரை கடன் நெருக்கடியை தடுத்திருந்தபோதிலும், நிதிய அழுத்தம் தீவிரமடைதல் மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் கடன் கணிசமாகக் குறைதல் என்பது ஐரோப்பிய வங்கிகளுக்கு சொத்துக்கள் மதிப்பு, ஐரோப்பாவிற்கும் அதற்கு அப்பாலும் கடன் கொடுப்பதில் தீவிர சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.

உலக வங்கியின் தற்பொழுது வெளியேறும் தலைவரான ரொபேர்ட் ஜோலிக் ஐரோப்பிய மத்திய வங்கியின் அசாதாரண நடவடிக்கைகள்” – பற்றி எச்சரித்தார். இதில் ஐரோப்பிய வங்கிகளுக்கு மிக மிக எளிதான 1% வட்டிக்குக் நிதிகள் கொடுக்கப்பட்டுள்ளது போதுமானதாக இருக்காது என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய மத்திய வங்கி பல வங்கிகளுக்கு அரசாங்கக் கடன்களை வாங்குவதற்கு நிதிய ஆதாரங்களை ஈர்க்கும் வகையில் கொடுத்துள்ள கட்டத்தில் இப்பொழுது நாம் இருக்கிறோம்.... இவை அந்தக் கட்டத்தின் வரம்பை அடைந்துள்ளதுடன் அதன் இறுதியில் உள்ளன. எனவே இன்னும் அதிக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என நான் நினைக்கிறேன் என்றார் ஜோலிக்.

நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக ஐரோப்பிய மத்திய வங்கியின் நடவடிக்கைகள் நீண்ட காலம் தொடர்ந்திருக்கக் கூடிய சாத்தியப்பாட்டைத்தான் கொண்டுள்ளன. நலிந்த வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்டுள் நிதிகள் சாதாரண சந்தை செயற்பாடுகளின் மூலம் கிடைக்க முடியாத ஆதாரங்களைப் பெறுவதற்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிதிகள் பின் வங்கிகளால் அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு அவை விரைவான இலாபங்களைப் பெற உதவுகின்றன. ஆனால் மொத்தப் பாதிப்பு நலிந்த வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள் ஆகியவை பெரிய அரசாங்க பத்திரங்களுடன் நெருக்கமான முறையில் பிணைந்துவிடும் என்பதாகும்: இது கூடுதலான நிதியக் கொந்தளிப்பிற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கும்.

அவருடைய அழைப்பான கூடுதல் நிதிக்கு உடனடி வெற்றி என்பதை லகார்ட்  சுட்டிக்காட்ட முடிந்தாலும்கூட, முக்கிய நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அவரால் மூடிமறைக்கமுடியவில்லை. அமெரிக்கா மற்றும் கனடா இரண்டும் எந்த பங்களிப்பையும் கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டன.

ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த உரை ஒன்றில், அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் ஐரோப்பா ஒரு செல்வம் மிக்க கண்டம், தன்னுடைய நெருக்கடியைத் தீர்ப்பதில் முக்கிய நிதியப் பங்கைக் கொள்ள வேண்டும் என்றார். அமெரிக்க வங்கிகளுக்கு ஏற்றம் கொடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அளித்தபின், அமெரிக்கா ஐரோப்பிய சக்திகள் தங்கள் சொந்த வங்கிகளுக்கும் அதையே செய்யவேண்டும் என்று கோருகிறது; ஏனெனில் ஏதேனும் பெரிய தவறு ஏற்பட்டால் அது அமெரிக்க நிதிய நிறுவனங்களைப் பாதிக்கும் என்று கருதுகிறது.

கனேடிய நிதி மந்திரி கிம் பிளாஹெர்ட்டி செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கனடா மற்றும் அமெரிக்கா இரண்டும் ஐரோப்பாவிற்குக் கூடுதல் நிதி வழங்க ஆதரவு தரவிலப்லை என்றும் அப்பிராந்தியம் அதன் அரசாங்கக் கடன் நெருக்கடியை சமாளிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

புதிய பிணை எடுப்புச் செயற்பாடு பிரேசில் மற்றும் பிற நாடுகளில் இருந்தும் குறைகூறலை எதிர்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வாக்குரிமையிலுள்ள ஒதுக்கீட்டுமுறையை மாற்றுவதில் போதுமான முன்னேற்றம் இல்லை. அதுதான் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகிறது என்ற கூறைகூறலே அதுவாகும். பிரேசிலின் நிதி மந்திரி கைடோ மான்டெகா வாக்கெடுப்பு நாட்டின் பொருளாதார உற்பத்தியின் விகிதத்தை ஒட்டி இருக்க வேண்டும் என்றார். லக்சம்பேர்க்கில் கணக்கீடு செய்யப்பட்ட ஒதுக்கீட்டுப் பகிர்வு முறை இப்பொழுது ஆர்ஜேன்டினா அல்லது தென் ஆபிரிக்காவை விட அதிமனானது என்று அவர் கருத்துக் கூறினார்: மேலும் இந்தோனிசியா, ஸ்பெயின் ஆகியவற்றைவிட பெல்ஜியத்தின் ஒதுக்கீட்டு பங்கு அதிகம் என்றும் அது 44 சகாரா ஆபிரிக்கத் துணை நாடுகளுடையதை விட அதிகம் என்றும் கூறினார்.

நிதியின் செயற்பாடுகள் குறித்த மற்றொரு குறைகூறலில், ஆர்ஜேன்டினாவில் பொருளாதார மந்திரி ஹெர்மன் லோரென்ஜினோ சர்வதேச நாணய நிதியத்தின்  விதிகளில் பல, ஐரோப்பாவில் மிக அதிகத் தேவையுள்ள நாடுகளுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன என்றும் இத்தகைய நிலைப்பாடு 1997 ஆசிய நெருக்கடிக் காலத்திலோ அல்லது 2000களில் இருந்த இலத்தின் அமெரிக்க நெருக்கடியின்போதோ காணப்படவில்லை என்றார்.

ஒதுக்கீட்டு உரிமைகளில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தலில் ஒரு பகுதியாக இருக்கும் பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் நிதிக்கு உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளன. ஆனால் எந்த அளவிற்கு அவற்றின் பங்களிப்பு இருக்கும் என்பதை வெளிப்படுத்தவில்லை.

வங்கிகளுக்கு பிணை எடுக்கக் கூடுதல் நிதிகளை எழுப்புகையில், சர்வதேச நாணய நிதியம் தொழிலாள வர்க்கத்தை வறிய நிலையில் தள்ளும் உலகச் சிக்கனத் திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியது.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை இயற்றும் குழுவின் தலைவரும், சிங்கப்பூரில் நிதி மந்திரி தர்மன் சண்முகரத்தினம் பின்வருமாறு கூறினார்: நாம் செய்யும் அனைத்தும் நடுத்தரகால நிதிய உறுதிப்படுத்தலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், குறிப்பாக முன்னேற்றப் பொருளாதாரங்களில்.” “பல முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளும் மீண்டும் இயல்பான வளர்ச்சி விகிதங்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப வேண்டும் என்பது முக்கியமானது ஆகும்; இதில் முதலீட்டு தரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்த கட்டுமானச் சீர்திருத்தங்கள் பற்றிய குவிப்பு வேண்டும் என்றார்.

வேறுவிதமாகக் கூறினால், அரசாங்கம், சமுகநலச் செலவுத் திட்டங்களை வங்கிகள் மற்றும் நிதியச் சந்தைகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பெரிதும் குறைத்துவிட வேண்டும் மற்றும் தொழிலாளர் துறைச் சந்தை சீர்திருத்தங்களை முடுக்கிவிட வேண்டும். அவை ஊதியக் குறைப்புக்கள், பணி நிலைகள் குறைக்கப்பட்டு இதனால் இலாபங்கள், முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரிக்க வேண்டும்.