சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Mounting tensions between India’s army and civilian government

இந்திய இராணுவத்துக்கும் பொதுத்துறை அரசுக்குமிடையே அதிகரித்துவரும் நெருக்கடிகள்

By Kranti Kumara
18 April 2012

use this version to print | Send feedback

உலக சக்தி என்ற தரத்தை நாடுவதற்காக, இந்தியாவின் ஆளும்தட்டினர்  எப்பொழுதுமில்லாத அளவுக்கு பெரும் நிதியை ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டும் இந்திய இராணுவத்தின் மீது கவனம் செலுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். புதிதாக கண்டறியப்பட்ட இந்த முக்கியத்துவத்தினால் ஊக்குவிக்கப்பட்டு, இந்திய இஇராணுவம் அதிவலுவாக வளர்ந்திருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக, இந்திய இராணுவ அதிகாரிகள் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கெதிராக காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி -United Progressive Alliance- அரசின் கொள்கைளுடன் பொருத்தமற்ற ஆத்திரமூட்டும் அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக, இந்தியாவின் இராணுவம் இது போன்றதொரு திட்டத்தை முன்னெடுக்கும் திறமையுள்ளதாக இருக்கிறது என்று குறைந்தபட்சம் ஒரு மூத்த இந்திய அதிகாரியாவது வெளிப்படையாக தற்பெருமையுடன் சொல்லியிருந்ததன் பிறகு, கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங், ஒசாமா பின்லேடனைக் கொல்வதற்காக பாகிஸ்தானுக்குள் சட்டத்திற்கு புறம்பான தேடுதலை நடாத்துவதில் இந்தியா அமெரிக்காவின் உதாரணத்தை நாட விரும்பாது என்று வெளிப்படையாக கூறவேண்டியிருந்தது.

இராணுவ உயர்நிலை அதிகாரிகளுக்கும் பொதுத்துறை அரசுக்குமிடையிலான உறவுகள் குறிப்பாக எரிச்சலூட்டுபவையாக இருக்கின்றன. அவ்வாறு எரிச்சலூட்டுவதாக இருப்பது, நன்கு தொடர்புடைய இந்தியன் எக்ஸ்ப்ரஸின் (IE), சமீபத்திய முதல் பக்கத்தில் வெளிப்படையாக, கடந்த ஜனவரியில், இராணுவம் நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அருகில் அங்கீகாரமில்லாத இராணுவ நகர்வில் ஈடுபட்டபொழுது, அரசாங்கத்தின் சிலர் தலைமறைவானார்கள். செய்தித்தாள் அவ்வாறு வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், நன்கு திட்டமிடப்படாத ஒரு சதி முயற்சி இரகசியமாக நடக்கக்கூடும் என்று பொதுத்துறை தலைமையின் ஒரு பகுதி கருதியதாக கட்டுரை குறிப்பு காட்டியது.

செய்தித்தாளின்படி, ஜனவரி 16-17 அதிகாலைப் பொழுதில் இந்திய இராணுவத்தின் இரண்டு குழுக்கள், அரசுக்கு தெரிவிக்காமல், டெல்லியை நோக்கி நகர்ந்தன. அதன் விளைவாக பொதுத்துறை தலைமை எச்சரிக்கையடைந்தது. குழுக்களின் அசைவுகளைத் தெரிவிப்பதற்கு கண்காணிப்புகளை நியமிப்பது மற்றும் காவல்துறையை சாலைத்தடுப்புகளை அகற்றுவதற்கு அனுமதிப்பதற்காக ஒரு பயங்கரவாத உசார்நிலையை அறிவிப்பது உள்ளடங்கலாக, போக்குவரத்து எச்சரிக்கையொலி எழுப்புவதன் மூலம் குழுக்களின் அசைவுகளைக் குறைப்பது போன்றவற்றில் 18 மணி நேரத்துக்கு போதுமான எதிர் நடவடிக்கைகள் எடுப்பதில் அக்கறைகொண்டது.

குழுக்களின் அசைவுகள் இதற்கு முன் நிகழ்ந்திராத கீழ்படியாத நடவடிக்கையான ஜனவரி 16 அன்று அரசுக்கு சவால்விட்டு இந்திய இராணுவத் தளபதி வி.கே. சிங் உச்ச நீதிமன்றத்தில் சத்தியக்கடுதாசியை முன்வைத்தும் ஒரே காலத்தில் நிகழ்ந்ததை  அவ்வறிக்கை குறிப்பிட்டது. அந்த சத்தியக்கடுதாசியை அதனுடைய பதிவுகள் சுட்டிக் காட்டியபடி சிங் 1950ல் பிறந்தார் என்று இராணுவ அதிகாரிகளால்  வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து பாதுகாப்பு அமைச்சகம் உரிமைகோரியவாறு உண்மையில் சிங் 1951ல் பிறந்தார் என்று வலியுறுத்தியது. தனது மேல் முறையீட்டை இழந்ததுடன் சிங் முடித்துக் கொண்டார், அவர் விரும்பியதுபோல 2013க்கு பதிலாக, இவ்வாண்டு மே மாதம் ஓய்வு பெற வேண்டியிருக்கும் என்பது அதன் பொருள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை அரசு வட்டாரங்களில் கணிசமான அளவு ஒரு கிளர்ச்சியினைத் தூண்டியது, ஆனால் முடிவாக ஐ.மு.கூட்டணி (UPA) அரசாங்கமும் இராணுவ கூட்டுக்குழுவும் அதைக் குப்பையாக்குகின்றன.

பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே ஆண்டனி இந்தியன் எக்ஸ்பிரஸின் பிரத்யேக அறிக்கையை முற்றிலும் அடிப்படையில்லாதது என்று கூறினார்; மேலும் இராணுவக் குழுக்களின் அசைவுகளில் வழக்கத்திற்கு மாறாக இது போன்ற எந்த நகர்வும் இல்லை என்றும் கூறினார். இராணுவம் இதை விளக்கியிருக்கிறது. ஆயுதப்படையின் தேசப்பற்று குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். (இந்த) இந்திய ஆயுதப் படைகள் ஜனநாயகத்தைக் சீர்குலைப்பதற்காக எதுவும் செய்யாது என்றார்.

இராணுவத் தளபதி வி.கே.சிங் கட்டுரையின் தன்னுடைய கண்டனத்துக்கு இன்னும் ஓங்கிய குரல் கொடுத்தார். தி ஹிண்டுவுக்கு பேசுகையில், அவர் கதையை நோயுற்ற மனத்தின் கட்டுக்கதைகள் (“fables of a sick mind” ) என்று கூறினார். மேலும் குழுவின் அசைவுகளின் கேள்விகளுக்கு இஇராணுவம் இது போன்ற வழக்கமான நடவடிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதல்ல என்றும் அவை வழக்கமான நடவடிக்கைகள் என்றும் தெரிவித்தார். 

பிரதமர் மன்மோகன் சிங் இந்த அறிக்கையை எச்சரிப்பிற்குரியது என்று அறிவித்தார். மேலும் இராணுவத் தளபதியினுடைய பெருமைக்குரிய அலுவலகத்தின் கண்ணியத்தைக் குறைக்கும்படி எதுவும் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார். ஆயுதப் படைக்கும் பொதுத்துறை அரசுக்குமிடையில் வளர்ந்துவரும் நெருக்கடிகளின் மிக ஆச்சர்யமான காட்சிகளுள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சாதாரண ஒன்றாக இருக்கிறது.

நாட்டின் பொருளாதார அடித்தளத்தின் பலவீனத்தின் மத்தியில் உலக சக்தி என்ற தரத்திற்கான இந்திய முதலாளித்துவத்தின் தாகத்தில் இராணுவம் ஆற்ற வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பங்கு இந்த நெருக்கடியின் பிரதான கூறாக இருக்கிறது. இந்திய ஆளும்தட்டு இந்தியா உலக சக்தி என்ற தரத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தற்பெருமையடித்துக் கொண்டாலும், அது உண்மையான நிலையில் எல்லா அளவீடுகளிலும் ஒரு ஏழ்மையான மற்றும் மிகவும் பிந்தங்கிய நாடாக இருக்கிறது. 1.2 பில்லியன் மக்கள் தொகையுடன், இந்தியாவின் மொத்த உள்ளாட்டு உற்பத்தி, 35 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையுடைய கனடாவுடன் ஒப்பிடும்படி இருக்கிறது. 2010-11ல் இந்தியாவின் தனி நபர் வருமானம் வெறும் 1,100 டாலராக இருந்தது.

அணு ஆயுத ஏவுகணைகளுடன் தன்னைத்தானே ஆயுதமயமாக்குக்கொள்வதுடன், இந்திய அரசு ஆழ்கடல் கடற்படையை மேம்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. அது இந்தியப் பெருங்கடலைப் பாதுகாப்பதில் பிரதான பங்கினை வலியுறுத்தியது, மேலும் அது இருமுனை யுத்தத்திற்கு (உதாரணமாக. ஒரே நேரத்தில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமெதிரான யுத்தம்) தகுதியுடையதாக இருக்க வேண்டியுள்ளது என்றும் அறிவித்தது. 2001-02ல் பாகிஸ்தானுடனான யுத்த நெருக்கடியின்பொழுது, தீவிரமாக தயார்ப்படுத்துவதில் தோல்வியைத் தொடர்ந்து, இஇராணுவம் ஒரு புதிய மெதுவான தொடக்க (cold start) யுக்தியை மேம்படுத்தியது, அது யுத்தகளத்திற்கு செல்ல கட்டளையிடப்படக்கூடியதாக சில மணி நேரங்களுக்குள், அல்லது சில நாட்களில் பெருமளவிலான தீவிர இராணுவ நடவடிக்கைகளை குவிப்பதை இயலுமானதாக்கும்.  

இராணுவம் மேம்படுத்தப்பட்ட ஆயுத அமைப்புக்களின் தேவையை முடுக்கிவிடுவதற்காக சிறிய பொதுக்கருவூலத்திலிருந்து இதுவரையில்லாத அளவுக்கு பெரும் நிதியை கேட்டிருக்கிறது. அனால் இந்திய தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத்தின் பிந்தங்கியநிலையின் காரணமாக, இதன் அதிக ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்க வேண்டியிருக்கிறது.

41 பில்லியன் டாலர்களைத் தொடுமளவுக்கு இவ்வாண்டின் இராணுவ வரவு செலவு 17 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இது மில்லினியத்திற்கு திரும்புகின்றளவு, இருப்பிலுள்ள வருடாந்த இரட்டையிலக்கத்தை அதிகரிக்கிறபடி உச்சத்திற்கு வருகிறது.

பெண்டகனின் 662 பில்லியன் டாலர் வரவு செலவுடன் ஒப்பிடுகையில், இராணுவத்துக்கு இந்திய ஆளும்தட்டினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை குறைவாக இருக்கையில், இந்திய இராணுவ செலவுகள் எல்லா மத்திய அரசாங்க வருவாய்களான 27 சதவீதத்துக்கு (153 பில்லியன் டாலர்) சமமாக இருக்கிறது. மேலும் அனைத்து மாநிலம் முழுமைக்குமான 263 பில்லியன் டாலர்களை விட 15 சதவீதம் அதிகமாகவும் இருக்கிறது.

Stockholm Peace Research Instituteன் படி, சீனாவைக் கடந்து, 2007-11 ஆண்டுகளின் கணக்கீட்டில், முழுமையான உலக ஆயுத பரிவர்த்தனையான 10 சதவீதத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராகியிருக்கிறது,

எவ்வாறாயினும், இலஞ்சத்தின் காரணமாக, கொள்முதல் நடவடிக்கையில்  அதிகாரத்தின் தாமதத்தின் காரணமாக, மேலும் பற்றாக்குறையான நிதியின் காரணமாக ஆயுத வாங்குதல் நடைபெறவில்லை என்று இந்திய இராணுவம் நினைக்கிறது.

கடந்த மாதம், தி ஹிந்துவுடன் ஒரு நேர்முகத்தில், இராணுவத் தளபதி வி.கே.சிங் 2010ல் தரக்குறைவான ட்ரக்குகள் கொள்முதலை அங்கீகரிப்பதற்காக, அரசியல் தரகராக மாறிய ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி தனக்கு 140 மில்லியன் கையூட்டு (2.8 மில்லியன் டாலர்) கொடுக்க முனைந்ததாக கூறினார். இந்த அதிர்ச்சியான சம்பவத்தைத் துணிச்சலுடன் வெளிப்படையாக சொல்வதற்கு அவருக்கு ஏன் இரண்டு ஆண்டுகள் எடுத்தது என்று இராணுவத் தளபதி தெரிவிக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு அமைச்சருக்கு இந்த பணக்கொடுப்பை தெரிவித்திருந்ததாகவும், அதன்பிறகு அரசாங்கம் ஊழலை வேரறுப்பதில் உறுதியற்றதாக இருப்பதாகத் தோன்றுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த மாதம், வி.கே.சிங், உயர்நிலை அதிகாரி அரசாங்கத்திடம் பேசுகிற ஒரு வழமையான முறைக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சரைத் தவிர்த்து சமீபத்தில் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் செய்தித்துறையின் ஒரு பிரிவினருக்கு கசிந்துவிட்டது. இராணுவம் முக்கிய விநியோகமின்றி இருக்கிறது, யுத்தத்தில் போரிட  தயாரில்லாமல் கவலைக்கிடமாக இருக்கிறது என்று அந்த கடிதம் தெரிவித்தது. பீரங்கிப்படை தளவாடங்களில்லாமலிருக்கிறது, நாட்டின் வான் பாதுகாப்பு 97 சதவீதம் இல்லாதிருக்கிறது, காலாட்படை இரவில் போராடும் திறமின்றி இருக்கிறது, மேலும் விஷேடபடைகள் கவலைக்கிடமாக அடிப்படை ஆயுதப் பற்றாக்குறையில் இருக்கின்றன என்று இராணுவத் தளபதி உரிமை கோரினார்.

இராணுவத் தளபதியின் கசிந்த கடிதம் ஏற்படுத்திய சச்சரவு மற்றும் அதைத்தொடர்ந்த விமானப்படை மற்றும் கடற்படைத் துணைத் தளபதியிடமிருந்து மறைவான அத்தாட்சி பத்திர சமர்ப்பிப்பு -இரு முனை யுத்தத்தில் போர் புரிவதற்கு இந்தியாவின் திறமைகுறித்த கேள்விக்குரியதாக்குவதுடன், நாட்டின் மூன்று ஆயுதப்படையின் தலைவர்களையும் இராணுவத்தின் தயார்நிலையை பரிசோதிப்பதற்கு முன்னதாக பாதுகாப்புக்கான இந்தியப் பாராளுமன்ற நிலைக்குழு- Parliamentary Standing Committee- முதல் முறையாக அழைத்திருக்கிறது.

உள்ளார்ந்த கருத்துவேறுபாடுகளை அடக்குவதில் இராணுவம் வகிக்கும் பங்கு குறித்து ஆயுதப்படைக்கும், குறிப்பாக இராணுவத்துக்கும் பொதுத்துறை அரசுக்கும் இடையிலான உரசலுக்கான இன்னொரு மூலமாக இருக்கிறது. பிபிசியால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, 1990களின் நடுப்பகுதி வரை, பொதுத்துறை ஆணையத்தின் உதவிக்கு சராசரியாக ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் இந்திய இராணுவம் பணியமர்த்தப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகப் பதிவுகள் காட்டுகின்றன. அதன் பிந்தைய ஆண்டுகளுக்கு வெளிப்படையாக கிடைக்கக்கூடிய கணக்கீடுகள் இல்லை.

சமீபத்திய வருடங்களில், இந்திய-கட்டுப்பாட்டு காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் எதிர்ப் பிரிவினைவாதிகளின் கிளர்ச்சிகளின் பொழுது செய்த சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்காக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் சட்டங்கள் திருத்தப்படவேண்டும் அல்லது கைவிடப்பட்ட வேண்டும்  என்று அரசியல் தலைவர்களிடமிருந்து அனைத்து கருத்துக்களையும் இராணுவம் கசப்புடன் எதிர்த்திருக்கிறது. பல பத்தாண்டுகளாக கற்பழிப்பு, கடத்தல், சித்திரவதை மற்றும் மரணதண்டனைத் செயல்படுத்தல் போன்ற எண்ணற்ற அட்டூழியங்களை இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மன்னித்திருக்கிறார்கள், ஆனால் ஆளும்தட்டின்  கணக்கீடுகள் அட்டூழியங்களின் அளவுகோல்களை கிளர்ச்சிகளைத் தூண்டுகின்ற ஒரு முக்கிய காரணியாக இருப்பதுடன் மேலும் இவை இந்திய அரசின்  சட்டபூர்வத்தன்மையை சீர்குலைக்கின்றன என தற்போது வாதிடுகின்றன. 

இராணுவம், அதன் பங்குக்கு, 2009-10ல் இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசிடமிருந்து, மாவோவாதிகள் தலைமையிலான பழங்குடி-அடிப்படையிலான இந்திய மாநிலத்தின் கிளர்ச்சிப் போரான, பசுமை வேட்டை நடவடிக்கையில் (Operation Green Hunt) களமுனைப் பங்களிப்பில் ஈடுபடுவதற்கான நிர்பந்தத்தை வெற்றிகரமாக எதிர்த்திருக்கிறது. மாவோவாதிகளை ஈடுபடுத்துவதை விட இராணுவம் பயிற்சியில், யதார்த்தத்துக்கு ஆதரவு கொடுப்பதை, மற்றும் பசுமை வேட்டை நடவடிக்கைக்கு பணிக்கப்பட்ட துணைப்படை பிரிவுகளின் ஒட்டுமொத்த யுக்திகளைத் தீர்மானித்தல் ஆகியவற்றில் எப்பொழுதும் அதிக முக்கிய பங்கு பெற்றிருந்தது.

சிக்கலான மற்றும் பிரச்சினைக்குரிய கிளர்ச்சி எதிர்ப்போருடன் மிக நெருக்கமாக அடையாளம் கண்டுகொள்ள இராணுவம் தெளிவாக விரும்பவில்லை. ஏனெனில் அது ஆயுதப்படை மற்றும் உலகின் மிக வலுவான இராணுவங்களுள் ஒன்றை மேம்படுத்துவதற்காக இந்திய ஆளும்தட்டின் விருப்புமிக்க திட்டங்களுக்கான பரந்த ஆதரவை சீர்குலைக்கும் என்ற பயத்திற்காகவும் அது விரும்பவில்லை.