சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

PSA auto workers speak out on French presidential elections

PSA வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசுகின்றனர்

By Alex Lantier in Paris
26 April 2012

use this version to print | Send feedback

பாரிஸின் வடக்குப் பகுதியில் இருக்கும் Aulnay-sous-Bois இல் உள்ள PSA தொழிற்சாலைக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் சென்று அங்கிருந்த வாகன உற்பத்தித் தொழிலாளர்களிடம் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று முடிவுகள் குறித்து நேர்காணல் செய்தனர். PSA ஐ ஜெனரல் மோட்டார்ஸ் உடன் பெருநிறுவன இணைப்புக்கு  திட்டமிடப்பட்டுள்ளதன் பகுதியாக ஐரோப்பாவில் மூடப்படும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் ஆலைகளில் ஒல்னே தொழிற்சாலையும் ஒன்று.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய அநேக ஒல்னே தொழிலாளிகள், மே 6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இரண்டு வேட்பாளர்களான சோசலிஸ்ட் கட்சியின்(PS)பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகிய இருவருக்குமிடையே எந்த வித்தியாசத்தையும் காணவில்லை



நூர்தின்

ஆலைக்குள் செல்கின்ற வழியில் நூர்தினை இடைமறித்துக் கேட்கப்பட்ட போது WSWS இடம் அவர் கூறினார்: “அவர்கள் இருவருமே [ஹாலண்ட் மற்றும் சார்க்கோசி] இரண்டு முதலாளித்துவ வேட்பாளர்கள் தாம். மெலன்சோனைப் பொறுத்தவரை, அவர் PS இல் இருந்த சமயத்தில் அமைச்சராய் இருந்தவர். இதில் அவருடைய கைங்கர்யமும் இருக்கிறது.”

நூர்தின் குறிப்பிட்டார்: ”புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் வேட்பாளரான பிலிப் புட்டு [ஒல்னே ஆலைக்கு] வந்தார், ஆனால் வெறுமனே வேட்பாளர்கள் விஜயம் செய்வதால் மட்டும் எதுவும் மாறி விடப் போவதில்லை . ஒரு பாரிய போராட்டம் ஏற்படும் வரை, தொழிலாளர்களால் எதையும் செய்ய முடியாது.”

ஒல்னே தொழிலாளர்கள் நவ பாசிச வேட்பாளரான மரின் லு பென்னுக்கு குரோதமுடையவர்களாய் இருந்தனர். இடது முன்னணியின் வேட்பாளரான ஜோன்-லூக் மெலன்சோனின் பிரச்சாரம் பிரான்சில் வேலைகளைப் பாதுகாப்பதற்கான எந்த அடையாள மதிப்பையும் கொண்டிருந்ததா என்பதில் அவர்களுக்குள் கருத்து வித்தியாசம் இருந்தது. எப்படியிருந்தபோதும் அவர் பிரச்சாரம் செய்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவார் என்று எவரும் எண்ணவில்லை.

மெசவுதி WSWS இடம் கூறினார்: “ஹாலண்டோ அல்லது சார்க்கோசியோ, அரசியல்வாதிகள் தொழிற்சாலைக்கு அதிக கவனம் கொடுக்கப் போவதில்லை.” தொழிற்சாலையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எல்லாம்சார்க்கோசியைச் சந்திக்கச் சென்றவிடயத்தைக் குறிப்பிட்ட அவர்அதனால் மாற்றம் எதுவும் இருக்குமா என்பது தெரியாதுஎன்று தோள்களைக் குலுக்கிக் கூறினார்.

மெலன்சோன்வேலைகளைப் பாதுகாக்கிறார், ஆனால் அவரால் ரொம்ப தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியாதுஎன்றார் அவர். “பொருளாதார நெருக்கடியில் பிரான்சின் நிலை இன்னும் மோசமாகலாம்என்று தான் எதிர்பார்ப்பதாய் என்று அவர் தெரிவித்தார். ”வாக்குப்பெட்டி மூலமான புரட்சிக்கு மெலன்சோன் விடும் அழைப்பில் அவருக்கு நம்பிக்கை இருந்ததா என்று கேட்டபோது அவரளித்த பதில்: “அதை நான் நம்பவில்லை; விடயங்கள் அவ்வகையில் நடப்பதில்லை.”

 

ஏஸ்

ஒல்னே ஆலையில் PSAக்காக வேலை செய்வதற்கு ஒரு துணை ஒப்பந்ததாரரால் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஏஸ் என்ற ஒரு இளம் தற்காலிகத் தொழிலாளியிடமும் WSWS பேசியது. தேர்தல் குறித்து அவர் கூறினார்: “அவர்கள் எதையும் மாற்ற மாட்டார்கள்; அதில் எந்த ஒரு வேட்பாளரும் இன்னொருவரை விட பிரமாதமில்லை.”

மின்னணு பாகங்களின் தரப் பரிசோதகராய் வேலை பார்க்கும் தான் மாதத்திற்கு பொதுவாக 600 முதல் 700 யூரோக்கள் வரை (US$791 to 923)ஈட்ட முடிவதாக அவர் விளக்கினார். ஆயினும், இன்னும் நிறைய மணி நேரங்கள் வேலை செய்கின்ற சில தற்காலிகத் தொழிலாளிகள் ஒரு முழு நேரத் தொழிலாளியின் குறைந்தபட்ச ஊதியத்தின் அளவுக்கு(1,398 யூரோக்கள்)சம்பாதிக்க முடிவதாக அவர் தெரிவித்தார். அச்சமயத்தில் அங்கு வேலை இல்லை என்று தெரிவித்து விட்டதை அடுத்து தான் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாய் ஏஸ் தெரிவித்தார்.

பாரிஸில் ஒரு தொழிலாளி மாதம் 700 யூரோக்கள் ஊதியத்தில் எவ்வாறு வாழ்க்கை நடத்த முடிகிறது என்று கேட்டபோது அவர் கூறினார்: “வாஸ்தவம் தான், நீங்கள் வாடகை கொடுக்க வேண்டியிருந்தால் அதெல்லாம் முடியாது. நான் எனது உறவினர் வீட்டில் வசிக்கிறேன். என் நிலையில் தான் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள், என் வயதில் இருக்கும் பலரும் பெரும்பாலும் தங்கள் குடும்பங்களுடன் தங்கிக் கொள்கிறார்கள். நெருக்கடி ஏராளமான பேரைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் வேலை தேடி அலைகிறார்கள், ஆனால் அவர்களுக்குக் கிடைத்து விடும் என்று சொல்ல முடிவதில்லை.”

தனக்குத் தெரிந்த தொழிலாளிகள் யாருக்கும் லு பென்னை பிடிப்பதில்லை என்றார் அவர். “அவர் அவரது அப்பாவை [முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் யூதப் படுகொலையை மறுத்தவருமான ஜோன்-மரி லு பென்] போன்றவர் தான். அவரால் நன்மை எதுவும் நடக்காது.”

மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாய் 1,700 யூரோக்கள் வழங்க மெலன்சோன் அழைப்பு விடுத்தது குறித்துக் கேட்டபோது, தான் அதனை ஆதரிக்கவில்லை என்றார் அவர். “அப்போது தொழிலாளிகளின் வாங்கும் திறன் அதிகரிக்கும், நிறுவனங்கள் சிக்கலுக்குள் செல்லும்.” அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “அது நல்ல விஷயமாகத் தான் இருக்கும், ஆனால் ஒரு புரட்சி நடக்க வேண்டும்”, மெலன்சோன் அதற்காகப் போராடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என ஏஸ் தெரிவித்தார்.

மெலன்சோன் புரட்சிக்கு விடுக்கும் அழைப்புகளில் தனக்கு நம்பிக்கையில்லை என்றார் அவர். “விடயங்கள் அவ்வழியில் நடக்காது. எல்லாத் தொழிலாளிகளையும் எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாத் தொழிற்சாலைகளிலும் இருக்கின்ற தொழிலாளிகளது ஒரு கூட்டுப் போராட்டம் என்பது இருக்க வேண்டும்.”

தேர்தல் குறித்தும் சர்வதேச வாகன உற்பத்தித் துறையில் தொழிலாளர்களது போராட்டங்கள் குறித்தும் லியோனலும் இன்னும் சில வாகனத்துறை தொழிலாளிகள் கொண்ட ஒரு குழுவும் WSWS செய்தியாளர்களிடம் பேசினர். அமெரிக்காவின் டெட்ராயிட் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் நிலைமைகள் குறித்தும் அவர்களது போராட்டங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.

லு பென்னின் வாக்குகள் அதிகரித்திருப்பது குறித்து லியோனல் கவலை கொண்டிருந்தார்: “இனவாதம் அதிகரித்துச் செல்கிறது. அப்பெண்மணி ஏறக்குறைய 20 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது ரொம்ப அதிகம். அவர்கள் சட்டம் ஒழுங்கு விடயங்களின் மீது வரம்பு கடந்து பேசுகிறார்கள். ஒவ்வொருவரின் மூளையிலும் வெளிநாட்டினர் விடயத்தை அமர்த்துவதற்கு அவர்கள் முயலுகிறார்கள்.” 

மெலன்சோன்அதிகமாய் தொழிலாளர்களுக்காகப் பேசினார், அதிகமாய் மக்களுக்காகப் பேசினார். அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது மிக வருத்தமான விடயமேஎன்று லியோனல் கூறினார். ஆயினும் மெலன்சோனின்குடிமக்கள் புரட்சிமீது அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. அவர் சொன்னார்: “எல்லோரையும் அவர்கள் மலிந்த ஊதியத்திற்குள் தள்ளியிருக்கும் போது, மக்கள் அப்போது எழுந்திருக்கவே செய்வார்கள். அது அவ்வளவு பொலிவான விடயமாய்க் காட்சியளிக்காது. மக்களுக்குச் சாப்பிடக் கிடைக்கவில்லை என்கையில், அப்படித் தான் நடக்கும். எனக்குத் தெரியும் ஏராளமான பேர் சிக்கலில் இருக்கிறார்கள், ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயலுகிறார்கள் என்பது.”

இன்னொரு தொழிலாளி கூறினார்: “தொழிற்சாலை மூடப்படப் போகிறது. இரண்டு குழு இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்வது தான் வழக்கமாய் இருந்தது. இப்போது ஒரு ஷிப்டு தான். அடுத்த கட்டமாய் ஒரே குழு என்றாகப் போகிறது. தொழிற்சாலை மூடுவதற்குத் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் ஆலை மூடலுக்கு எதிராய் நிற்கிறோம். எல்லோருக்கும் அங்கு வேலை இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.”

2016 வரை தொழிற்சாலை திறந்திருக்க கூடுதல் வரிச் சலுகைகளை PSA கோருவதற்கு அவர் ஆட்சேபித்தார். “எப்பொழுதும் இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.” அவர் மேலும் கூறினார்: “தொழிலாளிகளை பொதி சுமக்கும் மாடுகளைப் போல நடத்துவது தான் அவர்களுடைய இலக்கு. நாங்கள் மட்டும் பேருந்து ஓட்டுநர்களாக இருந்தால் நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் சாலையில் இருக்க வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருப்பார்கள்.”