சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government says except “terrorist suspects” no political prisoners detained

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத சந்தேக நபர்களைத்தவிர அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என கூறுகின்றது

By Sanjaya Jeyasekara
15 June 2012

use this version to print | Send feedback

பயங்கரவாத சந்தேக நபர்களைத் தவிர அரசியல் கைதிகள் எவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என பாராளுமன்றக் குழுத் தலவைர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த மே 23 பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி, ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் மேற் குறிப்பிடப்பட்ட கைதிகள் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவலாகக் காணப்படும் கருத்தை அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரிக்கின்ற அதே வேளை, அமைச்சர் சில்வாவின் கருத்து அரசாங்கத்தின் அந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்துகின்றது.

வழக்கு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தமிழ் அரசியல் கைதிகள் கிட்டத்தட்ட ஒருவாரம் முழுவதும் முன்னெடுத்த உண்ணாவிரதத்தை கைவிட்ட கடந்த 24ம் திகதிக்கு முன்தினமே அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் 40பேர் தங்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்துமாறும் வழக்கு இல்லாவிட்டால் விடுதலை செய்யுமாறும் கோரி, மே 17 அன்று தொடங்கிய சாகும்வரை உண்ணாவிரதத்தில் வெலிக்கடை, களுத்துறை மற்றும் அனுராதபுரம் தமிழ் கைதிகளும் சேர்ந்துகொண்டதோடு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 234 ஆகியது. முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ்  வழக்கு விசாரனைகளை துரிதப்படுத்துவதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டாலும், வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ஒரு மாதத்துக்குள் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்குவதாக கூறினர்.

இந்த அரசியல் கைதிகள் பிரதானமாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் கடைசி கட்டத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரும் யுத்தம் முடிந்த பின்னரும், கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அரசாங்க ஆயுதப் படைகளால் பலாத்காரமாக கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகளாவர். இனவாத யுத்தத்தின் கடைசி சில மாதங்களுக்குள் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகள் 11,896 பேரில் அநேகமானவர்கள் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. முன்னர் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மே 21 அன்று பாராளுமன்றத்தில் பேசுகையில் உண்ணாவிரதம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டினார்.

கைதிகளின் உண்ணாவிரதத்துக்கு சமாந்தரமாக, கைதிகளின் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தமது அன்புக்குரியவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், அரசாங்கத்தின் இராணுவ கைதில் இருப்பவர்களின் பெயர் பட்டியலை வெளியிடக் கோரியும் மே 24 அன்று வவுனியாவில் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த அப்பாவிக் குடும்பங்கள் சம்பந்தமாக போலிக் கண்ணீர் வடித்து அரசியல் இலாபத்தை சுரண்டிக்கொள்வதற்காக கூட்டமைப்பு மற்றும் வேறு பல கட்சிகளதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்குபற்றினர்.

இதற்கிடையில், மே 20 அன்று, குற்றச்சாட்டுக்களை முன்வைக்க, புனர்வாழ்வழிக்க அல்லது விடுதலை செய்வதற்காக ஒரு மாதத்துக்குள் துரித நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை எடுத்துக்கொண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளை சந்திப்பதற்காக சென்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர், உண்ணா விரதத்தை நிறுத்துமாறு கோரிய போதும் கைதிகள் அதை நிராகரித்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளை பயங்கரவாத சந்தேக நபர்கள் என வகைப்படுத்தி அவர்களை தடுத்து வைத்திருப்பதை நியாயப்படுத்துவதானது, தமது அரசியல் எதிரிகளை குற்றவாளிகள் அல்லது பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்களுக்கு தண்டனை கொடுத்து, தமக்கு எதிராக எழும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காக உலகம் பூராவும் முதலாளித்துவ அரசாங்கங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கையின் பாகமாகவே இது உள்ளது. புலிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக பயங்கரவாத உபாயங்களை பயன்படுத்தியிருந்தாலும் அது அரசியல் அமைப்பே அன்றி பயங்கரவாத அமைப்பு அல்ல. இந்தக் கைதிகள் அந்த அரசியலில் ஈடுபட்டார்கள் அல்லது ஈடுபட்டதாக சந்தேகிப்பதனாலேயே ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் நிச்சயமாக அரசியல் கைதிகளே ஆவர்.

இந்த கைதிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய மதிப்பீட்டை முன்வைத்து இலங்கையின் பாதுகாப்பு கைதிகள் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார்கள் (Locked Away-Sri Lanka Security Detainiees) என்ற தலைப்பில் 2012 மார்ச் 12 அன்று சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கை, பலாத்கார மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்பு, இலங்கையில் சட்ட அதிகாரத்தில் அன்றாடம் இடம்பெறுவதாக ஆகியுள்ளது, என குறிப்பிட்டிருந்தது.

அமைச்சர் சில்வாவின் மதிப்பீட்டின் படி, அரசாங்கத்தின் சிறைச்சாலைகளில் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 668 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் 359 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத சந்தேகநபர்கள் மட்டுமே என சில்வா கூறும் பொய், அவரே கூறும் புள்ளி விபரங்களின்படி அம்பலத்துக்கு வந்துள்ளது.

கொழும்பு, வவுனியா மற்றும் மன்னார் போன்ற நகரங்களில் புதிதாக அமைக்கப்படவுள்ள நீதிமன்றங்களில் ஏனைய 309 பேருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவுள்ளதாக சில்வா மேலும் கூறினார். வளர்ச்சியடைந்து வருகின்ற எதிர்ப்பை நசுக்குவதற்காக இந்த புதிய நீதிமன்றங்களை அமைப்பது பற்றிய வாக்குறுதி 2005க்கு முன்னரே கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 2011 ஆரம்பத்தில் இருந்து இதுவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 241 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய அதே வேளை, தேசிய பாதுகாப்புக்காக சந்தேக நபர்கள் சம்பந்தமான விசாரணைகள் அவசியம் எனக் கூறினார். ஆனால், மேலோட்டமாக தெரியும் எண்ணிக்கையை மட்டுமே சில்வா கூறியுள்ளார். இராணுவத் தடுப்பில் இருக்கின்ற தமிழ் கைதிகளின் எண்ணிக்கை இதுவரையும் அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. திருகோணமலை கடற்படை முகாம் பூஸ்ஸ சிறைச்சாலை உட்பட மேலும் பல தெரியாத இடங்களில் கடுமையான இராணுவ பாதுகாப்பின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதோடு இந்த முகாங்கள் சித்திரவதை தொந்தரவுகளுக்கு இழிபுகழ் பெற்றவையாகும்.

இலங்கையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அல்லது அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரி ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜீன் லம்பர்ட் கடந்த மே மாத ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸை சந்தித்த சந்தர்ப்பத்தில், முன்னைய யுத்தப் பிராந்தியத்தில் உடனடியாக இராணுவத்தை அகற்றி அந்தப் பிரதேசத்தில் பொது மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என மீண்டும் கூறியிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் அமெரிக்காவின் இந்த அழுத்தங்களின் குறிக்கோள், ஆசிய பிராந்தியத்தினுள் அமெரிக்காவின் பிரதான போட்டியாளரான சீனாவின் அழுத்தத்தில் இருந்து  கொழும்பு அரசாங்கத்தை அரசியல் ரீதியிலும் மூலோபாய ரீதியிலும் தூர விலக்கிக்கொள்வதாகும். அதைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ நாட்டின் மனித உரிமைகள் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது.

கடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, முன்னைய யுத்தப் பிராந்தியத்தில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு விடுக்கப்படும் சர்வதேச அழைப்பை கண்டனம் செய்து உரையாற்றிய ஜனாதிபதி இராஜபக்ஷ, பிராந்தியத்தில் இருந்து இராணுவத்தை அகற்றுவதில்லை என சமிக்ஞை செய்தார். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்திருந்த போதும், இந்தப் பிராந்தியம் சாதாரண நிலையை எட்டவில்லை. இராணுவ முகாங்களும் பொலிஸ் காவல் அரன்களும் பலப்படுத்தப்பட்டிருப்பதோடு மனித படுகொலைகளும், கடத்தல் மற்றும் சரீரத் தாக்குதல்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இப்பிராந்தியத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக அச்சறுத்தல் மற்றும் தொந்தரவுகள் இடைவிடாமல் முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் தயார் நிலையையே இந்த விடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரசாங்கத்தின் சிக்கன நட்டவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்ற வாழ்க்கை நிலைமை சீரழிவு மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தோன்றுகின்ற எந்தவொரு சமூக அரசியல் அமைதியின்மையையும் இரத்தத்தில் நசுக்குவதே இந்த இயந்திரத்தின் இலக்காகும். இத்தகைய சூழ்நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமாக அரசாங்கம் இவ்வாறு கருத்து வெளியிடுவதானது மோசடியானதாகும்.

அதே வேளை, நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற முன்னாள்-இடது கட்சிகள், அரசியல் கைதிகள் பற்றிய பிரச்சினையை சுரண்டிக்கொள்வதற்காக முதலாளித்துவ தமிழ் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. தமிழ் கைதிகளுக்கு மன்னிப்புக் கொடுக்குமாறு அல்லது புனர்வாழ்வழிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு முன்பாக கடந்த 29 அன்று இந்தக் கட்சிகளின் கூட்டணி ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தது.

இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வளர்ச்சிகாணும் எதிர்ப்பை முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் திருப்பிவிடுவதற்காக இந்த முன்னாள்-இடது தலைவர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பாகமாக, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆரம்பித்து வைத்த வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி, அந்த யுத்தத்துக்காக கடும் பிரச்சாரம் செய்த சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி மற்றும் யுத்தத்தை முன்நின்று நடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் ஜனநாயகத்துக்காகப் போராடுபவர்களாக சித்தரிக்கப்பட்டனர்.

தமிழ் கூட்டமைப்பு உட்பட சகல முதலாளித்துவ கட்சிகளையும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் முன்னாள்-இடது கட்சிளையும் நிராகரித்து, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டு சுயாதீன அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்பாமல் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது. அத்தகை ஒரு சுயாதீன அரசியல் இயக்கம், அனைத்துலக சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராட வேண்டும்.

இந்த முன்நோக்கின் கீழ், சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் மட்டுமே போராடுகின்றன. சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. உடன் இணைந்து சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய் என்ற கோரிக்கையின் கீழ், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கும் பிரச்சாரம் வடக்கிலும் மற்றும் தெற்கிலும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் ஏற்படுத்தும் அழுத்தம் சம்பந்தமாக இராஜபக்ஷ இயந்திரம் விழிப்படைந்திருப்பது ஏற்கனவே வெளிப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரச்சாரத்தின் பாகமாக கடந்த ஜனவரி 29 அன்று சோ.ச.க. யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டிருந்த கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சு தடை செய்ததோடு இராணுவ சிப்பாய்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிரான பயமுறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் இடைவிடாமல் மேற்கொள்கின்றது. இராஜபக்ஷ இயந்திரத்தின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வடக்கிலும் தெற்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் சோ.ச.க. பிரச்சாரத்தைச் சூழ அணிதிரண்டு மேற்குறிப்பிடப்பட்ட முன்நோக்குக்காகப் போராட வேண்டும்.