சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s Socialist Party government launches mass expulsions of Roma

பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ரோமாக்களை வெளியேற்றும் பரந்த திட்டத்தை தொடங்குகிறது

By Antoine Lerougetel
10 August 2012

use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் பிரான்சில் உள்ள இனவழி ரோமா மக்களை, கட்டாயமாக அவர்களுடைய முகாம்களை தகர்த்து, பரந்த நாடுகடத்தல்களை செய்வதற்கு இலக்குக் கொண்டுள்ளது.

ரோமாக்கள் பெரும்பாலும் ருமேனியா அல்லது பல்கேரியாவில் இருந்து வந்த ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் ஆவர்: ஆனால் பிரெஞ்சுச் சட்டம் அவர்களிடம் பணி செய்யும் உரிமம் உள்ளது, மூன்று மாதங்களுக்கு மேல் நாட்டில் இருந்தால் தங்களைக் காத்துக்கொள்ள வழிவகை உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. கிட்டத்தட்ட 15,000 ரோமாக்கள் தற்காலிக வீட்டு முகாம்களில், பிரான்ஸின் முக்கிய நகரப்புற எல்லைகளில் இருப்பதாக நம்பப்படுகிறது; இதில் பாரிஸ் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 4,000 ரோமாக்கள் உள்ளனர்.

நேற்று 240 ரோமாக்கள் லியோனில் இருந்து புகாரெஸ்ட்டிற்குச் செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஞாயிறு முதல் லியோனில் மூன்று முகாம்கள் மூடப்பட்டு, 200க்கும் மேற்பட்ட ரோமாக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாங்களே விரும்பி அவர்கள் சென்றார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்; ஆனால் ஒரு ரோமா ஆதரவு நடவடிக்கையாளர் பல மாதங்கள் முகாம்கள்மீது அழுத்தம், வெளியேற்றங்கள் என நடந்தபின் வந்துள்ளது. தாமே தாய்நாட்டிற்குச் செல்வது என்பது மறைமுக வெளியேற்றங்கள்தான் என்றார்.

லியோனுக்கு அருகே உள்ள இரு முகாம்களில் திங்களன்று வெளியேற்றப்பட்ட 150 ரோமாக்கள் இருந்த Vaulx-en-Velin லும், செவ்வாயன்று வெளியேற்றப்பட்ட 100 ரோமாக்கள் இருந்த Villeurbanne லும், அதைத்தவிர 50 தெருவில் அமர்ந்தவர்களும் அடங்குவர். அப்பொழுது முதல், அனைவரும் ரோமாக்கள் என்று இல்லாத இக்குடும்பங்கள் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கின்றனர், லியோன் பகுதியைச் சுற்றியும் அலைந்து வருகின்றனர், மற்றொரு இடத்தைக் காண்பதற்கு; ஆனால் பொலிசார் அவர்கள் இடம் தேடி உட்கார்ந்துவிடாமல் தடுக்கின்றனர் என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

புதன்கிழமை அன்று பாரிஸ் புறநகரங்களில் இருந்த முகாம்கள் தகர்க்கப்பட்டபின், 19வது நகரப் பிரிவில் (19th arrondissement ) ஒரு வெளியேற்றம் நடத்தப்பட்டது.

வியாழக்கிழமை அன்று Lille Urban Community LMCu என்று Hellemmes, Villneuve d’Ascq  ஆகியவற்றில் இருந்த இரு ரோமா முகாம்கள் தகர்க்கப்பட்டன. முதலாவதில் 150 முதல் 200 பேர் வரை இருந்தனர்; அவர்கள் அதிகாலையில் வெளியேற்றப்பட்டனர்.

PS இன் முதல் செயலர் Martine Aubry, LMCU உடைய தலைவர் ஆவார். இந்த அமைப்பு அரசாங்கத்திற்குச் சொந்தமான இந்த இடத்தைக் கூட்டாக உரிமை கொண்டாடுகிறது. LCMU  இந்த இடங்களில் இருக்கும் முகாம்கள் தகர்க்கப்பட வேண்டும் என்று சட்டபூர்வ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இக்கொள்கைகள் PS அரசாங்கத்தின் பிற்போக்குத்தனக் கொள்கையை அம்பலப்படுத்துகின்றன; இந்த அரசாங்கம் ஹாலண்டிற்கு முன் பதவியில் இருந்த கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் கொள்கையைச் சிறிதும் மாற்றாமல் தொடர்கிறது. Solidarite-Roms சங்கத்தின் தலைவரான Yann Lafolie, Liberation இடம்: தன்னார்வ சமூக அமைப்புக்களின் பணியை அதிகாரிகள் அழிப்பதற்கான அடையாளம்தான் இது. இன்று இரவு பல குழந்தைகள் தெருக்களில் தூங்கும். சார்க்கோசி எங்களை வெளியேற்றவில்லை. PS அதைச் செய்துள்ளது. எனக் கூறினார்

LDH எனப்படும் மனித உரிமைகள் அமைப்பின் Roseline Tiset, AFP யிடம் கூறினார்: எங்கு போகலாம் என்று கூறப்படாமல் மக்கள் அகற்றப்படுவது எங்களுக்கு சற்றும் நினைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது. ஜனாதிபதி ஹாலண்டின் சொற்களுக்குப் பின் நாங்கள் நல்லதைத்தான் எதிர்பார்த்தோம்.

இத்தகைய கருத்துக்கள், LDH இன்னும் பிற அதேபோன்ற மனித உரிமைகள் குழுக்கள், பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்தில் PS வளர்த்த போலித் தோற்றங்களைத்தான் பிரதிபலிகின்றன. உண்மையில்  உலக சோசலிச வலைத் தளம் கூறியதுபோல், ஹாலண்ட் ரோமாக்கள் மீது தன் மிருகத்தன தாக்குதல்களைச் செயல்படுத்துவார் என்பதுதான் தெளிவு. (see: “ரோமாக்களை முகாம்களில் காவலில் அடைக்க வேண்டும் என்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அழைப்புவிடுகிறார்”).

உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ் புதன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்  சட்டவிரோத முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்னும் நீதிமன்றத் தீர்ப்புக்கள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் என்றார். சுகாதாரமற்ற முகாம்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்றார் அவர். பல நேரமும் தொழிலாள வர்க்கப் பகுதிகளில் நிறுவப்படும் குடிசைகள் இடையூறாகவும் உள்ளன என்று சேர்த்துக் கொண்டார்.

ஜூலை 31ம் திகதி அவர் Europe1 இடம் கூறினார்: “Prefects அதிகாரிகள் ரோமா முகாம்களை நீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி அகற்றும் பணியைக் கொண்டுள்ளனர். இவை எளிமையானவை. ஆம், நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இருக்கையில், முகாம்கள் அகற்றப்பட்டுவிடும்.

இது பிரெஞ்சுக் குடிமக்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு பிற்போக்குத்தனமாக ஜனநாயக உரிமைகளைத் தாக்கும் மற்றொரு முயற்சியாகும். PS ஐ புதிய பாசிச தேசிய முன்னணி (FN) உடைய கொள்கைகள், கண்ணோட்டம் இவற்றுடன் இணைக்கும் இத்தகைய பிற்போக்குத்தன நிலைப்பாடு, சோசலிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாய உரிமைகளுக்கும் PS கொண்டுள்ள ஆழ்ந்த விரோதப் போக்கைத்தான் நிரூபிக்கிறது.

ரோமாக்களை ஒருங்கிணைப்புக் கிராமங்கள் எனப்படுபவற்றில் இருத்த PS அரசாங்கம் திட்டமிடுகிறது; அங்கு ரோமாக்கள் மிக மலிவான முன்கூட்டித் தயாரிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவர்; இவர்கள் அரசாங்க ஊழியர்கள், பாதுகாப்புப் படையினரால் கண்காணிக்கப்படுவர். இவை சேரிகள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; ஒரே ஒரு தப்படிதான் சித்திரவதை முகாம்களில் இருந்து வேறுபட்டவை.

இப்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் சார்க்கோசியின் வலதுசாரி UMP (Union for a Popular Movement) கட்சியின் பிரதிநிதி ஒருவரான எரிக் சியோட்டி வால்ஸைப் பாராட்டினார். அவர் இவற்றைச் செயல்படுத்தினால் [ரோமா முகாம்களை அகற்றினால்]  நான் அதற்கு ஆதரவு தருவேன்.

பிரான்ஸின் குட்டி முதலாளித்துவ இடதுகட்சிகளின் உடந்தையுடன் தான் ரோமாக்கள் மீதான இத்தாக்குதல்கள் நடைபெறுகின்றன. NPA  எனப்படும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி வால்ஸின் ரோமா விரோத சூனிய வேட்டை குறித்து உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை; ஆகஸ்ட் 4ம் திகதி கிரெநோபிள் நகரத்தில் ஒரு குழு, சார்க்கோசி மற்றும் ஹாலண்டின் கொள்கைகளுக்கு இடையே உள்ள தொடர்ச்சியைத்தான் ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இடது கட்சியின் தேசியச் செயலர் Eric Coquerel, ரோமாக்கள் போன்ற உள்நாட்டில் வந்து குடியேறியுள்ளவர்கள் பிரச்சினையை உலகளவில் எடுக்கும் கொள்கைகள் தேவை. அவர்கள் இந்த நாட்டில் முறையாக வாழவைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகைய அறிக்கையின் நேர்மையற்ற தன்மை திமிர்த்தனமானது: NPA  ஐப் போலவே இடது கட்சியும் PS  அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு பொறுப்புக் கொண்டது; ஏனெனில் PS ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிற்கு சமீபத்திய தேர்தல்களில் இது நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. சார்க்கோசியின் ஆட்சிக்காலம் முழுவதும்,  அவருடைய இனவெறிச் சட்டமான பர்க்கா தடை, இன்னும் அதேபோன்ற குடியேறுவோர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு இவர்கள் ஆதரவு கொடுத்திருந்தனர்.

 

பிரெஞ்சு சோசலிஸட் கட்சி அரசாங்கம் ரோமாக்களைச் சேரியில் தள்ளத் திட்டமிடுகிறது