சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Communist Party backs killing of South African miners

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கு ஆதரவு கொடுக்கிறது

By Alex Lantier
21 August 2012

use this version to print | Send feedback

 

மாரிக்கானாவில் 34 தென்னாபிரிக்க பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்களை பொலிசார் படுகொலை செய்ததற்கு ஆதாரவா பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு உள்ளதை உலக சோசலிச வலைத் தளம் இழிவுடன் நோக்குகிறது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகோப் ஜுமாவை பரிவுணர்வுடன் மேற்கோளிட்டு, இழிந்த முறையில் அதன் வன்முறை பற்றிய இகழ்வுணர்வு, கொடூரத்தன்மையை வெளியிட்டபின், கம்யூனிஸ்ட் கட்சியால் (PCF) சுருக்கமாக வெளியிடப்பட்ட அறிக்கை கூறுவதாவது: "பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, உண்மையான சட்ட ஆட்சியின் கீழ் முன்னேற்றத்திற்கும் மற்றும் சமூக நீதிக்கும், சமத்துவமின்மை குறைக்கும் அவர்கள் போராட்டத்திலும் தன் ஒற்றுமை உணர்வை தென்னாபிரிக்காவில் உள்ள அனைத்து அரசியல், தொழிற்சங்க சக்திகளுடன் உறுதி செய்கிறது."

அரசியல் மற்றும் தொழிற்சங்க சக்திகளும் என்று PCF ஆதரிக்கும் சக்திகள்தான் படுகொலைகளுக்கு உத்தரவிட்டு அவற்றை நியாயப்படுத்துகின்றன என்பது பகிரங்க உண்மையாகும். ஆபிரிக்க தேசிய காங்கிரசின் (ANC) அரசாங்கத்துடைய பொலிஸ் ஆணையர் ரியா பியேகா படுகொலைக்குப்பின் விடுத்த அறிக்கையில் அவர்கள் செய்யவேண்டிய பணியை நிறைவேற்றுவதற்கான பொறுப்பைத் தான் கொடுத்ததாகக் கூறியுள்ளார். சுரங்கத் தொழிலாளர்களின் இறப்பிற்கு பொறுப்பானவர்கள்மீது எத்தகைய குற்றச்சாட்டையும் அவர் எதிர்த்து, இது ஒன்றும் விரலைச் சுட்டிகாட்டுவதற்கான நேரம் இல்லை என்றார்.

தேசிய சுரங்கத் தொழிலாளர்களின் சங்கம் (NUM) —இதன் முன்னாள் தலைவர் சிரில் ராமபோசா $275 மில்லியன் சொத்தை குவித்துள்ளார் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்த்திருந்தது. NUM  உடைய பொதுச் செயலாளர் பிரான்ஸ் பலேனி பொலிஸ் சுட்டதற்கு ஆதரவைத் தெரிவித்து, போலிசார் பொறுமையுடன் இருந்தனர், ஆனால் இந்நபர்கள் ஆபத்தான ஆயுதங்களை ஏந்தியிருந்தனர் என்றார்.

வரலாற்று ரீதியாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவு பெற்ற தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் (SACP), உள்ள PCF உடைய சக ஸ்ராலினிஸ்டுகள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை பொலிசார் கொன்றதை தொழிலாளர்களுக்கு இடையேயான வன்முறை என உதறித் தள்ளினார்.

தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆகும்; இது முதலாளித்துவ இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்க கருவிகள் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குண மிக்க இயக்கம் எது பற்றியும் கொலைக்காரத் தன்மை உடைய விரோதப்போக்கிற்கு நிரூபணம் ஆகும்; அத்தகைய இயக்கம் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் மூச்சுத்திணறும் இடுக்கிப்பிடியில் இருந்து தப்ப முயல்கின்றன. இது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு தீவிர எச்சரிக்கை ஆகும்.

தென்னாபிரிக்க பொலிசில் உள்ள இந்த அருவெறுப்பானவர்களை  நீதிக்கும் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கும் போராடுபவர்கள் என்று பாராட்டுவதன் மூலம், PCF தானும் PCF உடன் இணைந்த தொழிற்சங்கமான தொழிலாளர் பொதுக்கூட்டமைப்பு (CGT) போன்றவை ஐரோப்பாவில் இதேபோன்ற பொலிசார் வன்முறைக்கு எதிர்ப்புக் கூற மாட்டோம் என்பதைத்தான் சமிக்ஞை காட்டியுள்ளது.

பிரான்சின் பிற குட்டி முதலாளித்துவ இடதுகள், CGT க்குள் செயல்படுபவை, மற்றும் PCF உடன் பிரான்சின் சமூக ஜனநாயக அரசாங்கத்தை சுற்றி செயல்படுபவை, இக்கொடூர நிகழ்வு பற்றி பெரும் மௌனத்தை சாதிக்கின்றன. கொலைகள் நடந்து ஐந்து நாட்களுக்கு பின்னரும், இக்கட்டுரை எழுதப்படும் வரை, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி NPA மாரிக்கான படுகொலைகள் பற்றி தன் வலைத் தளத்தில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

தொழிலாளர் போராட்டக் குழுவை (LO) பொறுத்தவரை இதுதான் CGT யின் சீரிய வளர்ச்சிக்கு பாடுபடும் அமைப்பு இது ஒரே ஒரு எட்டுவரிச் செய்தித் தகவலை, படுகொலை குறித்து, வெளியிட்டுள்ளது. LO, ANC, NUM  ஆகியவற்றின் பங்கு குறித்து முற்றிலும் மௌனமாக இருந்தாலும், இறுதியில் கூறுவதாவது: சிலர் எப்படிக் கூறினாலும்,வர்க்கப் போராட்டம் என்பது இன்னமும் உள்ளது, சிலநேரம் கடுமையாக. இதுதான் அதற்கு  நிரூபணம்.

LO உடைய உயர்மட்டத்தில் இருந்து வரும் உபதேச உரைகள் பிரெஞ்சு குட்டி முதலாளித்துவப் போலி இடதுகள் மாரிக்கான படுகொலைக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு தன் ஆதரவைத் தொடர அனுமதிக்கும் வகையில்தான் உள்ளது.