சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

South Africa’s day of mourning fails to stem anger over Marikana massacre

மரிக்கான படுகொலைகள் குறித்த சீற்றத்தை தடுப்பதில் தென்னாபிரிக்க துக்க நாள் தோல்வியடைந்துள்ளது

By Julie Hyland
25 August 2012

use this version to print | Send feedback

தென்னாபிரிக்காவில் மரிக்கானவில் உள்ள லோன்மின் பிளாட்டினச் சுரங்கத்தில் அழுத்தங்களை குறைப்பதற்கு உத்தியோகபூர்வ முயற்சிகள் இருந்தபோதிலும், ஆகஸ்ட் 16ம் திகதி அன்று 34 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சீற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது.

வியாழக்கிழமை, ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) இன் ஜனாதிபதி ஜாகப் ஜுமா, துக்கம் எனக் காட்டிக் கொள்ளுவது, சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக என்று இல்லாமல் ANC அதன் நட்பு அமைப்புக்கள் NUM தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம், தென்னாபிரிக்க வணிக தொழிற்சங்கங்கள் காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருப்பவற்றிற்கு எதிராக இயக்கப்படும் சீற்றங்களை குறைத்துவிடாது என்பதைத் தெளிவாக்கினார்.

ஜோஹனஸ்பேர்க்கிற்கு வடமேற்கே உள்ள மரிக்கான சுரங்கப் பகுதியில் நடைபெற்ற முக்கிய நினைவுக் கூட்டத்தில், கொலை செய்யப்பட்ட தொழிலாளர்களின் அழுது கொண்டிருக்கும் விதவைகளுடன் கிட்டத்தட்ட 1,000 பேர் சேர்ந்து கொண்டனர்; அவர்ளுக்குள் சிறையில் தற்பொழுது இருக்கும் 259 வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் உறவினர்களும் இருந்தனர்.

முன்னதாக, உலகின் மிகப் பெரிய பிளாட்டினச் சுரங்கமான இம்பாலா ரஸ்டன்பேர்க் அன்று அனைத்து உற்பத்திகளும் நிறுத்தப்படும், அதையொட்டி தொழிலாளர்கள் தங்கள் லோன்மின் சக தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்த முடியும் என்று அறிவித்தது. இந்த ஆண்டு முன்னதாக கடுமையான ஆறு வார கால வேலைநிறுத்தம் நடந்த இடம் இம்பாலா ரஸ்டென்பேர்க் ஆகும்; அதில் நான்கு தொழிலாளர்கள் இறந்து போயினர்.

ஜுமாவிற்கு எதிராக இயக்கப்படும் விரோதத் தன்மையின் பரிமாணத்தினால் அவர் எந்த செயல்களிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பின்தெருக்களில் கூடினாலும் பொலிசார் அதிகமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளவில்லை.

அரசாங்க அதிகாரிகள், திருச்சபைத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் எத்தகைய அரசியல் பேச்சுக்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதில் உடன்பட்டனர். ஆனால் சுரங்கத் தொழிலாளர்களின் சீற்றம் நிறைந்த உணர்வு நினைவுப் பிரார்த்தனையில் வெளிப்பாட்டைக் கண்டது; அடையாளம் தெரியாத ஒரு நபர் ஜுமா இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரினார்; அவரிடத்தில் இருந்த ஒலிபெருக்கி பறிக்கப்பட்டது.

பின்னர் பிரார்த்தனை முடிவில், வெளியேற்றப்பட்ட ANC இளைஞர் குழுத் தலைவர் ஜூலியஸ் மலேமா ANC சுரங்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதைத் தாக்கியபோது கைதட்டும் பாராட்டும் பெற்றார்; அவர், நம் அரசாங்கம் தன் குழந்தைகளைத் தின்னும் பன்றியாகிவிட்டது என்றார். முன்பு ஜுமாவின் வட்டத்தில் பெரிய இடத்தில் இருந்த மலேமா, பெப்ருவரி மாதம் ஒற்றுமையின்மையை விதைக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு ANC யில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஒரு டஜன் ANC மந்திரிகள் இவர் நினைவுப் பிரார்த்தனையில் பேசியபோது வெளியேறிவிட்டனர்.

படுகொலை நடந்த ஒரு வாரத்திற்குப் பின், ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவானவர்கள்தான் லோன்மினில் வேலைக்குத் திரும்பினர்; பலரும் இப்போராட்டத்தை கடுமையாக இறுதி வரை நடத்தப் போவதாக சபதம் எடுத்தனர். பாறைகளில் துளையிடும் வெளிநடப்பிற்குத் தலைமை தாங்கிய பெரும்பாலானவர்கள் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் பெரும் இடருள்ள சூழலில் மாதம் ஒன்றிற்கு $500 க்காக உழைக்கின்றனர்; இழிந்த முகாம்களில் வசிக்கின்றனர். பலரும் NUM ஐ விட்டு நீங்கிவிட்டனர்; அது சுரங்க முதலாளிகளுடன் இணைந்து செயல்படுவதாக சரியான முறையில் கருதப்படுகிறது; அவர்கள் பிரிந்து சென்ற அமைப்பான சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் என்னும் AMCU வில் இணைந்துள்ளனர்.

அரசாங்கம் அழுத்தங்களை அமைதிப்படுத்த முயலுகையில், மற்ற பிளாட்டினம் நிறுவனத்தினர் அமைதியின்மை பரவும் என்றுதான் எச்சரித்துள்ளனர். இந்த வாரம் முன்னதாக, Royal Bafonkeng Platinum  ல் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வைக் கோரினர்; Anglo American Platinum என்று ரஸ்டென்பேர்க்கில் இருக்கும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை பொருட்படுத்தாமல் வெள்ளிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று நிர்வாகத்திற்கு கோரிக்கைப் பட்டியல் ஒன்றை அளித்தனர்.

வெள்ளிக்கிழமை காலை Anglo American தொழிலாளர்கள் 100க்கும் மேலாக தங்கள் புகார்களுக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை என்றபின், பணிக்குத் திரும்ப வேண்டும் என்னும் உத்தரவை மீறினர். நிறுவனம், சுரங்கத் தொழிலாளர்களால் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளிடம் பேச்சுக்களை தொடங்கியபின்னர்தான் பணிகள் மீண்டும் தொடங்கின.

ஆளும் உயரடுக்கிற்குள் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராக மட்டும் இன்றி, COSATU  விற்கும் எதிராக எழுச்சி செய்வர் என்று எழுந்துள்ள அச்சம் தென்னாபிரிக்க வணிக வலைத் தளமான Moneyweb ல் வெளிப்பட்டது; லோன்மின் ஒரு தொடக்கம்தானா? என்று இது வினா எழுப்பியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்முறையான வேலைநிறுத்தங்கள் முறையாக ஏற்றம் கண்டுள்ளது என்று குறிப்பிட்ட Moneyweb தென்னாபிரிக்க சிறப்பு இடர்கள் காப்பீட்டுச் சங்கத்தின் அறிக்கையான வேலைநிறுத்தம் தொடர்புடைய உரிமைகோரல்கள் 2006ல் இருந்து கணிசமாகப்பெருகிவிட்டன என்று கூறியதை மேற்கோளிட்டு, அது இப்பொழுது SASRIA இன் உரிமைகோரல்களில் 70% என உள்ளன என்றும் தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் முன்பு இனப் பாகுபாடுமுடிந்தபின்னரும் தெனாபிரிக்காவில் கறுப்பு தொழிலாளர்களின் பரந்த பிரிவினருக்கு அடிப்படையில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்பதற்கு வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் கொலையுண்டது நிரூபணம் ஆகும். ANC, COSATU  வில் இருந்து ஒரு கறுப்பு உயரடுக்கு கறுப்பருக்கு சக்தியளித்தல் என்பதின்கீழ் பெரும் செல்வந்தர்களாகிவிட்டது. NUM இன் நிறுவனர் Cyril Ramaphosa,  பல மில்லியன்களுக்கு உரிமையாளர், லோன்மின் நிர்வாகக் குழுவிலும் உள்ளார்; நாட்டின் பொலிஸ் படைகள் கறுப்பு ஆணையர் ரியா பியேகாவினால் மேற்பார்வையிடப்படுகின்றன; அவரோ படுகொலைக்கு ஆதரவைத்தான் கொடுத்தார்.

Aurora Empowerment Systems விவகாரம் மற்றொரு உதாரணம் ஆகும். நெல்சன் மண்டேலாவின் பேரர் ஜொண்வா மண்டேலா மற்றும் ஜுமாவின் அண்ணன் மகன்களில் ஒருவரான குலுப்யூஸ் ஜுமாவிற்கும் இடையே ஒரு பங்காளித்துவம் இருந்தது; அந்த அமைப்பிற்கு இரண்டு திவாலான தங்கச் சுரங்கங்களை ஜோகன்னஸ்பேர்க்கிற்கு வெளியே இருப்பவற்றை எடுத்துக் கொள்ளும் உரிமைகள் 2009ல் வழங்கப்பட்டிருந்தன. விரைவில் நிறுவனம் பற்றிய முறைகேடுகள், சொத்துக்களை நீக்கல் போன்ற குற்றச்சாட்டுக்கள் அதைச் சகதியில் தள்ளின; தொழிலாளர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் வந்தது; அதையொட்டி தொழிலாளர்கள் முகாம்களில் மின்சாரம் இல்லாமல் கைவிடப்பட்டதுடன் உணவு உதவிகளையும் நம்ப வேண்டியதாயிற்று.

சுரங்கம் பற்றிய ஆலோசனை நிறுவனம் Eunomix த்தின் நிர்வாக இயக்குனர் Claude Baissac எச்சரித்தார்: வரலாற்றளவில் மேலாதிக்கம் கொண்ட, ANC உடன் பிணைந்துள்ள NUM  க்குச் சவால் விடுதல் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல; இது அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து பெருகிவரும் அடிமட்ட எதிர்ப்பு என்னும் பின்னணியில் நடைபெறுகிறது.

Centre for the Study of Violence and Reconciliation என்னும் அமைப்பு நடத்தியுள்ள ஓர் ஆய்வின்படி, 2009ம் ஆண்டில் இருந்து வன்முறை எதிர்ப்புக்களில் ஏற்றம் வறிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமை, உத்தியோகபூர்வ பொருட்படுத்தாத்தன்மை ஆகியவற்றினால் எழுந்துள்ளது. இந்த அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது; அதே ஆண்டில்தான் தென்னாபிரிக்கா உத்தியோகபூர்வமாக பிரேசிலை உலகில் சமூக அளவில் மிகச் சமத்துவமற்ற நாடு என்பதில் இருந்து அகற்றித் தான் அவ்விடத்தைப் பிடித்தது. மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் வறுமைக் கோட்டிற்குக்கீழே வசிக்கின்னர்; உத்தியோகபூர்வ வேலையின்மை 25 விகிதம் என உள்ளது.

ஜுமா அறிவித்துள்ள நீதித்துறை விசாரணைக்குழு லோம்னின் படுகொலையை வெள்ளைப்பூச்சு அடித்துவிடும் நோக்கத்தைக் கொண்டுள்ளது; அதேபோல் தொழில்துறையில் இருக்கும் நிலைமைகளையும் இன்னும் பரந்த முறையில் வெள்ளைப்பூச்சிற்கு உட்படுத்திவிடும்; அதே நேரத்தில் முதலீட்டாளர்ளுக்கு தென்னாபிரிக்கா சுரண்டுவதற்குப் பாதுகாப்பான இடம் என்றும் மறு உத்தரவாதம் கொடுக்க முற்படும். முன்னாள் நீதிபதி இயன் பர்லம் மூன்று நபர் ஆணையத்தின் தலைவராவார்; இக்குழு அறிக்கையை கொடுக்க ஐந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும்.

இது தவிர்க்க முடியாமல் இன்னும் தொழிலாளர்களுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படும். இது, அரசாங்கம், பொலிஸ், தொழிற்சங்கங்கள், தனிநபர்கள் என ஆராயும் என்றும், சக்தி பயன்படுத்தப்பட்டது நியாயமானதா, குறிப்பிட்ட சூழ்நிலையில் நியாயப்படுத்தப்பட முடியுமா என்பதை நிர்ணயிக்கும் என்றும் ஜுமா கூறினார்.

பொலிஸ் மந்திரி நதி எம்தித்வா சந்தேகத்திற்குரிய வகையில் சுரங்கத் தொழிலாளர்கள் அரசியல் கையாளலுக்கு உட்பட்டனரா என்பது குறித்து விசாரணை தேவை என அறிவித்துள்ளார்; அதே நேரத்தில் COSATU மிரட்டல் மற்றும் வன்முறையை ஒருங்கிணைத்த அரசியல் மூலோபாயம் தொழிலாளர்களை NUM  இடம் இருந்து முறித்துக் கொள்ள ஊக்கம் கொடுக்கும் வகையில் இருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கூறுகிறது. AMCU மலேமாவுடன் செயல்பட்டு ANC, COSATU ஆகியவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பது குற்றச்சாட்டு ஆகும். ANC, COSATU ஆகியவை சுரங்க நிறுவங்களுடன் இணைந்து இந்த சூனிய வேட்டையை நடத்துகின்றன.

ANC மற்றும் அதன் நட்பு அமைப்புக்களுக்கு ஒரு ஏற்கத்தக்க மாற்றீட்டை மலேமா கொடுக்கவில்லை. கடந்த வாரம் மலேமா தனது உயர் தலையீடுகளைக் காக்கும் வகையில் கருத்தை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ஒரு அரசியல் வெற்றிடம் இருந்தது, நாங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்தோம் என்றார் அவர். நாங்கள் அதைச் செய்யவில்லை என்றால் தவறான கூறுபாடுகள் அந்த இடத்தை எடுத்துக் கொண்டிருக்கும். ANC தலைமை, அலுவலகத்திற்குள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கையில் அதை நாங்கள் எடுத்துக் கொண்டோம் என்றார் அவர்.

அவருடைய பங்கு தொழிலாளர்களின் அதிருப்தி அடைந்த பிரிவுகளை முற்போக்கு வனப்புரையைப் பயன்படுத்தி, அவருடைய தலைமையில் இருக்கும் ANC யின் வெளியேற்றப்பட்ட பிரிவிற்கு ஆதரவாகக் கொண்டுவந்து, அவர்ளை மீண்டும் உலகப் பெருநிறுவனங்களுக்கு, கறுப்பு முதலாளித்துவத்துடன் இணைந்திருக்கும் பிரிவுகளுக்கு சுரண்டுவதற்காக அளிப்பதுதான்.

AMCU விற்கு எதிரான அச்சுறுத்தல்களுடன், பிரிந்து சென்ற தொழிற்சங்கத்தை குழுவில் கொண்டுவருவதற்கான இணை முயற்சிகள் நடைபெறுகின்றன. தொழிற்சங்கத்திற்கும் தொழிலாளர்துறை மந்திரி, சுரங்கக் குழு ஆகியோருக்கு இடையே பேச்சுக்கள் நடப்பதாக இருந்தன; இம்பாலா பிளாட்டினம் (இம்பிளாட்ஸ்) தான் சுரங்கங்களில் இருக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களை சரிபார்க்கத் தொடங்க இருப்பதாகவும், NUM  ற்குப் பதிலாக AMCU அந்த இடத்தில் அங்கீகிரிக்கப்பட வேண்டுமா எனப் பார்க்க இருப்பதாகவும் கூறியுள்ளது. இம்ப்ளாட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி டெரென்ஸ் குட்லேஸ் பலரும் NUM போல் அனுபவம் கொண்டிருக்கவில்லை என்றாலும் முன்னேற்றம் உள்ளது என்றார்.

இத்தகைய முயற்சிகள் இருந்தபோதிலும்கூட, மரிக்கான நிகழ்வுகளின் பரந்த உட்குறிப்புக்கள் குறித்து தீவிர எச்சரிக்கைகள் விடப்படுகின்ன. JLT காப்பீட்டு அமைப்பின் அரசியல் இடர் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவரான எலிசபெத் ஸ்டீபன்ஸ், இத்தகைய போக்குகள் ஆபிரிக்கா முழுவதும் உள்ள பரந்த பொருளாதார, அரசியல் அழுத்தங்கள் பற்றிய குறிப்பு ஆகும் என்றார்.

சமீபத்திய மாதங்களில் வேலைநிறுத்தங்களின் ஒரு அலை முக்கிய ஆபிரிக்க சுரங்க நாடுகளில் காணப்பட்டுள்ளன; பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சமீபத்திய வேலைநிறுத்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளனர்; ஊதியம் போன்ற பிரச்சினைகளில் வேலைநிறுத்தத்திற்கு செல்வதற்கான நம்பிக்கையை இது விவாதத்திற்கு உரிய வகையில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு கொடுத்துள்ளது. என அவர் தொடர்ந்தார்.