சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU summit—years more of austerity and crisis         

ஐரோப்பிய உச்சிமாநாடு – இன்னும் பல ஆண்டுகளுக்குச் சிக்கன நடவடிக்கையும் நெருக்கடியும்

By Stefan Steinberg
15 December 2012
use this version to print | Send feedback

வெள்ளியன்று ஐரோப்பிய அரசுகளின் தலைவர்கள், மற்றும் நிதி மந்திரிகளின் இரண்டு நாள் மாநாடு சிக்கன நடவடிக்கைகளை ஆழப்படுத்தி, விரிவாக்குவது என்ற பொது உடன்பாட்டுடன் முடிவுற்றது. ஏற்கனவே இது மில்லியன் கணக்கான ஐரோப்பியர்களை வேலையின்மை மற்றும் வறுமையில் ஆழ்த்தியுள்ளதுடன், அதே நேரத்தில் வங்கிகளுக்கு பெரும் ஆதாயங்களையும் கொடுத்துள்ளது.

டிசம்பர் உச்சிமாநாட்டின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஐரோப்பிய ஆணையத்திற்கு ஐரோப்பிய நிதிய, அரசியல் ஒன்றியத்தை நோக்கிய நடவடிக்கைகள் முதலில் அளிக்கப்பட்டதைப் பரிசீலிப்பது என இருந்தது.

ஆனால், கடந்த ஆறு மாதகால கடுமையான பேரங்கள் தேசிய அரசுகளுக்கு இடையே உள்ளபோதும், அனைத்துத் தரப்பினரும் கண்டம் முழுவதும் ஒரு சமூக எதிர்ப்புரட்சிக்கான திட்டங்களில் உறுதியாக உள்ளனர் என்பதே முதலில் கொடுக்கப்பட்டஐரோப்பிய வரைபடத்தில் எஞ்சியுள்ளது. இக்கருத்துத்தான் பைனான்சியல் டைம்ஸில் வந்த கட்டுரை ஒன்றில் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் ஒல்லி ரெஹ்னால் உச்சிமாநாட்டிற்கு மூன்று நாட்கள் முன்பு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இதன் தலைப்புஐரோப்பா சிக்கன நடவடிக்கை பாதையைத் தொடர வேண்டும்.”

இந்த வார உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ மற்றும் ஐரோப்பியக் குழுவின் தலைவர் ஹெர்மன் வான் ரோம்புய் ஆகியோர் தொடர்ச்சியான திட்டங்களை முன்வைத்தனர்; இவற்றுள் யூரோப் பகுதிப் பத்திரங்கள் மற்றும் தொழில்துறைத் திட்டங்களுக்கான மிகவும் குறைந்த நிதியங்கள் ஆகியவை அடங்கியிருந்தன; இவை பெரிய ஐரோப்பிய நாடுகள் நலிவுற்றிருக்கும் பொருளாதாரங்களைப் பிணை எடுப்பில் பெரிய பங்கு பெற ஊக்கம் அளிக்கும் நோக்கத்தைக் கொண்டவை.

உண்மையில், யூரோப் பத்திரங்கள் பற்றிய திட்டம், பேச்சுக்கள் தொடங்கு முன்னரே நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. பரோசோ மற்றும் வான் ரோம்புய் ஆகியோரின் ஐரோப்பாவிற்கானஒற்றுமையுணர்வுக் கருவி என்று வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தை உடையது உச்சிமாநாட்டின் இறுதியில் அற்பத்தனமாக குறைக்கப்பட்டுவிட்டது.

உச்சிமாநாட்டின் முதல் நாள் முடிவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், வான் ரோம்புய் செய்தியாளர்களிடம் அடுத்த ஆண்டு கோடையில்ஒற்றுமையுணர்வுக் கருவிக்கானஆரம்ப வடிவமைப்புத் திட்டங்களை தான் அளிக்க இருப்பதாகக் கூறினார். அதே நேரத்தில் அவர்கருவியில்இருந்து நிதிய மாற்றங்கள் என்பது வெட்டுக்கள், கட்டுமானச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை செய்ய விண்ணப்பிக்கும் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

செய்தியாளரிடம் தன் கருத்துக்களைக் கூறிய ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் எத்தகைய பொது ஐரோப்பியப் பகுதி நிதியும் அத்தகையஒற்றுமையுணர்வுநடவடிக்கைகளுக்கு மிகவும் குறைவாத்தான் இருக்கும் என்று வலியுறுத்தினார். “இது மிகவும் குறைந்த வரவு-செலவுத் திட்டம் உடைய பிரச்சினை ஆகும்என்றார் மேர்க்கெல். “... ஒருவேளை 10 அல்லது 15 பில்லியன் யூரோக்களைக் கொண்டிருக்கலாம்.”

உச்சிமாநாட்டில் உடன்பாடு கொள்ளப்பட்ட ஒரே உருப்படியான நடவடிக்கை ஐரோப்பிய வங்கிகள் மீது வங்கிமுறைக் கண்காணிப்பு தேவை என்னும் நடவடிக்கைகள் ஆகும். மீண்டும் இப்பிரச்சினையில் ஜேர்மனி செயற்பட்டியலைப் பெரிதும் ஆணையிட அனுமதிக்கப்பட்டது.

ஒரு வாரம் முன்னதாக ஐரோப்பிய நிதி மந்திரிகள் ஒரு வங்கி ஒன்றியம் குறித்த நடவடிக்கைகள் பற்றி இறுதி உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை. இதற்கு முக்கிய எதிர்ப்பு ஜேர்மனியில் இருந்து வந்தது. ஐரோப்பிய மத்திய வங்கிக்கு நேரடியாக திவாலாகும் வங்கிகளுக்கு நிதியளிக்க அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்னும் திட்டங்களை இது எதிர்க்கிறது. அதேபோல் ஜேர்மனி டஜன் கணக்கான உள்ளூர் சேமிப்பு வங்கிகள் மீதான கண்காணிப்பையும் எதிர்க்கிறது; அவை ஜேர்மனிய தொழில்துறைக்கு மாநில அளவில் நிதி அளிப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.

தன்னுடைய பங்கிற்கு நிறைய சிறு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன், பிரான்ஸ் ஐரோப்பிய மத்திய வங்கிக்கும் கண்டத்தின் 6,000 வங்கிகளை அது மேற்பார்வையிடும் திறனுக்கும் விரிவாக்கப்பட்ட அதிகாரங்கள் தேவை என்று அழைப்பு விடுத்துள்ளது.

இரண்டு பிரச்சினைகளிலும் ஜேர்மனி பிரான்ஸுடன் ஒத்துப் போகமுடிந்து, தன்வழிப்படி உச்சிமாநாட்டில் சென்றது. ஐரோப்பியத் தலைவர்கள் வியாழன் அன்று கொண்ட உடன்படிக்கை, கண்டத்தின் மிகப் பெரிய வங்கிகள் கிட்டத்தட்ட 200க்கு மட்டுமே மேற்பார்வை அதிகாரங்கள் விரிவாக்கப்பட வேண்டும், மேற்பார்வை நடவடிக்கைகள் மார்ச் 2014ல் குறைந்தப்பட்சம் தொடங்க வேண்டும் என்பதுதான். செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களில் ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ஃபாங் சொய்பி இத்தாமதித்த நாளில்கூட ஐரோப்பிய வங்கிகளுக்கு ஐரோப்பிய மத்திய வங்கி நேரடி நிதியளிப்பது என்பதுஒப்புமையில் வர இயலாத தோற்றம் ஆகும்என்று வலியுறுத்தினார்.

ஐரோப்பிய வங்கிகள் மீதான மேற்பார்வை 2014 வரை ஒத்திப்போடப்பட்டுள்ளது என்பது ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி சிக்கன நடவடிக்கைகளைக் கடுமையாக ஆணையிடுவது மற்றும் கடன்களை நாடும் பொருளாதாரங்கள் மீது கட்டுப்பாட்டைக் கொள்வது என்பது தடையின்றி அடுத்த 18 மாதங்களுக்குத் தொடரும் என்ற பொருளைத்தான் தரும்.

ஐரோப்பிய வங்கிய ஒன்றியம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களின் பெரும்பான்மை கொண்ட உடன்பாட்டில் வெளிவந்துள்ள மிக முக்கிய ஒற்றை முடிவு இதுதான். அதே நேரத்தில் ஜேர்மனியும் பிரான்ஸும் சிக்கனத் திருகாணிகளை இறுக முறுக்கும் திட்டத்தை ஒட்டி ஐரோப்பிய ஆணையம் யூரோப்பகுதியில் ஒவ்வொரு உறுப்புநாட்டுடனும்இருதரப்பு ஒப்பந்த்ங்களை நிறுவுதல் என்னும் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். அத்தகைய ஒப்பந்தங்களின் நோக்கம் தொழிலாளர் சந்தை மற்றும் வரிச்சீர்திருத்தங்கள், போட்டித்தன்மைக்கு ஏற்றம் கொடுப்பவை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஜேர்மனி இத்தகைய உட்கட்டுமானச் சீர்திருத்தங்களை வலியுறுத்துவது குறித்து ஒரு கட்டுரையில் பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது: “திருமதி மேர்க்கேல் இத்தகைய ஒப்பந்தங்களை வடிவமைப்பதற்கான அளவு கோல்கள் பற்றி உடன்பாடு காண விரும்புகிறார்; இதில் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் உலகப் போட்டித்தன்மைக்கு அடையாளம் எனப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்.”

புதிய நிதிய உட்செலுத்துதல்கள் ஏராளமாக வங்கிகளால் தயாரிக்கப்படுகையில், ஐரோப்பிய மக்களின் ஊதியங்கள் மற்றும் பணிநிலைமைகள் ஆசியாவில் உள்ள அடிமை உழைப்பு நிலையங்களில் உள்ள அளவிற்குக் குறைக்கப்பட்டுவிடும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடப்பதுபோல், கிரேக்கம்தான் ஐரோப்பா முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கு சோதனைக் களமாக இருக்கிறது. வியாழன் அன்று யூரோப் பகுதி நிதி மந்திரிகள் இறுதியாக கிரேக்கத்திற்கு ஒரு கடனைக்கொடுக்க ஒப்புக் கொண்டனர்; இது இந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னதாகக் கொடுக்கப்பட  இருந்தது. கடனை வழங்குவதற்கான  நிபந்தனை ஏதென்ஸில் உள்ள அரசாங்கம் மற்றொரு சுற்று கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

34 பில்லியன் யூரோக்கள் கடனில், ஒரு சென்ட் கூட ஐந்து ஆண்டுகள் மந்த நிலையில் தப்பிப் பிழைக்கப் போராடும் உழைக்கும் மக்கள் அல்லது சிரமத்தில் இருக்கும் அவர்கள் குடும்பத்தினரை அடையாது. 16 பில்லியன் யூரோக்கள் கிரேக்க வங்கிகளுக்கு மறுமூலதனம் அளிக்க ஒதுக்கப்பட்டுள்ளன; 7 பில்லியன் யூரோக்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானநிறுவனங்களும் எஞ்சியுள்ள 11 பில்லியன் யூரோக்கள் அரசாங்கக் கடன் பத்திரங்களை திரும்ப வாங்கவும் பயன்படுத்தப்படும்.

இன்னும் பல ஆண்டுகளுக்கு சிக்கனம், வறுமை மற்றும் நெருக்கடி ஆகியவை ஐரோப்பா முழுவதும் படர்ந்திருக்கும். இதுதான் சமீபத்திய ஐரோப்பிய உச்சிமாநாட்டின் செய்தி ஆகும். 2008ல் நிதிய நெருக்கடி வெடித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின், ஐரோப்பா உத்தியோபூர்வமாக இரட்டைச் சரிவு மந்த  நிலையில் உள்ளது. பிரித்தானியாவோ ஒரு மூன்று சரிவு மந்தநிலையின் விளிம்பில் உள்ளது.

கண்டம் முழுவதும் வேலையின்மை பெரிதும் உயர்ந்துவிட்டது; பலமுக்கிய ஐரோப்பிய அரசுகளின் கடன்கள் இருமடங்கு அல்லது மும்மடங்காகக்கூட ஆகிவிட்டன. ஆனால் வங்கிகளின் இலாபங்களோ பில்லியன் கணக்கில் உள்ளன. மோசமான நிலைமையோ இனித்தான் வரவுள்ளது.

செய்தி ஊடகத்திற்குத் தான் கொடுத்த கருத்துக்களில் மேர்க்கெல் குறிப்பாக இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மொன்டி எடுத்த சிக்கன நடவடிக்கைகளை பாராட்டினார். “இத்தாலிக்கு சர்வதேசச் சந்தைகளில் அவை ஏற்றம் கொடுத்துள்ளன என்றார்; அதே நேரத்தில் ஐரோப்பா இன்னும் பல ஆண்டுகள் வேதனையை தாங்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.