சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Mass protests as Egyptian government seeks to push through constitution

எகிப்திய அரசாங்கம் அரசியலமைப்பை முன்கொண்டுவர முயல்கையில் வெகுஜன எதிர்ப்புக்கள் நிகழ்கின்றன

By Joseph Kishore
1 December 2012

use this version to print | Send feedback

எகிப்தின் ஜனாதிபதி முகம்மது முர்சி ஒரு புதிய ஜனநாயக விரோத அரசிலமைப்பைச் செயற்படுத்த முயல்கையில் வெள்ளியன்று கெய்ரோவிலும் மற்ற எகிப்திய நகரங்களிலும் வெகுஜன எதிர்ப்புக்கள் வெடித்தெழுந்தன.

எகிப்தின் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஜனவரி 2011 இன் ஆர்ப்பாட்டங்கள் வெடித்த தஹ்ரிர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். எதிர்ப்புக்கள் அலெக்சாந்திரியா, தொழிற்துறை நகரம் மஹல்லா இன்னும் பல நகரங்களில் நடைபெற்றன.

இவற்றிற்கு எதிரான எதிர்ஆர்ப்பாட்டங்களும் இன்று அரசாங்கத்தாலும் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்தாலும் ஒழுங்கு செய்யப்பட்டன. அரசாங்க ஆதரவுடைய ஆர்ப்பாட்டங்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து கெய்ரோ பல்கலைக் கழகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன என்றாலும் கூட ஒரு நேரடி மோதலுக்கான வாய்ப்பு உள்ளது.

மிகச் சமீபத்திய சுற்று வெகுஜன எதிர்ப்புக்கள் நவம்பர் 22ம் திகதி முர்சிபுரட்சி, தேசிய ஒற்றுமை, தேசியப்பாதுகாப்பு ஆகியவற்றை தக்கவைத்து பாதுகாப்பதற்கு அவர் உரியவை என்று கருதும் நடவடிக்கைகளை எடுக்கலாம்என்று ஜனாதிபதிக்கு பெரும் அதிகாரங்களை கொடுத்த சட்டம் ஒன்று வெளியிட்டதை அடுத்து தொடங்கின. இந்த சட்டம் முபாரக் சகாப்தத்தில் இருந்து எஞ்சியிருப்பவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நீதித்துறை, ஜனாதிபதியின் முடிவுகள் மீது மறு ஆய்வு நடத்தும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவத்தின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த அரசியலமைப்பு மன்றத்திற்கு இச்சட்டம் அரசியலமைப்பு வரைவைத் தயார் செய்ய இன்னும் இரண்டு மாத அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால் பரந்த மக்கள் எதிர்ப்பு நிலைமை மற்றும் எகிப்தின் ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் தீவிர பிளவுகளை ஒட்டி, மன்றம் கடந்த வாரம் ஒரு புதிய அரசியலமைப்பை விரைவாக இயற்ற முற்பட்டது. இன்று முர்சி அந்த அரசியலமைப்பில் கையெழுத்திட உள்ளார். ஒரு பொதுஜன வாக்கெடுப்பு இதன்மீது 15 நாட்களுக்குள் நடைபெறும்.

அரசியலமைப்பை இயற்றி மற்றும் முடித்து ஒப்புதல் கொடுப்பதற்கு அரசியலமைப்பு மன்றம் பரபரப்பாகச் செயற்படுகிறது என்று அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அசோசியேட்டட் பிரஸ் எழுதியது: “வியாழன் கூட்டத்தில் [இது 15 மணி நேரம் நீடித்தது] மன்றத் தலைவர் ஹொசம் அல்-கிர்யானி உறுப்பினர்களை முடிக்குமாறு கடும் அழுத்தம் கொடுத்தார். ஒரு விதிக்கு 16 ஆட்சேபனைகள் வந்தபோது, அவர் அமைப்பின் விதிகளின் படி வாக்கெடுப்பிற்கு 48 மணி நேரம் தள்ளிப் போடுதல் தேவை என உள்ளது என்றார். ஆனால்நான் இப்பொழுது வாக்கெடுப்பை நடத்துகிறேன்என்றவுடன் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் தங்கள் ஆட்சேபனைகளைக் கைவிட்டனர்.

அரசியலமைப்பு ஒன்றை இயற்றுவதற்கான அவசரம் ஓரளவிற்குத் தலைமை நீதிமன்றம் அரசியலமைப்பு இயற்றும் மன்றத்தை இவ்வார இறுதியில் சட்டவிரோதம் என அறிவிக்கலாம் என்ற கவலைகளாலும் உள்ளது. மன்றத்திற்கு எதிரான முடிவு இன்னமும்கூட எடுக்கப்படலாம். வெள்ளியன்று உயர் நீதிபதிகள் அரசியலமைப்பின் மீதான வாக்கெடுப்பைக் கண்காணிக்க நீதித்துறை மறுக்கலாம் என்று அறிவித்தனர். இது மன்றத்தின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிடும்.

புதிய அரசியலமைப்பின் முக்கிய நோக்கம், இராணுவத்துடனும் அமெரிக்காவுடனும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் கூட்டை உறுதிப்படுத்திக் கொள்வதாகும். இது எகிப்திய முதலாளித்துவத்திற்குள் நடக்கும் உட்பிரிவுப் போராட்டங்களில் சகோதரத்துவத்தின் நிலைமையை தக்கவைக்க முக்கியம் என்பதுடன், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரிடையே பெருகும் எதிர்ப்பை நசுக்குவதற்கும் முக்கியமாகும்.

அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தில் இருந்து கடன் உத்தரவாதங்களையும் சர்வதேச மூலதனங்களைப் பெறுவதற்கும் ஈடாகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த முற்படுகிறது. வியாழன் அன்று அரசாங்க அதிகாரிகள் வங்கிகள் கோரும் நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் அதன் உறுதிப்பாட்டில் இவ்எதிர்ப்புக்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்றனர்.

ஒபாமா நிர்வாகத்தின் தொடர்ந்த ஆதரவை ஒட்டி முர்சி ஊக்கம் பெற்றுள்ளார். அவருடைய நவம்பர் 22 சட்டம் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வந்ததற்கு அவரை புகழ்ந்ததற்கு மறு நாள் வெளிவந்தது. அமெரிக்கா முஸ்லிம் சகோதரத்துவத்தின் அரசாங்கத்தை சுன்னி முஸ்லிம் கட்சிகள் (துருக்கி, சவுதி அரேபியா மற்றும் கட்டார் உட்பட) தலைமைதாங்கும் நாடுகளின் வலைப்பின்னலில் முக்கிய கூறுபாடாகக் காண்கிறது. இக்கூட்டு சிரியாவில் அமெரிக்க ஆதரவுடைய உள்நாட்டுப் போருக்கு ஆதரவு தருவதுடன், எந்த அமெரிக்க அல்லது இஸ்ரேலியத் தாக்குதல் ஈரானுக்கு எதிராக நடத்தப்பட்டாலும் அதற்கு முக்கியமானதாக இருக்கும்.

வெள்ளியன்று ஒபாமா நிர்வாகம் புதிய அரசியலமைப்பையோ அல்லது முர்சி ஆட்சியையோ குறைகூறக் குறிப்பாக மறுத்துவிட்டது. “வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் ஒருமித்த உணர்வு இல்லாத நிலை குறித்து புலம்பினார்என்று அசோசியேட்டட் பிரஸ் தகவல் கொடுத்துள்ளது. “ஒபாமா நிர்வாகம், எகிப்தின் அரசியலமைப்பு வரைவை இச்சட்டம் போதுமானளவு மகளிருக்கும், சமயச் சிறுபான்மையினர், எதிர்க்குரல்கள் ஆகியவற்றிற்குப் பாதுகாப்புத் தருகிறதா என்பது பற்றி உள்ளே கடுமையான விவாதம் இருந்தபோதிலும்கூட குறைகூற மறுக்கிறது.

அசோசியேட்டட் பிரஸ் மேற்கோளிட்டுள்ள பல கவலைகளுள் எகிப்திய அரசியலில் மேலாதிக்க நிறுவனமாக உள்ள இராணுவத்திற்கு அரசியல் அமைப்பு கொடுத்துள்ள பங்கு பற்றி குறிப்பு ஏதும் இல்லை.

பாதுகாப்பு மந்திரி ஒரு இராணுவ அதிகாரியாக இருக்க வேண்டும், இராணுவ விவகாரங்கள் மற்றும் இராணுவ வரவுசெலவு ஆகியவை உயர்மட்டத் தளபதிகள் அடங்கிய சிறப்புக் குழுவினால் துணை ஜனாதிபதியுடன் சேர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது. இராணுவம் எத்தடைகளும் இன்றி, அர்த்தமுள்ள கண்காணிப்பு ஏதும் இன்றியும் தொடர்ந்து செயல்படும்.

மிக அதிகம் வெறுக்கப்பட்டுள்ள இராணுவ நீதிக்குழுக்களும் தக்க வைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் முந்தைய வரைவு ஒன்றில் குடிமக்களுக்கு இராணுவ நீதிவிசாரணைக்குழுவின் அதிகார வரம்பு இல்லை என்ற விதி இருந்தது. ஆனால் இராணுவம் எதிர்ப்புக் காட்டியவுடன் அது கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக விதி 198 வந்துள்ளது. அது நீதிக்குழுக்கள்ஆயுதப் படைகளைப் பாதிக்கும் குற்றங்களைவிசாரிக்கலாம் என்று அனுமதிக்கிறது. ஜனவரி 2011ல் இருந்து 12,000 குடிமக்களுக்கும் மேலானவர்கள் இராணுவ நீதிவிசாரணைக் குழுக்களை எதிர்கொண்டுள்ளனர்.

அரசியலமைப்பு இஸ்லாமிய மதத்தை அரசசமயமாக உயர்த்துவதுடன், ஷரியாச் சட்டத்தை நாட்டுச் சட்டங்களுக்கு அடிப்படையாகவும் கொள்வதற்கு ஓரளவிற்கு முயன்றுள்ளது. நாட்டின் சட்டம்பொதுச் சான்றுகள், அஸ்திவாரங்கள், விதிகள் மற்றும் நீதி அதிகார வரம்பு மற்றும் சுன்னி இஸ்லாமும் பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்களும் ஏற்றுள்ள கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டிருக்கும்என வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க பங்கு அல்-அஜார் பல்கலைக்கழக அறிஞர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கெய்ரோவில் உள்ள ஒரு இஸ்லாமிய உயர்கல்விக் கூடம் ஆகும். சட்டவரைவு இயற்றுவதை இது மேற்பார்வை செய்கின்றது.

பிற ஜனநாயக விரோத விதிகளுள், அரசியலமைப்புஎந்தத் தனிநபருக்கும் இகழ்வு காட்டுவது, அவரை இகழ்வுபடுத்துவதுதடைக்குட்படும் என்று கூறுவதும் அடங்கியுள்ளது. முபாரக்கின் கீழ் பல எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியைத் தூற்றியது அல்லது மத விரோதம் என அறிவிக்கப்பட்ட அறிக்கைகளைக் கொடுத்தது ஆகியவற்றிற்காக கைது செய்யப்பட்டனர்.

வெள்ளியன்று நடைபெற்ற வெகுஜன எதிர்ப்புக்கள் உட்பட அனைத்தும் எகிப்தின் அரசியல் தட்டினது பிரிவுகளால் நடத்தப்பட்டவையாகும். இவை முர்சியை விட சற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிர்போக்கை குறைவாகக் கொண்டவை அல்ல. இவற்றுள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், முன்னாள் சர்வதேச அணுச்சக்தி நிறுவனத் தலைவர் முகம்மது எல்பரடேய் மற்றும் அவருடைய அரசியலமைப்புக் கட்சி, நாசர சார்பு ஹம்டீன் சபஹி, முன்னாள் முபாரக் மந்திரியும் அரபு லீக்கின் பொதுச் செயலாளர் அம்ர் மோசா, சுதந்திர எகிப்தியர்கள் கட்சியை நிறுவிய பில்லியனர் வணிகர் நகிப் சவிரிஸ் ஆகியோர் உள்ளனர்.

முக்கிய தாராளவாத முதலாளித்துவக் கட்சிகள் ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் மற்றும் ஏராளமானஇடதுமற்றும் போலி இடது கட்சிகளுடன், புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் உட்பட கூட்டு ஒன்றை வைத்துள்ளன. இதன் நோக்கம் மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துல் மற்றும் ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவது என்பதாகும்.

எகிப்தை ஒரு உள்நாட்டுப்போர் அச்சறுத்துகிறதுஎன்று எல்பரடேய் எச்சரித்துள்ளார். இது இராணுவத்தின் நேரடித் தலையீட்டிற்கு வகை செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் ஜேர்மனியின் செய்தி இதழான Der Spiegel க்கு அளித்த பேட்டி ஒன்றில் மௌசாஇன்று எதிரெதிர் முனைகளில் இருப்பது போல் பொதுமக்கள் கருத்து ஒருபோதும் இருந்ததில்லைஎன்றார்.”“சில எகிப்தியர்கள் ஏற்கனவே உள்நாட்டுப் போர் தொடங்கிவிட்டது என நம்புகின்றனர், ஆனால் அத்தகைய நிலையை நாம் எப்படியும் தவிர்க்க விரும்புவோம்.என்றார்.

முர்சியின் நடவடிக்கைகள் எகிப்தியத் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுடைய ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூகப், பொருளாதார நலன்கள் முதலாளித்துவ அரசியல் நடைமுறை மற்றும் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் அடையப்பட முடியாது என்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்:

எகிப்திற்கு ஒரு முன்நோக்கிய பாதை
[26 November 2012]