சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : எகிப்து

Mass protests against referendum on new Egyptian constitution

புதிய எகிப்திய அரசியலமைப்பு பற்றிய வாக்கெடுப்பிற்கு வெகுஜன எதிர்ப்புக்கள்

By Chris Marsden
12 December 2012
use this version to print | Send feedback

கெய்ரோவில் நூறாயிரம் மக்களும், ஏனைய எகிப்திய நகரங்களில் பல்லாயிரணக்கணக்கானவர்களும் இஸ்லாமியவாத அரசியலமைப்பிற்கு எதிராக, நேற்று டிசம்பர் 15ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள வாக்கெடுப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஜனாதிபதி மகம்மது முர்சி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஆதரவைக் கொண்டுள்ள புதிய அரசியலமைப்பு, இராணுவத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது.

கடந்த வாரம், முர்சி வெளியிட்ட பிரகடனம் ஒன்றில் அரசியலமைப்பின் மீதான வாக்கெடுப்பு திட்டப்படி நடத்தப்படும் என்று உறுதிப்படுத்தினார்.

கெய்ரோ எதிர்ப்பாளர்கள், ஜனாதிபதி அரண்மனைக்கு வெளியே இராணுவம் நிறுவியிருந்த உறுதியான தடை ஒன்றை மீறினர். அவர்கள் சிமென்ட் தடுப்புக்களை சங்கிலிகளால் தகர்த்தனர்; நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் அரண்மனைச் சுவர்களில் சாய்ந்தனர். அலெக்சாந்திரியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பட்டம் நடத்தினர்; போட்டி ஆர்ப்பாட்டங்கள் முர்சி ஆதரவாளர்களால் இரண்டு நகரங்களிலும் நடத்தப்பட்டன.

முர்சி-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சூயஸ், மகல்லா மற்றும் போர்ட் செயித்திலும் நடைபெற்றன. அலெக்சாந்த்திரியா மற்றும் மன்சௌராவில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ தலைமையங்கள் தாக்கப்பட்டன; மன்சௌராவைப் பொறுத்தவரை, தலைமையகம் தீக்கிரையாக்கப்பட்டது. முஸ்லிம் சகோதரத்துவம், தன் கெய்ரோ தலைமையகத்தைக் காக்குமாறு முறையாக இராணுவத்தை கோரியுள்ளது.

எகிப்திய ஜவுளித் தொழிலின் ஒரு மையமான மகல்லாவில் மோதல்கள் முஸ்லிம் சகோதரத்துவ ஆதரவாளர்களுக்கும் முர்சி எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்து 300 பேருக்கும்மேல் காயமுற்றனர். போர்ட் செயித்திலும் மோதல்கள் இருந்தன.

ஏராளமான எண்ணிக்கையில் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து தஹ்ரிர் சதுக்கத்திற்கு அருகே வருகையில் பொலிசார் பலமுறையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை ஏவினர்.

பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாள் எகிப்திய புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஹயதம் முகமுதீன் "எதிர்ப்புக்கள், அடக்குமுறையை அகற்றவும், முர்சியின் புதிய சர்வாதிகாரத்தை எதிர்ப்பதற்கும்" என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. போலி இடது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களின் இந்தச் செய்தித் தொடர்பாளர் முர்சியை அகற்றுதல் என்று கூறுவதோடு நிறுத்தியிருந்தாலும், மற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு செய்யவில்லை. அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த ஹொஸ்னி முபாராக்கை அகற்றிய 2011 புரட்சியின் முழக்கம் "மக்கள் ஆட்சியை அகற்ற விரும்புகின்றனர்" என்பது அலெக்சாந்திராய, சூயஸ் உட்பட கெய்ரோ இன்னும் பிற நகரங்களில் ஒலித்தது.

சமீபத்திய வாரங்கள், பெருகிய முறையில் வன்முறை அடக்குமுறை முஸ்லிம் சகோதரத்துவத்தின் குண்டர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கூட்டாக நடத்தப்படுவதையும் காண்கின்றன. செவ்வாய் அதிகாலையில் டஜன் கணக்கான முகமறைப்பு அணிந்த துப்பாக்கித்தாரிகள் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தஹ்ரிர் சதுக்கத்தில் தாக்கி ஒன்பது பேரைக் காயப்படுத்தினர். மார்பில் இரண்டு எதிர்ப்பாளர்கள், இடுப்பில் ஒருவருக்கு என்று காயமும் அடைந்தனர். பொலிஸ்கார்கள் மத்திய கெய்ரோ சதுக்கத்தைச் சூழ்ந்தன.

ஜனாதிபதியின் அரண்மனைக்கு வெளியே கடந்த வாரம் நடந்த பூசல்கள் நூற்றுக்கணக்கான காயங்களையும் ஐந்து இறப்புக்களையும் சகோதரத்துவத்தின் இராணுவ வகையிலான பிரிவுகள் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி குண்டுகளை 15 மணி நேரத் தெருப் பூசல்களில் வீசியபோது ஏற்படுத்தின. அசோசியேட்டட் பிரஸ் 12,000 முர்சி ஆதரவாளர்கள் ஒரு சில ஆயிரம் எதிர்ப்பாளர்களைத் தாக்கிய தகவல்களைக் கொடுத்துள்ளது. ஒரு காவல் மையம் போலிஸ் பார்வையில் நிறுவப்பட்டது; இது அரண்மனைச் சுவரை ஒட்டியே அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 140 முர்சி-எதிர்ப்பாளர்கள் காவலில் வைக்கப்பட்டு இஸ்ரேலின் கூலிப்படையினர் என்ற போலி ஒப்புதல் வாக்குமூலங்களைக் கொடுக்க சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.

திங்களன்று முறையான இராணுவ ஆட்சியைச் சுமத்துவதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டது; அப்பொழுதுதான் சட்டம் 107 எனப்பட்ட ஜனாதிபதி ஆணை நடைமுறைக்கு வந்து இராணுவத்திற்கு குடிமக்களை "அரசாங்கத்தின் முக்கிய நிலையங்களை" பாதுகாப்பதற்காகக் கைது செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டது; இது சனிக்கிழமை வாக்கெடுப்பின் முடிவு தெரியும் வரை செயல்படுத்தப்படும். இந்த ஆணைகள் இராணுவத்திற்கு "நீதித்துறை அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து அதிகாரங்களையும்" வழங்குகிறது; இது முர்சியின் அரசியலமைப்பில் இராணுவம் "ஆயுதப் படைகளுக்குத் தீமை விளைவிக்கும் குற்றங்களுக்காக" இராணு விசாரணைக்கு உட்படுத்தும் விதிகளைத்தான் எதிரொலிக்கிறது.

இந்த இராணுவ ஆதரவுடனும்கூட, முர்சி தன் ஆட்சிக்குப் பெருகும் எதிர்ப்பில் ஒரு ஆபத்தான நிலையில்தான் உள்ளார். எனவேதான் அவர் தற்காலிகமாக பெரும் செலவுக் குறைப்புக்கள் மற்றும் வரி அதிகரிப்புக்கள் என்று சர்வதேச நாணய நிதியம் டிசம்பர் 19ல் கொடுப்பதாக இருக்கும் 4.8 பில்லியன் டாலர் கடன் மற்றும் இன்னும் 2 பில்லியன் டாலர் உலக வங்கியில் இருந்து பெறும் கடன் ஆகியவற்றிற்கு ஈடாகச் செயல்படுத்துவதாக உறுதியளித்திருந்தவற்றை நிறுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை அமெரிக்காவிலும் மற்ற ஏகாதிபத்திய நாடுகளிலும் மற்றும் அவர் நம்பியிருக்கும் எகிப்திய இராணுவத்திலும் கவலைகளை எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

முர்சியும் சகோதரத்துவமும் மத்தியக்கிழக்கில் வாஷிங்டனின் முக்கிய நட்பு எனக் கருதப்டுபவை; இது அவை துனிசியா, லிபியா, சிரியாவில் ஏற்கனவே கொண்ட பங்கில் தெரியவந்துள்ளது. எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது கண்காணிப்பு, அடக்குதல் ஆகியவற்றிற்கு முக்கிய அரசியல் கருவியாக இவை காணப்படுகின்றன.

முர்சி அமெரிக்காவிற்கும் பிற மேலைச் சக்திகளுக்கும் தன்னுடைய பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்காக விடுத்துள்ள முறையீட்டின் முக்கிய கூறுபாடு அது எகிப்தின் உலகளாவிய முதலீடு செய்பவர்களுக்கு நலனைத் தரும் என்பதாகும். தன்னுடைய திட்டங்கள், பொருளாதாரத்தைத் தனியார் கட்டுப்பாடு கொள்வதற்கு ஊக்குவிக்கும் என்றும், "அரசாங்கத்தின் பங்கு குறையும்" என்றும் "மறுமலர்ச்சித் திட்டத்தில்" சமூகநல உதவிநிதிகள் குறைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த "மறுமலர்ச்சியின்" முதல் படியாக ஞாயிறன்று ஜனாதிபதி ஆணை மூலம் 50 பொருட்களுக்கும் மேலாக வரி உயர்வுகளை சுமத்தி அறிவிக்கப்பட்டது; அதில் எரிபொருள், மின்சாரம், எஃகு, சிமென்ட், சிகரெட்டுக்கள், மதுவகை ஆகியவையும் அடங்கு. ஆனால் மறுநாளே முர்சி வரிவிதிப்பு அதிகரிப்புக்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு மூலம் தற்காலிகமாக நிறுத்திவைத்தார்; இது அரசியல் எதிர்ப்பைச் சமாதனப்படுத்தும் நோக்கம் கொண்டது; ஏனெனில் முர்சி "தெருக்களில் உள்ள உணர்வை அறிந்துகொண்டதாகவும், எகிப்தியக் குடிமகன் இந்தக் கடுமையான பொருளாதாரக் காலத்தில் சுமைகளைக் கொண்டுள்ளார் என்பதை அறிந்துள்ளதாகவும்" எழுதியுள்ளார்.

செவ்வாயன்று IMF திட்டமிட்டுள்ள கடன் ஒருமாத காலம் தாமதிக்கப்படும் என்றும் இது எகிப்தின் வேண்டுகோளை ஒட்டி என்றும் வலியுறுத்தியது. நிதி மந்திரி மும்தாஸ் அல்-செயிது "தேவையான நடவிக்கைகள்" இரத்து செய்யாமல் தாமதப்படுத்தப்பட்டுள்ளதற்குக் காரணம், கடுமையாக எதிர்க்கப்படும் நடவடிக்கைகளை எகிப்திய மக்களுக்கு விளக்குவதற்கு அவகாசம் அளிப்பதுதான் என்றார்.

அமெரிக்கா எவ்வகையிலும் இன்னும் முர்சியைக் கைவிட்டுவிடவில்லை. இந்த வாரம் ஒபாமா நிரவாகம் ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்கு முன்னால் ஜனவரி 2013க்கு முன்பு கொடுப்பதாக ஒப்புக் கொண்ட F-15 ரக 20 போர் விமானங்களை, ஒரு பில்லியன் டாலர் உதவிப் பொதியின் பகுதியாக வழங்குவதைப் பெருமைப்படுத்தும் தன் நோக்கத்தை எதிர்க்கும் குடியரசுக் கட்சியினரை ஒதுக்கியது.

பென்டகனின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் வெஸ்லி மில்லிர் இந்த நடவடிக்கை அமெரிக்க எகிப்து உறவிற்குத் தேவை என்றும் "முப்பது ஆண்டுகளாக நம் பரந்த மூலோபாய பங்காளித்துவத்தின் அடிக்கல்லாக இது உதவுகிறது" என்றும் குறிப்பிட்டார்.

வெளியுறவுச் செயலக அதிகாரி ஆண்ட்ரூ ஷபிரோ கூறினார்: "இப்பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களை முன்னேற்றுவிப்பதற்கு நாம் எகிப்தைத் தொடர்ந்து நம்புகிறோம்; இதில் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கை, ஈரானிய விழைவுகளை எதிர்த்து நிற்றல், கடத்துபவர்களை இடை மறித்தல் மற்றும் ஈராக்கிற்கு ஆதரவு கொடுத்தல் ஆகியவை அடங்கியுள்ளன."

எதிர்த்தரப்பு தேசியத் தீர்வு முன்னணி, முகம்மது எல்பரடேய் மற்றும் அம்ர் மௌசா ஆகியோரின் தலமையில் இருப்பது, அது புதிய அரசியலைம்பின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் சகோதரத்துவம் மற்றும் இராணுவத்துடன் ஒத்துப் போவதைத்தான் அது விரும்புகிறது; அதையொட்டி அது சார்பாக இருக்கும் பெருவணிகத்தின் அடுக்குகள் அரச கருவிக்குள் அதிகார நிலைப்பாட்டைக் கொள்ளும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதில் ஒரு பங்கைப் பெறும்.

எனவேதான் முன்னணி அதிகாரியின் அறிக்கை, முர்சியின் நடவடிக்கை "இன்னும் பிளவுகள், எதிர்முனைப்படுதல்" ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று புகார் கூறியுள்ளது; அதன் ஜனநாயகவிரோத உட்குறிப்புக்களை அது வலியுறுத்தவில்லை. எல்பரடேய் தொலைக்காட்சியில் தோன்றி வாக்கெடுப்பு இரண்டு மாதங்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தஹ்ரிர் சதுக்கம் மற்றும் அரண்மைக்கு வெளியே கூடியிருக்கையில், எகிப்திய செய்தி அறிக்கைகள் இராணுவம் முர்சிக்கும் எதிர்தரப்பிற்கும் எதிர்ப்புக்களை நிறுத்த, அதையொட்டி சனிக்கிழமை வாக்கெடுப்பை உறுதி செய்வதறகு, பேச்சுக்கள் வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

கேர்னல் ஜெனரல் அப்தெல் பட்டா அல் சிசி, பாதுகாப்பு மந்திரியும், எகிப்து இராணுவ இடைக்கால அரசிலமைப்பின்கீழ் தலைமைத் தளபதியும் ஆவார்; இராணுவத்தின் பேஸ்புக்கில் இவர், "இராணுவத்தின் தலைவரும் பாதுகாப்பு மந்திரியும் எகிப்தின் நலனுக்காக குடியரசின் ஜனாதிபதி முன்னிலையில் தேசியப் பங்காளிகள் ஒன்றாகக் கூடிப் பேச்சுக்களை நடத்த வேண்டும் என விரும்புகிறார்." என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன் அன்று எகிப்தின் ஒலிம்பிக் கிராமத்தில், புது கெய்ரோ மாவட்டத்தில் மாலை 4.30க்கு நடக்க உள்ள பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுபவர்களில் அரசாங்கம், நீதிபதிகள் மற்றும் "அனைத்து அரசியல் சக்திகளும்" அடங்கும்.

நாசரின் Dignity Party உடைய ஹம்தீன் சபஹி, வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை கைவிடாதது போல் காட்டிக் கொண்டு, ஒரு தெளிவான செயற்பட்டியல் இல்லாத நிலையில் பேச்சுக்கள் பொது உறவுகள் பயிற்சி போல் ஆகிவிடும் ஆபத்தைக் கொண்டுள்ளது என்ற கவலையை எழுப்பினார். இன்றுவரை இறுதி முடிவையும் அவர் ஒத்தி வைத்துள்ளார்.

அதே நேரத்தில் அவர் "எகிப்திய இராணுவம் ஒரு வலிமை வாய்ந்த இராணுவம், அனைத்து எகிப்தியர்களிடையேயும் பெரு மதிப்பைக் கொண்டுள்ளது. நாங்கள் அதையும் அதன் முயற்சிகளையும் மதிக்கிறோம்" என்றார்.

அத்தகைய பேச்சு இராணுவத்தின்கீழ், வாக்கெடுப்பிற்கு மூன்று நாட்களுக்கு முன் என்பது முர்சியை எதிர்க்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே சீற்றமான எதிர்ப்பைத் தூண்டும்; இவர்கள் தற்பொழுது தேசியத் தீர்வு முன்ணியில் உள்ளனர். இது எகிப்தின் உத்தியோகபூர்வ செய்தி நிலையமான MENA வை, பேச்சுக்கள் "நாட்டின் பங்காளிகளுக்கு இடையே நடைபெறும் அரசியல் சார்பற்ற உரையாடலாக இருக்கவேண்டும், இது எகிப்திய மக்களைச் சமாதானப்படுத்தும்" என்று வலியுறுத்த வைத்துள்ளது.