சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political economy of the Spanish bank bailout

ஸ்பெயினின் வங்கிப் பிணையெடுப்பின் அரசியல் பொருளாதாரம்

By Nick Beams
11 December 2012
use this version to print | Send feedback

கடந்த வாரம் யூரோப்பகுதி நிதி மந்திரிகள் ஸ்பெயினின் வங்கிப் பிணையெடுப்பிற்காக 39.5 பில்லியன் யூரோக்களை வழங்குவது என்ற முடிவு இன்னும் பரந்த நடவடிக்கைகளுக்கான ஒரு பரிசோதனை நடவடிக்கையாகும். இதன் மையத்தில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையில் இன்னும் கூடுதலான தாக்குதல்கள் இருக்கும்.

இந்த உடன்பாட்டின்படி, 37 பில்லியன் யூரோக்கள் ஏற்கனவே ஸ்பெயினின் அரசாங்கத்திடம் இருந்து ஆதரவு பெற்று வரும் நான்கு பெரிய வங்கிகளுக்கு அளிக்கப்படும். 2.5 பில்லியன் யூரோக்கள் ஒரு "bad bank" என்று கூறப்படுவதில் வைப்பு செய்யப்படும். அது ஸ்பெயினின் சொத்துச் சந்தைச் சரிவில் விளைந்த இழப்புகளை ஈடுகட்டும் நோக்கத்தை கொண்டது.

இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வங்கிகளில் வேலை வெட்டுக்களில் கவனம் செலுத்தப்படுவதுடன், அதன் சிக்கன நடவடிக்கைகளை அதிகப்படுத்துமாறு ஏற்கனவே சமூகநலப் பணிகளில் இருந்து 150 பில்லியன் யூரோக்களை வெட்டிவிட்ட ஸ்பெயினின் அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும். எவ்வாறாயினும், ஸ்பெயினின் கடனைத் தீர்ப்பதற்குத் தேவையான நிதியைவிட பிணையெடுப்பு நிதி மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஸ்பெயினின் வங்கிகளுக்குக் குறைந்தப்பட்சம் 100 பில்லியன் யூரோக்கள் தேவைப்படும் என்றும் 60 பில்லியன் யூரோக்கள் இழக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளபோது, இதன் ஒரு சிறு துளியான 2.5 பில்லியன் யூரோக்கள் சொத்துக்கள் சந்தையின் சரிவை ஈடுகட்ட ஒதுக்கப்படும். இந்த ஆரம்ப நடவடிக்கைகள் ஸ்பெயின் அரசாங்கத்தைப் பிணையெடுக்கும் முழு அளவான செயலின் முன்னோடியாக இருக்கும் என்றும், கிரேக்கத்தில் இப்பொழுது உள்ள நிதியச் சர்வாதிகாரத்தையும் நிறுவும் எனவும் பரந்தளவில் கருதப்படுகின்றன.

சமீபத்திய தலையீடு பொருளாதார மீட்சியை வளர்ப்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. அத்தகைய வெற்றுத்தனக்கூற்றுக்கள் பொதுமக்களைத் திருப்தி செய்வதற்காகக் கூறப்படுகின்றன. யூரோப்பகுதி நிதிய அதிகாரிகள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் ஸ்பெயினில் மந்தநிலையைத் தீவிரப்படுத்தத்தான் செய்யும். ங்கோ வேலையின்மை ஏற்கனவே 25 சதவிகிதம் என்று மொத்தத்திலும், இளைஞர்களிடையே 50% என்றும் உள்ளது.

பிணையெடுப்பின் நோக்கம் நிதிய உயரடுக்கிற்கு முட்டுக் கொடுக்கவும், தொழிலாள வர்க்கத்தின் மீது முழுச் செலவையும் சுமத்துவதும்தான். இது சமூகநலச் செலவுகளில் பெரும் வெட்டுக்களை ஏற்படுத்துவதும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களைப் பெரிதும் குறைப்பதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதிய நிலையங்கள் ஊகவணிகம் மூலம் சொத்துக்கள் சந்தையில் கொண்ட இழப்புக்களை ஈடுகட்ட தொழிலாளர்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுகின்றர்.

சமீபத்திய வாரங்களில் அனைத்து முக்கிய மத்திய வங்கிகளும் தங்கள் நிதிய ஊக்கமளிக்கும் கொள்கைகளான கிட்டத்தட்ட வரம்பற்ற குறைந்த வட்டிக் கடன்களை நிதிய முறையில் உட்புகுத்துவதை முடுக்கிவிட்டுள்ளன. பெருகி வரும் உலகப் பொருளாதாரச் சரிவின் அடையாளங்களால் அவை உந்துதல் பெற்றுள்ளன. இதனால் முக்கிய சர்வதேச வங்கிகளின் நிலைப்பாடு வலுவிழந்துள்ளது. கடந்த வார ஸ்பெயினின் வங்கிப் பிணையெடுப்பு ஒரு பரந்த ஐரோப்பிய, சர்வதேசக் கொள்கையின் ஒரு பாகமாகும்.

வங்கிகளுக்குப் பிணையெடுப்பில் விரிவாக்கம் என்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலகளை தீவிரப்படுத்துவதுடன் இணைந்துள்ளது. இத்தாக்குதல்கள் ஐரோப்பா முழுவதும் படர்ந்துள்ளன.

இக்கொள்கை பொருளாதார அடிப்படையை மட்டும் தளமாகக் கொண்டிருக்கவில்லை; இன்னும் அதிக அளவில் அரசியல் அடிப்படையைக் கொண்டுள்ளது. இதுவரை கிரேக்கத் தொழிலாளர்கள் மீது பெருமந்தநிலைக்கால நிலைமைகளைச் சுமத்தியதில், அதன் வெற்றியைக் கருத்திற்கொண்டு, நிதிய மூலதனம் இந்த சமூக எதிர்ப்புரட்சியை ஸ்பெயின், இத்தாலி, ஐரோப்பாவின் மற்ற பகுதிகள் இன்னும் அப்பாலும் விரிவாக்குவதற்குத் துணிவை கொண்டுள்ளதாக உணருகின்றது.

ஆனால் கிரேக்கத்தின் மீது வரலாற்றுத் தன்மை கொண்ட தாக்குதல்களை சுமத்தும் அதன் தகமை, தொழிலாளர் வர்க்கத்தின் உறுதியான, கடுமையான எதிர்ப்பையும் மீறி, என்பது போலி இடது அமைப்புக்கள், சிரிசா தலைமையில் இருப்பவற்றை நம்பியுள்ளது. அவை இந்த எதிர்ப்பை தொழிற்சங்கங்களுக்குப் பின் தள்ளவிடுவதுடன், மேலும் அரசியல் அதிகாரத்தை வெல்லுவதற்கு ஒரு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சுயாதீன இயக்கத்தின் அபிவிருத்தி மற்றும் ஸ்பெயினின் முதலாளித்துவ அரசை அகற்றும் இலக்கையும் எதிர்க்கின்றன.

இதில் சிரிசா முற்றிலும் மோசடித்தனமான பங்கைக் கொண்டுள்ளது. ஒருபுறம் அது வெட்டுக்களை எதிர்ப்பதாகக் கூறி மக்களுடைய ஆதரவைப் பெறுகிறது. அதே நேரத்தில் கிரேக்கம், அதற்கு ஆணையிடும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. சலுகை படைத்த மத்தியதர வகுப்புக்களின் பிரிவுகளைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தைச் சிறிதும் சமரசத்திற்கு இடமின்றி எதிர்க்கிறது. சிரிசா பொருளாதார நெருக்கடியை, தன் சேவையை நிதி மூலதனத்திற்கு கொடுத்து அரசாங்கத்துடன் தன்னை இன்னும் முழுமையாக இணைத்துக் கொள்ளும் வழிவகை என்றுதான் காண்கிறது.

ஐரோப்பிய அரசாங்கங்களும் ஆளும் வர்க்கங்களும் முன்னைக்காட்டிலும் அதிகமாக இப்பொழுது கிரேக்கத்தில் சிரிசா, ஜேர்மனியில் இடது கட்சி, பிரான்ஸில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி, பிரித்தானியாவில் சோசலிசத் தொழிலாளர்கள் கட்சி, ஸ்பெயினில் ஐக்கிய இடது ஆகிய போலி இடது குழுக்களை தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி சிதைக்க நம்புகின்றன. தங்கள் பங்கிற்கு இந்த அமைப்புக்கள் அனைத்தும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பங்கை ஆர்வத்துடன் செய்வதற்கு சிரிசா மாதிரியை ஐரோப்பிய, சர்வதேச "இடது"கள் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டி சைகை காட்டுகின்றன.

அதே நேரத்தில் அரச அடக்குமுறை மிகப் பெரியளவில் நடத்தப்படுவதற்கான தயாரிப்புக்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஸ்பெயினின் அரசாங்கம் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைக்காகத் தான் செலவழிக்கும் நிதியை அதிகப்படுத்தியுள்ளது. இதில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கலகப்பிரிவினருக்கான செலவு, மற்றும் கருவிகள் செலவு ஆகியவற்றில் 1780% அதிகரிப்பு இருக்கும்.

ஸ்பெயினில் ஆபத்திலுள்ளது கிரேக்கத்தைவிட இன்னும் அதிகம் ஆகும். இதற்குக் காரணம் ஜேர்மனிய வங்கிகள் ஸ்பெயினின் நிதிய நெருக்கடியில் அதிகம் ஈடுபாடு கொண்டுள்ளதுதான். Bank for International Settlements இன் கருத்துப்படி ஜேர்மனியின் கடன் கொடுத்தவர்கள ஸ்பெயினில் $139.9 பில்லியனை ஈடுபடுத்தியுள்ளனர். இது ஐரோப்பாவில் மிக அதிகம். இதில் $46 பில்லியன் ஸ்பெயினின் வங்கிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் கிரேக்கக் கடன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று கூறுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்பெயினுக்கும் அது விரிவாக்கப்படும் வகையில் அது முன்னோடியாகிவிடும் என்ற அச்சம் உள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஸ்பெயின் வங்கிகளுக்கு 100 பில்லியன் யூரோக்கள் பிணையெடுப்பு பற்றி முதன்முதலாகக் கருதப்பட்டபோது, ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒன்று "இது பொறுப்பற்ற ஜேர்மனிய கடன் கொடுத்தலுக்கு பின்புறகதவு வழியிலான திறமையான பிணையெடுப்பு" என்று குறிப்பிட்டது; மேலும் "ஸ்பெயினில் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்காமல் இருக்க அனுமதிக்கப்பட்டால், ஜேர்மனிய வங்கி முறையில் அதன் தாக்கங்கள் மிகத்தீவிரமாக இருக்கும்." என்றும் கூறியது.

150 ஆண்டுகளுக்கு முன், கார்ல் மார்க்ஸ் கடன் கொடுத்தல், நிதிய அமைப்பு முறை ஆகியவற்றின் ஸ்திரத்தன்மை வர்க்கப் போராட்டத்தின் போக்கில் தங்கியிருக்கின்றது என்ற அசைக்க முடியாத கருத்தைக் கூறினார். "நிதிய ஓநாய்கள்" தொடர்ந்து அரசாங்கத்தின் சொத்துக்களை உண்ணலாம் என்று முதலாளித்துவம் நம்பும் வரை, கடன் முறை தொடர்ந்து செயல்படும்.

ஆனால் அந்த நம்பிக்கை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சி என்னும் நிலைமையின்போது சரிந்து ஒரு நெருக்கடி ஏற்படும். இக்கருத்துக்கள் யூரோப்பகுதி கடன் நெருக்கடியின் முக்கிய தன்மையில் இருக்கும் அரசியல் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

கிரேக்கத்தில் முன்பு, இப்பொழுது ஸ்பெயினில் நிதி மூலதனம் அத்தகைய போக்கு வளராமல் தடுத்துவிடுவதற்கு பெருகியமுறையில் போலி இடது மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அமைப்புக்களைத்தான் அதிகமாக நம்பியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.