சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Berlin calls for EU-run bankers’ dictatorship over Greek economy

கிரேக்கப் பொருளாதாரத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் வங்கியாளர்களின் சர்வாதிகாரம் தேவை என்று பேர்லின் அழைப்பு விடுகிறது

By Stefan Steinberg 
30 January 2012

use this version to print | Send feedback

ஜேர்மன் மற்றும் சர்வதேச வங்கிகளின் சார்பில், ஜேர்மனிய அரசாங்கம் கிரேக்க வரவு-செலவுத் திட்ட கொள்கைகளை இயக்கும் அதிகாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கொடுக்கப்பட வேண்டும் என்னும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. திங்களன்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் விவாதிக்கப்பட உள்ள இந்தத் திட்டம் கிரேக்கப் பொருளாதாரத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முழுச் சர்வாதிகாரத்தையும் வழங்கிவிடும்.

இதன் பொருள், ஐரோப்பியப் பகுதி நிதி மந்திரிகளால் நியமிக்கப்படும் நிர்வாக அதிகாரிமூலம் வங்கிகள் எந்த நேரத்திலும் பொதுத்துறை ஊதியங்கள், ஓய்வூதியங்கள் அல்லது பிற முக்கிய செலவுகள் என்று கிரேக்க அரசாங்கத்தால் கொடுக்கப்படுபவற்றை நிறுத்திவிட முடியும் என்பதே ஆகும்.

வார இறுதியில் ராய்ட்டர்ஸ் மற்றும் பைனான்சியல் டைம்ஸ்  வெளியிட்ட தகவல்களின்படி, ஜேர்மனியின் திட்டத்தின்படி கிரேக்கம் வங்கிகளிடம் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு முதலும், முக்கியமானதுமான முன்னுரிமையைஅளிக்க வேண்டும். உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ள பிணையெடுப்பு நிதியின் ஒரு தவணைத்தொகை வழங்கப்படவில்லை என்றால், கிரேக்கம் தான் கொடுக்க வேண்டியவர்களுக்குத் தாமதப்படுத்துவேன் என்று அச்சுறுத்தக்கூடாது என்று இத்திட்டம் உறுதியாகக் கூறுகிறது. மாறாக, அரசாங்கத்தின் முதல் செலவுகளில் இன்னும் அதிக வெட்டுக்களை ஏற்க வேண்டும், அது ஒன்றுதான் நிதி வராத நிலையில் செய்யக்கூடிய  சாத்தியமான ஒரே விளைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

கிரேக்க அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் நிதியச் சந்தைகள் இலக்கு வைத்து முக்கூட்டினால் (அதாவது ஐரோப்பிய வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றால்) செயல்படுத்தப்படும் கடன் குறைத்தல் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால், அவற்றைத் தடுத்து விடும் அதிகாரம் புதிய வரவு-செலவுத் திட்ட ஆணையருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று கிரேக்கத்தின் நிதி மந்திரி எவென்கேலோஸ் வெனிஸூலோஸ்  இத்திட்டத்தை நிராகரித்து, ஏதென்ஸுக்கும் அதற்குக் கடன் கொடுத்தவர்களுக்கும் இடையே ஒரு புதுப்பிக்கப்படும் மோதலுக்கான அரங்கை ஏற்படுத்திவிட்டார்.

ஜேர்மனியின் திட்டத்தைத் தவிர, ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியும் (EU, IMF)  புதிய 130 பில்லியன் யூரோ பிணையெடுப்பு நிதி கொடுக்கப்படுவதற்கு முன் ஏதென்ஸ் முன்னுரிமைகொடுக்கப்பட்ட  நடவடிக்கைகள்என்று எடுக்கப்பட வேண்டியது குறித்து ஒரு பத்துப் பக்கப் பட்டியிலைக் கொடுத்துள்ளன. இவற்றுள், மூன்று ஆண்டுகளுக்குள் இன்னும் 150,000 வேலைகள் அகற்றப்பட வேண்டும், பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் வரவு-செலவுத் திட்டங்களில் பெரிய குறைப்புக்கள் வேண்டும், மற்றும் அமைப்பு மூடல்கள் எனப்படும் கிரேக்கத்தின் 750 யூரோ குறைந்தப்பட்ச மாத ஊதியத்தில் குறைப்பு, தனியார் துறை ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டுவரும் இரு மாத மேலதிக கொடுப்பனவு அகற்றப்படுதல் ஆகியவை அடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கோரிக்கையான குறைந்தபட்ச ஊதியத்தைக் குறைத்தல், தனியார் துறை மேலதிக கொடுப்பனவுகளை முடித்துவிடல் என்பவற்றிற்கு விடையிறுக்கும் வகையில், கிரேக்க முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மூன்று ஆண்டுகாலம் ஊதியத் தேக்கம் என்னும் ஒரு கூட்டுத் திட்டத்தை முன்வைத்துள்ளனர்.

கிரேக்கத்திற்கு ஒரு வரவு-செலவுத் திட்ட ஜார் மன்னரை நியமிக்கும் ஜேர்மனியத் திட்டம், IIF எனப்படும் சர்வதேச நிதியக் கூடத்தின் பிரதிநிதிகள் சார்ல்ஸ் டல்லாரா தலைமையில், மற்றும் கிரேக்க அரசாங்கத்திற்கும் இடையே ஏதென்ஸில் நடந்த பேச்சுக்கள் முறிந்த உடன் வந்துள்ளன. கடந்த ஆண்டு முக்கூட்டு இரண்டாம் கிரேக்க மீட்புத் தொகுப்பிற்காக இயற்றி, ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, கிரேக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள கடன் கொடுத்தவர்கள் குறைந்தபட்சம் 50% இழப்பை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய வங்கிகளின் ஆதரவைப் பெற்ற IIF கிரேக்கத்திற்குக் கடன்கொடுத்தவர்கள் பெறும் இழப்பு குறைக்கப்படும் வகையில் விதிகள் தேவை என்று வலியுறுத்தியுள்ளது.

கிரேக்கம் ஏற்கனவே ஒரு தொழில்நுட்ப அரசாங்கம், முன்னாள் வங்கியாளர் தலைமையில் நடப்பதால் செயல்படுத்தப்படுகிறது. அம்முதல்வர் நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர் ஆவார். இதற்குக் காரணம் முந்தை ஆட்சியை அகற்ற வேண்டும் என்று ஒருங்கிணைந்த வகையில் வங்கிகளும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் மேற்கொண்ட முயற்சிகள்தான். முன்னாள் மத்திய வங்கியாளரும் ஒரு நேரத்தில் கோல்ட்மன் சாஷ்ஸில் நிர்வாகியாகவும் இருந்து லுக்காஸ் பாப்பெடமோஸ், நவம்பர் மாத தொடக்கத்தில் கிரேக்கப் பிரதமராக பதவியேற்று, எஞ்சியிருக்கும் கிரேக்கப் பொதுநல அரசில் எஞ்சியுள்ளவற்றையும் தகர்க்க வேண்டும் என்ற கட்டளையையும் பெற்றிருந்தார்.

சில வாரங்களுக்குப் பின் மற்றொரு முக்கிய வங்கியாளர் (அவரும் கோல்ட்மன் சாஷ்ஸில் நிர்வாகியாக இருந்தவர்), மரியோ மோன்டி இத்தாலியில் தேர்ந்தெடுக்கப்படாத தலைவராக இத்தாலியக் கடன்களின் விலையை உயர்ந்த வேண்டும் என்ற உந்துதலில் இருந்த நிதியச் சந்தைகளின் செயற்பாட்டை அடுத்து இருத்தப்பட்டார்.

மற்ற ஐரோப்பிய நாடுகளும் சமீபத்திய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்படாத வல்லுனர் குழுக்களின் கீழ் வந்துள்ளன; அக்குழுக்களுக்கு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது; ஹங்கேரி 2009 -2010லும், செக் குடியரசு ஜனவரி 2010 வரையிலும் இந்நிலையில் இருந்தன.

யூரோப் பகுதியிலுள்ள நாடுகளின் நிதிய, வரவு-செலவுத் திட்ட கொள்கைகளை ஆணையிடும் நோக்கத்தைக் கொண்ட பிற நடவடிக்கைகள் பலவற்றையும் பேர்லின் வலியுறுத்துகிறது. இவற்றுள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததான ஒரு கடன் தடை விதி தேசிய அரசியலமைப்புக்களில் நுழைக்கப்பட வேண்டும் என்பதாகும்; இது அரசாங்கங்கள் வாங்கும் எந்தப் புதிய கடன்களிலும் கடுமையான உச்ச வரம்புக்களை நிர்ணயிக்கிறது.

கிரேக்கப் பொருளாதாரத்தின் மீது சர்வாதிகார அதிகாரங்களை நிறுவும் திட்டம் ஒன்றும் புதிது அல்ல. 2010 கோடையில் Der Spiegel இதழில் வந்த தகவல்படி, அந்நேரத்தில் ஒரு வல்லுனர்குழு துல்லியமாக இதைப்போன்ற திட்டத்தைத்தான் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் நிதிய மந்திரி வொல்ஃப்காங் ஷொய்பிள ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் தயாரித்து இருந்தனர்.

2010ல் விவாதத்திற்குட்டபட்ட வரைவுத் திட்டம் முழு உரிமை கூடிய விருப்பத் தேர்வு அதிகாரங்கள்மீது தடைகள் தேவைஎன்று கோரியது. வரவு-செலவுத் திட்ட கொள்கை குறித்து திறமையான கட்டுப்பாடு ஒரு தனிநபர் அல்லது குழுக்கள் என்று வல்லுனர் குழுவினால் நியமிக்கப்படுவோரிடம் இருக்க வேண்டும்.

பேர்லின் திட்டம் 2010 குறித்துக் கருத்துத் தெரிவித்த பைனான்சியல் டைம்ஸ்,  அத்தகைய திட்டம் கடன் பெற்றுள்ள நாட்டை காலனித்துவ வகையிலான நிலையில் இருத்திவிடும்என்று எழுதியது. இதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டால், அரசியலளவில் வெடிப்புத் தன்மை ஏற்படும்.... முழு இறைமை பெற்ற நாடுகள் கொடுக்கத் தவறினால், தேவையானது பேச்சுவார்த்தை மேசையே ஒழிய, சித்திரவதை செய்யும் அறை அல்ல. என்றும் செய்தித்தாள் தொடர்ந்து எழுதியது.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் காலனித்துவ நிலையில் தாழ்ந்து நிற்றல்மற்றும் ஒரு சித்திரவதை அறை பொதுமக்களுக்கு மீண்டும் என்பது கிரேக்கத்திற்காக தயாராகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கொடூரமான சிக்கனக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சோதனைக் களமாக கிரேக்கம் விளங்கி வருகிறது. கிரேக்கத்திற்கான பேர்லினின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதுவும் மற்ற நாடுகளிலும் இதே போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு முன்னோடியாகத்தான் அமையும்.