சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Thibault to stand down as CGT union general secretary

பிரான்ஸ்:தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து திபோ விலகுகிறார்

By Anthony Torres
2 February 2012

use this version to print | Send feedback

தொழிற்சங்கத்தின் தேசியத் தலைமைக்கு ஜனவரி 24ம் தகிதி எழுதிய கடிதம் ஒன்றில், தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) பொதுச் செயலாளர் திபோ CGT யின் 50வது மாநாட்டில் மீண்டும் மறு தேர்தலுக்கு தான் நிற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

பேர்னார்ட் திபோவைத் தொடர்ந்து CGT யின் பொதுச் செயலாளராக யார் பதவிக்கு வருவார் என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் செய்தி ஊடகம் இரு முக்கிய வேட்பாளர்களை முன்வைத்துள்ளது. திபோவிற்கு நெருக்கமான Eric Aubin மற்றும் Nadine Prigent ஆகியோர்களே அவ்விருவராவர்.

ஜனாதிபதி சார்க்கோசியுடன் சமூக நலச் செலவுக் குறைப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது ஒத்துழைத்த வகையில் தொழிலாள வர்க்கத்தினால் இழிவிற்கு உட்படுத்தப்பட்டபின், திபோ பதவியிறங்குவது குறித்து பரிசீலித்து வருகிறார்குறிப்பாக 2010 இலையுதிர்காலத்தில் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை அவர் காட்டிக் கொடுத்ததற்காக. ஆனால், Eric Aubin அல்லது Nadine Prigent, திபோவிற்கு பதிலாக பதவியேற்பது எந்த வகையிலும் CGT யின் கொள்கைகளிலுள்ள தொழிலாள வர்க்க விரோதத் தன்மையை மாற்றப் போவதில்லை.

 

Eric Aubin, Nadine Prigent இருவரும் 2010 வேலைநிறுத்தங்கள் CGT யினால் காட்டிக் கொடுக்கப்பட்டதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். Aubin நீண்ட காலமாக அதிகாரத்துவத்தினராக உள்ளார்; தற்பொழுது CGT இன் கட்டுமானத்துறைத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் செயலாளராக உள்ளார்; ஓய்வூதிய சீர்திருத்தக் காலத்தில் CGT யின் தலைமைப் பேச்சுவார்த்தை நடத்துபவர் என்ற முறையில் அவர் நன்கு அறியப்பட்டார். Nadine Prigent பொறுத்தவரை, சுகாதாரத்துறைத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் ஒரு செவிலியராகவும் இருக்கும் அவர், ஓய்வூதியச் சீர்திருத்திற்கு எதிரான போராட்ட காலத்தின்போது Intersyndicale ல், (கூட்டுத் தொழிற்சங்கக் குழுவில்) CGT உடைய பிரதிநிதியாக இருந்திருந்தார்.

 

தொழிலாளர்களின் பணிக்கால ஆண்டுகளை நீட்டிக்கும் நோக்கத்தைக் கொண்ட 2010ம் ஆண்டு ஓய்வூதியச் சீர்திருத்தம் தொழிலாளர்களிடையே மிக அதிக அளவில் செல்வாக்கு அற்று இருந்தது. அதற்கு எதிராக Intersyndicale நடவடிக்கை நாட்களுக்காக கொடுத்த அழைப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் மில்லியன் கணக்கானவர்கள் தெருக்களுக்கு வந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் Intersyndicale தானே சார்க்கோசியுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிந்திருந்த வெட்டுக்களை தடைக்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.

எண்ணெய் சுத்திகரிப்புப் பிரிவுத் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது, துறைமுகத் தொழிலாளர்கள் பெட்ரோல் சேமிப்புக் கிடங்குகளை முற்றுகையிட்டது ஆகியவற்றில் ஈடுபட்டு, பிரான்ஸ் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையைத் தோற்றுவித்த நிலையில் அராசங்கம் வலுவுழந்தது. ஆனால் முற்றுகைகளை முறிப்பதற்கு அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் தலையீடுகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு மறுத்த வகையில் திபோ வேலைநிறுத்தங்களைக் கைவிட்டார்.

அந்த நேரத்தில் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு என்பது அருவமானது, புரிந்து கொள்ள இயலாதது என்று வலியுறுத்தி, ஓய்வுதியத் திட்டம் பற்றி பேச்சுக்கள் நடத்துவதை விரும்பினார்.

இப்பொழுது சோசலிஸ்ட் கட்சி (PS) ன் ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்டிற்கு ஆதரவு கொடுக்கும் முதலாளித்துவ இடது, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருடன் ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடிய திபோவின் வாரிசு குறித்துத் தேடிவருகிறது. பிரான்ஸ் அதன்  போட்டியாளர்களுக்கு எதிராக தன் நிலைப்பாட்டை அதிகரித்துக் கொள்வதற்காக, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைத் தாக்குதல், ஐரோப்பா முழுவதும் உலகப் பொருளாதார நெருக்கடியின் துவக்கத்திலிருந்து சமூக ஜனநாயக அரசாங்கங்கள் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளை தானும் எடுத்துக் கொள்ளுதல் என்பவற்றை ஹோலண்ட் விரும்புகிறார்கிரேக்கத்தில் பாப்பாண்ட்ரூவும், ஸ்பெயினில் பாத்தேரோவும் இதைத்தான்  செய்தனர்.

பிரான்சுவா ஹோலண்டின் உத்தியோகபூர்வ வலைத் தளத்தில் Aubin ஆகஸ்ட் 28, 2010 என்று திகதியிடப்பட்ட கட்டுரை ஒன்றை, சோசலிசத் திட்டத்தின் இதயத்தானத்திலுள்ள சமூகப் பிரச்சனை என்ற தலைப்பில் வெளியிட்டார்; இது துல்லியமாக இப்பிரச்சினை குறித்துத்தான் எழுதப்பட்டுள்ளது. சார்க்கோசியின் ஓய்வூதியத் திட்டம் நியாயமற்றது, திறமையற்றது என்று Aubin விளக்கி அவர் எவ்வாறு ஓய்வூதிய விருப்புரிமை என்னும் முத்திரையின் பேரில் மற்றொரு சீர்திருத்தத்தைக் கொண்டு வர விரும்பினார் என்பது பற்றியும் எழுதியுள்ளார்.

தான் நியாயமற்றது என்று நம்பும் ஓர் ஓய்வூதிய வெட்டுக்களைச் செயற்படுத்துவதற்கு, தொழிலாள வர்க்கம் அச்சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கையில், அத்தகைய உடன்பாட்டைக் குறித்துத் தான் ஏன் ஓர் உடன்பாடு காண்பதற்கு சார்க்கோசியுடன் பேச்சுக்களை நடத்தினார் என்று Aubin விளக்கவில்லை. இழிந்த முறையில் பொய்கூறும் இவர், தான் சார்க்கோசியின் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர் என்று உட்குறிப்பாகக் கூறுகிறார்;  மேலும் PS தொழிலாளர்களின் சமூக உரிமைகளைக் காக்கும் வகையில் ஒரு மேம்பட்ட சமூகநலத் திட்டத்தைக் கொடுக்கும் என்றும் கூறுகிறார். இவருடைய நோக்கம் ஹோலண்ட் மற்றொரு தொழிலாள வர்க்க விரோத சீர்திருத்தத்தை செயல்படுத்த உதவ வேண்டும் என்பதுதான்.

ஆனால் முதலாளித்துவமும் CGTயும் சார்க்கோசியின் ஜனாதிபதி காலத்திற்கும் ஒருவேளை ஹோலன்ட் ஜனாதிபதியாக வரக்கூடிய காலத்திலும் ஒரு வெளிப்படையான தொடர்ச்சி தொழிற்சங்கத் தலைமையில் இருப்பது குறித்தும் அஞ்சுகின்றன. தொழிற்சங்கத்தின் நிலைப்பாட்டு தொடர்பு குறித்துப் பேசிய திபோ தன்னுடைய கடிதத்தில் ஆனால், புதிய பிரச்சினைகளை உய்த்துணரும் நம் திறைமையில் இது ஒரு தடையாக வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஹோலன்டிற்கும், சார்க்கோசியின் கீழ் அனைத்து முக்கிய வெட்டுக்களுக்கும் பேச்சுவார்த்தைகளை நடத்திய திபோவிற்கும் இடையே பேச்சுக்கள் என்பது நடைபெற்றால், அது சார்க்கோசியின் கொள்கைகள் மற்றும் PS ன் கொள்கைகள் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள அடிப்படைத் தொடர்ச்சியை மிகத் தெளிவாக நிரூபித்துவிடும். எனவே திபோவின் பொதுச் செயலர் பதவி இராஜிநாமா என்பது முதலாளித்துவ இடதின் பிற்போக்குத்தனக் கொள்கைகளை தொழிலாளர்களிடமிருந்து மறைப்பதற்கான ஒரு முயற்சியேயாகும்.

CGT தலைமையிடத்தில் பேர்னார்ட் திபோவின் உத்தியோகப் போக்கு மற்றும் 14 ஆண்டு காலம் அவர் பொதுச் செயலாளராக இருந்தது ஆகியவைகள் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) அரசியல் கையாக CGT செயல்பட்ட காலத்திற்கு ஒரு உறுதியான முற்றுப்புள்ளி என்பதைக் குறித்தது. பனிப்போர்க் காலத்தில் CGT செயலாளர்கள் PCF இன் தேசியத் தலைமையின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 1991ம் ஆண்டு சோவியத் கலைப்புடன் சோவியத் அதிகாரத்துவமும் கலைக்கப்பட்ட நிலையில், ஸ்ராலினிசவாதிகள் அக்டோபர் புரட்சியுடன் வரலாற்றுப் பிணைப்பை கூறியதும் சரிந்த நிலையில், PCF ஆபத்தான நிலையில் பெரிதும் சரிந்தது; CGT பகிரங்கமாக PCF உடனான தன் பிணைப்புக்கள் தொடர்ந்திருப்பதை குறைவாக எடுத்துக் காட்டியது.

திபோ ஒரு PCF உறுப்பினராக இருந்தாலும், அவருடைய கொள்கைகள் கட்சியின் ஆசியைப் பெற்றிருந்தபோதிலும், அவர் முக்கியமாக PCF ன் கீழ் செயற்படவில்லை; மாறாக அரசாங்கத்துடன் நேரடியான பங்காளி என்ற முறையில் பேச்சுவார்த்தைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சமூக வெட்டுக்களைச் சுமத்துவதற்கு நடத்தினார். சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப்பின் முதல் முக்கிய வேலைநிறுத்த இயக்கத்தின்போது CGT இரயில் தொழிலாளர்களின் தலைவர் என்ற முறையில் அவர் பொதுக் கவனத்திற்கு வந்தார்--1995ல் ஓய்வூதிய வெட்டிற்கு எதிரான இரயில் வேலையிறுத்தம்இதை அவர் நெரித்துக் காட்டிக் கொடுக்கப்படுவதற்குத்தான் உதவினார். ஆனால் அவருடைய மிக முக்கியமான அரசியல் பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் சார்க்கோசியுடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தும் பங்காளியாக இருந்து வருவதுதான்.

 

தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் முற்றிலும் தற்காப்புக் கொடுக்கும் தன்மைகூட முடிந்துவிட்டது என்று கருதக்கூடிய வரலாற்றுக்காலம் என்பதைத்தான் இது காட்டுகிறது. 2008ம் ஆண்டு பிரான்ஸின் மிகப் பெரிய தொழிற்சங்கங்களான CGT, CFDT (PS க்கு நெருக்கமாக இருக்கும் பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு) ஆகியவை பொது நிலைப்பாடு என்று அறியப்பட்ட உடன்பாட்டைச் செய்து கொண்டன. அது முக்கிய தொழிற்சங்கங்களின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது; அரசாங்கத்திற்கு இன்னும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்துவத்தை, தொழிலாள வர்க்கத்தைக் கண்காணித்து, சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் அமைப்பைக் கொடுக்கும் வகையில்தான் இருந்தது. இந்த உடன்பாடுதான் சார்க்கோசியின் பதவிக் காலத்தில் 2008ம் ஆண்டு முதல் முக்கிய சமூகநலச் செலவுக் குறைப்புக்களை இயற்றுவதற்கு வசதியளித்தது. (See also “End of the 35-hour week in France: Sarkozy handed victory by the unions and ‘left’ parties”)

1940ம் ஆண்டு ஸ்ராலினின் முகவர்கள் ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி ஏகாதிபத்தியச் சிதைவுச் சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைக்கான வரைவைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் அவர் அரச கருவிக்குள் பெருகிய முறையில் தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படுவது குறித்து பகுப்பாய்கிறார். அதை விளக்கும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும் வர்க்க முரண்பாடுகள் தீவிரமாகையில், ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே விரோதப் போக்குகள் தீவிரமாகையில், ஏகாதிபத்திய முதலாளித்துவம் (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) சீர்திருத்தவாத அதிகாரத்துவத்தைப் பொறுத்துக்கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தும்; ஆனால் சீர்திருத்தவாத அதிகாரத்துவம் நேரடியாக ஒரு குட்டியான ஆனால் ஏகாதிபத்திய முயற்சிகளின் தீவிரப் பங்குதாரராக இருந்தால்தான்; அத்தகைய நிலைப்பாடு நாட்டிற்குள் உள்ள மற்றும் உலக அரங்கில் அதன் திட்டங்களுக்கு உட்பட்டு நடந்தால்தான் என்று எழுதினார்.

தொழிற்சங்கங்களின் பங்கு, அரச கருவியுடன் அவைகள் ஒருங்கிணைந்து செயல்படும் பங்கு பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, இன்று ஆழ்ந்த முறையில் பொருத்தமாக உள்ளது; ஏனெனில் இந்த ஒருங்கிணைப்பு இந்த ஆவணம் எழுதப்பட்டதில் இருந்து இன்னும் சக்திவாய்ந்த முறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. முக்கிய பெருநிறுவனங்களில் தொழிற்சங்க அதிகாரத்துவம் ஒரு கணிசமான பங்குதாரராக உள்ளது; முழு நனவுடன்கூட சமூக வெட்டுக்களை நெருக்கடிக்கு ஆளும் வர்க்கம் முகங்கொடுக்கையில் அதற்கு உதவுவதற்காகஅதாவது, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் பாரிய தாக்குதல்களை நடத்தி முதலாளித்துவத்தின் போட்டின்தன்மையை மீட்கும் பொருட்டு.

தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொண்டு, தங்கள் சொந்தப் புரட்சிகர அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டியதின் தேவையைத்தான் இது காட்டுகிறது.