சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Colombo meeting to defend SEP’s democratic rights

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனநாயக உரிமைகளைக் காக்க கொழும்பில் கூட்டம்

By the Socialist Equality Party
6 February 2012

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாப்பதன் பேரில் பெப்பிரவரி 13 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன. சோ.ச.க., நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாகும்.

யாழ்ப்பாணத்தில் ஜனவரி 29 அன்று நடக்கவிருந்த சோ.ச.க.யின் பொதுக் கூட்டமொன்று பாதுகாப்பு அமைச்சினால் தடுக்கப்பட்டது. சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரும் கட்சியின் பிரச்சாரத்தின் பாகமாகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சு, சோ.ச.க. கூட்டம் நடத்தவிருந்த வீரசிங்கம் மண்டபத்தின் நிர்வாகிகளுக்கு, எதிர் கட்சிகளும் மற்றும் பிரிவினைவாதத்துக்கு ஆதரவளிப்பவர்களும் கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டிருந்தது. இதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தில் இரு சோ.ச.க. உறுப்பினர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்து விசாரணை செய்த இராணுவம், பின்னர் அவர்கள் மீது சரீரத் தாக்குதலையும் திட்டமிட்டிருந்தது.

சோ.ச.க. பிரிவினைவாதத்துக்கு ஆதரவளிக்கின்றது என உட்குறிப்பாய் கூறியமை முழுப் பொய்யாகும். சோ.ச.க. மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழர்-விரோத இனவாத யுத்தத்துக்கு எதிராக கொள்கை ரீதியில் போராடி வந்துள்ள அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை எதிர்ப்பதிலும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. சோ.ச.க. அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காக போராடுகின்றது.

இலங்கை அரசாங்கமானது வடக்கில் வளர்ச்சியடைந்துவரும் அதிருப்தியைப் பற்றியும், அதே போல் தெற்கில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் சமூக அமைதியின்மை அபிவிருத்தியடைவதைப் பற்றியும் அச்சமடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தற்போதைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக குவிந்துவரும் பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொள்கின்றார். சோ.ச.க.க்கு எதிரான இராணுவத்தின் நடவடிக்கைகள் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் பாகமாக இருப்பதோடு, தமிழ் மற்றும் சிங்கள தொழிலாள வர்க்கத்தை சோசலிச அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கு சோ.ச.க. முன்னெடுக்கும் போராட்டத்தைப் பற்றியும் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றது.

சோ.ச.க. கூட்டத்தில் பங்குபற்றுமாறும் அதன் அரசியல் உரிமைகளைக் காக்கும் போராட்டத்தை ஆதரிக்குமாறும் அது தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்.

தினமும் நேரமும்: பெப்பிரவரி 13 திங்கள், மாலை 4.00 மணிக்கு

பிரதான உரை: சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ்