சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egyptians protest in lead-up to anniversary of Mubarak’s ouster

முபாரக் அகற்றப்பட்ட ஆண்டு நிறைவிற்கு முன் எகிப்தியர்கள் எதிர்ப்பைக் காட்டுகின்றனர்

By Alex Lantier 
11 February 2012

use this version to print | Send feedback

கெய்ரோ, அலெக்சாந்திரியா இன்னும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராக நேற்று அணிவகுத்துச் சென்றனர். எகிப்திய ஜனாதாபதி ஹொஸ்னி முபாரக் இராஜிநாமா செய்து ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெறும் ஒருநாள் எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கு முன் இது வந்துள்ளது.

 

இராணுவ ஆட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே பெருகி வரும் மோதல்களுக்கு இடையே ஆண்டு நிறைவு வருகிறது. பெப்ருவரி 1ம் திகதி போர்ட் சையத்தில் கால்பந்து விளையாட்டு அரங்கில், அஹ்லி கால்பந்து ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட பேராபத்து நிறைந்த தாக்குதலில் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் பங்கு, கடந்த வாரம் அரசாங்க அமைச்சரகங்களுக்கு வெளியே கடுமையான மோதல்களைத் தூண்டியது. (See, “Mass protests in Egypt against pro-junta football riot)  கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தப்பட்சம் 15 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று கெய்ரோவில் எதிர்ப்பாளர்கள் கெய்ரோவின் அப்பசியா பகுதியில் இருந்த பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு அணிவகுத்து உறுதியான வெள்ளிக்கிழமை என்று இளைஞர் குழுக்களும் இணைக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சிவிலிய நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு இராணுவ ஆட்சிக்கு அழைப்பு விடுத்து அணிவகுத்துச் சென்றனர். SCAF  என்னும் ஆயுதப்படைகளின் தலைமைக்குழு, அரசாங்கம் ஆகியவைகள் கவிழ்க்கப்பட வேண்டும், SCAF தலைவர் பீல்ட் மார்ஷல் மகம்மது ஹுசைன் தந்தவி தூக்கிலிடப்பட வேண்டும் என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு முன் அவர்கள் இராணுவப் பிரிவுகளை எதிர்கொண்டனர்;  இராணுவத்தினர் கூடுதல் டாங்குகள் மற்றும் தரைப்படையினரை அமைச்சரகங்கள், அரசாங்க அலுவலகங்கள் ஆகியவற்றைச் சுற்றி நிறுத்தியிருந்தனர். பாதுகாப்பு மந்திரி அமைச்சரகத்தின் வெளிச்சுவர்களில் சுவரில் எழுதியவற்றை மறைப்பதற்கு படையினர்கள் மீண்டும் வண்ணம் பூசிய இடத்தில், எதிர்ப்பாளர்கள்: புதிய வண்ணத் தீட்டலுக்குப் பாராட்டுக்கள், இராணுவ ஆட்சி வீழ்க என்று எழுதினர்.

இவ்வகையில் சுவரில் எழுதப்பட்டிருப்பது, கடந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள மக்கள் முழு நனவில் ஏற்பட்டுள்ள பெரும் மாறுதலை உயர்த்திக் காட்டுகிறது. ஓராண்டிற்கு முன், கெய்ரோ மற்றும் எகிப்து முழுவதும் எதிர்ப்புக் காட்டிய மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பாளர்கள் மீது கொலைகாரத் தாக்குதல்களை நடத்திய பொலிசுடன் சேராமல் இருந்ததற்காக இராணுவத்தைப் புகழ்ந்து பாராட்டினர். அப்பொழுது ஒரு முக்கிய கோஷமாக இராணுவமும் மக்களும்ஒரே கைதான் என்பது இருந்தது.

எகிப்திலும் சர்வதேச அளவிலும் பல குட்டி முதலாளித்துவ இடது குழுக்கள் வாஷிங்டனின் கருத்துக்களை எதிரொலிப்பவை, இராணுவ ஆட்சியின் கீழ் தொழிலாளர்கள் ஜனநாயக இடத்தை பெறமுடியும் என்ற கருத்தைப் பிரச்சாரம் செய்தனர். தொழிலாள வர்க்க சக்தியின் புதிய ஜனநாயகக் கருவிகளை அமைத்து எகிப்திய முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் பிரிவை அகற்றுவதற்கு விரோதம் காட்டும் இச்சக்திகள் தந்தவியின் கீழ் அரசியல் ஸ்தாபனத்தில் கிடைக்கும் பலன்களை அடைவதற்குத் தங்கள் முயற்சிகளைக் கொண்டன. பாராளுமன்ற தேர்தல்களுக்கு அவைகள் ஆதரவு கொடுத்தன; பெரும்பாலும் வலதுசாரி முஸ்லிம் பிரதர்ஹுட்டின் செயற்பாட்டால் அவைகள் நடைபெற்றன.

வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் SCAF உடைய கையில் அரசியல் அடக்குமுறை ஆகியவற்றைக் கண்டபின், தொழிலாள வர்க்கம் இராணுவத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளது; பெருகிய முறையில் குட்டி முதலாளித்துவ இடது குழுக்களுடன் ஏமாற்றத்தை அடைந்துள்ளது. போர்ட் சையத் கால்பந்து விளையாட்டிற்குப் பின்னர், கடந்த வாரம் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதல்களின்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த கோஷம், இராணுவம், பொலிஸ்ஒரே அருவருப்பான கைதான் என்று இருந்தது.

அரசியல் சூழ்நிலை முபாரக்கிற்கு எதிரான புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களின் ஓராண்டு நிறைவின் ஆதிக்கத்தை கொண்டுள்ள நிலையில், எகிப்து ஒரு புதிய புரட்சிகரப் போராட்ட அலையின் விளிம்பில் நிற்கிறது என்ற பரந்த உணர்வு உள்ளது.

 

இத்தகைய வாய்ப்பு எகிப்திய முதலாளித்துவத்திடையே பெருகிய அச்சம் மற்றும் விரோதப்போக்கைத்தான் ஊக்குவித்துள்ளது. Egypt Independent ல் எழுதிய கலில் அல்-அனனி எதிர்ப்பாளர்களை ஒரு கும்பல் என்று முத்திரையிட்டார்; புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் பாராளுமன்றத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார். முடிவுரையாக, கும்பல் நாட்டின் அமைப்புக்களான, நீதித்துறை, அரசாங்கம், பாராளுமன்றம் ஆகியவற்றிடம் நம்பிக்கையை இழந்து விட்டது.... இத்தகைய அவநம்பிக்கைத்தன்மை நாட்டை முழுத் தோல்வி மற்றும் ஒழுங்கீனம் ஆகியவற்றின் விளிம்பில் தள்ளக்கூடும் என்று எழுதியுள்ளார்.

குட்டி முதலாளித்துவ இடது நேற்றைய எதிர்ப்புக்களை ஒரு சிவிலிய ஆட்சி புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்ற முன்னோக்கில் குறிப்பிட்டது; தற்போதைய சூழலில் இதன் பொருள் ஒரு பிற்போக்குத்தன இஸ்லாமியவாத ஆதிக்கம் நிறைந்த பாராளுமன்றத்திற்கு அளித்தல் என்பதாகும்; எனவேதான் அது ஒப்புமையில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது.

அரசியல் அதிகாரிகளும் கட்சிகளும் இன்றைய வேலைநிறுத்தத்தின்போது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்; இது நிகழ்வின் பாதிப்பைக் குறைக்கும் என்று நம்பினர். முஸ்லிம் பிரதர்ஹுட்டின் சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சி நகைப்பூட்டும் வகையில் கெய்ரோவில் இன்றைய எதிர்ப்பு தூய்மைப்படுத்தும் தினம் என்றும், அப்பொழுது எதிர்ப்பாளர்கள் தெருக்களையும் பொதுச் சதுக்கங்களையும் சுத்தம்செய்யவேண்டும் என்று அறிவித்துள்ளது.

மத அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கண்டித்தனர். அல்-அஜர் பல்கலைக்கழகத்தின் பெரும் ஷேக் அஹ்மத் அல்-தயேப் மற்றும் பெரும் முப்தி அலி கோமா பொதுமக்கள் ஒத்துழையாமை நடவடிக்கைகளில் பங்கு பெறக்கூடாது என்று வலியுறுத்தினர். அல்-தயேப் எகிப்தியர்கள் ஒரு மணி நேரம்கூட பணியைத் தாமதப்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டு, எகிப்திய பொருளாதாரம் ஒரு தற்காலிக சவாலை எதிர்கொள்கிறது என்று கூறினார்.

எகிப்தின் கோப்டிக் கிறிஸ்துவத் திருச்சபையின் போப் மூன்றாம் ஷேனௌடா தன் உரையைக் கேட்பவர்களிடம் விவிலியத்தில் பல பாடல்கள் ஆட்சியாளருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நம்மை வலியுறுத்துகின்றன என்று நினைவுபடுத்தினார் என்று டெய்லி நியூஸ் ஈஜிப்ட் தகவல் கொடுத்துள்ளது.

இவற்றில் ஒலிக்குறிப்புக்கள் சற்றே மாறுபட்டிருந்தாலும், முதலாளித்துவ இடது சக்திகளின் அறிக்கைகள் அடிப்படையில் ஒரே பொருளுரையைத்தான் கொண்டிருக்கின்றன: இராணுவ ஆட்சிக் குழுவிற்கு தொந்தரவு கொடுக்கும் நடவடிக்கை ஏதும் கூடாது என வாதிடுகின்றன. இதுதான் இன்றைய ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு வாதிடுவது எகிப்திய இராணுவக் குழுவை வீழ்த்தும் போராட்டத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டிருக்க வேண்டும் என்ற வடிவமைப்பைக் கொண்டது.

 

Al-Hayah Al-Youm தொலைக்காட்சியில், புரட்சிகர இளைஞர் கூட்டணியின் உறுப்பினரான கலேட் தெல்லிமா தன் அமைப்பு ஒத்துழையாமைக்கு அழைப்புவிடவில்லை என்று வலியுறுத்தினார்; அது மிகவும் தீவிரத்தனமானது என்று தன் அமைப்பு கருதுகிறது. ஒரு நாள் வேலைநிறுத்தம், எதிர்ப்பில் ஒரு வழிவகை, மக்கள் வீடுகளில் இருந்து பணிக்குச் செல்லமாட்டார்கள், மாணவர்கள் வகுப்புக்களுக்குச் செல்லமாட்டார்கள்; ஆனால் ஒத்துழையாமை என்பது தீவிர எதிர்ப்பு வடிவம் ஆகும்; அதில் அனைத்து அரசாங்கக் கருவிகளுடனும் செயற்பாட்டைக் கொள்ள மக்கள் தவிர்த்துவிடுவர்.

RS  என்னும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களின் தலைவர் கமால் கலீல் ஒரு நாள் வேலைநிறுத்தங்களை நடத்தும் உரிமை சர்வதேச உடன்பாடுகள், நெறிகள் ஆகியவற்றால் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளன, மக்களின் ஒத்துழையாமையுடன் ஒப்பிடும்போது, அதுவும் மிகவும் தீவிரத்தனமானது என்றார். ஆயினும்கூட அவர் ஒருநாள் வேலைநிறுத்தம் ஒரு விரைவான ஆயுதம், புரட்சியின் இலக்குகளைச் சாதிக்கும் என்றார்.

இத்தகைய அறிக்கைகளின் முழு வரண்ட தன்மையை விளக்குவது கடினம்; இவைகள் கோடிட்டுக்காட்டும் எதிர்ப்பு வடிவங்கள் பற்களற்ற நிலையில் இருப்பதால் அவை SCAF இராணுவத் தன்னலக்குழு போன்ற சர்வாதிகார ஆட்சிகளாலும் ஏற்கப்படும். இத்தகைய ஆலோசனைகள் ஓராண்டிற்கு முன் பின்பற்றப்பட்டிருந்தால், முபாரக் இன்னும் அதிகாரத்தில்தான் இருப்பார்.

இராணுவ ஆட்சிக் குழுவிற்கு எதிராக புதுப்பிக்கப்படும் போராட்டத்தில் நுழைகையில், தொழிலாள வர்க்கம் நேரடியாக இராணுவம் மற்றும் அதன் இஸ்லாமியவாத கூட்டு அமைப்புக்களுடன் மட்டும் மோதலுக்கு வராது, குட்டி முதலாளித்துவ இடது குழுக்களுடனும் வரும்; பிந்தையவை தொழிலாள வர்க்கத்தின் ஆளும் உயரடுக்கிற்கு எதிரான அரசியல் போராட்டங்கள் அனைத்தையும் செயலற்றதாக்குவதற்குத்தான் முயல்கின்றன.