சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China’s president-in-waiting Xi Jinping visits Washington

சீனாவின் ஜனாதிபதிப் பதவிக்கு வரவிருக்கும் ஜி ஜின்பிங் வாஷிங்டனுக்கு விஜயம்

By Alex Lantier
16 February 2012

use this version to print | Send feedback

சீனாவின் துணை ஜனாதிபதியான ஜி ஜின்பிங் இந்த வாரம் ஜனாதிபதி பாரக் ஒபாமா, துணை ஜனாதிபதி ஜோ பிடென் இன்னும் பிற உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களுக்காக வாஷிங்டனுக்கு வந்துள்ளார். அவர்களோ அவரிடம் பொருளாதார, வணிகப் பிரச்சினைகள் குறித்து அழுத்தம் கொடுத்தனர். அமெரிக்க விவசாயத்துறை, திரைப்படத் தொழில்துறை நலன்களையொட்டி சீனப் பெருநிறுவனங்கள் கொள்ளும் உடன்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கு அவர் அயோவா மற்றும் கலிபோர்னியாவிற்குப் பயணிக்கிறார்.

ஜி இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட கட்சியின் (CCP) 18வது தேசிய காங்கிரஸிற்குப் பின் சீனாவின் ஜனாதிபதியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அம்மாநாடு CCP இன் உயர்மட்டத் தலைமையை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றி அமைக்கும். CCP இன் முக்கிய கருவியான பொலிட்பிரோவின் நிரந்தரக்குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் இரண்டு பேர்தான் ஜியும் அவருடைய ஜனாதிபதிப் போட்டியில் அநேகமாக தோற்கடிக்கப்பட்டுவிட்ட லி கெக்கியாங்கும்தான் தங்கள் பதவிகளைத் தக்க வைத்திருப்பர்.

இந்த வருகை அமெரிக்க அதிகாரிகளுக்கு சீனாவின் வருங்காலத் தலைவரை சந்திக்கும் ஒரு வாய்ப்பு என்று கூறப்பட்டது, செவ்வாயன்று ஜி, பிடென் மற்றும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளைச் சந்திக்க, ஜனாதிபதி ஒபாமாவுடன் பேச்சுக்களுக்காக குறுகிய அவசாத்தில் ஓவல் அலுவலகத்திற்கும் சென்றிருந்தார்.

அமெரிக்க அரச அலுவலக சாம்பெயின் விருந்தின்போது பிடென் அசாதாரமான முறையில் பகிரங்கமாகச் சீனாவைக் கண்டனம் செய்தார். சீன நாணயம் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் குறைகூறினார்இதையொட்டி அமெரிக்க நுகர்வோருக்கு சீன ஏற்றுமதிகள் ஒப்புமையில் மலிவாகவும் போட்டித்தன்மையிலும் இருக்கும்; மேலும் அறிவுசார் சொத்துரிமைகள், மனித உரிமைகள் நெறிகளில் தவறுகள் ஆகியவற்றிலும் சீனர்கள் மீறுவதாகக் குற்றம் சாட்டினார்.

சிரியா குறித்து பெய்ஜிங்கின் நிலைப்பாடு பற்றியும் பிடென் தனியே குறைகூறினார். பெப்ருவரி 4ம் திகதி சீனா ரஷ்யாவுடன் சேர்ந்துகொண்டு ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றை தடுப்பதிகாரத்தின் மூலம் நிறுத்தியது; அத்தீர்மானம் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கத் தங்களை அனுமதிக்கும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நம்பியிருந்தன. சீனாவின் வாக்களிப்பு குறித்துத் தான் பெரிதும் உடன்படவில்லை என்றும் சிரியாவில் நடக்கும் ஏற்கமுடியாத வன்முறைக்கு எதிரான தீர்மானத்தை சீனா தடுப்பதிகாரத்தினால் நிறுத்திவிட்டது என்றும் கூறினார்.

பெய்ஜிங்கின் கோரிக்கைகளான பரஸ்பர மரியாதை பற்றிக் கூறிய வகையில் ஜி இதற்கு விடையிறுத்து, அமெரிக்கா, சீனாவை அதன் அமெரிக்காவிலுள்ள ஏற்றுமதிச் சந்தைகளில் இருந்து வெட்டுவதற்காக பாதுகாப்புவாத முறையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரினார்.

ஜியின் வருகை உயரும் சீன-அமெரிக்க இராணுவ அழுத்தங்களாலும் குறிப்பாயிற்று; கடந்த மாதம் பென்டகன் அதன் மூலோபாயப் பரிசீலனையில் அமெரிக்க இராணுவத்தின் திட்டத்தில் சீனாதான் முக்கிய இலக்கு என்று அடையாளம் கண்டிருந்தது. அவர் சிவிலியன்தான் என்றாலும்,  அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா, மற்றும் அமெரிக்கக் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்சே ஆகியோருடன் பேச்சுக்களுக்காக ஜி பென்டகனுக்குச் சென்றிருந்தார். பானெட்டா சீனாவுடன் ஆரோக்கியமான, உறுதியான, நம்பிக்கை நிறைந்த இராணுவத்திற்கு இராணுவம் என்னும் உறவு இருக்கும் எனத்தான் நம்புவதாகக் கூறினார்.

சீனாவின் நாணயக் கொள்கை மற்றும் மனித உரிமைகள் சான்றுகளை ஒபாமாவும் தாக்கினார்; சீனாவின் மனித உரிமைகள் குறித்த சான்றுகளில் முன்னேற்றத்திற்கு இடம் உள்ளது என்று ஜி விடையிறுத்தார்.

வெள்ளை மாளிகையைச் சுற்றி எதிர்ப்பாளர்களின் சிறு குழுக்கள் தோன்றின; இவற்றுள் திபெத்தியப் பிரிவினைக் குழுக்கள், யுகுர் இனம் என்னும் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் வசிப்பவர்கள், புலுன் கோங் மத இயக்கத்தினர், தைவான் சார்புடைய சுதந்திரத்திற்கான எதிர்ப்பாளர்கள் ஆகியோர் அடங்கியிருந்தனர். ஜி ஒரு பொய்கூறுபவர் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

நேற்று அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் வணிகம் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளைக் குறித்து ஜி விவாதித்தார். மேலும் அமெரிக்கப் பெருநிறுவன நிர்வாகிகளின் 600 பேர் கொண்ட கூட்டத்திலும் உரையாற்றினார். அமெரிக்க-சீனப் பொருளாதாரப் பிணைப்புக்கள் நிறுத்த முடியாத ஆறு போன்றது என்று அழைத்த அவர், தைவானிலோ, திபெத்திலோ சீனாவின் அடிப்படை நலன்களுக்கு எதிராக செயல்படவேண்டாம் என்று அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டார். நேற்று இரவு அயோவாவிலுள்ள மஸ்கடைன் நகரத்திற்கு வாஷிங்டனிலிருந்து ஜி புறப்பட்டுச் சென்றார்அந்நகருக்கு அவர் 1985ல் அமெரிக்க விவசாய நடைமுறைகளைப் பற்றிய ஆய்விற்காக விஜயம் செய்துள்ளார்.

ஜி யின் வருகையின் மிக முக்கிய கூறுபாடு சீனாவை தூண்டிவிடும் வகையிலும், திமிர்த்தனமாகவும் நடத்தும் அமெரிக்கச் செயல்கள் ஆகும். சீனா 1டிரில்லியன் டாலர்கள் மதிப்பிற்கும் மேலாக அமெரிக்கக் கடன் பத்திரங்களைக் கொண்டுள்ள நாடாகும்; இந்நாட்டுடன் அமெரிக்கா ஆண்டு ஒன்றிற்கு 295 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய வணிகத்தை நடத்துகிறது. இந்த வணிகத்தில் அமெரிக்க வாழ்க்கைகளுக்கு முக்கியமான மலிவான நுகர்பொருட்கள் அமெரிக்க இறக்குமதிகளில் அடங்கியுள்ளன.

சீனாவின் ஸ்ராலினிச சர்வாதிகாரத்தின் மனித உரிமைகள் சான்றுகள் குறித்த அமெரிக்காவின் குறைகூறல்கள், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளோடு ஒப்பிடுகையில் முற்றிலும் வெற்றுத்தனம் ஆகும். இந்த ஆண்டு தேசியப் பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின்படி, அமெரிக்க குடிமக்களை காலவரையின்றி இராணுவக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தில் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்; ஏற்கனவே இவர் விசாரணையின்றி ஒருவர் கொல்லப்படலாம் என்ற உரிமையை உறுதிபடுத்தியுள்ளார்; அன்வர் அல்-அவ்லகி வழக்கே இதற்குச் சான்று. அதன் மக்கட்தொகை நான்கு மடங்கு அதிகம் இருந்தாலும், அமெரிக்காவை விடக் குறைந்த மக்களைத்தான் அது சிறையில் அடைக்கிறது; அமெரிக்கா தன் மக்களில் 1 சதவிகிதத்திற்கு சற்றே அதிகமானவர்களை சிறைகளில் வைத்துள்ளது.

ஏற்கனவே ஒரு மில்லியின் ஈராக்கியர்கள், ஆப்கானியர்கள் இறப்பிற்குப் பொறுப்புக் கொண்டுள்ளநிலையில், அமெரிக்க அதிகாரிகள் இப்பொழுது சிரியாவிற்கு எதிரான ஒரு முறையற்ற புதிய போருக்கு இசைவு கொடுக்காததற்காக பெய்ஜிங்கிற்கு உபதேசம் செய்துள்ளது.

அமெரிக்க அரசியல்வாதிகள் கொடுக்கும் பாசாங்குத்தன உரைகள் இருக்கும் கூட்டங்களில் இருந்து சீன அதிகாரிகள் சீற்றத்துடன் வெளியேறவில்லை என்றால், அதற்குக் காரணம் வாஷிங்டனுடன் உறவுகள் வெளிப்படையாக முறிந்தால் என்ன ஆகுமோ என்ற பெரும் பீதியைக் கொண்டுள்ளனர்; அதன் பாதிப்பு சீனாவின் ஏற்றுமதித் தொழில்துறைகளில் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். மேலும் அவர்களுடைய தனிப் பரிவுணர்வுகள் பெருகிய முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்பால் பெருகிய முறையில் சாய்ந்துள்ளன.

ஐந்தாம் தலைமுறை” CCP தலைவர்கள் என அழைக்கப்படுபவர்கள் இந்த ஆண்டு கட்சி மாநாட்டில் அதிகாரத்திற்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய தலைமுறைகளைவிடக் கூடுதலான அளவிற்கு வணிகர்களாகவும் வக்கீல்களாகவும் பயிற்சி பெற்றுள்ள நிலையில்அத்தலைமுறையினரோ பல நேரமும் பொறியியலாளர்களாவும் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும் இருந்தனர்—“ஐந்தாம் தலைமுறையினர் சீனாவை உலகச் சந்தையில் குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பிற்கு ஒரு ஆதாரம் என்று ஒருங்கிணைத்த CCP யின் முடிவு கட்டவிழ்த்துள்ள ஆழ்ந்த விரோதப் போக்கினால் பிளவுற்றுள்ளனர்.

ஐந்தாம் தலைமுறை பல பிரிவுகளில் பிரிந்துள்ளது; இதில் குட்டி இளவரசர்கள் எனப்படும் முன்னாள் CCP அதிகாரிகளுடைய பிள்ளைகள் உள்ளனர்; இவர்கள் குடும்பத் தொடர்புகளைப் பயன்படுத்தி உயர்மட்ட அரசாங்க அல்லது வணிக வேலைகளைப் பெற்றுச் செல்வக்கொழிப்பு உடையவர்களாகிவிட்டனர்; பெயரளவிற்கு வெகுஜனத்திருப்தி செய்யும் லீக் பிரிவு—tuanpai” என்னும் முன்னாள் கம்யூனிஸ்ட் இளைஞர் குழு உறுப்பினர்களும் உள்ளனர். பிந்தைய பிரிவு தற்போதைய ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் அவருடைய அபிமானம் நிறைந்த லி கெக்கியாங் ஆகியோருடன் பிணைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் 2007ம் ஆண்டு CCPயின் 17வது தேசியக் கட்சிக் காங்கிரஸ் லிக்கும் மேலாக ஜியைத்தான் வரக்கூடிய ஜனாதிபதி என்று உறுதியாக்கியது.

குட்டி இளவரசர்கள் பிரிவு, மக்கள் எதிர்ப்பிற்கு ஒரு இலக்காகிவிட்டது; அதுவும் எழுச்சி பெற்றுள்ள நிலம் குறித்த எதிர்ப்புக்கள், சமீபத்திய காலத்தில் தொழில்துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் ஆகியவை வந்துள்ள நிலையில், ஜி மற்றும் சோங்க்விங்கின் கட்சிச் செயலர் போ ஜிலை உட்பட, குட்டி இளவரசர்கள் பிரிவு தடையற்ற சந்தைக் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுத்த பல அதிகாரிகளின் குடும்பங்களைக் கொண்டுள்ளது; இது ஸ்ராலினிஸ்ட்டுக்கள் 1980களின் சீனாவில் மீண்டும் முதலாளித்துவத்தை நிறுவுவதற்கு முன்பே இருந்தது. சீனாவின் ஏற்றுமதி மையங்களிலும் இப்பிரிவு மிகச் சக்திவாய்ந்தது. அவ்விடங்களில் CCP அதிகாரிகள் வெளிநாட்டு மூலதனத்துடன் இன்னும் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். சீனா பற்றிய ப்ரூக்கிங்க்ஸ் நிறுவன விமர்சகரான செங்லி, வோல் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் குட்டி இளவரசர்கள் எப்பொழுதும் மக்களிடையே செல்வாக்குப் பெற்றதில்லை, ஆனால் அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகிவிட்டனர்; சிவப்புப் பிரபுக்களின் நெறி பற்றிச் சில தீவிர கவலைகள்உள்ளன. சீன மக்கள் அரசியல் அதிகாரம், பொருளாதாரச் செல்வம் இரண்டையும் குட்டி இளவரசர்கள் கட்டுப்பாடு கொண்டிருப்பது குறித்து எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளனர்

ஜியே தடையற்ற சந்தைச் சார்புச் சான்றுகளைத்தான் அப்பழுக்கின்றிக் கொண்டுள்ளார். அவருடைய தந்தை ஜி ஜோங்குன் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்; ஜியே நாட்டுப்புறத்திற்கு அனுப்பப்பட்டதற்குக் காரணம் மாவோ ஜி ஜோகுனின் வெளிப்படையான சந்தைக் கொள்கைகள் குறித்து 1960களின் துவக்கத்திலேயே நம்பவில்லை. 1970 களில் உயர்பதவிக்கு வந்தபின், டெங் ஜியோபிங் மாவோவின் கீழ் வளர்க்கப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான உறவுகளை ஆழப்படுத்தினார். ஜி ஜோங்குன் சீனாவின் முதல் பெரிய ஏற்றுமதி வழிவகை மையத்தை ஹாங்காங்கிற்கு அருகே உள்ள ஷேன்ஜெனில் நிறுவினார்.

கடலோர மாநிலங்களில் ஜியே கூட முக்கிய அரசியல் போக்கைக் கொண்டிருந்து, தனியார்துறை ஏற்றுமதி வணிகத்தின் வெடிப்புத்தன்மையில் அதிக இலாபம் அடைந்தார்; அத்துறை அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளுக்காக உற்பத்தி செய்தது. 2000ம் ஆண்டில் அவர் ப்யூஜிய மாநிலத்தின் ஆளுனர் ஆனார். அந்த ஆண்டுதான் அவர் பொலிட்பீரோவின் நிரந்தரக் குழு உறுப்பனராகவும் ஆனார். பின்னர் அவர் பிராந்தியத் தலைமை பதவிகளை ஜெஜியாங் மாநிலத்தில் 2002 லும் ஷாங்காயில் 2007லும் எடுத்துக் கொண்டார்.