சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The CGT comes out for bourgeois “left” in French presidential elections

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் முதலாளித்துவ இடதிற்கு CGT ஆதரவு

By Francis Dubois
20 February 2012
se this version to print | Send feedback

ஜனவரி 31ம் திகதி பாரிஸில் நடைபெற்ற பொதுத் தொழிலாளர் கூட்டமைப்புத் தொழிற்சங்கத்தின் (CGT) ஓய்வூதியங்கள் பிச்சினையைப் பற்றிய தேசிய மாநாடு ஒரு தேர்தல் கூட்டத்தின் அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்தது. இதை பல வாரங்களாகவே தொழிற்சங்கம் தயாரித்திருக்க வேண்டும், மற்றும் கணிசமான ஆதாரங்களையும் முதலீடு செய்திருக்க வேண்டும். முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ இடது ஆகியவற்றின் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் குறையாமல் கூட்டத்தில் பங்குபெற்றனர்.

2012 ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் CGT அசாதாரணமான முறையில் தலையிட்ட நிகழ்வாகும் இது; ஏனெனில் தொழிற்சங்கம் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் மிக மிக நெருக்கமான உறவுகளைத்தான் கொண்டிருந்தது.

CGT உத்தியோகபூர்வமாக சோசலிஸ்ட் கட்சி (PS), இடது கட்சியின் (PSல் இருந்து பிரிந்துவந்த கட்சி) தலைவரும் இடது முன்னணியின் (இடது கட்சி, ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும்  புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) பிளவுற்ற குழு ஆகியவற்றின் தேர்தல் கூட்டணி)  கூட்டு வேட்பாளருமான  Jean-Luc Melenchon ஆகியோர்களை அழைத்திருந்தது. இவர்களைத் தவிர, NPA உடைய Philippe Poutou , தொழிலாளர் போராட்டத்தினுடைய (LO) Nathalie Arthaud மற்றும் பசுமைக் கட்சியும் ஐரோப்பிய சுற்றுச்சூழலல் கட்சியின் (EELV) வேட்பாளரான Eva Joly ஆகியோர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

PS இன் வேட்பாளரான பிரான்சுவா ஹோலண்ட் பாராளுமன்றத்திலுள்ள PS குழுப் பிரதிநிதிகளின் தலைவரான Jean-Marc Ayrault, மற்றும் மற்றொரு முக்கிய PS அதிகாரியான Harlem Desir ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்.

இது, CGT இன் ஒரு அசாதாரண, நேரடியான, வெளிப்படையாக அரசியல் குறுக்கீடாகும். தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வரவிருக்கும் பெரும்புயல் போன்ற தாக்குதல்களைச் சுமத்துவதற்கு பிரெஞ்சு முதலாளித்துவத்தின் சில பிரிவுகள் ஓர் இடது அரசாங்கத்தை விரும்பும் முகாமில், தொழிற்சங்கம் சேர்ந்துள்ளது என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி இது காட்டுகிறது.

CGT  யின் பொதுச் செயலாளர் பேர்னார்ட் தீபோ உத்தியோகபூர்வமாக CGT கட்சி மாறுகிறது என்பதைக் காட்டினார்; சார்க்கோசி பக்கத்தில் இருந்து ஹோலண்ட பக்கத்திற்கு. பல ஆயிரக்கணக்கான பங்குபெற்றவர்கள் முன் ஒரு போராளித்தன ஒலிக்குறிப்பில் வெளிவந்த ஒரு ஜனரஞ்சக உரையில் இது கூறப்பட்டது.

சார்க்கோசி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக தீபோ இடிபோல் முழங்கினார். ஆனால் கடந்த சட்டமன்றக்காலம் வரை அவர் அதற்கு ஆதரவு கொடுத்து, சார்க்கோசி கொண்டுவந்த தொழிலாளர்களின்  சமூக உரிமைகள் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் பேச்சுவார்த்தைகள் மூலம் முடித்துள்ளார். இப்பொழுது சமூக VAT (விற்பனைவரி) என அழைக்கப்படுவதையும், போட்டித்தன்மை கொடுக்கும் உடன்பாடுகளையும் தீபோ குறிப்பாகக் குறைகூறுகிறார். சமூக VAT என்பது ஒரு நம்பிக்கையளிக்கும் தந்திரம் என்று கண்டித்ததுடன், ஆலை உடன்பாடுகளை போட்டித்தன்மையிலான வேலைகள் பற்றிய உடன்பாடுகள், தொழிலாளர்துறைச் சட்டங்களை நாசப்படுத்துவது என்றும் கூறினார். அரசாங்கத்தைப் பற்றிக் குறிப்படுகையில் அவர் இகழ்வான இருப்புநிலைக் குறிப்புத்தான் உள்ளது என்றும் அதன் சான்று சமூக விரோதத் தன்மையைக் காட்டுகிறது என்றும் கூறினார்.

ஆயினும்கூட, சமூக” VAT என்பது ஜனவரி 18ம் திகதி அரசாங்கத்தின் சமூக உச்சிமாநாட்டில் CGT யால் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் ஓர் ஒருங்கிணைந்த பகுதிதான்; சார்க்கோசி நிறுவ உள்ள தொழில்துறை வங்கி நிர்வாகத்தில் CGTயும் பங்காளியாக இருக்க உள்ளது.

உற்பத்தித்திறன், போட்டித்தன்மை என்று நிறுவனங்களுடையவற்றை அதிகரிப்பதில் இந்த வங்கி பங்குகொள்ளும் என்பதோடு, வேலைகள் தகர்ப்பு, ஊதிய வெட்டுக்கள் ஆகியவற்றிலும் பங்கு பெறும். இப்பங்கு FMEA எனப்படும் கார் உதிரிப்பாக உற்பத்தியாளர்களுக்கான  நிதி நவீனப்படுத்துதல், FSI  எனப்படும் மூலோபாய முதலீட்டு நிதி ஆகியவை கொண்டிருக்கும் பங்கைப் போன்றதே ஆகும்.  இவற்றினால்தான் முதலாளிகள் 2009ம் ஆண்டில் கார்த் தயாரிப்புத்துறையில் நிதியளிக்கப்பட்ட இடம் மாறுதல்கள் மற்றும் பணிநீக்கங்களைச் செய்ய முடிந்தது. CGT இந்நிதிகள் நிறுவப்படுவதற்கு ஆதரவைக் கொடுத்தது.

தான் இருக்கும் ஆலைகளில் எல்லாம் சார்க்கோசி அரசாங்கத்தின் கொள்கைகளைத் தாக்கித் துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்கப் போவதாகவும் CGT அறிவித்துள்ளது.

இக்கூட்டத்தினால் CGT உத்தியோகபூர்வமாக PS  ன் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஒப்புதல் கொடுத்தள்ளது; மேலும் இடது முன்னணிக்கு ஜனாதிபதித் தேர்தல்களை தொடர்ந்து உடனே வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இசைவைக் கொடுத்துள்ளது. இந்த சார்க்கோசி-எதிர்ப்பு அரசியல் அரங்கு ஒரு வருங்கால முதலாளித்துவ இடது கூட்டணி அரசாங்கம் PS தலைமையில் வரக்கூடும் என்பதைத்தான் வலுவாக ஒத்திருக்கிறது. வந்திருந்த கட்சிகள் அனைத்தும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமாகப் பிணைந்தவை; PCF, பப்லோவாதிகளான NPA மற்றும் LO ஆகியவற்றில் அவற்றுடன் கணிசமான முறையில் பொதிந்தும் உள்ளன.

கட்சிகளில் இருந்து வந்திருந்த வேட்பாளர்கள் அனைவரும் தொழிற்சங்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர் (இவற்றை அவர்கள் சமூக இயக்கம் என்றே குறிப்பிட்டனர்) அவைகள் அனைத்தும் தொழிற்சங்கங்களின் பங்கு ஹோலண்டிற்கு உதவுவதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டனர்; அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், சார்க்கோசியுடன் கொண்டிருந்த தொழிலாள வர்க்க விரோதச் சீர்திருத்தங்கள் தொடரப்படும்.

PS வேட்பாளரிடம் இருந்து வந்த செய்தி ஒன்றில் Ayrault “சமூக ஜனநாயகம் திரட்டப்படாமல் நாட்டைச் சீர்திருத்த எதுவும் செய்யப்பட முடியாது, ஒரு ஐந்து ஆண்டுக்கால ஜனாதிபதிக்குக் கொடுக்கப்படும் பதவிக்காலம் முடியும் வரை முறையாக என இருக்காது, ஆனால் அரசாங்க வழிவகையில் மையத்தானத்தில்  இருக்கும்.

Eva Joly “நம் நாட்டில் சமூக உரையாடல் இன்னும் பெரிய இடத்தில் இருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏனெனில் இப்பொழுது போதுமான அளவு அளிக்கப்படுவதில்லை... அதையொட்டி CGT ஒரு மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது என்றார் அவர்.

Jean-Luc Melenchon , இடது முன்னணி... அதன் உறுப்பினர்கள் தொழிற்சங்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அழைப்புவிடும் என்று அறிவித்தார். பேர்னார்ட் தீபோவின் பேச்சு ஒரு சமூக நிகழ்வு, எனவே அது ஓர் அரசியல் நிகழ்வாகி வருகிறது என்றும் கூறினார்.

இக்கட்சிகள் தொழிற்சங்கத்தை, தொழிலாள வர்க்க அதிருப்தி ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன் வெடித்தெழுவதை தடுப்பதற்கு முக்கியமெனக் காண்கின்றன. அதேபோல் ஜூன் மாதச் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன் வருவதைத் தடுத்தலும் முக்கியம் எனக் காண்கின்றன.

இதே அக்கறையில், தீபோ பெப்ருவரி 29 அன்று தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள அழைப்பான ஐரோப்பிய அணிதிரளும் தினம் நடத்தப்படுவதைப் பற்றியும் அறிவித்தார். இதற்கு CGT உறுதியளித்துள்ளது என்றும் கூறினார். தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கை தினத்தை” “பொதுவான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புச் செயல் என்று பார்க்கின்றன; இவை நிக்கோலா சார்க்கோசி மற்றும் அங்கேலா மேர்க்கெல் ஆகியோரின் முயற்சிகளால் சுமத்தப்படுகின்றன என்றும் திபோ கூறினார்.

இந்த நடவடிக்கை தினத்திற்கு NPA  இன் ஜனாதிபதி வேட்பாளர் பிலிப் பௌடௌ தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்றார். தேர்தலுக்கு முன் நாம் அரசியல் போராட்டம் ஒன்றை அமைத்து, சார்க்கோசியின் கடைசித் தாக்குதல்களையும் தேர்தல் தினத்திற்கு முன் தடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

உண்மையில் பிரெஞ்சு PS இன்  திட்டம் அதன் கிரேக்கச் சகோதரக் கட்சியான 2009ல் சமூக ஜனநாயகக் கட்சியின் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ உடையதைப் போல்தான் உள்ளது: தொடர்ச்சியாக வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கு இயற்றப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் ஹோலண்டின் திட்டம்தான் இது. கூட்டத்தில் பங்கு பெற்ற எந்த அரசியல் கட்சிகளும் இத்திட்டத்திற்கு தீவிர எதிர்ப்பு எதையும் கொடுக்கவில்லை.

2009 அக்டோபரில், கிரேக்கத்தில் Costas Karamanlis உடைய கன்சர்வேடிவ் அரசாங்கம் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக சமூக ஜனநாயக PASOK  அரசாங்கம் வந்ததில் தொழிற்சங்கங்கள், இடது சிரிசா (ஸ்ராலினிச, சமூக ஜனநாயக, பப்லோவாத, மாவோயிஸ்ட்டுக்களின் கூட்டு), KKE எனப்படும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். பாப்பாண்ட்ரூ பதவிக்கு வந்த உடன் அவர் அலையென தொடர்ந்த தாக்குதல்களை கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முற்பட்டார். இச்செயலின் விளைவுஊதியங்கள் குறைக்கப்படல், வாழ்க்கைத் தரங்கள் 30 முதல் 40 சதவிகிதம் வரை கிரேக்கத்தில் பாதிக்கப்படுவது என்பதுஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகிறது.

பிரான்ஸின் PS உம் அதற்கு நம்பகத் தன்மை கொடுப்பதற்கு அதற்கு இடதில் உள்ள பல கட்சிகளை நம்பியுள்ளது. அதுதான் இக்கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தின் பார்வையில் ஒருவிதக் குறைந்த தீமை என்று காட்டப்படுகிறது. இப்பங்கைத்தான் முன்னாள் இடதின் அமைப்புக்களான, NPA யில் இருந்து குறிப்பாகத் தொழிலாளர் போராட்டம் வரை (Lutte Ouvriere - LO) செய்கின்றன. இவைகள் ஏற்கனவே இத்தகைய பங்கை 1970களில் PS, PCF ஆகியவற்றின் பொது வேலைத்திட்ட அரசாங்கம் பற்றி போலித் தோற்றங்களைப் பரப்புதலைச் செய்துள்ளன. இக்கட்சிகள் இரண்டும் பதவிக்கு வந்த உடன் சீர்திருத்தத் திட்டம் மூலம் அதை ஒதுக்கிவிட்டன.

PS  ன் தலைவர் François Mitterrand 1981ல் பதவிக்குவந்து ஓராண்டு காலத்திற்கும் மேலாக சிக்கனத்திற்கு திரும்புவதற்கு முன் காத்திருந்தார். ஹோலண்ட் அத்தனை நாட்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைச் செயல்படுத்தக் காத்திருக்க மாட்டார். தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே சமூக விரோதங்கள் முறியும் நிலையில் இருப்பதை ஒட்டி, இந்த அமைப்புக்கள் இன்னும் கூடுதலான, முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன.

பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் ஒரு தொழிலாள வர்க்க சமூக தளத்தைக் கொண்டிருக்கவில்லை; அவைகள் பாதுகாக்கும் நலன்கள் அரசாங்கத்துடன் இணைந்து விட்ட குட்டி முதலாளித்துவத்தின் ஒரு அடுக்கினதாகும். CGT கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்ட கட்சிகளின் சமூகத் தட்டுக்கள் தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை அல்ல, ஏகாதிபத்தியத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தரும் குட்டி முதலாளித்துவத்தின் ஒரு சலுகை பெற்ற பிரிவினரைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.