சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

US Congress to debate motion on “self-determination” for Pakistani Balochistan

பாக்கிஸ்தானிய பலூசிஸ்தானின் “சுய நிர்ணய உரிமை பற்றி அமெரிக்க காங்கிரஸ் விவாதிக்க உள்ளது

By Ali Ismail
24 February 2012

use this version to print | Send feedback

பாக்கிஸ்தானின் மிக வறிய மாநிலமும், அதிகரித்தளவில் உயிரிழப்புடனான தேசியவாத-பிரிவினைவாத எழுச்சியும் உள்ள பலூசிஸ்தானுக்கு சுய நிர்ணய உரிமை கொடுப்பதற்கு ஆதரவான தீர்மானம் ஒன்று அமெரிக்கப் பிரதிநிதிகள் மற்றத்தில் விவாதிக்க முன்வைக்கப்பட்டுள்ள திட்டம் பற்றி பாக்கிஸ்தானின் அரசியல் ஆளும்தட்டு சீற்றத்துடன் தனது பிரதிபலிப்பை காட்டியது. எவ்வித தாக்கத்தையும் கொண்டிராத இத்தீர்மானம் மூன்று குடியரசுக் கட்சியினரான டானா ரோராபாஹெர், லூயி கோமெட், ஸ்லீவ் கிங் ஆகியோரால் ஆதரவழிக்கப்பட்டு, கடந்தவாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.            

கடந்த சனிக்கிழமையன்று, பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி யூசப் ராஜா கிலானி இத்தீர்மானத்தைக் கண்டிக்கும் வகையில் அது பாக்கிஸ்தானிய இறைமையை மீறுதல் என்று விவரித்தார். இத்தீர்மானம் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி காரினாலும் கண்டிக்கப்பட்டுள்ளது: இத்தகைய மடத்தனமான உலகத்தை பாதுகாத்தல் என்னும் செயல்கள் ஏற்கனவே பாக்கிஸ்தானுடன் நலிந்துள்ள அமெரிக்க உறவுகளை இன்னமும் தீங்காக்கும். இது இரு நட்பு நாடுகளையும் இன்னமும் அந்நியப்படுத்தும் என்று,” செவ்வாயன்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய கூக்குரல்களுக்கு விடையிறுக்கும் வகையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அமெரிக்கா பாக்கிஸ்தானின் இறைமையை மதிக்கிறது என்றும் பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் என்பதை ஆதரிக்கவில்லை என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்தீர்மானத்தில இருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொள்ளும் வகையில் ஒபாமா நிர்வாகம் விரைந்து செயல்படுகிறது. ஆனால் பாக்கிஸ்தான் மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பத்தை மீறி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பாக்கிஸ்தான் முழு, வெளிப்படையான ஆதரவை மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற அக்கறையை அது கொண்டுள்ளது. ஆனால் பாக்கிஸ்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோளஅரசியல் நிகழ்ச்சிநிரலுடன் இணைந்து செயல்படவில்லை என்றால், மற்றொரு அரசியல் உந்துதல் பெற்ற மனித உரிமைகள் பற்றிய கூக்குரல் தொடர்பான இலக்கிற்கு உள்ளாகலாம் என்ற நிலை அதற்கு ஏற்படும் என்னும் எச்சரிக்கையைத்தான் இத்தீர்மானம் அமெரிக்க அரசியல், பாதுகாப்பு துறையினர் இஸ்லாமாபாத்திற்குக் கொடுக்கின்றனர் என்றே தெளிவாகப் பொருள்படும். 

பலூசிஸ்தான் அதிக மக்கட்தொகை இல்லாத மாநிலம், ஆனால் ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மூலோபாய ஸ்தானத்தில் உள்ளது. இது பாக்கிஸ்தானின் மிக வறிய, குறைந்த வளர்ச்சியுடைய மாநிலம் ஆகும். பாக்கிஸ்தானின் இயற்கை ஆதார வழங்களை அதிகமாக கொண்டிருக்கையில், பெரும்பாலான பலூசித் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீர், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவை இல்லாதுள்ளனர். மாநிலத்திலுள்ள இழிந்த சமூக நிலைமைகள் நீண்டகாலமாக பலூசித் தொழிலாளர்களுடைய எதிர்ப்புணர்வைத் தூண்டியுள்ளன, பலூச்சி உயரடுக்கினரிடமும் தேசியவாத உணர்வைப் பெருக்கியுள்ளன.

மன்றத்தின் வெளியுறவுகள் மேற்பார்வை, விசாரணைகள் துணைக்குழுவின் தலைவரும் காங்கிரஸ் உறுப்பினருமான ரோராபாஹர்,  பாக்கிஸ்தான் விரோதத் தொடர்புடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் ஆதரவு கொடுக்கும் நீண்ட வரலாற்றைப் பிரதிநிதிகள் மன்றத்தில் கொண்டுள்ளார். அவர்கள் எப்பொழுதும் அமெரிக்காவிற்கு எதிராக இரட்டை முகம் கொண்ட விரோதிகளாக இருந்துள்ளனர் என்று செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸிற்குக் கொடுத்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

பலூசிஸ்தான் பற்றி ஒரு காங்கிரஸ் விளக்கம் கேட்பதற்கான கூட்டம் நடந்த ஒரு வாரத்திற்குள் ரோராபாஹர் இத்தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்; இதில் பாக்கிஸ்தான் நடத்தியுள்ள மனித உரிமைகள் மீறல் பற்றிய வல்லுனர் சாட்சியமும், அமெரிக்கா பாக்கிஸ்தானுடன் உறவுகளை முறித்துக் கொண்டு சுயாதீன பலூசிஸ்தான் தோற்றுவிப்பதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவரான ரால்ப் பீட்டர்ஸ் கொடுத்த அழைப்பும் அடங்கியுள்ளது.

காங்கிரசின் இத்தீர்மானம் ஏகாதிபத்திய யதார்த்த அரசியலின் ஒரு இழிந்த எடுத்துக்காட்டாகும். பலூச்சி மக்களுக்கு ஆதரவு என்று போலித்தனமாகக் காட்டும் வகையில், அவர்களுக்கு சுய நிர்ணய உரிமையும், தங்கள் இறைமை பெற்ற நாட்டிற்கான உரிமை உண்டு, மேலும் தங்கள் அந்தஸ்த்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்என்று அது கூறுகிறது. இறைமை பெற்ற பலூச் அரசாங்கத்திற்கு வாதிடுகையில், ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்கப் போர்களுக்கு ஆதரவு காட்டியவர்களான இத்தீர்மானத்தை முன்வைப்பவர்கள் பலூசி மக்கள் பாக்கிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் கரங்களில் வன்முறை, நீதிக்குப் புறம்பான கொலைகளை எதிர்கொள்கின்றனர்என்று குறிப்பிட்டுள்ளனர். அரசியல் மற்றும் இனவழியில் அவர்கள் அனுபவிக்கும் பாகுபாடுகள் சோகம் ததும்பியவை, அதுவும் இஸ்லாமாபாத்தில் அவர்களை அடக்குபவர்களுக்கு அமெரிக்க நிதி கொடுத்து, ஆயுதம் வழங்குகையில், இன்னும் கூடுதலாகி உள்ளன. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானிய முதலாளித்துவமும் அதற்கான அமெரிக்க ஆதரவு கொண்ட இராணுவமும் பலூசிஸ்தானில் அடக்குமுறை நடத்துவது பற்றி நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளன. 1973-1977க்கு இடையே நான்காண்டுகாலம் நடந்த எழுச்சியின்போது ஆயிரக்கணக்கான பலூச்சியர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்திய எழுச்சி 2004ல் இருந்து அம்மாநிலத்தில் அதிகரித்துள்ளது. பாக்கிஸ்தானின் இராணுவ, உளவுத்துறை அமைப்புக்கள் இதை மிருகத்தன அடக்குமுறையில் எதிர்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் வடமேற்குப் பழங்குடிப் பகுதிகளில் தலிபான் தொடர்புடைய போராளிகளை இலக்குக் கொள்ளும் வழிவகைகளைக் கையாண்டனர், அதாவது கடத்தல்கள், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகளை நடத்துதல் என.

பலூச் மக்களின் குறைகள் உண்மையாகவும் ஆழ்ந்ததாகவும் இருக்கையில், பல தேசியவாதக்குழுக்கள் மக்களின் நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக அவை சலுகை பெற்ற குழுக்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவற்றுள் அரைகுறை நிலமானிய சர்தார்கள் உள்ளனர்; அவர்களுடைய முக்கிய புகார் பாக்கிஸ்தானிய அரசாங்கம் அவர்களுக்கு இயற்கை எரிவாயு மற்றும் தாதுப்பொருள் வருவாயில் நியாயமான பங்கைக் கொடுக்கவில்லை என்பதாகும். பலூச் குடியரசுக் கட்சி BRP, பலூச் தேசியக் கட்சி BNP ஆகியவை பலமுறையும் இனவழி உந்துதல் கொடுத்த பஞ்சாபி, பஷ்டூன் தொழிலாளர்களை இலக்குகொண்ட கொலைகளைச் செய்துள்ளதுடன், அதிகரித்தளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் ஆதரவிற்கு நின்றுள்ளன.

காங்கிரஸ் பிரதிநிதி ரோராபாஹெரின் தீர்மானம் பலூச் தேசியவாதிகளின் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது. இது ஒரு மிகப் பெரிய சாதனை என்று நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஒரு பழங்குடித் தலைவரான சுலேமான் தாவுத் கூறினார். இவர் தீர்மானத்தை இயற்றுவதற்கு ரோராபாஹெருக்கு உதவியதாகக் கூறப்படுபவர். லாங்வியூவின் டெக்சாஸ் செய்தி இதழில் செவ்வாயன்று வெளிவந்த கட்டுரை ஒன்றில், கோமேர்ட் தானும் தீர்மானத்தை இயற்ற ஆதரவு தரும் வேறு இருவரும் பலூசி தேசியவாதிகளை கடந்த மாதம் ஜேர்மனியில் சந்தித்ததாகக் கூறினார்.

பலூசி பிரிவினைவாதிகளுக்கும் பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படைகளுக்கும் இடையேயான மோதல்கள் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளன. இருபுறத்திலும் இறப்பு எண்ணிக்கைகள் பெருகிவிட்டன: கடந்த ஆண்டு தேசியவாத எழுச்சியாளர்களுடன் நடைபெற்ற மோதல்களில் துணை இராணுவ எல்லைப்புறப் படைகளைச் சேர்ந்த 218 பேர் கொல்லப்பட்டனர்.

தோட்டாக்கள் துளைத்திருந்த 231 பலூச் தேசியவாதிகளின் சடலங்கள் 2011ல் பலூசிஸ்தான் சாலையின் அருகே இருந்து எடுக்கப்பட்டன என்று ஆராய்ச்சிக்கும் பாதுகாப்புக்குமான கற்கை ஆய்வு மையம் -Centre for Research and Security Studies- தெரிவித்துள்ளது. சமீபத்தில் உயர்மட்ட பலூச் அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்டது பலூச் முழுவதும் வேலைநிறுத்தங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது. பலூச்சில் இருந்து பாக்கிஸ்தான் சட்டமன்றத்தில் உறுப்பிராக இருக்கும் மீர் பக்தியார் டொம்கியின் மனைவியும் மகளும் ஒரு திருமணத்தில் இருந்து அவர்கள் வீடுதிரும்புகையில் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பலூசிஸ்தான் எழுச்சி குடியரசுக் காங்கிரஸ் உறுப்பினர் இந்த ஆத்திரமூட்டும் தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே பாக்கிஸ்தான் உயரடுக்கிற்குள் கவலையை அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தது. செய்தி ஊடகம் மற்றும் அரசியல்வாதிகள் மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுகொண்டிருப்பதாகப் பலமுறை எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் –PPP- தலைமையிலான கூட்டணி அரசாங்கம் மற்றும் எதிர்த்தரப்பின் அரசியல்வாதிகள் அனைவரும் தத்தமது முறைக்கு இத்தீர்மானித்தை கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் செய்தி ஊடகம் ரோராபாஹெர் பாக்கிஸ்தானை துண்டாட முற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸின் இத்தீர்மானம் வாஷிங்டன் இழிந்தமுறையில் பலூசிஸ்தானில் நடந்த மனித உரிமைகள் மீறலைப் பயன்படுத்தி பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் நிகழ்ச்சிநிரலின் படி நடக்க அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்ற எச்சரிகையாகப் பாக்கிஸ்தானிய உயரடுக்கினால் எடுத்துக்கொள்ளப்படுகிறதுஅல்லது மூலோபாய வகையில் முக்கியமான மாநிலமாக உள்ளதில் குறுக்கிட இப்பிரச்சினை போலிக்காரணமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

பலூச் தேசியவாதிகள் குழுக்களை அதன் பயங்கரவாத இயக்கத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்னும் பாக்கிஸ்தானிய அழுத்தத்தை வாஷிங்டன் நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் CIA ஈரானின் பலூச் பகுதியைப் பிரிப்பதற்காகப் போராடும் சுன்னி இஸ்லாமியக் குழுவான Jundallah உடன் பரந்த உறவுகளை வளர்த்துள்ளது.  

பூகோளஅரசியல் முக்கியத்துவத்தை ஒட்டி வாஷிங்டன் பலூசிஸ்தானில் அதிக அக்கறை கொண்டுள்ளது. இங்கு க்வடார் ஆழ்கடல் துறைமுகம் ஒன்று உள்ளது. இதை பெய்ஜிங் வெளிநாடுகளில் எரிசக்தியை அதிகரிக்கவும், மத்திய கிழக்கின் எரிசக்தியைப் பெறுவதற்குப் பாதுகாக்கும் வகையிலான தன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக வளர்த்து வருகிறது. சீனாவும் பாக்கிஸ்தானும் இறுதியில் இந்தியப் பெருங்கடலில் உள்ள நெரிக்கும் இடங்களைக் தாண்டி நிலப்பாதை ஒன்றை கட்டியமைக்க கூடும் என்று வாஷிங்டன் அஞ்சுகிறது.

ஒபாமா நிர்வாகமும் பாக்கிஸ்தானின் இராணுவமும்,  சிவிலிய அரசாங்கமும் உறவுகள சீரமைக்க உறுதி கொண்டுள்ளன. நவம்பரில் 24 பாக்கிஸ்தானிய இராணுவத்தினரை கொன்ற நேட்டோ வான்தாக்குதலை ஒட்டி நெருக்கடி ஏற்பட்டது. இரு பக்கமுமே நவ காலனித்துவ ஆப்கானிய போரில் மீண்டும் ஒத்துழைப்பு என்னும் நீண்டகால இலக்குடன் பலூசிஸ்தான் விடயத்தில் தலையிடக்கூடாது எனத்தான் விரும்புகின்றன.

முன்னேறும் உறவுகளின் மற்றொரு அடையாளமாக வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி கார் செவ்வாயன்று அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டனை ஒரு லண்டன் மாநாட்டின் ஒதுக்குப்புறங்களில் சந்தித்தார். நவம்பர் வான்தாக்குதலுக்குப் பின்னர் இரு நாடுகளின் மிக மூத்த அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுக்களாகும் இது.

பாக்கிஸ்தானின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் மார்ச் மாதத்தை ஒட்டி அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகள் முற்றிலும் சீராக்கப்பட்டுவிடும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு நேட்டோ படைகளுக்கான விநியோகம் பற்றிய  நிலைப்பாட்டை மிருதுவாக்கியுள்ளது; வான்வழி விநியோகம் முழு அளவில் நடக்கத் தொடங்கிவிட்டன. செய்தி ஊடகத் தகவல்கள்படி அமெரிக்க-தலிபான் பேச்சுக்கள் கட்டாரில் நடத்தப்படுவதற்கும் பாக்கிஸ்தான் ஒழுங்குசெய்து கொடுத்துள்ளது.