சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Afghanistan signs oil contract with Chinese giant

ஆப்கானிஸ்தான் மாபெரும் சீன நிறுவனத்துடன் எண்ணெய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

By John Chan
10 January 2012
use this version to print | Send feedback

சீனா அரசிற்குச் சொந்தமான (CNPC) தேசிய பெட்ரோலிய கார்ப்பரேஷன், கடந்த வாரம் ஆப்கானிய அரசாங்கத்துடன் 700 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய எண்ணெய் ஆய்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது; பல தசாப்தங்களில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இவ்வாறு செய்வது முதல் தடவை ஆகும். சுரங்கத்துறை மந்திரி வகிதுல்லா ஷாரானி இந்த உடன்பாட்டை வரலாற்றுத்தன்மை வாய்ந்தது என்று கூறி, நாட்டின் எண்ணெய் ஆய்விற்காக ஒரு பெரிய ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தான் முதல் தடைவையாக கையெழுத்திட்டுள்ளது என்றார்.

இந்த உடன்பாடு மத்திய ஆசியாவில் பூகோளஅரசியல் போட்டிகளைத் தீவிரமாக்கும்; ஏனெனில் பிரதான சக்திகள் பரந்த தாதுப்பொருள், எரிசக்தி ஆதாரங்களைப் பெறுவதற்குப் போட்டியிடும். இது பெய்ஜிங்கை, இப்பொழுது நடக்கும் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தானுடன் நெருக்கமாகப் போட்டியில் கொண்டுவரும்; அதேபோல் சீனாவின் பிராந்திய போட்டி நாடு இந்தியாவுடனும் நெருக்கமான போட்டியை ஏற்படுத்தும்.

CNPC, ஆப்கானிய பங்காளி நிறுவனமான வாடன் குழுவுடன் (Watan Group) இணைந்து வடக்கு மாநிலங்களான சர்-எ புல் மற்றும் பர்யாப்பில் கூட்டு முயற்சியை மேற்கொண்டு அமு தர்யாப் பகுதியில் மூன்று எண்ணெய் தொகுப்புக்களைத் தோண்டும். 1960களில் சோவியத் நிலவியல் வல்லுனர்களால் முதலில் அளவை செய்யப்பட்ட இப்பகுதி 87 மில்லியன் பீப்பாய் எண்ணெயை இருப்புக்களாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது; ஆனால் சீனா, ஆப்கானிஸ்தான் என இரு புறத்தாரும் உண்மையான இருப்புக்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நம்புகின்றன. மொத்தத்தில் ஆப்கானிஸ்தானில் 1.6 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் காபூலிற்கு  10 ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; ஆப்கானிய அரசாங்கத்திற்கு எண்ணெய், எரிபொருள் விற்பனைகளில் இருந்து வரும் இலாபங்களில் 70 சதவிகிதம் கொடுக்கப்படும். இதைத்தவிர CNPC 15 சதவிகிதம் காப்புரிமைக் கட்டணமாகவும், 30 சதவிகிதம் பெருநிறுவன வரிகளாகவும், ஆப்கானிய நிலத்திற்கான வாடகைகள் என்றும் கொடுக்கும்.

CNPC கொடுத்துள்ள விதிமுறைகள் போட்டி ஏலம் எடுப்பவர்களான பிரிட்டிஷ் டெதிஸ் பெட்ரோலியம் என்னும் நிறுவனத்தைவிட மிகத் தாராளமானவை ஆகும்; பிந்தையது தான் சீன நிறுவனத்துடன் போட்டியிடமுடியாது, ஏனெனில் இது ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதி அமைப்பு, வணிகத் தன்மையை மீறிய விதிகளைக் கொடுக்க இயலும் என்று கூறியுள்ளது.

CNPC  உடைய முக்கிய நோக்கம் சீனாவிற்கு எண்ணெய் அளிப்புக்களை உறுதி செய்வது ஆகும். மூன்று எண்ணெய்த் தொகுப்புக்களும் சீன மேற்கு ஜிங்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் எல்லைகள் அருகே 640 கி.மீ. தொலைவில்தான் உள்ளன. இது மத்திய ஆசியா முழுவதும் குழாய்த் திட்டங்களைக் கட்டமைப்பதற்குச் சீன நிறுவனங்களுக்கு முக்கிய அரங்குத் தளம் ஆகும்.

செல்வக்கொழிப்பு உடை அரச வங்கிகளின் ஆதரவினால் மற்ற சீன நிறுவனங்களும் ஆப்கானிஸ்தானில் வேரூன்ற முயல்கின்றன; பென்டகன் 2010ல் நடத்திய அளவை ஒன்றின்படி இவைகள் தாதுப்பொருள் ஆதாரங்களில் 1 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடையவற்றைக் கொண்டுள்ளன; அதில் எண்ணெய்; தாமிரம், தங்கம், லித்தியம் ஆகியவை அடங்கும்.

2007ல் சீன உலோகத்துறைக்குழு என்னும் அரச நிறுவனம் (CMG)  ஆப்கானிய வரலாற்றிலேயே மிக அதிக வெளிநாட்டு முதலீடான 2.9 பில்லியன் டாலர்களை லோகர் மாநிலத்திலுள்ள மெஸ் ஐயக் தாமிரச் சுரங்கத்திற்குக் கொடுத்தது. இந்த விலை இரண்டாம் இடத்தில் இருந்த ஏலம் எடுக்கும் கனடாவின் ஹன்டர் டிக்கின்சன் இன்ஸ் அளிக்க இருந்ததைவிட 70 சதவிகிதம் அதிகம் ஆகும். மேலும் CMG 400 மெகாவாட் எரிசக்தி ஆலையையும், அதற்கு எரிபொருள் கொடுப்பதற்கு ஒரு நிலக்கரிச் சுரங்கத்தையும், தாமிரத்திற்கு செப்பு ஆலையையும் கொடுத்துள்ளது. இதைத்தவிர 800 கி.மீ. இருப்புப்பாதை கொடுக்கப்பட்டது; இதையொட்டி மொத்த முதலீடு 3.5 பில்லியன் டாலர்கள் ஆயிற்று. ஆப்கானிய அரசாங்கம் 1,500 தேசியப் பொலிஸ் அதிகாரிகளை சுரங்கத்தைப் பாதுகாக்க ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவானது ஆப்கானிஸ்தானில் நிலைப்பாட்டைக் கொள்வதற்கு சீனாவை உட்குறிப்பாக அனுமதித்துள்ளது; இதற்கு முக்கிய காரணம் அத்தகைய முதலீடுகள் நாட்டின் நிதியத் தன்னிறைவை மேம்படுத்தும். தற்பொழுது ஆப்கானிய அரசாங்கத்தின் 90 சதவிகித செலவினங்கள் வெளிநாட்டு உதவியையே நம்பியுள்ளன. ஐநக் தாமிரச் சுரங்க உடன்பாட்டிற்குப் பின், தாலிபன் எழுச்சியாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை லோகர் மாநிலத்தில் முடுக்கியுள்ளனர்; இது அமெரிக்காவை அப்பகுதிக்கு 2,000 துருப்புக்களை அனுப்பும் கட்டாயத்தை ஏற்படுத்தியது.

உறுதியற்ற பாதுகாப்பு நிலைமையினால், சீன முதலீட்டுத் திட்டங்கள் கடந்த ஆண்டுகளில் மெதுவாகத்தான் உள்ளன. இதன் விளைவாக சீனாவானது அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளைத்தான் பாதுகாப்பு கொடுப்பதற்கு முற்றிலும் நம்பியுள்ளது; இது வாஷிங்டனுடன் உறவுகள் மோசமானால் மாறிவிடக்கூடும்.

2001ம் ஆண்டு சீனாவானது ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பை, பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதை மறைமுகமாக ஆதரித்தது. இது இஸ்லாமிய அடிப்படைவாதிகளை, ஜின்ஜியாங் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே தொடர்பு கொண்டுள்ளவர்களை அடக்கும் என்று நம்பியது. ஆனால் சீனாவும் ரஷ்யாவும் நீடித்த அமெரிக்க இராணுவ நிலைப்பாடு தங்கள் கொல்லைப் புறத்தில் இருப்பதை எதிர்த்தனஇது யூரேசிய இதயத்தானத்தில் எரிசக்திக் கொழிப்பு உடைய மூலோபாயப் பகுதி ஆகும். 2001ல் பெய்ஜிங்கும் மாஸ்கோவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) என்பதை நான்கு மத்திய ஆசிய குடியரசுகளுடன் சேர்ந்து நிறுவியது; இது பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை எதிர்க்கும் என்று கூறப்பட்டது; உண்மையில் இது அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொள்வதற்குத்தான். SCO சமீப ஆண்டுகளில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தியுள்ளது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவானது சீனப் பெருநிறுவனங்களை ஆப்கானிஸ்தானில் தடையற்ற செயல்பாட்டை அனுமதித்துள்ளது குறித்து குறைகூறியுள்ளது; அதுவும் அமெரிக்க இராணுவப் பாதுகாப்பை நம்பியிருக்க வேண்டிய நிலையில். மூலோபாய வர்ணனையாளர் ரோபர்ட் டி. கப்லான் 2009ல் எழுதினார்: இதில் பிரச்சினை அமெரிக்கா அதன் இரத்தம், நிதியைத் தியாகம் செய்கையில், சீனர்கள் நலன்களைப் பெறுவர். அமெரிக்க இராணுவம், இராஜதந்திர முயற்சியின் முழு இயக்கமும் ஒரு வெளியேறும் மூலோபாயத்தைக் காண்பதில் உள்ளது; ஆனால் சீனர்களோ நிலைத்து நின்று இலாபம் காண விரும்புகின்றனர்.

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க மேலாதிக்கம் தேவை என்றும் கப்லான் வாதிடுகிறார். இதையொட்டி சீனாவின் கப்பல் பாதைகள், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகியவற்றிலிருந்து எண்ணெய், மூலப் பொருட்களை எடுத்துச் செல்ல உதவுபவை துண்டிக்கப்பட்டுவிடும். அத்தகைய அமெரிக்க கடற்படை முற்றுகை அச்சுறுதலை எதிர்கொள்ளும் வகையில் சீனாவானது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வரும் அனைத்து எண்ணெய், எரிவாயுப் பொருட்களை நிலப் பாதைகள் மூலம் கொண்டு செல்லுவதை விரிவாக்க முயல்கிறது.

2001ல் இருந்து காபூலிற்கு சீனாவின் கட்டமைப்பு உதவியான 200 மில்லியன் டாலர்கள் என்பது இந்தியா உதவித்தொகையாகக் கொடுத்துள்ள 1.3 பில்லியன் டாலர்களால் அற்பமாகிவிட்டது. இது புது டெல்லியை மிகப் பெரிய நன்கொடையளிக்கும் நாடாகச் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியச் செல்வாக்கு பெருகுவதை வாஷிங்டன் ஆதரிக்கிறது; ஏனெனில் சீனாவிற்கு எதிர்கனம் என்னும் முறையில் இந்தியா பெருகிய முக்கிய நிலைப்பாட்டை வாஷிங்டனின் மூலோபாயக் கணக்குகளில் கொண்டுள்ளது.

வாஷிங்டனுடைய ஆதரவுடன் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் கடந்த அக்டோபர் மாதம் ஒரு மூலோபாய பங்காளித்தன உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இந்த உடன்பாடு ஆப்கானிஸ்தானில், நேட்டோப் படைகள் 2014ல் திரும்பப் பெறப்பட்டபின், அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதில் புதுடில்லி முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குள், காபூலானது இந்திய அரசாங்கத்திற்கு சில உரிமைகளைக் கொடுத்தது; பம்யன் மற்றும் வர்டக் மாநிலங்களுக்கு இடையே உள்ள இரும்புத் தாதுப் பொருள் இருப்புக்களை ஹாஜிகாக்கில் பெருக்குவதற்கு ஒரு எஃகு பெருநிறுவனக் குழுவிற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இந்தப் பெருநிறுவனம் சுரங்கத் தொழிலை வளர்க்க 11 பில்லியன் டாலர்கள் செலவழிக்கும்; அதில் ஒரு எஃகு ஆலை கட்டமைப்பு, எரிசக்தி ஆலைக் கட்டமைப்பு, போக்குவரத்துத் தொடர்புகள் எல்லாம் அடங்கும். இக்குழு 900 கி.மீ. தொலைவிற்கு பம்யானிலிருந்து ஜகேடான் வரை, ஈரான் எல்லையைக் கடந்து 4.3  பில்லியன் டாலர்கள் இரும்புப் பாதையையும் போட உள்ளது; அங்கிருந்து இரும்புத்தாதுப் பொருள் இந்தியாவிற்கு அனுப்பப்படும்.

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் கூடுதலான பிரசன்னமானது அண்டைப் போட்டி நாடான பாக்கிஸ்தானுடனும் சீனாவுடனும் அழுத்தங்களைத் தூண்டியுள்ளது. கடந்த வாரம் இந்தியாவின் செய்தி ஊடகம் இஸ்லாமாபாத்தின் முக்கிய நட்பு நாடான சீனா, வடக்குப் பாக்கிஸ்தானில் இராணுவத் தளங்களை பயன்படுத்த, கட்டுவதற்கான திட்டங்களை கொண்டுள்ளது என்ற இரகசியம் எனப்படும் உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் எடுக்கப்படாத எண்ணெய் இருப்புக்களை அடைவதற்கான சீன விழைவுகள் மத்திய ஆசியா மீதான கட்டுப்பாட்டிற்குப் போட்டியைத் தீவிரப்படுத்தும். ஆப்பாக் போர் என்று மாறிவிட்ட அமெரிக்காவின் பொறுப்பற்ற போர் விரிவாக்கத்தையொட்டி, இப்போட்டி இன்னும் ஆபத்தான போர்களாக வளரக்கூடும்.