சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The new year begins

புத்தாண்டு பிறந்தது

David North and Joseph Kishore
3 January 2012

use this version to print | Send feedback

புதிய ஆண்டு ஆரம்பமாகியுள்ள நிலையில், 2012 கொந்தளிப்பான அரசியல் மற்றும் சமூக போராட்டங்களால் குறிக்கப்படும் என்றவொரு பரந்த உணர்வு நிலவுகிறது.

துனிசியா மற்றும் எகிப்து எழுச்சிகளோடு தொடங்கி, பின்னர், அமெரிக்கா உட்பட, ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டிலும் எழுந்த சமூக போராட்டங்களின் வெடிப்பைக் கொண்டிருந்த கடந்த ஆண்டின் நிகழ்வுகள், வர்க்க முரண்பாட்டைத் தீவிரப்படுத்திவரும் ஒரு புதிய காலகட்டம் ஆரம்பமாகியிருப்பதை குறித்தது.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மூன்றுக்கும் மேலான ஆண்டுகளுக்கு பின்னர், தொழிலாளர் வர்க்கத்தின் பெருந்திரளான மக்கள் முதலாளித்துவத்தின் பொருளாதார சாத்தியமான நிலைமை மட்டுமல்ல, மாறாக அதன் அறநெறிரீதியான நியாயபூர்வமான தன்மையிலும் (moral legitimacy) கூட நம்பிக்கை இழந்துள்ளனர். 1920களின் பிற்பகுதியிலும் மற்றும் 1930களிலும் பிறந்தவர்களின் நனவு எவ்வாறு பெருமந்த நிலைமையால் எந்தளவிற்கு வடிவமைக்கப்பட்டதோ, அந்தளவிற்கு ஆழமாக உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் நனவு செப்டம்பர் 2008 மற்றும் அவற்றிற்கு பிந்தைய சம்பவங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டின் நலன்களுக்காக ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள், சாதகமான பாதையில் மக்களுக்கு தீர்வுகள் எதையும் வழங்கிவிட முடியாது. நேற்றை விட நாளை சிறப்பாக இருக்கும் என்ற ஒரு சிறிய நம்பிக்கையும் கூட அவர்களால் வழங்க முடியாது. இந்த மேலோங்கிய நம்பிக்கையற்ற உணர்வு, ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்கெலின் புதிய ஆண்டிற்கு முந்தைய நாள் குறிப்புகளில் வெளிப்பாட்டைக் கண்டது. அவர் கூறியது: “2012 சந்தேகத்திற்கு இடமின்றி 2011ஐ விட சிரமமாக இருக்கும்". இந்த கண்டம் அதன் தசாப்தங்களிலேயே மிகவும் கடுமையான சோதனையை முகங்கொடுத்துள்ளது,” என்றார்

பொருளாதார வல்லுனர்கள் ஐரோப்பாவின் பொருளாதார மந்தநிலையை கணிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையால் (Maastricht Treaty) ஸ்தாபிக்கப்பட்ட யூரோவின் வாழ்வு, சந்தேகத்திற்கிடமாய் ஆகியுள்ளது. சீனா உட்பட ஆசியாவில், ஏற்றுமதிகள் பொறிவின் விளைவாக, உற்பத்தித்துறை கூர்மையாக சுருங்கி வருகிறது.

நெருக்கடிக்கு களம் அமைத்த பாரிய ஊகவணிகத்தின் மையமாக விளங்கும் அமெரிக்காவில், ஒரு “மீட்சி" என்ற உத்தியோகபூர்வ வலியுறுத்தல்கள், முன்னொருபோதும் இல்லாத வறுமை மற்றும் நீண்டகால வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் பொய்யாக்கப்பட்டுள்ளன. தேசிய வருவாயில் கடந்த ஆண்டு முழுவதற்குமான தொழிலாள வர்க்கத்தின் பங்கு, இந்த புள்ளிவிபரங்கள் சேகரித்து வைக்க ஆரம்பித்ததிலிருந்து இல்லாதளவிற்கு, அதன் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

பாரிய வேலைவாய்ப்பின்மை, வறுமை, வேலைகள் மற்றும் கூலிகளின்மீது ஒரு தொடர்ச்சியான தாக்குதல் ஆகியவையே "புதிய வழமையாக" ஆகியுள்ளன. படர்ந்து பரவுகின்ற சமூக சமத்துவமின்மைக்கு எதிரான எதிர்ப்பும், பரந்தளவில் சீற்றமும் அதிகரிக்கும் என்பதை அனுமானித்து, ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகளின் பழைய அரசியலமைப்பு கட்டமைப்புகளை திட்டமிட்டு நிர்மூலமாக்கி வருகிறது. எதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதும், முற்றிலுமான சர்வாதிகாரமும், எப்போதும் போல, ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் தீவிரமயமாக்கலோடு பின்னிப் பிணைந்துள்ளன. “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்றழைக்கப்படுவது, பட்டவர்த்தனமாக முன்னொருபோதும் இல்லாததைவிட அதிகமாக, ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்குரிய ஒரு போலிக் காரணமாக செயல்படுகிறது.        

அமெரிக்காவின் பெரும்பான்மை மக்கள், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கற்பனையும் செய்து பார்த்திராத முறைமைகள் வழக்கமாக மாறியுள்ளன அல்லது வழக்கமாக மாறுவதற்குரிய விளிம்பில் வந்துள்ளன. எந்தவொரு சாதாரண விசாரணைகளின் சாயல்கூட இல்லாத வகையில், ஓர் அமெரிக்க குடிமகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மரணதண்டனை விதித்த ஓர் ஆண்டாக 2011 நினைவுகூரப்படும். “பயங்கரவாதத்திற்கு" துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்கர்களை (அந்த குற்றச்சாட்டின் உண்மையான அடித்தளம் எந்தளவிற்கு துல்லியமில்லாமல் இருக்கிறது என்பதைக் குறித்த எவ்வித கவலையும் இல்லாமல்) இராணுவ நீதிமன்றங்களுக்கு திருப்பிவிட அனுமதிக்கும் ஒரு சட்டமசோதாவில், டிசம்பரின் இறுதி வாரத்தில், ஒபாமா கையெழுத்திட்டார்.   

1930களைப் போலவே, பொருளாதார நெருக்கடி யுத்த அபாயங்களைத் தீவிரப்படுத்துகிறது. ஈரானுக்கு எதிரான யுத்த அச்சுறுத்தலின் அடித்தளமென்பது, சீனாவுடன் ஒரு பகிரங்க இராணுவ மோதலுக்கான அமெரிக்காவின் தயவுதாட்சண்யமற்ற தயாரிப்பாகும். உலகளாவிய பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக இராணுவ சக்தியை அமெரிக்கா மட்டும் பயன்படுத்தவில்லை. லிபியா மீதான குண்டுவீச்சு, ஐரோப்பிய ஏகாதிபத்திய வரலாற்றில் ஒரு புதிய மற்றும் இரத்தந்தோய்ந்த அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

1917 அக்டோபர் புரட்சியிலிருந்து எழுந்த சோவியத் ஒன்றிய அரசின்' கலைப்பின் இருபதாம் ஆண்டை டிசம்பர் 2011 குறித்தது. சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் 1917 புரட்சி கோட்பாடுகளின் பல தசாப்தகால ஸ்ராலினிய காட்டிக்கொடுப்பால் தயாரிப்பு செய்யப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் முடிவு, முதலாளித்துவ தற்புகழ்ச்சி மற்றும் வெற்றியின் ஒரு முழுமையான புகழ்பாடலை தூண்டிவிட்டது. சோசலிச புரட்சியின் சகாப்தம் முடிந்துவிட்டதென ஊடக பிரச்சாரகர்கள் மட்டுமல்ல, மாறாக கல்வியாளர்கள் ஓர் கூட்டமும் வலியுறுத்தியது. அத்தகைய அறிவுஜீவிகளில் ஒருவரான பிரான்சிஸ் புகூயாமா, சோவியத் ஒன்றிய கலைப்பைத் தொடர்ந்து, அந்த உற்சாக உணர்வைக் கைப்பற்றிக்கொண்டு வரலாறு முடிந்துவிட்டதென்று" (The End of History) அறிவித்தார். முதலாளித்துவம் எப்போதும் நீடித்திருக்கும் என்பதே அந்த வாக்கியத்தின் பகிரங்க அர்த்தமாகியது.       

20 ஆண்டுகளில் எந்தளவிற்கு மாறியுள்ளன! பொருளாதார நெருக்கடிக்கு இடையில், மூழ்கிவரும் வாழ்க்கை தரங்கள், விரிந்துவரும் சமூக சமத்துவமின்மை, அரசின் சட்டமில்லாதன்மை (lawlessness), சுற்றுச்சூழல் பேரழிவுகள் மற்றும் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு அதிகரித்துவரும் ஒரு புதிய யுத்தத்திற்கான அச்சுறுத்தல் ஆகியவற்றோடு முதலாளித்துவம் தோற்றுவிட்டது என்ற மக்களின் அதிகரித்துவரும் கருத்தொருமையும் உள்ளது. உலகம் முழுவதிலும் ஏற்கனவே மில்லியன் கணக்கானவர்கள் பங்குபெற்ற சமூக போராட்டங்கள் அதிகரித்திருப்பதென்பது, முதலாளித்துவத்தின் புற நெருக்கடி இந்த பூமியின்மீதுள்ள அடிப்படை புரட்சிகர சக்தியான சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் அக நனவில் உள்வாங்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறது.      

ஒரு மக்கள் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் எப்போதும் இருப்பதைப் போலவே, நெருக்கடியின் வரலாற்று ஒப்புமை அளவிற்கும், போராட்டத்திற்குள் இழுக்கப்பட்டுவரும் மக்களின் நனவிற்கும் இடையில் அங்கே ஒரு பெரும் இடைவெளி உள்ளது. இது வேறு எந்தவிதத்தில் இருக்க முடியும்? மக்கள் போராட்டங்களின் அனுபவத்திலிருந்து மட்டும் தான் கற்க முடியும். அவர்கள் பல தசாப்தகால தவறான தலைமை மற்றும் காட்டிகொடுப்புகளின் விளைவுகளாக உள்ள அரசியல் நிலைகுலைவு மற்றும் குழப்பத்தை ஒரேயிரவில் தாண்டி வந்துவிட முடியாது. பழைய அமைப்புகளான அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும்  சாத்தியமில்லை என்றாலும் கூட, சமூக போராட்டங்களை ஒடுக்க அல்லது அவற்றை முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தாத வடிகால்களுக்குள் திருப்பிவிட அவற்றின் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச செல்வாக்கைப் பயன்படுத்துகின்றன.

2011இன் சமூக போராட்டங்கள் ஒரு உலக அளவில் அரசியல் முன்னோக்கினதும் மற்றும்  தலைமையின் பாரிய பிரச்சினைகளை எடுத்துக்காட்டின. சர்வதேச அளவில் எழுந்த சமூக போராட்ட இயக்கங்கள், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் அதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணிதிரட்டுவதற்கு எதிராக நின்ற, பெரும்பாலும் இடது-தாராளவாதம், போலி-தீவிரவாத (pseudo-radical) மற்றும் அரை-அரசிலாக்கோட்பாட்டு (semi-anarchistic) போக்குகளின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. இது ஆளும் வர்க்கம் மறுகுழுவாக்கம் செய்து கொள்ளவும், எகிப்தைப் போல, புரட்சிகர மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறைக்கு செல்லவும் கூட, அனுமதித்துள்ளது.  

அமெரிக்காவில் நடந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்போம் போராட்டங்களும், அதேபோன்ற ஏனைய போராட்டங்களும், ஒருசில மாதங்களுக்குள்ளேயே, பரந்த மக்களின் அனுதாபத்தை வென்றெடுத்தன. அவர்கள் சமூக சமத்துவமின்மையின் மீதிருந்த பரந்த கோபத்திற்கும், பணக்காரர்களால் கட்டுப்படுத்தப்படும் ஓர் அரசியல் அமைப்புமுறைக்கு விரோதமாகவும் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் ஒபாமா நிர்வாகம், ஜனநாயக கட்சி மற்றும் தொழிற்சங்கங்களோடு, அரசியல்ரீதியாக பிணைந்துள்ள மத்தியதட்டு வர்க்க அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்ட இந்த போராட்டங்கள், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான விருப்பத்தையோ அல்லது தகமையையோ  கொண்டிருக்கவில்லை.    

இருந்தபோதினும், 2011இல் தொடங்கிய அரசியல் தீவிரத்தன்மை அடுத்த ஆண்டிலும் தொடரும். உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் இயல்பிலேயே வேரூன்றியுள்ள முக்கிய முரண்பாடுகள், ஆளும் வர்க்கத்தை பின்னடைவுக்கும் யுத்தத்திற்கும் தள்ளுவதோடு, தொழிலாளர் வர்க்கத்தை சோசலிச புரட்சிக்கும் தள்ளிச் செல்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளையும் நலன்களையும் சமூகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றுவதன் மூலமாக, முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமாக, உலகளாவிய பொருளாதாரத்தை மனிதயினத்தின் நலன்களுக்காக மறுஒழுங்கமைப்பு செய்வதன் மூலமாக மட்டுமே பாதுகாக்க முடியும்

ஆண்டின் தொடக்கம், வழக்கமான விதத்தில் தீர்மானங்கள் எடுக்க வேண்டிய நேரமாக உள்ளது: அதாவது, சோசலிச சமத்துவ கட்சியில் இணைவதன் மூலமும், மற்றும் நான்காம் அகிலத்தை சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக கட்டியெழுப்புவதன் மூலமும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுப்போம்.