சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Europe plunging into recession

ஐரோப்பா மந்தநிலைக்குள் செல்லுகிறது

By Stefan Steinberg 
4 January 2012

use this version to print | Send feedback

2011ம் ஆண்டு ஐரோப்பாவிற்கு சிக்கன நடவடிக்கைகள் ஆண்டு ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகள் பேரில், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூகநலப் பணிச் செலவுகளில் மிகக் கடுமையான சிக்கனத் திட்டங்கள் சுமத்தப்பட்டன; அத்துடன் வேலைகள் அழிக்கப்படுதலும் கண்டம் முழுவதுமுள்ள அரசாங்கங்களால் நடத்தப்பெற்றன.

2008 ஆண்டு நிதிச் சரிவைத் தொடர்ந்து வங்கிகளுக்கு பெரும் பிணை எடுப்புக்களுக்கு நிதி அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இச்சிக்கன நடவடிக்கைகள் இப்பொழுது ஐரோப்பாவை புதிய பொருளாதார மற்றும் சமூகக் கொந்தளிப்பில் இப்பொழுது மூழ்கடித்துக் கொண்டுள்ளன. மிகச் சமீபத்திய பொருளாதார புள்ளிவிபரங்களால் இது உறுதி செய்யப்படுகிறது; அவைகள் 2012ம் ஆண்டு ஐரோப்பாவில் புதுப்பிக்கப்படும் மந்தநிலை ஆண்டு ஏற்படும் என்ற குறிப்பைக் காட்டுகின்றன.

புதிய ஆண்டில் ஐரோப்பாவிற்காக வெளியிடப்பட்ட முதல் பொருளாதாரப் புள்ளிவிபரங்கள் யூரோப்பகுதி முழுவதும் டிசம்பர் மாதம் உற்பத்தி வழிவகைகள் சரிந்துவிட்டதைக் காட்டுகின்றன. இது ஐந்தாவது தொடர்ந்த மாதமாக ஏற்பட்டுள்ள குறைந்துவிட்ட உற்பத்தியாகும். 17 நாடுகளைக் கொண்டுள்ள யூரோப் பகுதியின் மொத்தப் பொருளாதார வளர்ச்சி 2011ன் இரண்டாவது அரைப்பகுதி முழுவதும் இரத்தச் சோகை படிந்திருந்தது. ஜூலை மற்றும் செப்டம்பருக்கு இடையே இது 0.2 சதவிகிதம்தான் உயர்ந்தது. முழு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 பொருளாதாரங்களின் செயற்பாடு சற்றே அதிகமாக 0.3 சதவிகிதம் என இருந்தது. செப்டம்பர் முதல் பொதுப் போக்கு கீழ்நோக்குச் சரிவில்தான் உள்ளது.

ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனி 2011ன் இரண்டாவது அரைப்பகுதியில் கணிசமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், மற்ற முக்கிய பொருளாதாரங்களான இத்தாலி, ஸ்பெயின் போன்றவை உற்பத்தியில் பெரும் சரிவுகளைப் பதிவு செய்துள்ளன.

பிரெஞ்சு உற்பத்திமுறையும் கண்டம் முழுவதும் தேவையில் சரிவைக் கொண்டதை அடுத்து இழப்பை அடைந்தது. வோல்க்ஸ்வாகனுக்கு அடுத்தாற்போல் ஐரோப்பாவில் இரண்டாம் மிகப் பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனமான PSA Peugeot Citroën அதன் டிசம்பர் மாத விற்பனையில் 29 சதவிகிதச் சரிவைக் கண்டது. அதே நேரம் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ரேனால்ட் 28 சதவிகிதச் சரிவைப் பதிவு செய்தது. விற்பனைக்கான தேவைகள் டிசம்பரில் 55% குறைந்துவிட்டன; இதையொட்டி நாங்கள் கார் விற்பனைச் சந்தையில் 2012ம் ஆண்டு முதல் காலாண்டில் 17% சுருக்கத்தை எதிர்பார்க்க நேரிடுகிறது என்று ரேனால்ட்டின் தலைமை விற்பனை அதிகாரி பெர்னார்ட் கேம்பியர் கூறினார்.

பிரிட்டனில் சில்லறை விற்பனையாளர்கள் கிறிஸ்துமஸ் விழாக்காலத்திற்கான விற்பனைகள் பெரும் ஏமாற்றம் தருவதாக அறிவித்தனர். CBRE சில்லறை விற்பனை ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான ஜோனாதன் டி மெல்லோ நுகர்வோர் செலவழிப்பதில் சரிவு இருப்பதால் அடுத்த 18 மாதங்களில் பிரிட்டனில் 30,000 முதல் 40,000 வேலைகள்வரை சில்லறைத்துறையில் இழக்கப்படலாம் என்றார்.

2008-09 மந்தநிலைக்காலத்தின்போது, முக்கிய பிரிட்டிஷ் சில்லறை விற்பனை நிறுவனங்களான Woolworths, Zavvi, MFI ஆகியவை திவாலாயின. மற்றொரு பிரிட்டிஷ் சில்லறை விற்பனை நிலையக் குழுமத்தின் தலைவர் ஒருவர் கருத்துப்படி, இப்பொழுது நிலைமை 2008 ஐ விட மோமாக உள்ளது.

மந்தநிலையை நோக்கிச் செல்லும் போக்கு பிரிட்டிஷ் பொருளாதார வல்லுனர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டு இறுதியில் பிபிசி நடந்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், முக்கிய பொருளாதார வல்லுனர்கள் ஐரோப்பாவில் 2012ல் மந்தநிலை நிலவும் என்று கணித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பங்கு பெற்ற வல்லுனர்களில் 2 சதவிகிதம் தான் இதற்கு மாறுபட்ட கருத்தைக் கூறியுள்ளனர். வினாவிற்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் யூரோப்பகுதி உடையக்கூடிய வாய்ப்பு கணிசமாக உள்ளது என்றும் கூறினார்கள்.

பைனான்சியல் டைம்ஸ் நடத்திய ஒரு இணையான அளவீடு 2012ம் ஆண்டு 2009ம் ஆண்டை விட பொருளாதார வலுவின்மையில் போட்டியிடும், பிரிட்டன் யூரோப்பகுதியிலுள்ள தொடரும் கடன் நெருக்கடியின் விளைவால் அவதியுறும் என்ற முடிவிற்கு வந்துள்ளது. வரவு-செலவுத் திட்டப் பொறுப்பு அலுவலகத்தின் தலைவரான சர் ஆலன் பட் கருத்துப்படி, யூரோ தப்பிப்பிழைத்தால் இழிநிலை தொடர்தல், தப்பிப்பிழைக்காவிட்டால் பேரழிவு என்ற விருப்பத் தேர்வுகளை பிரிட்டன் காண்கிறது என்றார்.

2012ல் மந்தநிலை வரும் என்ற கணிப்பு உள்ள நிலையில், பைனான்சியல் டைம்ஸ் வினாவிற்கு உட்படுத்திய பொருளாதார வல்லுனர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் தொடர்ந்த ஆதரவை, கன்சர்வேடிவ் கட்சி பிரதம மந்திரி டேவிட் காமரோன் தலைமையில் உள்ள பிரிட்டிஷ் கூட்டாட்சி அரசாங்கம் கொண்டுவந்துள்ள கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தினர்.

ஐரோப்பாவின் தீவிர நெருக்கடியைப் பிரதிபலிக்கும் வகையில் யூரோ, யென்னிற்கு எதிராக 10 ஆண்டுகள் இல்லாத குறைந்த தன்மையையும், அமெரிக்க டாருக்கு எதிராக ஓராண்டில் பெரும் குறைப்பையும் கண்டு 2011ல் உலகின் மிக மோசமாகச் செயலாற்றிய முக்கிய நாணயம் என்ற நிலையை அடைந்தது. சர்வதேச ஒதுக்கு நிதியங்கள்(hedge funds) யூரோவிற்கு எதிரான தங்கள் ஊக நடவடிக்கைகளை 2011ம் ஆண்டின் கடைசி வாரத்தில் முடுக்கிவிட்டன. யூரோவின் செல்வாக்கில் ஏற்பட்டுள்ள சரிவு ஐரோப்பிய மத்திய வங்கி எடுத்த நடவடிக்கையை மீறி வந்துள்ளது; முந்தைய வாரம்தான் அது ஐரோப்பிய வங்கிகளுக்குக் கிட்டத்தட்ட அரை டிரில்லியன் யூரோக்களை புதிய கடன்கள் மூலம் அளித்தது.

ஆண்டு இறுதியில் ஐரோப்பியத் தலைவர்கள் பகிரங்கமாக சிக்கன நடவடிக்கைகளில் குறைப்பு ஏதும் இராது என்று எச்சரித்தனர். ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள வெட்டுக்களினால் ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சமூகப் பேரழிவுதரும் இழப்புக்களைப் புறக்கணித்து, டேனிஷ் பிரதம மந்திரி ஹெல்லே தோர்னிங்-ஷ்மித், ஜனவரி 1ம் தேதி ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவியை சுழற்சி முறை மூலம் ஏற்றவர், வசதியான ஆண்டுகள் நமக்குப் பின்னே சென்றுவிட்டன. இப்பொழுது வலுவற்ற ஆண்டுகளுக்கு நம்மைத் தயாராக இருத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

இச்செய்தி ஜேர்மனி சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலால் முரசு முழக்கப்பட்டது; ஐரோப்பா 2012 என்பது 2011 ஐரோப்பாவை விட கடின சூழலைக் காணும் என்பதில் சந்தேகம் இல்லை என்று தன்னுடைய புத்தாண்டு உரையில் அறிவித்த அவர், கண்டம் பல தசாப்தங்கள் காணாத கடுமையான சோதனையைச் சந்திக்கும் என்றும் சேர்த்துக் கொண்டார்.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி இன்னும் வெளிப்படையாக, இந்த அசாதாரண நெருக்கடி, சந்தேகத்திற்கு இடமின்றி இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகத் தீவிரமானது.... இன்னும் முடியவில்லை என்று எச்சரித்தார்.

ஸ்பெயினில் கன்சர்வேடிவ் மக்கள் கட்சி அமைச்சரவை செவ்வாயன்று கூடி பொதுச் செலவுகளை இன்னும் குறைக்கும் இலக்குடைய நடவடிக்கைகளில் உடன்பாடு காணும். புதிய திட்டங்கள் சில நாட்கள் முன்புதான் அறிவிக்கப்பட்ட 15 பில்லியன் யூரோப் பொதியை அடுத்து வருகின்றன; நிதி அமைச்சர் 2011ம் ஆண்டு நாட்டின் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை கணித்திருந்ததை விட மிக அதிகமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

இத்தாலியில் மரியோ மோன்டியின் தொழில்நுட்பவாத அரசாங்கம் நிதியச் சந்தைகளில் இருந்து வந்த இன்னும் சிக்கன நடவடிக்கைகள் தேவை என்னும் புதிய அழுத்தங்களைத் தொடர்ந்து, அதன் சமீபத்திய 33 பில்லியன் யூரோப் பொதி நடவடிக்கைகளுக்குப்பின் ஓய்வூதியங்கள், சமூக நலச் செலவுகளில் இன்னும் வெட்டுக்களை அறிவித்தார். டிசம்பர் மாதம் ஒரு குறுகிய சரிவிற்குப் பின், இத்தாலியில் நீண்ட கால கடன் வட்டிச் செலவுகள் மீண்டும் முக்கிய கட்டமான 7 சதவகிதம் என்பதை நெருக்கிவிட்டன.

முதலாளித்துவ அரசியல் விமர்சகர்கள் நெருக்கடியில் இருந்து தங்கள் சொந்த முடிவுரைகளைப் பற்றியுள்ளனர்; அரசியல் உயரடுக்கிற்கு பெரும் வர்க்க மோதல்களுக்குத் தயாராக இருக்கும்படி எச்சரிக்களையும் கொடுத்துள்ளனர். 2012 குறித்த தன் முன்கணிப்பில் பிரின்ஸ்டன் பேராசிரியர் ஆனி மேரி ஸ்லாட்டுர் செவ்வாயன்று பைனான்சியல் டைம்ஸில் சிக்கன நடவடிக்கைகள், வறுமையில் விரிவாக்கம் ஆகியவை ஆபிரிக்க துணைச் சகாராவில் கலகங்களைத் தூண்டும், மத்திய ஆசியா, தென்னமெரிக்கா ஆகியவற்றில் இன்னும் கூடுதலான வெகுஜன எதிர்ப்புக்களைத் தூண்டும் என்று எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் ஆக்கிரமிப்பு இயக்கம் விரைவில் வெகுஜன ஈடுபாடு உடைய தடைகள் என்ற வகையில் செயல்படும், ஆனால் இதைவிடக் கூடுதலான நடவடிக்கைகள், வீடுகளை முன்கூட்டி விற்பனை செய்வதற்கு எதிராகக் காத்தல் என்பதையும் நாம் காணக்கூடும்; இந்த உத்திதான் ஸ்பெயினில் முன்னோடியாக வெளிப்பட்டுள்ளது. யூரோப்பகுதி சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளில் மூச்சுத் திணறும் ஐரோப்பிய நாடுகளில், எதிர்ப்புக்கள் ஒருங்கிணைந்த குடிமக்கள் ஒத்துழையாமை இயக்கங்களாக மாறக்கூடும்; இவை புதிய, அல்லது உயர்ந்த வரிகளை கொடுக்க மறுத்தல் என்ற வடிவையும் கொள்ளும்; மத்திய கிழக்கு தொடர்ந்து கொதிநிலையில் இருக்கும்.... ஒரு கொந்தளிப்பு நிறைந்த ஆண்டை எதிர்பாருங்கள் என்று அவர் எழுதியுள்ளார்.

தொழிலாள வர்க்கத்திற்குள் பெருகும் எதிர்ப்பிற்கு ஏற்கனவே அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன. கிரேக்கத்தில் அரசாங்க மருத்துவமனை மருத்துவர்கள் இந்த வாரம் அரசாங்கத்தின் சுகாதார முறையில் அரசாங்கம் கொண்டுவரும் வெட்டுக்களுக்கு எதிராக நான்கு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்களுடைய வேலைநிறுத்தத்தில் மருந்தாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் இருக்கும் பிற ஊழியர்களும் சேர்ந்துள்ளனர்.