சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU oil embargo heightens tensions in the Gulf

ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் தடை வளைகுடாவில் அழுத்தங்களை உயர்த்துகிறது

By Peter Symonds 
6 January 2012

use this version to print | Send feedback

புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) கொள்கைப்படி என எடுக்கப்பட்ட முடிவான ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி மீது தடையைச் சுமத்துதல் என்பது பேர்சிய வளைகுடாவில் இராணுவ மோதல் என்னும் ஆபத்தை கூடுதலாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை ஜனாதிபதி ஒபாமா ஈரானிய வங்கிமுறையை முடக்கி, அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதிகளை வெட்டும் வடிவமைப்பைக் கொண்ட அமெரிக்கச் சட்டம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையுடன் இணைந்து வந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அச்சுறுத்தல்கள் ஏற்கனவே தெஹ்ரானிடம் இருந்து ஒரு தீவிர எதிர்விளைவைத் தூண்டியுள்ளது; ஹார்முஸ்  ஜலசந்தியைத் தடைக்கு உட்படுத்தி எண்ணெய் மீதான தடைக்குத் தான் விடையிறுக்கும் என்று அது எச்சரித்துள்ளதுஅதுவோ மூலோபாய வகையில் முக்கியமான கடற்பாதையாக, பேர்சிய வளைகுடாவில் உள்ளது; உலக எண்ணெய் வணிகத்தில் 20 சதவிகிதம் அதன் மூலம்தான் செல்லுகிறது.

பொருளாதார மந்திரி ஷம்செதின் ஹொசைனி நேற்று கூறியுள்ளதுபோல், ஈரான் ஒரு பொருளாதாரப் போரை எதிர்கொள்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகள் நாட்டின் கடின நாணய வருமானங்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதமாக உள்ளது; அரசாங்கத்திற்கு இது பாதி வருமானத்தைக் கொடுக்கிறது. ஈரானிய ரியல் ஏற்கனவே இந்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக 11 சதவிகிதம் சரிந்துவிட்டது; இது ஏற்கனவே இருக்கும் அதிக பணவீக்க அளவை இன்னும் தாக்கியுள்ளது.

இந்த வாரம் வாஷிங்டனில் பிரிட்டிஷ் பாதுகாப்பு மந்திரி பிலிப் ஹாமண்ட் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவைச் சந்தித்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூட முயலும் எத்தகைய ஈரானிய முயற்சிக்கும் அமெரிக்காவுடன் இணைந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஒரு அமெரிக்க விமானத்தளம் கொண்ட கப்பலான USS John C. Stennis வளகுடாவிற்கு மீண்டும் வரக்கூடாது என்று செவ்வாயன்று ஈரான் விடுத்த எச்சரிக்கையை பென்டகன் உதறித்தள்ளிய நிலையில், ஒரு இராணுவ மோதலுக்கான தூண்டுதல் திறன் ஏற்பட்டுவிட்டது.

அமெரிக்காவுடனும், பிரான்ஸுடனும் சேர்ந்து ஈரான் மீது முடக்கும் வகையில் எண்ணெய்த் தடையைச் சுமத்த வேண்டும் என்னும் சர்வதேசப் பிரச்சாரத்திற்கு பிரிட்டன் உந்துதல் கொடுத்து வருகிறது. ஈரான் மீது தவிர்க்க இயலாத இராணுவத் தாக்குதலுக்கு தற்பொழுது பிரிட்டிஷ் ஆதரவு இருக்காது என்று கூறிய ஹாமண்ட் தெஹ்ரான் மீது அழுத்தத்தைத் தொடர வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று அறிவித்தார். நவம்பர் மாதம் பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்து பிரிட்டிஷ் நிதிய நிறுவனங்களையும் ஈரானிய நிறுவனங்களுடன் வணிகத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது; இதில் நாட்டின் மத்திய வங்கியும் அடங்கும். இப்பொருளாதாரத் தடைகள் தெஹ்ரானில் சீற்றமிகு எதிர்ப்புக்களைத் தூண்டி, பிரிட்டிஷ் தூதரகம் மூடப்படுவதற்கு வழிவகுத்தன.

ஈரான் மீதான எண்ணெய்த் தடையை ஐரோப்பா மேற்கொள்வது ஜனவரி 30ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் இறுதிவடிவத்தைப் பெறும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைப் போல் இல்லாமல், கிரேக்கமும் ஸ்பெயினும் இறக்குமதி ஆகும் ஈரானிய எண்ணெயை அதிகம் நம்பியுள்ளன. நேற்று இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மோன்டி தன்னுடைய அரசாங்கம் படிப்படியாகச் சுமத்தப்பட்டால்தான் ஒரு தடைக்கு ஆதரவு தரும் என்றும், இத்தாலிய எரிசக்தி நிறுவனமான Eni க்கு 2 பில்லியன் டொலர்களுக்கு மதிப்புடைய ஈரானியக் கடன் திருப்பிக் கொடுத்தலை நோக்கம் கொண்ட எண்ணெய் அளிப்புக்கள் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய முடிவு ஐரோப்பிய நாடுகளை மட்டும்தான் தொடர்பானதாகயிருக்கும் என்றாலும், அமெரிக்கச் சட்டம் ஈரானிய மத்திய வங்கியுடன் வணிகம் நடத்தும் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களையும் இலக்கு கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைத்தவிர, ஈரானிய எண்ணெயை வாங்கும் பெரிய நாடுகள் சீனாவும் ஜப்பானும் ஆகும். புதிய சட்டம் ஒபாமா இது செயல்படுத்தப்படுவதை 6 மாத காலத்திற்கு தாமதப்படுத்தவும், எண்ணெய்ச் சந்தைகளில் பெரும் நாசத்தைத் தடுக்க விலக்குகளை அளிப்பதற்கும் அனுமதிக்கிறது. அமெரிக்க அதிகாரிகளை ஈரானுடனான பொருளாதார உறவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று நாடுகள் நம்ப வைக்க வேண்டும்.

இதன் விளைவாக ஒபாமா நிர்வாகம் ஜப்பான் போன்ற தன் நட்பு நாடுகளுக்கு பொறுப்பு எடுத்த வகையில் விலக்குகளை அளித்து, அதே நேரத்தில் ஈரானுடன் வணிகம் நடத்துவதற்காகச் சீன நிறுவனங்களை தண்டிக்கக் கூடும். ராய்ட்டர் கருத்துப்படி சீனா ஏற்கனவே ஈரானிடம் இருந்து அது வாங்கும் எண்ணெய் அளவை இம்மாதம் பாதியாகக் குறைத்துவிட்டதாகும், பெப்ருவரியில் இன்னும் அதிகமாகக் குறைக்கலாம் என்றும் தெரிகிறது. அரசாங்க ஆதாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் ஜப்பானும் அமெரிக்காவிடம் இருந்து விலக்குப் பெறுவதற்கு ஈரானில் இருந்து அது பெறும் இறக்குமதிகளைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்வதாகத் தெரிவித்துள்ளது.    

வாஷிங்டனின் ஐரோப்பிய மற்றும் ஆசியப் போட்டி நாடுகளின் மீது தாக்குதல்களின் முக்கிய பாதிப்பு இருக்கும் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ஈரானுடனான அமெரிக்கத் தலைமையிலான பெருகும் மோதல் ஈரான் அணுவாயுதங்களைக் கட்டமைக்கிறது என்று ஆதாரமற்ற அமெரிக்கக் கூற்றுக்களுக்கும் அப்பால் செல்கிறதுஇக்குற்றச்சாட்டை தெஹ்ரான் பலமுறையும் மறுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான சமீபத்திய அச்சுறுத்தல்கள் கடந்த இரு தசாப்தங்களாக அமெரிக்காவானது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதன் ஐரோப்பிய, ஆசியப் போட்டி நாடுகளின் இழப்பில் அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தை ஒருங்கிணைக்க அதன் இராணுவ வலிமையைப் பயன்படுத்தும் முயற்சிகளின் ஒரு தொடர்ச்சிதான்.

ஒபாமாவின் கீழ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் குவிப்பு ஆசிய பசிபிக் பகுதி மீது மாறியுள்ளது; அங்கு வாஷிங்டன் தீவிர ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது; அதன் நோக்கம் அதன் நட்புறவுகளை வலுப்படுத்துதல், மூலோபாயப் பிணைப்புக்களை வலிமைப்படுத்துதல், அதே நேரத்தில் சீனாவின் செல்வாக்கைக் குறைத்தல் என்பவைகள் மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. தெஹ்ரானை இலக்கு வைப்பதின் மூலம் ஒபாமா நிர்வாகம் பெய்ஜிங்கிற்கு தாக்குதல் ஒன்றைக் கொடுக்கிறது; ஏனெனில் அதுதான் ஈரானிய எண்ணெயை அதிகம் வாங்கும் நாடும், ஈரானில் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ளது.

ஹார்முஸ் ஜுலசந்தியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் ஈரானிய அச்சுறுத்தல்களை ஒபாமா நிர்வாகம் வெற்றுப் பேச்சு என உதறியுள்ளதுஇது தற்பொழுதுள்ள தடைகள் தெஹ்ரானில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கான அடையாளம் என்று கருதுகிறது. இருபுறத்திலும் எத்தகைய விருப்பங்கள் இருந்தாலும், பேர்சிய வளைகுடாவில் பொறுப்பற்ற முறையில் அழுத்தங்களை வாஷிங்டன் அதிகரித்துள்ளது அதன் சொந்த ஆபத்தான தர்க்கத்தைக் கொண்டுள்ளது. ஒரு நிகழ்வு அல்லது தவறான கணிப்பு என்பது இப்பகுதி முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இராணுவ மோதலை விரைவாக விரிவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவானது ஈரானின் மதிப்பைக் குறைக்க ஏற்கனவே பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுமுதலில் ஈரானின் நண்பரான சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை அகற்றுவதற்கான பிரச்சாரத்தில் இருந்து பேர்சிய வளைகுடாவில் இருக்கும் அமெரிக்காவின் வாடிக்கை ஆட்சிகளுக்கு மிக நவீன ஆயுதங்களை விற்பனை செய்வது வரை.

ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷைப் போலவே, ஜனாதிபதி ஒபாமாவும் அனைத்து விருப்பங்களும் மேசை மீது உள்ளன என்று பலமுறை தொடர்ந்து கூறுகிறார்அதாவது ஈரான் மீது சட்டவிரோத, தூண்டுதலற்ற இராணுவத் தாக்குதல் நடத்துவது உட்பட. அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களுடைய மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சி ஒன்றை இப்பொழுது அறிவித்துள்ளன; இது இஸ்ரேலின் ஏவுகணைப் பாதுகாப்புத் திறன்களை பரிசோதிக்கும்.

ஈரானும் ஐரோப்பிய ஒன்றியமும் தற்காலிகமாக ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து பேச்சுக்களைப் புதுப்பிக்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில், அப்படி ஒரு பெரும் மாறுதலை அடைவது ஒரு புறம் இருக்க, பேச்சுக்கள் நடத்த முடியுமா என்பது கூட நலிந்த தன்மையில்தான் உள்ளது. செப்டம்பர் மாதம் ஈரானுக்குள் உளவு வேலை பார்த்து தண்டிக்கப்பட்ட இரு அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டது, ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மதிநெஜட் அமெரிக்காவுடன் ஒரு ராஜதந்திர உறவைத் தோற்றுவித்துக்கொள்ளுவதற்கான முயற்சி என்று கருதப்பட்டது. இந்த நல்லெண்ண அடையாளச் செயலை வாஷிங்டன் முற்றிலும் புறக்கணித்துவிட்டது.

அழுத்தங்களைக் கூட்டுவது என்பது கடந்த இரு ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ஈரானுக்குள் மறைமுகப்போரை நடத்துவது என்னும் பொருளைத் தரும்.

Bloomberg.com ல் எழுதுகையில், அமெரிக்க விமர்சகர் வாலி நசர் அதன் அணுசக்தி நிலையங்களில் அழிக்கும் தன்மை உடைய கணினி விஷக்கிருமிகளின் பாதிப்பை தெஹ்ரான் அதிகம் எடுத்துக் கூறாத நிலையில், அது கீழ்க்காணும் வகையில் விடையிறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது: அதன் விஞ்ஞானிகள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளமை, அதன் இராணுவ நிலையங்களில் சந்தேகத்திற்குரிய வெடிப்புக்கள் ஆகியவை குறித்து அரசாங்கம் சங்கடத்திற்கும், மனத்தளர்ச்சிக்கும் உட்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை வளர்த்து வந்த தளபதியைக் கொன்றுவிட்டது. இத்தாக்குதல்கள் நாட்டின் பாதுகாப்புப் படைகளை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளன.

பேர்சிய வளைகுடாவில் சிறு விரல் அசைவில் குண்டுத்தாக்குதலைத் தொடக்குதல் என்று நிறுத்தியுள்ள நிலையில், ஒபாமா நிர்வாகத்தின் தூண்டிவிடும் தன்மையுடைய நடவடிக்கைகள் இப்பிராந்தியத்தை மற்றொரு பேரழிவு தரும் போரில் ஆழ்த்திவிடக்கூடிய வகையில் அச்சுறுத்துகிறது.