சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Unelected prime minister demands more sacrifices from Greek workers

தேர்ந்தெடுக்கப்படாத பிரதம மந்திரி கிரேக்கத் தொழிலாளர்களிடம் இருந்து அதிகமான தியாகங்களை கோருகிறார்

By Stefan Steinberg
7 January 2012

use this version to print | Send feedback
 

தேர்ந்தெடுக்கப்படாத கிரேக்கப் பிரதம மந்திரி லூகாஸ் பா்ப்படெமோஸ் புதனன்று கிரேக்கத்தில் ஒரு புதிய சுற்றுக் காட்டுமிராண்டித்தன சிக்கன நடவடிக்கைகளுக்கு அவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் தொழிற்சங்க தலைவர்களை சந்தித்தார்.

கடந்த நவம்பர் மாதம் வங்கிகள், நிதியச் செல்வாக்குக் குழுக்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இவருக்கு முன்பு பதவியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சியின் (PASOK) ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவிற்கு நம்பிக்கையின்மையைத் தெரியப்படுத்தியவுடன், பாப்படெமோஸ் கிரேக்கத்தின் புதிய அரசாங்கத் தலைவராக இருத்தப்பட்டார்.

தன்னுடைய பதவிக்காலத்தில் பாப்பாண்ட்ரூ ஐந்து சிக்கன நடவடிக்கை வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்; அவைகள் நாட்டை ஆழ்ந்த மந்த நிலைக்குள் தள்ளிவிட்டு, வேலையின்மை மற்றும் சமூக இழிநிலையை பெரிதும் உயர்த்திவிட்டன. சர்வதேச வங்கிகளும் முக்கிய ஐரோப்பிய நிறுவனங்களும் பாப்பாண்ட்ரூ நாட்டின் போருக்குப் பிந்தைய சமூக அமைப்புமுறை, பொதுப்  பணிகள் ஆகியவற்றைத் தகர்ப்பதற்கு போதுமானதைச் செய்யவில்லை என்ற முடிவிற்கு வந்தன. அவருடைய இராஜிநாமாவிற்கு அவைகள் வழிவகுத்து தொழில்நுட்பவாதியும் வங்கியாளருமான பாப்படெமோஸ் ஒரு புதிய தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகத்திற்கு தலைவராக இருத்தியுள்ளன.

எதிர்பார்த்தபடி பாப்படெமோஸ் தன் புத்தாண்டு உரையை தங்கள் நாட்டு மக்கள் புதிய தியாகங்கள் செய்யவேண்டும் என்று அழைப்புவிடுப்பதற்குப் பயன்படுத்தினார். புதன்கிழமை முக்கிய கிரேக்கத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வணிகக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களிலும் இந்த மந்திரத்தை மீண்டும் கூறினார்: பேரழிவு தரும் ஒரு விளைவைத் தடுக்க நாம் இந்தக் குறைந்தபட்ச தியாகங்களை ஏற்க வேண்டும்இப்பொழுது சிலவற்றை விட்டுக் கொடுத்தால்தான், நாம் பின்னர் அதிகம் இழப்பைக் காணமாட்டோம்.

உண்மையில் பாப்படெமோஸ் இப்பொழுது கோரும் சிலவற்றை என்பது கிரேக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் உரிமைகள் மீதான அடிப்படைத் தாக்குதலைப் பிரதிபலிக்கிறது; இவர்கள் ஏற்கனவே முந்தைய சிக்கன நடவடிக்கைகளின் பெரும் பாதிப்பைச் சுமக்கின்றனர்.

புதன்கிழமை கூட்டத்தில் பாப்படெமோஸ், திட்டமிடப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் சிலவற்றைக் கோடிட்டுக் காட்டினார். திட்டங்களின் மையத்தானத்தில் நாட்டின் குறைந்தபட்சம் கீழ்நோக்கித் திருத்தப்பட உள்ளது, பொதுத்துறை ஊதியங்கள், ஓய்வூதியங்களில் புதிய வெட்டுக்கள் உள்ளன; இவற்றைத்தவிர, இருக்கும் விடுமுறை நலன்களும் குறைக்கப்படுகின்றன. அரசாங்கம் நாட்டின் தொழிலாளர் பிரிவுச் சட்டத்தை பொதுத்துறைப் பணிகளை விரைவில் அகற்றி, நேரடிப் பணிநீக்கம் செய்ய அனுமதிக்கும் வகையில் ஆர்வத்தைக் காட்டுகிறது.

பாப்படெமோஸின் பட்டியல் நீள்கிறது: ஆண்டு ஒன்றிற்குக் கிட்டத்தட்ட 14 பில்லியன் யூரோக்கள் சமூகப், பொதுநல, மருத்துவப்பிரிவுச் செலவுகளில் உடனடியாக வெட்டப்படும். வியாழக்கிழமையன்று அவருடைய மந்திரிசபை ஏதென்ஸில் ஒரு கூட்டத்தை நாட்டின் மூடப்பட்ட தொழில்களை முறிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கக் கூடியது: இதையொட்டி இன்னும் கூடுதலான பணிநீக்கங்களும் வேலை வெட்டுக்களும் அனுமதிக்கப்படும்.

இன்னும் சிக்கனத்திற்கான சமீபத்திய அரசாங்க நடவடிக்கையின் பின்னணி அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் பான்ட்லிஸ் காப்சிஸ்ஸினால் கொடுக்கப்பட்டது. செவ்வாயன்று அவர் சர்வதேச வங்கிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கோரும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை என்றால் கிரேக்கம் யூரோப் பகுதியை விட்டு நீங்க நேரிடலாம் என்று எச்சரித்தார்.

ஜேர்மனி வணிகச் செய்தித்தாள் Handelsblatt புதனன்று ட்ராஷ்மே-கொடூரச் சித்திரங்கள் என்ற தலைப்பில் முக்கிய அரசியல்வாதிகள் காட்டுவது ஒரு நோக்கத்தைத்தான் கொண்டுள்ளதுமக்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து கிரேக்க அரசியல்வாதிகளும் தவிர்க்கமுடியாத வெட்டுக்களை ஏற்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே அது.

யூரோப் பகுதியிலிருந்து ஒருவேளை வெளியேறக்கூடும் என்னும் காப்ஸிஸின் கருத்துக்கள் பரந்த அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன; ஆனால் அன்று அவர் கூறிய வேறு ஒரு முக்கியமான கருத்து அதிக கவனத்தைப் பெறவில்லை. ஆயினும் அது தற்பொழுது புதிய கிரேக்க அரசாங்கம் சிந்திக்கும் நிகழ்வுகளைப் பற்றி உட்பார்வை கொடுக்கிறது. எத்துறையில் புதிய வெட்டுக்கள் வரும் என்று கேட்கப்பட்டதற்கு, காப்ஸிஸ் பதில் கூறினார்: புதிய வரிகளைச் சுமத்துவது எளிதல்ல என நான் நம்புகிறேன், ஆனால் செலவுக் குறைப்புக்களை ஏற்படுத்துவது என்பதற்கு பொருள் என்ன? பொதுத்துறையை மூடுவதா? நமக்கு எளிதான தீர்வு இல்லை.

புதன்கிழமைக் கூட்டத்திற்கு வந்த தொழிற்சங்கத் தலைவர்கள் பாப்படெமோஸ் கோரும் வெட்டுக்களுக்குத் தாங்கள் கொள்கையளவில் எதிர்ப்பைக் கொள்ளவில்லை, மாறாக வெட்டுக்களின் சுமை மற்ற பிரிவுகளிலும் இருத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். கிரேக்கத் தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பின் தலைவரான யானிஸ் பானகோபௌலோஸ் புதிய அரசாங்கத்துடன் வெட்டுக்களைக் குறைப்பதற்குத் தான் விவாதிக்கத் தயார் என்றார்; ஆனால் அவைகள் நேரடியாக ஊதிய வெட்டுக்களை அளிப்பதாக இருக்கக்கூடாது என்றார்.

அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும இடையே நெருக்கமான ஒத்துழைப்பு என்பது முந்தைய சிக்கன நடவடிக்கைத் தொகுப்புக்களைச் செயல்படுத்துவதில் அடிப்படைக் கூறுபாடாக இருந்தது. இவைகள் இப்பொழுது கிரேக்கத் தொழிலாளர்களுக்குப் பெரும் அழிவைத் தந்துள்ளன.

கிரேக்கத்தில் வேலையின்மை மாதம் 20,000 எண்ணிக்கை அதிகமாகிறது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 15-24 வயதில் இருக்கும் இளைஞர்களிடையே வேலையின்மை 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதுடன் இன்னும் உயர்ந்துவருகிறது. ELSTAT  என்னும் ஹெலெனிக் புள்ளிவிவர அதிகாரம் வெளியிட்டுள்ள வறுமை வளர்ச்சி பற்றிய சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஆண்டு முடிவில் 3 மில்லியன் கிரேக்கர்கள் (27.7%) வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்றனர் அல்லது சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர் என்று புலப்படுத்தியுள்ளது. இன்னும் 27.8 சதவிகிதத்தினர் தாங்கள் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கத் திணறுவதாகக் கூறியுள்ளனர்.

அப்பொழுது முதல் நாடு இன்னும் ஆழ்ந்த மந்திநிலையில் மூழ்கிவருகிறது; நூறாயிரக்கணக்கான வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாங்கம் குறைந்தபட்சம் 14,000 பொதுத்துறை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. முந்தைய பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ அறிமுகப்படுத்திய சிக்கன வரவு-செலவுத் திட்டங்களின் இணைந்த பகுதி சாதாரணத் தொழிலாளர்கள் மீதி விதிக்கப்படும் வரிகள் உயர்த்தப்பட்டதுதான். இதையொட்டி கடந்த இரு ஆண்டுகளில் வறுமை படர்ந்துள்ளது அதிகமாகிவிட்டது என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட சிக்கன நடவடிக்கைகள் ஆழ்ந்த பொருளாதாரச் சரிவிற்கு வழிவகுத்துள்ளன. கிரேக்க நிதிய அமைச்சரகம் விரைவில் நாடு அதன் இலக்கான வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை 2011ல் 9 சதவகிதம் எனக் குறைப்பதில் தோற்றுவிட்டது என்று அறிவிக்க உள்ளது. இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளின் பிரதிநிதிகள், இம்மாதம் பின்னர் ஏதென்ஸுக்கு வருவதாக இருப்பது அரசாங்கச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும், பொதுத்துறை வேலைகளை அகற்ற வேண்டும் என்று கோரக்கூடும்.

நாடு தொடர்ந்து அதன் நான்காவது மந்தநிலை ஆண்டில் நுழைகையில், கிரேக்கத்தின் செல்வமிக்க உயரடுக்கு தன் பரந்த செல்வங்களை நாட்டை விட்டு மாற்றிக் கொண்டிருக்கிறது. 2010ல் கிரேக்க மில்லியனர்கள் 40 பில்லியன் யூரோக்களுக்கும் மேல், கிட்டத்தட்ட 53 பில்லியன் டொலர்களை நாட்டின் வங்கி முறையில் இருந்து திரும்பப் பெற்று அவற்றை பாதுகாப்பான இடங்களில் சேமித்துள்ளனர். இந்த தொகை நாட்டின் தேசிய உற்பத்தியில் கிட்டத்தட்ட 17 சதவிகிதமாகும்.