சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Child poverty map of UK paints a bleak picture

ஐக்கிய இராச்சியத்தில் சிறுவர் வறுமை நிலை பற்றிய சித்திரம் மிகவும் இருண்டதாக இருக்கிறது

By Dennis Moore
27 January 2012

use this version to print | Send feedback

பிரிட்டனின் மிக வறிய பகுதிகள் சிலவற்றில், 40 முதல் 50 சதவிகிதம் வரை சிறுவர்கள் வறுமையில் வாழ்கின்றனர்; லண்டனிலுள்ள பகுதிகளில் மிக அதிகமான முறையில் வறுமை நிலவுகின்றன.

பிரிட்டனில் சிறுவர் வறுமைநிலை என்பது வேலை உதவிநலன் பெறாத குடும்பங்களின் வறுமை அல்லது வேலையிருந்தும் வருமானம் போதாமல் வரி வசதிகளைப் பெறும் குடும்பங்களின் வறுமை என வகைப்படுத்தியுள்ளது; பிந்தையதில் ஆண்டு வருமானம் என்பது சராசரியை விட  25,000 பவுண்டுகளை விடக் குறைவாக இருக்க வேண்டும். 60 சதவிகிதத்திற்கு கீழ் சராசரி வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைச் சாதனங்களின் பற்றாக்குறையானது அடிப்படைத் தேவைகளான உணவு, வெப்பமாக்கல் வசதி, உடை மற்றும் மேலதிக கல்விச் செலவுகளான பள்ளிச் சுற்றுலா ஆகியவைகளை பெறுவதற்கு குடும்பங்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளது.

வீட்டு வாடகைச் செலவுகள், வீட்டுச் செலவுக் கட்டணங்கள், பொதுக் குடும்பத் தேவைகளுக்குச் செலவழித்தல் ஆகியவை நாள் ஒன்றிற்குக் கிட்டத்தட்ட 12 பவுண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக ஒரு குடும்ப உறுப்பினருக்கு இருக்க வேண்டும். நலன்களை பெறும் இக்குடும்பங்களுக்கு இந்தத் தொகை கணிசமாகக் குறையலாம்.

சிறுவர் வறுமையை ஒழிக்கும் பிரச்சாரம் என்னும் அறிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், ஒரு குறிப்பிட்ட உள்ளூர் அதிகாரப் பகுதி மற்றும் பாராளுமன்ற தொகுதி ஆகியவற்றில் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் பற்றிய வரிச் சலுகைத் தகவல்களில் இருந்து திரட்டப்பட்டுள்ளன. இது பொதுவாக மிகத் துல்லியமாகவும், இன்றுவரை புதுப்பிக்கப்பட்டதாகவும், 2011 நடுப்பகுதி வரைகூட பிரிட்டனின் சிறுவர் வறுமை குறித்து இருக்கும் எனக் கருதப்படுகிறது.

·  19 பாராளுமன்றத் தொகுதிகளில் 10ல் நான்கு குழந்தைகள் வறுமையில் உள்ளனர்; 100 உள்ளூர் வட்டாரங்களில் வறுமையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் சதவிகிதம் 50 முதல் 70 வீதம் வரை உள்ளது.

·  பெரும் இழப்பிற்குட்பட்ட பகுதிகள் லண்டனில் உள்ளன. கிட்டத்தட்ட 238,000 மக்கள் கொண்ட Tower Hamlets நகரம் மிக மோசமான பாதிப்பிற்கு உட்பட்டதாகும்; இங்கு 52 சதவிகித சிறுவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். Islington இரண்டாம் இடத்திலும், Hackney, Westminster மற்றும் Camden ஆகியவை பட்டியலில் முதல் பத்திற்குள் உள்ளன.

·  பிரிட்டனின் பிற பகுதிகளான Birmingham Ladywood, Liverpool Riverside மற்றும் Belfast West போன்றவை அனைத்தும் சிறுவர் வறுமையைப் பொறுத்தவரை 46 அல்லது அதற்கு மேற்பட்ட சதவிகிதத்தில் உள்ளன.

·  நாட்டில் மிக மோசமான நிலையில் மூன்றாவது இடத்தில் மான்செஸ்டர் உள்ளது; மான்செஸ்டர் மத்திய தொகுதி சிறுவர் வறுமைத் தரத்தில் 40% ஐப் பதிவு செய்துள்ளது. மான்செஸ்டர் முழுவதிலுமாக 40% சிறுவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.

·  ஸ்கொட்லாந்தில், கிளாஸ்கோவில் ஸ்ப்ரிங்பேர்ன் பகுதி வறுமையில் வாழும் குழந்தைகளை 52 சதவிகிதம் கொண்டுள்ளது; நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் 44 சதவிகித குழந்தைகள் உள்ளன.

சிறுவர் வறுமையை ஒழிக்கும் பிரச்சாரத்தின் நிர்வாக இயக்குனர் ஆலிசன் கம்ஹம் கூறினார், சிறுவர் வறுமைச் சித்திரம் சமூகத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவை காட்டுகிறது, இங்கு மில்லியன் கணக்கான சிறார்களின் வாழ்க்கை வாய்ப்புக்கள் வறுமையினாலும் சமத்துவமின்மையினாலும் சேதப்பட்டுள்ளன.

வறுமை என்பது ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும். மான்செஸ்டரிலுள்ள ஒரு சிறுவன் பார்னெட்டிலுள்ள சிறுவனை விட 7 ஆண்டுகள் குறைவாக வாழ்வான் என்றும் மான்செஸ்டரிலுள்ள ஒரு சிறுமி கென்சிங்டன், வெஸ்ட்மின்ஸ்ட்ர் மற்றும் செல்சீ ஆகிய பகுதிகளில் இருக்கும் சிறுமையைவிட 6 ஆண்டுகள் குறைவாக வாழ்வாள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏழைக் குழந்தைகள் சிறியவையாகவும், பிறக்கும்போது எடையில் குறைந்தும் பிறக்கின்றன; இவைகள் குழந்தைகள் இறப்பு மற்றும் நாட்பட்ட நோய்கள் என்று பிற்காலத்தில் வருவதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளவை. வறுமையில் வளரும் குழந்தைகள் குறைந்த தகுதிகளுடன் பள்ளிகளை விட்டு 16 வயதில் நீங்கிவிடுவர் என்றும் கூறப்படுகிறது. தம்பதிகளில் இரண்டு சதவிகிதத்தினரும், ஒற்றைப் பெற்றோர்களில் 8 சதவிகிதத்தினரும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரு ஜோடி காலணிகளை வாங்க இயலமுடியாமல் உள்ளனர்.

தொழில்துறை வளர்ச்சியுற்றுள்ள உலகில் பிரிட்டன் மிக உயர்ந்த வறுமை வீதங்களைக் கொண்டுள்ளவற்றில் ஒன்றாகும். 4 மில்லியன் குழந்தைகள் (கிட்டத்தட்ட மூன்றில் ஒரு குழந்தை) தற்பொழுது வறுமையில் வாழ்கிறனர். இந்த எண்ணிக்கை வியத்தகு அளவில் கடந்த 30 ஆண்டுகளில் பெருகிவிட்டது. 1979ம் ஆண்டு பத்தில் ஒரு குழந்தைதான் வறுமையில் வாழ்ந்தது. உள் புறநகர்ப்பகுதிகளில் இது பொதுவாக அதிகமாகவே உள்ளது.

அறிக்கையில் ஒரு பகுதி கூறுகிறது, பெற்றோர்கள் பல நேரமும் தங்கள் குழந்தைகளை நிதிக் கஷ்டங்கள், வறுமை என்றும் இழிந்த முத்திரை ஆகியவற்றின் பாதிப்புக்கள் சிலவற்றில் இருந்து காப்பாற்ற முயல்கின்றனர்.

சில நேரம் பெற்றோர்கள் உணவு உட்கொள்ளாமல் இருத்தல் போன்ற சில தியாகங்களைச் செய்வர்; அதையொட்டி அவர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு வெப்பம் தரும் கோட் அணியவைத்து அனுப்பவர்; அல்லது குழந்தைகளின் நண்பர்கள் பயிற்சி பெறும் பிரபலப் பயிற்சியாளர்களின் கீழே விளையாடுவதற்கு உதவுவர்.

தங்கள் குழந்தைகள் ஒதுக்கப்பட்டுள்ளோம் என்ற உணர்வைக் கொள்ளவோ, மற்ற சிறார்களால் மிரட்டலுக்கு உட்படுவதையோ அவர்கள் விரும்பவில்லை. ஆனால் வீட்டின் மூடிய கதவுகளுக்குப் பின் உள்ள கஷ்டங்கள் பல நேரமும் நன்கு தெரிவதுடன் அவர்களில் பலரும் கடன்சுமையிலும் ஆழ்ந்துள்ளனர்.

கன்சர்வேடிவ் கட்சி/லிபரல் ஜனநாயகக் கட்சிக் கூட்டணி அரசாங்கத்தால் முன்னோடியற்ற வகையில் சுமத்தப்படும் சிக்கனத் திட்டம், சமூகநலச் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள், ஊதியத் தேக்கம், எரிபொருள், உணவுப் பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றையும் அடக்கியுள்ள நிலை, குடும்பங்கள் வாழ்வதற்கே பெரும் இடரை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய போக்கான வறுமையையும் இழிநிலையையும் மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு அதிகரிப்பது உயருமேயானால், இந்த குழந்தைகள் வறியநிலை எண்ணிக்கை 2015க்குள் 400,000 ஐ எட்டும் என்று Institute for Fiscal Studies கணித்துள்ள நிலையில், இரு குழந்தைகளைக் கொண்ட தம்பதியினர் ஆண்டு ஒன்றிற்கு நிதிய அளவில் 1,500 பவுண்டுகள் குறைந்து விட்ட நிலையில்தான் இருப்பர்.

ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்கான அறக்கட்டளைகள் குறித்த தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மான்செஸ்டரைத் தளமாகக் கொண்ட, படுக்கை, உடைகள், விளையாட்டுப் பொருட்கள் என்று தேவைப்படும் குடும்பங்களுக்கு அளிக்கும்  Wood Street Mission அறக்கட்டளையின் மேலாளரான ஜான் ஓகானர் கூறினார், கடந்த ஆண்டு எங்கள் உதவியை நாடிய மக்கள் 9 சதவிகிதம் அதிகரித்ததைக் கண்டோம். மந்தநிலை தொடர்கையில் இன்னும் அதிக மக்கள் வறுமையில் தள்ளப்படுவர் என்றுதான் உணர்கிறேன்.

1979ம் ஆண்டு மார்கரெட் தாட்சரின் கன்சர்வேடிவ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இத்தகைய சிறுவர் வறுமை அதிகரிப்புப் போக்கு நடந்து வருகிறது; இது அக்கட்சி வேலைகள், ஊதியங்கள், பொதுநலத் திட்டங்கள் ஆகியவற்றைத் தாக்கியதில் உந்துதல் பெற்றது. வறிய குடும்பங்களின் நிலை பற்றி தொழிற் கட்சி கைகளைப் பிசைந்து கொண்டு என்ன கூறியபோதிலும், பிரதம மந்திரி டோனி பிளேயர் ஒரு தலைமுறைக்குள் சிறுவர் வறுமை முடிக்கப்பட்டுவிடும் என்ற உறுதி மொழி கொடுத்திருந்தும்கூட, செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி தொழிற் கட்சி ஆட்சியின் கீழ் மிக உயர்ந்த நிலைமையை அடைந்தது. சிறப்பு கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்ற இலக்கு இருந்த போதிலும், சிறுவர் வறுமை என்பது ஒரு சில சதவிகிதப் புள்ளிகளுக்கு கீழேயே இருந்தது.1998ல் மிக உயர்ந்த நிலையான 33 சதவிகிதம் என்று பொருளாதார ஏற்றக் காலத்திலேயே இருந்தது. இப்பொழுது அது மீண்டும் உயர்ந்து முந்தைய உயர்வைக் காட்டிலும் அதிகமாக செல்ல உள்ளது.

கன்சர்வேடிவ்/லிபரல் அரசாங்கத்தின் கொள்கைகள் இன்னும் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளும். அரசாங்கம் இப்பொழுது ஒரு குடும்பம் பொதுநலப் பணத்தை பெறுவதற்கு ஆண்டு ஒன்றிற்கு  26,000 பவுண்டுகள் என்ற வரம்பைக் கொண்டு வருவதற்குச் சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வரம்பு அதிக வீட்டுச் செலவுகளுள்ள பகுதிகளில் வாழ்வோரைப் பாதிக்கும்; அத்தகைய பிரிவில் மத்திய லண்டனில் 55 சதவிகிதம் பேர் வாழ்கின்றனர்.

இந்நடவடிக்கை ஒருவகையான சமூகத் தூய்மைப்படுத்தலுக்கு ஒப்பாகும். Centre Forum சிந்தனைக் குழுவின் தலைமைப் பொருளாதார வல்லுனர் Tim Leunig அப்சர்வரிடம்  கூறினார்: இதில் மோசமான தாக்குதலுக்கு உட்படுபவை தென்கிழக்கிலுள்ள பெரிய குடும்பங்கள்தாம்; அங்குதான் வாடகைகள் மிக அதிகம். தெற்கு லண்டனில் இருக்கும் டோல்வோர்த்தில்கூட, ஈவினங் ஸ்டாண்டர்ட்டில் கிங்ஸ்டன் பிரிவின் இழிவான பகுதி என்று விவரிக்கப்பட்டுள்ள இடத்தில் கூட, நான்கு படுக்கயறை கொண்ட வீடுகள் வாரத்திற்கு  400 பவுண்டுகள் என்பதில் இருந்து மாற்றம் இருக்காது. வீட்டு உதவிநலனில் வாரத்திற்கு  100 பவுண்டைக் குறைப்பது என்பதுஉங்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தால் சட்ட வரம்பிற்கு இதுதான் பொருள்வாழ்க்கை நடத்துவது கடினமாகும். வாடகை, கவுன்சில் வரிகள், பிற பயன்பாட்டுக் கட்டணங்கள் ஆகியவற்றைக் கொடுத்தபின், நான்கு குழந்தைகள் இருக்கும் ஒரு குடும்பம் நாள் ஒன்றிற்கு ஒரு நபருக்கு 62 பென்ஸுகளைத்தான் வாழ்வதற்குக் கொண்டிருக்கும். இது முற்றிலும் இயலாததாகும்.

பாராளுமன்றத்தின் பதவிக் காலத்திற்குள் பொதுநலச் செலவுகளில் பெரும் முறையில்  18 பில்லியன் பவுண்டுகளை மொத்தமாக அரசாங்கம் குறைப்பதற்கு இப்பாராளுமன்றம் கொண்டிருக்கும் இலக்கின் அடிப்படையில் இந்நடவடிக்கை  270 மில்லியன் பவுண்டுகளை சேமிக்கும் என்று கூறப்படுகிறது. ப்சர்வர் கசியவிட்டுள்ள அரசாங்கக் குறிப்பு ஒன்றை மேற்கோளிட்டுள்ளது; அதில் இந்த ஒரு நடவடிக்கை மட்டும் 100,000 குழந்தைகளை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளிவிடும் என்று தெரிவிக்கிறது. இதைப்போன்ற பல மடங்கு அதிக எண்ணிக்கை வெட்டுக்களினால் ஏற்படும்போது இன்னும் எத்தனை பேர் துயரம் அடையப் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு அடையாளம் ஆகும்.