சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US-NATO war crimes in Libya

லிபியாவில் அமெரிக்கா-நேட்டோவின் யுத்த குற்றங்கள்

Barry Grey
23 January 2012

use this version to print | Send feedback

மத்தியகிழக்கு மனித உரிமைகள் குழுக்களால் கடந்தவாரம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையானது, லிபியாவில் கேர்னல் மௌம்மர் கடாபியின் ஆட்சியைப் பதவியிலிருந்து கீழிறக்கிய கடந்த ஆண்டு யுத்தத்தின் போது, அமெரிக்கா, நேட்டோ மற்றும் அவற்றின் கைப்பாவை "எதிர்ப்பு" படைகளால் நடத்தப்பட்ட யுத்த குற்றங்களுக்குரிய பெரும் ஆதாரங்களை அளித்திருக்கின்றது. அந்த “லிபிய உள்நாட்டு சமூக உண்மை-கண்டறியும் திட்டத்தின் அறிக்கை" (Report of the Independent Civil Society Fact-Finding Mission to Libya) என்பது, மனித உரிமைகளுக்கான பாலஸ்தீனிய மையம் மற்றும் சர்வதேச சட்ட உதவி கூட்டமைப்பு ஆகியவற்றோடு சேர்ந்து, மனித உரிமைகளுக்கான அரேபிய அமைப்பால் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளை முன்வைக்கின்றது

திரிப்போலி, ஜாவியா, சிப்ராதா, கோம்ஸ், ஜிலீடென், மிஸ்ராடா, தவெர்கா மற்றும் சிர்ட்டே ஆகிய இடங்களில் யுத்த குற்றங்ளை நேரில் பார்த்தவர்கள் மற்றும் லிபிய அதிகாரிகள் ஆகியோருடன், யுத்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களையும் நேர்காணல் செய்ததன் அடிப்படையில், பலர் உயிரிழக்கும் மற்றும் பலரைக் காயப்படுத்தும் விதத்தில் பொதுமக்களின் இடங்களை நேட்டோ குறிவைத்து தாக்கியது என்ற ஆதாரங்களைப் விசாரணை செய்ய அந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது. நேட்டோ குண்டுவீச்சிலும், ஏவுகணை தாக்குதலிலும் பாடசாலைகள், அரசு கட்டிடங்கள், குறைந்தபட்சம் ஒரு உணவுக்கிடங்கு மற்றும் தனிநபர்களின் வீடுகள் உட்பட, பொதுமக்களின் இடங்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தன.

நேட்டோ ஆதரவிலான தேசிய இடைக்கால சபையின் (NTC) "கிளர்ச்சி" படைகளால் கடாபி விசுவாசிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை, சித்திரவதை, வெளியேற்றம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கான ஆதாரங்களையும் அந்த அறிக்கை அளிக்கிறது. தேசிய இடைக்கால சபை மற்றும் அதன் இடைக்கால  அரசுடன் சேர்ந்த சக்திகளால் பெரும்பாலும் கறுப்பின தாவெர்காவாசிகள் நிர்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமை மற்றும் துணை-சஹாரா புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தொடர்ச்சியான இடர்பாடுகள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை விவரிக்கிறது.  

வழக்கோ அல்லது குற்றச்சாட்டுகளோ இல்லாமல் பிடித்து வைக்கப்பட்ட கைதிகளைக் காட்டுமிராண்டித்தனமாகவும், தொடர்ச்சியாகவும் அடிப்பது, கடாபிக்கு ஆதரவான போராளிகளை கூட்டாக கொலைசெய்வது ஆகியவற்றைக் குறித்த அறிக்கையையும் மற்றும் "முன்னாள் போராளிகளின் 'படுகொலை' (அதாவது கழுத்தை வெட்டுதல்) உட்பட கண்மூடித்தனமாக மற்றும் பழிவாங்கும் நோக்கத்துடனான படுகொலைகளை" நேரில் பார்த்தவர்களின் அறிக்கைகளையும் புலனாய்வாளர்கள் அளிக்கின்றனர்.  

ஒரு காலனித்துவ வகையிலான ஆக்கிரமிப்பை நடத்த, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அவற்றின் நேட்டோ உடந்தைகளால் பயன்படுத்தப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக போலிச்சாட்டுக்களை அந்த அறிக்கை அம்பலப்படுத்துகின்றது. கடந்த மார்ச்சில், மௌம்மர் கடாபியால் நடத்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக என்ற பெயரில் லிபியா மீது ஒரு “விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட வலயத்தை" நடைமுறைப்படுத்திய மற்றும் ஆயுத தடையாணை விதித்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் 1973 தீர்மானம், உண்மையில் அம்மண்ணில் "எதிர்ப்பு" படைகளோடு இணைந்து ஓர் இரக்கமற்ற யுத்தத்தை நடத்த பயன்படுத்தப்பட்டது.

பெங்காசியிலும் ஏனைய நகரங்களிலும் கடாபிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததற்குப் பின்னர், உடனடியாக, எதிர்ப்பு படைகள் மேற்கத்திய ஆயுத படைகளிடமிருந்து பயிற்சி பெற்றதாகவும், அத்தோடு நேட்டோ சக்திகளிடமிருந்தும் மற்றும் அதனோடு சேர்ந்த அரேபிய அரசுகளிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எகிப்தில் முபாரக்கின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரியில் வெடித்த  கடாபிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு, லிபியாவிற்குள் ஓர் ஏகாதிபத்திய-சார்பு உள்நாட்டு யுத்தத்தைத் தொடங்க, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அவற்றின் முகவர்களால் வேகமாக கைப்பற்றப்பட்டது.  

அந்த அறிக்கை குறிப்பிடுவது: “இந்த புலனாய்வு திட்டத்தின் கீழ் கையில் கிடைத்த முதல்கட்ட தகவல்களும், மற்றும் இரண்டாங்கட்ட ஆதாரங்களின்படி, சான்றாக, கடாபி துருப்புகளால் கைப்பற்றப்பட்டு இருந்த சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, எதிர்ப்பு படைகளால் எடுக்கப்பட்ட ஓர் ஒடுக்குமுறை நடவடிக்கையாக விவரிக்கப்படக்கூடிய ஒன்றில் நேட்டோவும் பங்கெடுத்திருந்ததாக காணப்படுகிறது. அதேயளவிற்கு, ஒரு பிராந்திய உணவுக்கிடங்கு போன்ற குறிப்பிட்ட இலக்குகளைத் தேர்ந்தெடுத்தமையானது, குடிமக்களைப் பாதுகாக்கும் சாக்கில் நடத்தப்பட்ட இதுபோன்ற தாக்குதல்களின் பங்கு குறித்து முதல் பார்வையிலேயே முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.”    

43 ஆண்டுகளுக்கு முன்னால் லிபியாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்காவிற்கும், பிரிட்டிஷ் கூட்டு ஸ்தாபனங்களுக்கும் வழங்கியவரும், லிபிய மண்ணில் அந்த இரண்டு சக்திகளின் பெரும் இராணுவ தளங்களை அமைக்க அனுமதித்தவருமான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கைப்பாவையான இட்ரெஸ் அரசரின் கீழ் இருந்த பழைய நிலைமைகளுக்குப் பின்னால் நகர்த்துவதை நோக்கமாக கொண்டிருந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளின் மிதமான பிம்பமாக மட்டுமே அந்த அறிக்கை இருந்தது. சிர்ட்டேயை தரைமட்டமாக்குவதற்கும், கடாபிக்குத் தான்தோன்றித்தனமாக தீர்ப்பு வழங்குவதற்கும் இட்டு சென்ற பாரிய அழிப்புகள் மற்றும் படுகொலைகள், “மனித உரிமைகளுக்கான" மற்றும் "குடிமக்களின் பாதுகாப்பிற்கான" ஒரு யுத்தம் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை அர்த்தமற்றதாக மட்டும் ஆக்கவில்லை, அதை வெறுப்பூட்டுவதாகவும் ஆக்கியுள்ளது.  

லிபியாவின் எல்லைகளில் இருக்கும் இரண்டு நாடுகளான துனிசியா மற்றும் எகிப்தில் நீண்டகாலமாக இருந்துவந்த மேற்கத்திய-சார்பு ஆட்சிகளை வெளியேற்றிய புரட்சிகர எழுச்சிகளுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் காட்டிய விடையிறுப்பாக லிபிய சூறையாடல் இருந்தது. அந்நாடுகளின் எண்ணெய் வளங்களின் மீது முழுமையான கட்டுப்பாட்டை நிறுவுவதும், வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு முழுவதிலும் எழுந்த தொழிலாள வர்க்க போராட்டங்களின் வளர்ச்சியை ஒடுக்குவதும் மற்றும் கடாபி ஆட்சியோடு மிக நெருக்கமாக பொருளாதார உறவுகளை ஸ்தாபித்திருந்த சீனா மற்றும் ரஷ்யாவிற்கு ஒரு பலத்த தாக்கத்தை கொடுப்பதுமே அந்த ஏகாதிபத்திய யுத்தத்தின் நோக்கமாக இருந்தது.

அந்த யுத்தம் அந்நாட்டை சீரழிவுக்கு உள்ளாக்கியது. அல்கொய்தாவுடன் உறவு வைத்திருக்கும் சிலர் உட்பட கடாபி ஆட்சியின் முன்னாள் அதிகாரிகள், இஸ்லாமிஸ்டுகள், மற்றும் மேற்கத்திய உளவுத்துறை உடைமைகளின் ஒரு ஸ்திரமற்ற கூட்டணியான தேசிய இடைக்கால சபையே, அந்த யுத்தம் 50,000 நபர்களின் உயிரைப் பறித்துவிட்டதாகவும், மேலும் 50,000 பேரை காயப்படுத்தியதாகவும் மதிப்பிடுகிறது. தேசிய இடைக்கால சபைக்குள் இருக்கும் கோஷ்டிகளுக்கு இடையில் அதிகரித்துவரும் உட்பூசல், போட்டி மரபுரீதியான குழுக்களுக்கும், பிராந்தியரீதியான போராளிகளுக்கும் இடையில் முழு அளவிலான உள்நாட்டு யுத்தத்திற்குக் கதவுகளைத் திறந்துவிடுகின்றது.

இந்த வாரயிறுதியில்தான், அதிகரித்துவரும் உள்நாட்டு யுத்தம் குறித்து தேசிய இடைக்கால சபை தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலீலிடமிருந்து வெளியான எச்சரிக்கைகளுக்கு இடையில், இடைக்கால அரசாங்கத்தை இராஜினாமா செய்யக்கோரி ஒரு கூட்டம் பெங்காசியில் தேசிய இடைக்கால சபையின் தலைமையிடத்திற்குள் வலுக்கட்டயமாக நுழைந்தது. தேசிய இடைக்கால சபையின் துணை ஜனாதிபதி அப்தெல் ஹாபிஜ் ஹோகா அந்த சரியான நேரத்தில் இராஜினாமா செய்தார்.

அமெரிக்க-நேட்டோ யுத்த குற்றங்களின் அறிக்கையானது, வாஷிங்டன் மற்றும் நேட்டோவின் மனித உரிமை போலிக்காரணங்களையே கிளிப்பிள்ளை போல மீண்டும்மீண்டும் கூறிக்கொண்டு, அவ்விதத்தில் லிபிய யுத்தத்திற்கு பகிரங்கமாகவோ அல்லது பின்னாலிருந்தோ ஆதரவு கரம் நீட்டிவந்த, “இடது" கட்சிகளின் வகையறாக்கள், அறிவுஜீவிகள் மற்றும் கல்வியாளர்களின் மீதான இன்னுமொரு குற்றப்பத்திரிக்கையாகவும் உள்ளது. சமூக ஜனநாயகவாதிகள், பசுமை கட்சியினர், ஜேர்மன் இடது கட்சி போன்ற முன்னாள் ஸ்ராலினிஸ்டுகளில் இருந்து பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) போன்ற போலி-தீவிர கொள்கையுடையவர்கள் வரையில் இத்தகைய சக்திகளும் ஏகாதிபத்திய முகாமிற்குள் நகர்ந்துள்ளன என்பதையே அது அடிக்கோடிடுகிறது.