சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Renewed mass protests mark anniversary of Egyptian Revolution

புதுப்பிக்கப்பட் வெகுஜன எதிர்ப்புகள் எகிப்தியப் புரட்சியின் ஓராண்டு நிறைவை அடையாளப்படுத்துகின்றன

By Johannes Stern
26 January 2012
 

use this version to print | Send feedback

Tahrir
The demonstration in Tahrir Square on Wednesday [Photo: Gigi Ibrahim]

ஜனவரி 25ல் எகிப்திய புரட்சி தொடங்கி ஓராண்டு முடிந்தவேளையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் எகிப்து முழுவதும் தெருக்களுக்கும் சதுக்கங்களுக்கும் வந்து அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சிக்குழுவிற்க எதிரான ஆர்ப்பட்டங்களை நடத்தினர்.  அகற்றப்பட்டுவிட்ட ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்குப் பின் பதவிக்கு வந்தவரும் SCAF எனப்படும் ஆயுதப்படைகளின் தலைமைக்குழுவின் தலைவருமான ஜெனரல் மகமத் ஹுசைன் தந்தவி பதவியை விட்டு அகற்றப்பட வேண்டும், ஆட்சி கவிழக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

ஓராண்டிற்கு முன் இருந்ததைப் போலவே, தலைநகரின் பல அண்டைப்பகுதிகளில் இருந்து பல ஆர்ப்பாட்ங்கள் தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிப் புறப்பட்டன; இதன் நுழைவாயில்கள் மக்கள் குழுக்களினால் பாதுகாப்பில் கொள்ளப்பட்டன. நாள் முழுவதும் பாதுகாப்புப் படைகளும் இராணுவமும் சதுக்கத்தில் இல்லை. கெய்ரோவில் கனமழையானாலும், அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ ஆட்சி வீழ்க! வீழ்க!” “ஆட்சியைக் கீழிறக்க மக்கள் விரும்புகின்றனர்!, வெற்றி கிடைக்கும் வரை புரட்சி, புரட்சி, எல்லா எகிப்திய தெருக்களிலும் புரட்சிஎன்று கோஷம் எழுப்பிய வண்ணம் சதுக்கத்தில் கூடிவிட்டனர்.

எதிர்ப்பாளர்களை படுகொலை செய்தவர்களுக்கு எதிராகப் நேரடியாக கோஷங்கள் எழுப்பப்பட்டன; அதேபோல் வெளிப்பூச்சிற்காக நடைபெறும் ஹொஸ்னி முபாரக், அவருடைய இரு மகன்கள் பற்றிய விசாரணைக்கு எதிராகவும் கோஷங்கள் இருந்தன. சதுக்கத்தின் நடுவே ஒரு மிகப் பெரிய சுவரொட்டி முபாரக், முன்னாள் உள்துறை மந்திரி ஹபிப் எல்-அட்லி மற்றும் தந்திவி ஆகியோர் தங்கள் கழுத்தைத்  சுற்றிலும் கயிறுகள் இருந்த நிலையில் புரட்சித் தொடர்பான விசாரணைகள் தேவை என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

கிசா சதுக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தஹ்ரிர் இருக்கும் திசை நோக்கி அணிவகுத்ததோடு,  இராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பரித்தும், புரட்சி தொடரவேண்டும், ரொட்டி, சுதந்திரம் மற்றும் மனித கௌரவம் என்ற கோஷங்களை எழுப்பியும் குழுமினர். கோஷங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றிற்கு எதிராகவும் எழுப்பப்பட்டன.

 

 மற்ற வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மெகன்டெசீன், ஹெலியோபொலிஸ், நஸ்ர் நகரம் மற்றும் ஷுப்ரா புறநகர்ப்பகுதியில் தொழிலாளர் பிரிவினர் வாழுமிடம் ஆகியவற்றில் இருந்து புறப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷுப்ரா மக்களே, நாம் மீண்டும் புறப்பட்டு நம் வெற்றியைப் பற்றுவோம் என்று கோஷமிட்டனர். ஷுப்ரா எதிர்ப்பு அணியில் இருந்த அமலப் மஹ்முத் Egyptian Independent இடம், புரட்சியைத் தொடர நாங்கள் இங்கு உள்ளோம். எதுவும் சாதிக்கப்படவில்லை, நாட்டில் SCAF ஊழலைத்தான் தூண்டிவிட்டுள்ளது, தியாகிகள், காயமுற்றவர்கள் மற்றும் எகிப்தியர்களுடைய உரிமைகளைப் பெற இங்கு கூடியுள்ளோம். என்றார்.

10,000 பேருக்கும் அதிகமான எண்ணிக்கை கொண்டிருந்த இராணுவ-எதிர்ப்பு ஆரப்பாட்டங்களில் மாணவர்கள் அயின் ஷாம்ஸ், கம்ரா மற்றும் கெய்ரோ பல்கலைக்கழகங்களில் இருந்து தஹ்ரிர் சதுக்கத்திற்கு சென்றனர். கெய்ரோ பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்ட அணிவகுப்பினர் கடந்த ஆண்டு முழுவதும்  பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட தியாகிகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்த சவப்பெட்டிகளைச் சுமந்த வண்ணம், நாங்கள் ஒன்றும் இங்கு களிப்பதற்குக் கூடவில்லை. இங்கு தியாகிகளின் உரிமைகளைப் பெறக் கூடியுள்ளோம். என்று கோஷம் இட்டனர். பிற்பகலில் சதுக்கம் முழுவதும் எதிர்ப்பாளர்களால் நிறைந்தது. அதேபோல் அருகில் இருந்த தெருக்களிலும் கெய்ரோவின் முக்கிய சதுக்கங்களிலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. நோக்கர்களின் கருத்துப்படி, எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை ஓராண்டிற்கு முன் குழுமியிருந்ததைப் போலவே இருந்தது.

இராணுவ ஆட்சிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் பிற எகிப்திய நகரங்களிலும் ஆளப்படும் பகுதிகளிலும் நடத்தப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே புரட்சியின் மற்றொரு மையமாக இருந்த துறைமுக நகரான சூயஸ்ஸில், ஆயிரக்கணக்கான மக்கள் அர்பயின் சதுக்கத்தில் கூடி, பின்னர் நகரம் முழுவதும் மக்கள் ஆட்சியின் வீழ்ச்சியை விரும்புகின்றனர் எனக் கோஷமிட்டு அணிவகுத்துச் சென்றனர்.

அலெக்சாண்டிரியாவில் அரை மில்லியன் எதிர்ப்பாளர்கள் வடக்கு இராணுவப் பகுதிக்குச் சென்ற அணிவகுப்பில் கலந்து கொண்டனர். எதிர் புரட்சிகர மற்றும் தொழிலாள வர்க்க-விரோத அரசியலுக்கான இழிந்த போக்கைக் கொண்ட ஓர் இஸ்லாமிய அமைப்பான சலாபிஸ்ட்டுக்களின் ஒரு குழுவினரும் ஆர்ப்பாட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போர்க்குணம் மிகுந்த தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கான நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ள மகல்லா அல்-குப்ரா நகரில், ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். மற்ற எதிர்ப்புக்கள் அனைத்து முக்கிய எகிப்திய நகரங்களான இஸ்மைலியா, லக்சர், அஸ்வான், பேயௌம், க்வேனா மற்றும் போர்ட் செயித் ஆகியவற்றில் நடைபெற்றன.

பிரித்தானிய கார்டியன் எதிர்ப்புக்களின் தன்மையைக் குறித்துக் கீழ்க்கண்டவாறு விவரித்தது: தஹ்ரிர் சதுக்கத்திற்கு வெளியே, இப்பொழுது நான் நடந்து கொண்டிருக்கும் கிசா உட்பட, நகரின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் நூறாயிரக்கணக்கான மக்கள் வெளிவந்துள்ளனர்....அவர்களுக்கு இது ஒன்றும் களிப்பான நிகழ்வு அல்ல.... இது புரட்சியை முடிப்பதற்கும் இராணுவ ஆட்சியை அகற்றுவதற்குமான போராட்டம் ஆகும். மிகச் சீற்றமான உணர்வுடன் நம்பிக்கையும் நிறைந்து காணப்படுகிறது.

ஆட்சியைக் கீழிறக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு  தொழிலாளர்கள், மாணவர்கள் இடையே புரட்சிப் போராட்டம் முழுவதும் தொடரும் நிலை, இராணுவ ஆட்சியினாலும், அதன் அமெரிக்க அதிகாரிகளாலும், எகிப்திய அரசியல் நடைமுறையினாலும் ஏற்பாடு செய்யப்படும் ஜனநாயத்திற்கு மாற்றம் என அழைக்கப்படுவதை நிராகரிப்பதாகத்தான் உள்ளது. உத்தியோகபூர்வ அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகள் அனைத்திற்கும், புரட்சிகர எகிப்திய தொழிலாளர்கள் இளைஞர்கள் ஆகியோருக்கும் இடையே பிவு பட்டிருக்கும் வர்க்கப்போராட்டத்தின் வெளிப்பாடுதான் இது.

எதிர்ப்புக்களுக்கு அழைப்புவிடுத்த அரசியல் இயக்கங்கள் அல்லது அவற்றில் பல இளைஞர் கூட்டணிகளுடன் பங்கு பெற்றவையான ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம், கெபயா, தாராளவாத அரசியல்வாதி எல்பரடேயியின் ஆதரவாளர்கள், மற்றும் குட்டி முதலாளித்துவ இடது குழுக்களான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) போன்றவை முதலில் இராணுவ ஆட்சியை ஆதரித்தன. இதுதான் நாட்டின் பாதுகாவலர் (எல்பரடேயின் சொற்களில்) என்று கூறப்பட்டது அல்லது இன்னும் அதிக சமூக, ஜனநாயக சீர்திருத்தங்களைக் கொண்டுவர இதற்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது (RS).

இராணுவ ஆட்சிக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஓராண்டாக நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களுக்குப் பின், இந்தப் பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன; இப்பொழுது அரசியல் நடைமுறை பெருந்திகைப்புடன் இராணுவ ஆட்சிக்கு அது தொடக்கத்தில் கொடுத்த ஆதரவை மூடி மறைக்க முயல்கிறது, அதேபோல் புதுப்பிக்கப்படும் புரட்சிகரப் போராட்டங்கள் வெடிப்பைத் தடுக்கவும் முயல்கிறது.

ஒருபுறம் மோசமான சமூக நிலைமைகள், சமுக சமத்துவத்திற்கான கோரிக்கைகள், உண்மையான ஜனநாயகத்திற்கான கோரிக்கைகள் ஆகியவற்றினால் உந்துதல் பெறும் மில்லியன் கணக்கான எதிர்ப்பாளர்கள் ஆட்சி சரிய வேண்டும் என்னும் தங்கள் அழைப்புக்களைப் புதுப்பித்து, உண்மையான இரண்டாம் புரட்சியை கோருகின்றனர். மறுபுறமோ, இருக்கும் அரசியல் கட்சிகள் புரட்சிகரத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அடுத்த பொறியில் மாட்டுவதற்குத் தயாரிப்புக்களைக்கொண்டுள்ளன. இதில் சமீபத்தியது இராணுவச் சட்டதின்கீழ் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின் அடிப்படையில் சிவிலிய ஆட்சிக்கு அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற அழைப்பு ஆகும்.

இஸ்லாமியவாதிகளுக்கு அதிகாரத்தை ஒப்படைத்தல் என்பது முன்னேற்றமான, அல்லது ஜனநாயகமான நிலைப்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை. இஸ்லாமியவாதிகள் தேர்தல்களில் வெற்றிபெற முடிந்ததற்குக் காரணம்அத்தேர்தல்களும் குறைந்த வாக்குப் பதிவை ஒரு கால வன்முறை மோதல்கள் இராணுவ ஆட்சிக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பின் நடந்ததுஅவை குட்டி முதலாளித்துவ இடது, எகிப்திய நிதிய உயரடுக்கு மற்றும் அவற்றின் அமெரிக்க, வளைகுடா முடியரசுகளிடம் இருந்த ஆதரவினால்தான். புரட்சியின் போக்கின்பொழுது இஸ்லாமியவாதிகள் தொடக்கத்தில் இருந்தே ஓர் எதிர்ப்புரட்சிப் பங்கைத்தான் கொண்டிருந்தனர்; ஜனவரி 25 எதிர்ப்புக்களை ஓராண்டிற்கு முன் எதிர்த்தனர்; மேலும் இராணுவ ஆட்சிக்குழு பதவி ஏற்றதில் இருந்து அதற்கு வெளிப்படையான ஆதரவாளர்களாகத்தான் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்லாமியவாதிகளின் அதிகாரிகள் தாங்கள் இராணுவம் கொடுக்கும் சிறப்பு நிலையை ஏற்பதற்கில்லை என்றும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதிய மூலதனம் ஆகியவற்றுடன் நெருக்கமாக உழைக்க உள்ளதாகவும் அறிவித்தனர். இரு வாரங்களுக்கு முன்பு, முஸ்லிம் பிரதர்ஹுட்டின் அரசியல் கருவியான சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சியின் தலைவரான மகம்மத் மொர்சி, அமெரிக்க துணை வெளிவிவகாரச் செயலர் வில்லியம்ஸ் பர்ன்ஸைச் சந்தித்து, சுதந்திர நீதிக்கட்சி அமெரிக்க-எகிப்திய உறவுகளின் முக்கியத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது என அறிவித்தார். சில நாட்களுக்குப் பின் சுதந்திர, நீதிக்கட்சி சர்வதேச நாணய நிதியம் வழங்கத்தயாராக இருக்கும் $3.2 பில்லியன் கடனுக்குத் தன் ஆதரவைக் கொடுத்தது.

இஸ்லாமியவாதிகளின் ஆழ்ந்த எதிர்ப்புரட்சி பார்வை இருந்தபோதிலும்கூட, மத்தியதர வர்க்கக் குழுக்களான ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் போன்றவை மக்கள் எதிர்ப்புக்களை இந்த வலதுசாரிச் சக்திகள்பால் சார்படையச் செய்ய வேண்டும் என உறுதியாக உள்ளனர். திங்களன்று, பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடருக்குப்பின், ஏப்ரல் 6 குழு பாராட்டுச் செய்தி ஒன்றைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி புரட்சியின் கோரிக்கைகளை அது நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஜனவரி 24ம் திகதி  RS அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான கெய்ரோவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சமே நஜிப்பின் உரையை வெளியிட்டது; இதில் மக்கள் பாராளுமன்றத்தை ஒரு முற்றுகையின்கீழ்..... தன் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க இருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் கடந்த ஆண்டின் எகிப்தியப் புரட்சி, எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் புரட்சிகர விழைவுகளை எகிப்திய முதலாளித்துவ மற்றும் அவற்றின் மத்தியதர பின்னிணைப்புக்களில் இருந்து முறித்துக்கொண்டு போராட்டத்திற்கான சக்தியுடன் ஈடுபட்டால்தான் அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது. புரட்சியை முன்னேற்றுவிப்பதற்கு எகிப்திய தொழிலாள வர்க்கம் இராணுவ ஆட்சியைக் கீழிறக்கி அதற்குப் பதிலாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவ வேண்டும்; அந்த அரசாங்கம் எகிப்து, முழு மத்தியக் கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் சோசலிச அரசியலுக்காகப் போராட வேண்டும்.