சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France pulls back from immediate Afghanistan troop withdrawal

உடனடியாக ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப்பெறும் நிலைப்பாட்டை பிரான்ஸ் பின்வாங்குகின்றது

By Olivier Laurent
28 January 2012

use this version to print | Send feedback

ஜனாதிபதி நிக்கோலாசார்க்கோசி ஜனவரி 20ம் திகதி நான்கு பிரெஞ்சு படையினர்கள் ஆப்கானிஸ்தான் சிப்பாய்களுளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதை அடுத்து பிரான்சின் நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சுத் துருப்புக்களை நிறுத்தி வைப்பார். பிரெஞ்சு சிப்பாய்களை கொன்ற இத்தாக்குதல் தாலிபனுடன் நேரடித் தொடர்புகள் ஏதும் இல்லாத 21 வயது ஆப்கானிய சிப்பாய் ஒருவரால் நடத்தப்பட்டது. பல அமெரிக்க சிப்பாய்கள் இறந்துவிட்ட ஆப்கானியர்களின் தலைமீது சிறு நீர் கழிப்பதைக் காட்டிய ஒரு வீடியோ படத்தைப் பார்த்தபின் அந்த முடிவைத் தான் எடுத்ததாக அவர் கூறினார். . (See “Ten NATO troops killed in Afghanistan

இறந்துவிட்ட இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இதை எதிர்கொண்ட நிலை ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு பிரசன்னம் குறித்த பரந்த மக்கள் விரோதப் போக்கைத்தான் உயர்த்திக் காட்டியது. இறந்துவிட்ட சிப்பாய்களில் ஒருவரின் சகோதரி RTL  வானொலியிடம் கூறினார்: நிக்கோலா சார்க்கோசியின் தவறினால்தான் என் சகோதரர் இறந்துவிட்டார். ஆப்கானிஸ்தானிலிருந்து ஒவ்வொருவரையும் விரைவில் அவர் இங்கு கொண்டு வரவேண்டும்இந்த இளைஞர்கள், கணவர்கள், சகோதரர்கள் அனைவரையும். நிலைமை ஒன்றும் சிறப்பாகிவிடவில்லை, மிகவும் மோசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்விற்கு முன்னரே, IFOP கருத்துக்கணிப்புக்கள் ஆப்கானிஸ்தானில் பிரான்ஸின் பிரசன்னம் குறித்து பெருகிய எதிர்ப்புக்கள் உள்ளதைக் காட்டின. 2009ல் 64 சதவிகிதம் என்பதிலிருந்து ஆகஸ்ட் 2010ல் 70 சதவிகிதம் என்று ஆகியதுடன், தற்பொழுது ஆகஸ்ட்2011ல் 74 சதவிகிதம் என உயர்ந்துவிட்டது.

2012 ஜனாதிபதி தேர்தல்களுக்கு சில மாதங்கள்தான் இருக்கும் நிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் ஆப்கானிய ஆக்கிரமிப்பு குறித்த மக்கள் எதிர்ப்பையிட்டு அஞ்சுகிறார். 2014 என்று உத்தியோகபூர்வமாக நேட்டோ நிர்ணயித்துள்ள திரும்ப்பப் படைகளைப் பெறுவது குறித்த விடையிறுப்பு, பிரெஞ்சு இராணுவம் ஒன்றும் ஆப்கானிய சிப்பாய்களால் சுட்டுத்தள்ளப்படுவதற்காக ஆப்கானிஸ்தானில் இல்லை.

ஆனால் புதன்கிழமை அவர் மனத்தை மாற்றிக் கொண்டு, ஆடம்பரமாக அறிவித்தார்: நம்முடைய கோபத்தை வேறுதிசையில் திருப்ப வேண்டாம், வேதனை எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் நாம் அதையொட்டி குருடாகவேண்டாம். இன்றைய எதிரி, மீண்டும் பயங்கரவாதம் என்பது ஆகும்ஒரு நட்பு போல் மறைந்து கொண்டு பிரான்ஸ் மூலம் சுதந்திரம் என்னும் கருத்தையே தாக்கப் பார்க்கிறது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹில்லாரி கிளின்டனுடன் சில பேட்டிகளைத் தொடர்ந்து வெளியுறவு மந்திரி அலன் யூப்பே அவருடைய அரசாங்கம் பீதிக்கு இடம் கொடுக்கும் விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை... உடனடியாகத் திரும்பப் பெறல் என்னும் கருத்துக்களை 2012 முடிவதற்கும் முன்னாக என்று கேட்கும்போது, இது முற்றிலும் சிந்திக்கப்பட்டு, ஆராயப்பட்டுள்ளது என்று எனக்கு நம்பிக்கையில்லை என்றார்.

பிரெஞ்சு முதலாளித்துவ இடது ஜனாதிபதி வேட்பாளர் சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரான்சுவா ஹோலண்டைக் கேலி செய்யும் வகையில் யூப்பே  பேசினார்;  ஹோலண்ட் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2012ல் படைகள் திரும்பப் பெறப்படும் என்று கூறியிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சுத் துருப்புக்களை வைத்திருப்பது என்னும் முடிவு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களுடன் இயைந்தது ஆகும்; அது அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பியச் சக்திகளுடன் தன் உறவை முன்னேற்றிக் கொள்ளும் வகையில், ஆப்கானிஸ்தானின் மிக ஆபத்தான பகுதிகளில் தன் சிப்பாய்களை வைத்துள்ளது.

ஆகஸ்ட் 2008ல் சார்க்கோசி அரசாங்கம் அதுவரை காபூலில் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு படையினர்களை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தது; இதையொட்டி மேற்கத்தையக் குடும்பத்தின் இதயத்தானத்தில் பிரான்ஸ் தெளிவாக இருத்தப்படும், அமெரிக்க மக்கள் மற்றும் தலைவர்களின் நம்பிக்கையான உறவு மீட்கப்படும், மற்றும் அட்லான்டிக் உடன்படிக்கையில் நம் உறவு புதுப்பிக்கப்படும்.

 

Le Figaro தலையங்கமானது அப்பொழுது இம்முடிவைப் புகழ்ந்தது. ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி பிரெஞ்சு இராணுவத்தின் குறுக்கீடு என்ற உணர்வை நம் படைகளை நம் நட்பு நாடுகளுடன் கடினமான பகுதியில் இருத்துவதின் மூலம் மீட்டுவிட்டார் என்று கூறியது.

சார்க்கோசி மற்றும் ஹோலண்டின் முதல் அறிக்கைகள் சர்வதேச அளவில் மிகத் தீவிர விடையிறுப்புக்களைக் கொண்டுள்ளன; இவை நேட்டோவிற்குள் இப்பிரச்சினை குறித்து இருக்கும் வலுவான அழுத்தங்களைப் புலப்படுத்துகின்றன.

இந்த அழுத்தங்கள் ஏற்கனவே மார்ச்  2011ல் அப்பொழுது அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரியாக இருந்த ரோபர்ட் கேட்ஸ் நேட்டோ தலைமையகம் பிரஸ்ஸல்ஸில் ஓர் உரையில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஐரோப்பிய சக்திகள் திரும்பப் படைகளைப் பெறக்கூடும் என்பதை எதிர்க்கையில் வெளிப்பட்டன. படைகளைத் திரும்பப் பெறுவது பற்றி அதிகமாக பேசுவோரை அவர் கடிந்து கொண்டு எப்படி வேலையை முடிப்பது என்பது பற்றிப் போதுமான அளவிற்குப் பேசுவதில்லை என்றார்.

அவருடைய அச்சங்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள பெரிய தாதுப்பொருள் ஆதாரங்களை இழப்பதில் வரும் இடரைவிட, பல  நேட்டோ நாடுகளின் ஆயுதப்படைகள் ஓர் ஒழுங்கின்றிப் படைகளைத் திருப்பிப் பெறுதல்  மற்றும் அதன் விளைவு கூட்டணியில் எப்படி இருக்கும் என்பது பற்றித்தான் இருந்தது. நேட்டோ செயற்பாடுகளிலேயே ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்பு எண்ணிக்கையில் மிகப் பெரியதாகும்; அமைப்பின் கௌரவம் பெருமளவிற்கு அதில் அடங்கியுள்ளது.

கடந்த வாரம் மிக உயர்ந்த மட்டத்தில் பிரான்ஸிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே தீவிரப் பேச்சுக்கள் கடந்த வாரம் நடைபெற்றன; இதில் ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளின் அமெரிக்கத் தளபதி ஜெனரல் ஜோன் ஆலென் பங்கு பெற்றார். அமெரிக்க  வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் இறுதியில் அறிவித்தார்: மிக நுட்பமான மாறுதல் வழிவகையில் பிரான்ஸ் பங்கு பெறத் தொடர்ந்து விரும்பவில்லை என்று நாங்கள் நம்புவதற்கான காரணம் ஏதும் இல்லை.

ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி, தாராளவாத கைடோ வெஸ்டெர்வெல்லே, கடந்த ஆண்டு லிபியாவில் பிரான்ஸின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்தவரும் சார்க்கோசி முறையாகப் பேச வேண்டும் என்றார் . அதாவது இத்தகைய பின்னடைவு நாம் ஆப்கானிஸ்தானில் நடத்தும் உறுதிப்பாட்டை நிறுத்திவிடக்கூடாது என்பது தெளிவு என்றார்.

பொதுப் பொருளாதார நெருக்கடி மற்றும் இராஜதந்திர உறவுகளில் நெருக்கடி என்னும் தற்போதைய பின்னணியில், ஆகஸ்ட் 2008ல் சார்க்கோசி கொடுத்த மற்றொரு அறிக்கையின் முழுப் பொருளும் வெளிப்படுகிறது: உலகம் முற்றிலும் தீவிரமான ஒரு காலத்தில் நுழைகிறது, இது பல தசாப்தங்கள் நீடிக்கும், இதை நான் ஒப்புமைச் சக்திகளின் சகாப்தம் என்று கூறுவேன்....இச்சகாப்தத்தில் எரிசக்தி அதிகம் கிடைக்காது, விலை உயர்வாக இருக்கும்.... பொது நலன் என்பது, தேசிய முன்னுரிமைகளை தீவிரமாகப் பாதுகாப்பதற்கு அப்பால்த்தான் இருத்தப்படும்.

வேறுவிதமாகக் கூறினால் NATO சக்திகள்,  ஏகாதிபத்தியக் கொள்கையை செயல்படுத்த ஆதாரங்களைத் திரட்ட இந்த நிறுவனம் உதவவேண்டும் என்ற உண்மையை ஒப்புக் கொண்டாலும், எல்லா நாடுகளும் தங்கள் தனி நலன்களின் மிக அதிக இலாபங்களைப் பெறவும் முயலவேண்டும் என்பதாகும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஆகஸ்ட் 2010ல் நெதர்லாந்து படைகளை விலக்கிக் கொண்டது. நான்கு ஆண்டுகள் தீவிரமான நடவடிக்கையினால் 24 இறப்பு, 130 பேர் காயமுற்றது என்பதை அடுத்து தன் உறுதிப்பாட்டை அது புதுப்பிக்க விரும்பவில்லை. தொழிற்கட்சி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் கூட்டணி அரசாங்கம் சரிந்தது; ஏனெனில் போருக்கு மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக அது உறுதிப்பாட்டைப் புதிப்பிப்பதுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.

இது நேட்டோத் தலைவர்களை தீவிரமாகக் கவலையில் ஆழ்த்தியது; ஒப்புமையில் டச்சுப் படைகளின் தொகுதி (2000 பேரைக் கொண்டது) சிறிய எண்ணிக்கையில் இருந்தது என்றாலும். ஏனெனில் மற்ற நாடுகளும் ஒவ்வொன்றாக விலகக்கூடும் எனக் கருதப்பட்டது. நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஆண்டெர்ஸ் போ ரஸ்மூசன் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினருடன் ஒரு டச்சு பிரசன்னத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் பேச்சுக்களை நடத்தினார்; தொழிற்கட்சி நிலைப்பாட்டிற்கு ஒப்புக் கொண்டது, அது ஆப்கானியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதுடன் முடிந்தது; சில விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வழங்கப்பட்டன; இதையொட்டி பின்னர் திரும்பப் படைகளை பெற்றுக் கொள்வதற்கு கதவுகள் திறக்கப்பட்டன.

பிரான்சுவா ஹோலண்ட் தேர்தலில் வெற்றிபெற்றாலும்கூட, பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி நேட்டோவிற்கு குறைவான இணக்கமாக இராது. ஹோலண்ட் ஆரம்பத்தில் விரைவாக திரும்பப் படைகளைப் பெறுதல் என்று அழைப்பு விடுத்திருக்கலாம்; ஆனால் அவர்தான் சோசலிஸ்ட் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தின் தலைவராக இருந்தபோது, ஆப்கானிய அக்கிரமிப்பு குறித்துப் பேச்சுக்களை நடத்த அரசாங்கம் செயல்பட்டபோது, கட்சியின் தலைவராக 2001ல் இருந்தார். அந்த நேரத்தில் எந்த தயக்கங்களையும் ஹோலண்ட் கொண்டிருக்கவில்லை.