சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The new aristocracy    

புதிய பிரபுத்துவம்

Andre Damon
28 June 2012

use this version to print | Send feedback

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பாடசாலைகளை மூடி, தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து, ஏழைகள், முதியோர்கள், நோயாளிகளுக்கு கொடுக்கும் உதவியைப் பெரிதும் குறைக்கையில், உலகை ஆளும் நிதியத் தன்னலக்குழு தன்னுடைய செல்வத்தையும் அதிகாரத்தையும் பெருக்கிக் கொள்கிறது.

உயர்மட்டத்தில் அதிகம் ஊதியம் பெறும் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகளின் வருமானம் கடந்த ஆண்டு 12% இனால் அதிகமாயிற்று. Equilar எனப்படும் ஊதிய ஆராய்ச்சிக்குழு நடத்திய 15 மிகப் பெரிய உலகளாவிய வங்கிகளைப் பற்றிய பகுப்பாய்வில் இருந்து இது தெரிய வருகிறது. பெரும்பாலான வங்கிகளின் பங்குகள் மதிப்பு, வருமானங்கள் மற்றும் இலாபங்கள் சுருங்கிவிட்ட போதிலும் இந்த நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தலைக்கு சராசரியாக 12.8 மில்லியன் டாலர்களை பெறுகின்றனர்.  

JP Morgan Chase உடைய தலைமை நிர்வாக அதிகாரி Jamie Dimon, மீண்டும் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் 23.1 மில்லியன் டாலர் ஊதியம் பெறுகிறார். இது 2010ஐ விட 11% இனால் அதிகமாகும். டைமனுடைய கண்காணிப்பில், JP Morgan சமீபத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை ஊக வணிக இழப்புக்களில் அடைந்துள்ளதாகத் தெரவித்துள்ளது. 

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இந்த வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பு பிணையெடுப்புக்கள் கொடுத்துள்ளனர். இந்த பாரிய, தனியாருக்குச் சொந்தமான நிதிய நிறுவனங்களுக்கு அரசாங்கங்கள் ஏராளமான நிதி உதவியளித்துள்ளனர். அத்துடன் மீண்டும் தேவையானால் அவற்றை மீட்கவும் தயாராக இருக்கின்றன.

வங்கியாளர்கள் ஊதியம் பற்றிய அறிக்கை, Oracle தலைமை நிர்வாக அதிகாரி லாரி எலிசன் ஹவாயில் உள்ள ஆறாம் பெரிய தீவான லானாயை, 500 மில்லியன் டாலர்களுக்கும் 600 மில்லியன் டாலர்களுக்கும் இடையே விலை கொடுத்து வாங்கியுள்ளார் என்ற தகவலை ஹவாய் ஆளுனர் கொடுத்த சில நாட்களுக்குள் வந்துள்ளது. இத்தீவின் 3,000 மக்கள் இப்பொழுது எலிசனின் தயவில்தான் வாழமுடியும். அவ்வாறுதான் மத்தியகால மக்கள் தங்கள் பிரபுக்களின் தயவில் வாழ்ந்து வந்தனர்.

அமெரிக்காவில் மூன்றாம் பெரிய பணக்கார மனிதரான எலிசன் அவருடைய ஆடம்பரம், அற்ப பேராசை இரண்டிற்குமே இழிந்த பெயரை வாங்கியவர். 2008ல் அவர் கலிபோர்னியாவில் Woodside நகரவையில் இருந்து 3 மில்லியன் டாலர் வரித் தொகையை திரும்ப பெற்றார். இது ஜப்பானிய பேரரசரின் சொத்தை அப்படியே நகல் எடுத்தது போல் உள்ள, தற்போதைய சந்தையில் 100 மில்லியன் டாலர்தான் மதிப்புடைய அவருடைய வீட்டை கட்ட 200 மில்லியன் டாலர் செலவானது என ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் விளைந்தது.

எலிசனைத் தவிர வேறு எவரும் இந்த வீட்டில் வாழ்வதற்கு வசதி படைத்தவர் அல்லர் என்று நீதிமன்றம் அறிவித்து, இதையொட்டி வீட்டிற்கு குறைந்த சந்தை ஆர்வம்தான் உள்ளது எனக்கூறி அதையொட்டி ஒரேக்கிள் நிர்வாகியின் சொந்து வரிகளைக் குறைத்தது.

எலிசனுக்கும் அவருடைய சக கலிபோர்னிய பில்லியனர்களுக்கும் விதிவிலக்கான வரிகள், அரசாங்கத்திற்கு 15 பில்லியன் டாலர் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைக்கு ஒரு காரணமாகின்றன. இப்பற்றாக்குறை இப்பொழுது மில்லியன் கணக்கான மக்களை வறிய நிலையில் இருந்து காப்பாற்றும் முக்கிய சமூகநலத் திட்டங்களில் வெட்டுக்கள் மூலம் சமாளிக்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியாளரான கலிபோர்னியாவின் ஆளுனர் ஜெரி பிரௌன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் மாநிலச் சட்டமன்றமும் பொதுநலச் செலவுகளில் குறைந்தப்பட்சம் 8 பில்லியன் டாலர்கள் தேவை என்று கடந்த வாரம் ஓர் உடன்பாட்டை அடைந்தனர். அரசாங்கம் வழங்கும் பொதுநலச் செலவுகள் பாதியாகக் குறைக்கப்பட உள்ளதுடன், அரசாங்கத்தின் மருத்துவ உதவித் திட்டத்தில் இருந்து 1 பில்லியன் டாலர்கள் குறைக்கப்பட உள்ளது. 402 மில்லியன் டாலர்கள் அரசாங்கத் தொழிலாளர்களின் ஊதியங்களில் இருந்து குறைக்கப்பட உள்ளது மற்றும் ஒரு 240 மில்லியன் டாலர்கள் குழந்தைகள் பாதுகாப்புப் திட்டங்களில் குறைக்கப்பட உள்ளன.

36.5 பில்லியன் டாலர்கள் நிகர சொத்துக்கள் என்ற மதிப்புடைய எலிசன் இந்த வெட்டுக்களைப் போல் 4 மடங்கிற்கான பணத்திற்கு காசோலை அனுப்ப முடியும். இதைத்தவிர இன்னும் 99 பில்லியனர்கள் இந்த மாநிலத்தில் உள்ளனர்.

மிகப் பெரிய செல்வந்தர்கள் தங்கள் பரந்த செல்வத்தைப் பயன்படுத்துவதற்கு மற்றொரு உதாரணம் அண்மையில் வெளிவர இருக்கும் ஆவணப்படம் The Queren of Versailles என்பதில் காட்டப்படுகிறது. இத்திரைப்படம் வெஸ்ட்கேட் சுற்றுலாத் தலத்தின் (குறிப்பிட்ட நாட்களுக்கு ஆடம்பர விடுதிகளில் தங்குவது) பில்லியன் நிறுவனர் மற்றும் அவருடைய முன்னாள் விளம்பர அழகியும் தற்போதைய மனைவியும் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய வீட்டைக் கட்டுவதற்கான  முயற்சிகள் பற்றிக் கூறுகிறது. புளோரிடாவில் ஓர்லண்டோவில் 90,000 சதுர அடி இடத்தில் உள்ள இந்த அரண்மனையில் 10 சமையலறைகளும், மரக்குண்டு உருட்டிவிளையாடும்- bowling- அரங்கம் ஒன்றும் உள்ளன.

இந்த அரண்மனை போன்ற புளோரிடா இல்லம், பதினான்காம் லூயி மற்றும் மரி அந்துவானெட் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில் வெர்சாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த அரசகுலத் தம்பதியினர் பிரெஞ்சுப் புரட்சியின்போது தலைகள் வெட்டப்பட்டனர் என்பது புதிய வெர்சாயை கட்டியவர்கள் மறந்துவிட்டனர் போலுள்ளது.

அத்துரதிருஷ்ட அரச தம்பதிகள் ஏன் பிரெஞ்சு மக்களால் முற்றிலும் வெறுக்கப்பட்டனர் என்பதை ஒரு நயமான நிகழ்வு விளக்குகிறது. அரச குடும்பத்தின் நாய்கள் அரண்மனைக்குள் சிறுநீரோ, மலமோ கழித்ததில்லை, ஏனெனில் ஒரு சிறிய வேலைக்காரர் படை அவற்றை உடனடியாகக் கவனிப்பதற்கு நியமிக்கப்பட்டு இருந்தது.

பிரபுத்துவம் (Aristocracy) என்பது கிரேக்க மூலச்சொலான சிறந்தவர்களின் ஆட்சி என்ற பொருள் உடைய சொல்லில் இருந்து வந்தது. ஆனால், உலகின் அரசாங்கங்களுடைய கொள்கைகளை நிர்ணயிக்கும் நிதியத் தன்னலக்குழுவின் சுயநலன்கள், நவீன சமூகத்தின் மிக அறியாமையில் ஆழ்ந்துள்ள இழிந்த பிரிவைத்தான் உள்ளடக்கியுள்ளது. தன்னுடைய காலத்தில் வாழ்ந்த ஊகவணிகர்கள், மோசடிக்காரர்கள் பற்றி எழுதும்போது மார்க்ஸ் கழிவுகள் மேல் நோக்கி மிதக்கின்றன என்றார்.

நிதியப் பிரபுத்துவம் சொத்துக்கள் சேர்க்கும் முறையிலும், அதை அனுபவிக்கும் வகையிலும், முதலாளித்துவ சமூகத்தின் மறுமுனையில் உள்ள உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின்  மறுபிறப்பு என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

2008 வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு முந்தைய தசாப்தங்கள் இந்த சமூகத்தட்டின் வியத்தகு செல்வச்சேர்ப்பு மற்றும் அரசியலமைப்பு இதன் தேவைக்கு ஏற்ப மாறுவதைக் கண்டன. நிதியத் தன்னலக்குழு கிட்டத்தட்ட அரசியல் வாழ்வில் ஏகபோக உரிமைச் செல்வாக்கைச் செலுத்துகிறது. 2011ல் இருந்து கட்டமைக்கப்படும் பொலிஸ் அரச கட்டமைப்புகள் இவற்றின் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் முக்கியமாக இருத்தப்பட்டுள்ளன.

ஒபாமா நிர்வகமே இந்த நிகழ்சிப்போக்கின் ஒரு வெளிப்பாடுதான். 2008ல் பராக் ஒபாமா நிதியத் தொழில்துறையில் இருந்து வேறு எந்த வேட்பாளரும் அமெரிக்க வரலாற்றில் பெற்றிராத அளவிற்கு நிதியைப் பெற்றார். அவருடைய தேர்தலுக்குப்பின், அவர் தன்னுடைய அமைச்சரவையை முன்னாள் வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகளைக் கொண்டு நிரப்பினார். ஒபாமா பதவிக்கு வந்தபின், வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள் உதவியளித்து, 2008 சரிவிற்குக் காரணமானவர்களை குற்றவியல் விசாரணை, வழக்கு ஆகியவற்றில் இருந்து காப்பாற்றினார்.

இவ்வளவு பெரிய செல்வம் ஒரு நிதியப் பிரபுத்துவத்தின் கரங்களில் குவிந்துள்ளமை சமூகத்தின் பிற பிரிவுகளின் நேரடி இழப்பில்தான் வந்துள்ளது. அமெரிக்காவில் இருவரில் ஒருவர் ஒன்று மிக ஏழையாக உள்ளார் அல்லது கிட்டத்தட்ட ஏழையாக உள்ளார். சராசரி வீடுகளின் மதிப்புக்கள் 2007 ல் இருந்து 2010க்குள் 39% சரிந்துள்ளது.

மில்லியன் கணக்கான மக்கள் செலவிற்கு ஏற்ப வருமானம் இல்லாத நிலையில் துன்பப்படுகின்றனர். அப்பட்டமான பெரும் வறிய நிலையில் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள உயர்வு கலங்க வைக்கிறது. மக்கட் தொகையில், தீவிர வறுமையில் வாழ்பவர்களின் விகிதம் 2000த்தில் இருந்து 50% அதிகரித்து 4.5%ல் இருந்து 6.7% என ஆகிவிட்டது. மிக வறிய ஏழை என்று வரையறுக்கப்படுவதற்கு ஒரு தனி நபர் 5851 டாலரை விடக் குறைவாக ஈட்ட வேண்டும், நான்கு பேர் உள்ள குடும்பம் 11,509 டாலரை விடக் குறைவாக வருவாய் ஈட்ட வேண்டும்.

மார்க் ட்வைன் ஒரு முறை எழுதினார், ஒடுக்குமுறைமிக்கதும் மற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததுமான நிலைகளுக்கும் எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்ற நிலை ற்பட்டால் ஒழிய ஒரு புரட்சி நிகழ்வதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் கணக்கான பணம் உல்லாசப் படகுகள், ஆடம்பர அரண்மனைகள், செல்வந்தர்களின் கிராமப்புற மனமகிழ் மன்றங்கள் மற்றும் தம்மை சுற்றி உருவாக்கிய சுயபொருளாதாரங்களில் வீணடிக்கப்படுகின்றன. நிதிய ஊகத்திற்குப் பரந்த இருப்புக்கள் செலவழிக்கப்படுகின்றன. இவை வோல் ஸ்ட்ரீட் ஊகவணிக சூதாட்டத்திற்கு வடிகட்டி அனுப்பப்படுகின்றன. இச்செல்வத்தை தேசிய பயன்பாட்டிற்குச் செலவழித்தால் அது வேலையின்மை, வறுமை ஆகியவற்றையும் நோய்களைத் தடுக்கவும் கணிசமாகப் பயன்படும்.

சமுதாயத்தின் மேல்மட்டத்தில் செல்வம் குவிந்துள்ள அளவினால் வெளிப்பாட்டை காட்டும் முதலாளித்துவ அமைப்புமுறையின் இதயத்தானத்தில் இருக்கும் பெரும் குழப்பம் மற்றும் சுரண்டல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மனிதகுலத்திற்குத் தேவையான உற்பத்திச் சக்திகளைத் திரட்டி வளர்ப்பதற்கு உதவும். இதில் விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு பரந்த அளவில் மனித குலத்தின் பொருள்சார், கலாச்சாரத்தரம் உயர்ந்து, சமத்துவமற்ற நிலை அகற்றப்படும்.

ஆயினும்கூட உத்தியோகபூர்வ அரசியலின் மொத்தக் குரலும் சமூகநலத் திட்டங்களுக்கு கொடுப்பதற்கும், கௌரவமான ஊதியங்களைக் கொடுப்பதற்கும் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதைத்தவிர மிகவறிய, மிக பாதிப்பிற்கு உட்படுபவர்களும், தங்கள் வயிற்றை இறுக்கிக் கட்ட வேண்டும் என்ற ஆலோசனைகளும் கூறப்படுகின்றன.

இதுதான் ஆளும் வர்க்கங்கள் அனைத்தின் வரலாற்றுரீதியான திவால்தன்மையின் குணாதிசயமாகும். இதில் பிரச்சினை வெறுமனே அவர்கள் தனிப்பட்ட சொத்து அல்ல, இன்னும் அடிப்படையில் சமூகத்திலுள்ள உற்பத்தி சக்திகள் மீது அவர்கள் கொண்டுள்ள இறுக்கமான பிடி ஆகும். பெரும் செல்வந்தர்களால் நாசம் செய்யப்பட்டுவிட்ட சமூகத்தை மறுகட்டமைப்பு செய்ய மிகப்பெரிய நிறுவனங்களும் நிதிய நிறுவனங்களும் தனியார் கைகளில் இருந்து கைப்பற்றப்பட்டு ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும்.

சோசலிசப் புரட்சிக்கு வெளியே, தன்னுடைய சொந்தச் செல்வக்கொழிப்பிற்காக சமூகத்தைக் கொள்ளை அடிக்கும் புதிய பிரபுத்துவத்தின் அரசியல், பொருளாதாரச் சக்தியைத் தடுக்க வேறு வழி ஏதும் கிடையாது.