சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egypt: Islamist president takes symbolic oath of office in Tahrir Square

எகிப்து: இஸ்லாமிய ஜனாதிபதி தஹ்ரிர் சதுக்கத்தில் அடையாள பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொள்கிறார்

By Johannes Stern
30 June 2012

use this version to print | Send feedback

கடந்த ஆண்டு நீண்ட கால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை புரட்சிகரமாக வெளியேற்றியதற்கு பின் முதல் எகிப்திய ஜனாதிபதியாக வந்துள்ள முகம்மது முர்சி வெள்ளியன்று கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் அடையாள ரீதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

வெள்ளிக் கிழமை பிரார்த்தனைகளுக்குப் பின், முஸ்லிம் பிரதர்ஹுட்டின் (MB) தலைவர் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன் உரையாற்றி, புரட்சியின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அதன் போக்கைத் தான் தொடர இருப்பதாகவும் கூறினார். அதன்பின் அவர் ஜனாதிபதிக்கான பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார்.

திரைக்குப் பின்னால் இருந்து இயக்கப்பட்ட இந்நிகழ்வு ஒரு மோசடி ஆகும். இதன் முக்கிய நோக்கம், SCAF எனப்படும் ஆயுதப்படைகளின் தலைமைக்குழுவில் உள்ள ஆளும் தளபதிகளுக்கு முர்சி நாட்டின் மீதான அவர்கள் கட்டுப்பாட்டிற்குச் சவால் விடமாட்டார் என்பதை உத்தரவாதப்படுத்துவது ஆகும். இராணுவ ஆட்சிக்குழு, MB ஆதிக்கத்திற்கு உட்பட்ட பாராளுமன்றத்தை ஓர் இராணுவச்செயலின் மூலம் கலைத்த இரண்டு வாரங்களுக்குள் முர்சி அவருடைய உரையில், “என் உரையின் பொருள் சட்டம், அரசியலமைப்பு, நீதிமன்றம் அல்லது எகிப்தின் நாட்டுப்பற்று மிக்க எந்த நிறுவனத்தையும் நான் மதிப்பவன் அல்ல என்ற பொருளைத் தராது என்று வலியுறுத்தினார்.

இராணுவ ஆட்சிக்கு மற்றும் அதன் எதிர்ப்புரட்சிக்கு அவர் ஆதரவு கொடுக்கிறார் என்னும் கூடுதலான அடையாளம் காட்டும் வகையில் முர்சி, உத்தியோகபூர்வமாக சனிக்கிழமை அன்று தலைமை அரசியலமைப்பு நீதிமன்றம் (Supreme Constitutional Court-SCC) முன் உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இது முபாரக் சகாப்தத்தின் நீதித்துறை அமைப்பு ஆகும்; இது பாராளுமன்றத் தேர்தல் அரசியல் அமைப்பிற்கு முரணானது என அறிவித்து, SCAF, பாராளுமன்றம் மற்றும் எகிப்திற்கு புதிய அரசியலமைப்பு இயற்றும் மன்றம் ஆகியவற்றைக் கலைக்கவும் வழிவகுத்தது.

SCC தீர்ப்பு, பாராளுமன்றக் கலைப்பு ஆகியவற்றிற்குப் பின், இராணுவ ஆட்சிக்குழு ஒரு அரசியலமைப்பு பிற்சேர்க்கையை அறிவித்து, கலைக்கப்பட்டுவிட்ட பாராளுமன்றத்தின் சட்டமியற்றும், வரவு-செலவுத் திட்டம் அளிக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் பற்றி எடுத்துக் கொண்டது.

SCAF  மற்றும் பிரதர்ஹுட் இரண்டும், இராணுவ ஆட்சிக்குழுவின் அதிகாரத்தின் கீழ் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் அதற்குப் பின்னரும் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தன. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தேர்தல்களில் வாக்களிக்கவில்லை; இரண்டு வலதுசாரி வேட்பாளர்களுக்கும்முர்சி மற்றும் இராணுவ ஆதரவு வேட்பாளர் அஹ்மத் ஷபிக்எதிராக முதல் சுற்றுத் தேர்தல்களுக்குப் பின் எதிர்ப்புக்கள் வெடித்து எழுந்தன.

முர்சி, தஹ்ரிர் சதுக்கத்தில் தோன்றியதற்கு முதல் தினம், SCAF உறுப்பினரான ஜெனரல் முகம்மத் அசார் தனியார் CBC தொலைக்காட்சி நிறுவனத்திடம், இராணுவம் சதி மூலம் பெற்றுள்ள எந்த அதிகாரத்தையும் கைவிட மறுக்கும் என்று கூறிவிட்டார்.

[புதிய] அரசாங்கத்தில் ஒரு பாதுகாப்பு மந்திரி இருப்பார்; இவர்தான் ஆயுதப்படைகளின் தலைவர் ஆவார் என்று அவர் அறிவித்தார். அப்படியானால் SCAF தலைவர் மகம்மது ஹுசைன் தந்தவி, எகிப்தின் நடைமுறை சர்வாதிகாரி தன்னுடைய பதவியான பாதுகாப்பு மந்திரி என்னும் பதவியில் நீடிப்பார் என்ற பொருளை இது தருமா எனக் கேட்கப்பட்டதற்கு, அசார் கூறினார்: மிகச்சரித்தான். அதில் என்ன தவறு? அவர்தான் ஆயுதப்படைகளின் தலைமைக் குழுவின் தலைவர், பாதுகாப்பு மந்திரி, ஆயுதப்படைகளின் தளபதி.

அரசியல் குழுக்கள் எகிப்திய அரசியலில் சமச்சீர் நிலையில் இருக்க வேண்டும் என்று அசார் எச்சரித்தார். இஸ்லாமியவாதிகள் செய்யவேண்டிய பணிகளை அவர் சுட்டிக்காட்டி, அவர்கள் மக்களை அமைதிப்படுத்த வேண்டும், கோப்டிக் கிறிஸ்துவர்கள், தாராளவாதி, கலைஞர்கள், அறிவுஜீவிகள் ஆகியோருக்கு அவர்களுடைய உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படும் என்று உறுதியளிக்க வேணடும் என்றார். மேலும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்சி அவ்வகையில் திருப்திகரமான பணியைச் செய்கிறார் என்றார்.

வாஷிங்டனும் முர்சியை புகழ்ந்தது; அவரை அது எகிப்து மற்றும் பரந்த அப்பிராந்தியத்தின் மூலோபாய, பொருளாதார நலன்களைக் காப்பதில் நண்பர் என்று காண்கிறது. புதன் அன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் முர்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்து, இதுவரை நாங்கள் சில சாதகமான அறிக்கைகளைக் கேட்டுள்ளோம் என அறிவித்தார். எகிப்தின் சர்வதேசக் கடமைகளை மதித்தல் என்னும் முர்சியின் உறுதிமொழியையும் கிளின்டன் பாராட்டினார்; நம் பார்வையில் இது இஸ்ரேலுடனான சமாதான ஒப்பந்தத்தையும் அடக்கியிருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

அவர் மேலும் கூறியது: நாங்கள் ஜனாதிபதி முர்சி அனைத்தும் அடக்கியுள்ள தன்மையில் உறுதிப்பாட்டை நிரூபிப்பார், அதாவது எகிப்திய மகளிர், கோப்டிக் கிறிஸ்தவ சமூகம், மதசார்பற்ற, மதமற்ற சமூகங்கள், இளைஞர்கள் என வெளிப்பட்டு நிற்கிறது.

அன்றே, முர்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனாதிபதி என்னும் முறையில் எகிப்த்தில் அவருடைய முதல் நியமனங்கள் ஒரு பெண், ஒரு கோப்டிக் கிறிஸ்துவர் ஆக இருப்பர் என அறிவித்தார். தன்னுடைய அமைச்சரவையில் இடது இளைஞர் குழுக்களின் தலைவர்ளையும் சேர்க்கத் தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பரிசீலனையில் உள்ள முக்கிய பெயர்கள் ஏப்ரல் 6 இளைஞர் இயக்கத்தின் அஹ்மத் மஹெர், கூகிள் நிர்வாகியும் நாம் அனைவரும் கலீட் சயித் என்னும் Facebook நிர்வாகியுமான வயில் கோனிம், மற்றும் பெய்ரூட்டில் உள்ள Carnegie Endlowment for International Peace இன் முன்னாள் ஆய்வு இயக்குனரும், சுதந்திர எகிப்திய கட்சியின் தலைவருமான அமர் ஹம்ஸ்வே எனக் கூறப்படுகிறது.

இப்போக்குகள் முழு அரசியல் முறையும் இராணுவம், இஸ்லாமியவாதிகள், தாராளவாதிகள், நடுத்தர வர்க்கப் போலி இடது அமைப்புக்கள் அனைத்துமே எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நிற்கின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன. ஜனநாயக மாற்றம் என்பது முழு மோசடி என அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எகிப்திய முதலாளிகளும் அதன் ஏகாதிபத்திய நண்பர்களும் இன்னும் அதிகமாகவும், வெளிப்படையாகவும் தங்கள் போலி இடது ஒட்டுக்களை முதலாளித்துவ ஆட்சியைத் தக்க வைக்கவும் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதை தீவிரப்படுத்தவும் நம்ப வேண்டியுள்ளது.

ஏப்ரல் 6 இளைஞர் இயக்கமும் போலி இடது புரட்சிர சோசலிஸ்ட்டுக்களும் (RS) முர்சி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது அவருக்கு ஆதரவாக தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்தனர். ஒரு முன்னணி RS உறுப்பினரான ஹிஷம் பௌவத், தேர்தல்களில் முர்சியின் வெற்றி, எதிர்ப்புரட்சிக்கு ஒரு தீவிரத் தாக்குதல் என்றும், புரட்சிக்கு ஒரு ஊக்கம் என்றும் கூறினார்.