சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Palestinian Authority to exhume Yasser Arafat’s body to test polonium murder claim

பாலஸ்தீனிய அதிகாரம் பொலோனியத்தால் கொலை என்ற கூற்றினை சோதிக்க யாசர் அரபாத்தின் சடலத்தைத் தோண்டி எடுக்கவுள்ளது

By Jean Shaoul
6 July 2012

use this version to print | Send feedback

நவம்பர் 2004ல் ஒரு பிரெஞ்சு மருத்துவமனையில் இறந்து போன பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவரான யாசிர் அரபாத்தின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பரிசீலிக்க இருப்பதாக தற்போதைய பாலஸ்தீனிய அதிகாரம் அறிவித்துள்ளது. அவர் கதிரியக்க ஐசோடோப் பொலோனியத்தைப் பயன்படுத்திக் கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றுக்கள் வந்துள்ள நிலையில் அவருடைய மரணத்திற்கான காரணத்தை இது விசாரணை நடத்தும்.

அக்டோபர் 2004ல் அராபத் நோய்வாய்ப்பட்டார். ஆனால் இஸ்ரேல் அவருக்கு மருத்துவ நோய் ஆய்வினையும் சிகிச்சையையும் வழங்க மறுத்துவிட்டது. நலிந்த 75 வயதான அரபாத், தன்நினைவை இழப்பதும்  மீண்டு வருவதுமாக இருந்தபோது, ரமல்லா நகரில் மேற்குகரையில் அவருடைய தலைமையகமான முகடாவில் இருந்து விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஒரு இஸ்ரேலிய இராணுவ முற்றுகையின் கீழ் இருந்தார்.

ஒரு பிரெஞ்சு இராணுவ மருத்துவமனைக்கு நோயறிதல், சிகிச்சைக்காக அராபத் மாற்றப்பட்டார். மூன்று வாரங்களுக்குப் பின் அவர் இறந்துபோனார். பிரெஞ்சு மருத்துவர்கள் ஒரு பெரும் மூளை இரத்தப்போக்கின் விளைவு இது என்று விளக்கினார். குடல் வீக்கம், மஞ்சள் காமாலை, DIC (disseminated intravascular coagulation) என அறியப்பட்ட இரத்த நிலைமை ஆகிவற்றாலும் அவர் இடருக்குட்பட்டிருந்தபோதிலும், ஆனால் அதற்கான காரணம் ஒரு புதிராகத்தான் இருந்தது.  பிரெஞ்சு அதிகாரிகள் அவர் ஒரு “விந்தையான இரத்த ஒழுங்கின்மையை” கொண்டிருந்தார் என்பதற்கு மேல் எதுவும் கூறவில்லை. இது அந்தரங்க விவகாரங்களுக்கான சட்டங்களை மேற்கோளிட்டு, அவர் கொலை செய்யப்பட்டார் என்ற ஊகத்திற்கு இது எரியூட்டியது.

அரபாத் மருத்துவமனையில் இருந்தபோது, அவருடைய மனைவி சுஹா வருகை புரிந்திருந்த பாலஸ்தீனிய அதிகாரிகளிடம் “அவர்கள் அபு அம்மரை [அராபத்தை] உயிருடன் புதைக்க முயல்கின்றனர்” என்றார். ஆனால் அவருடைய மரணத்திற்குப் பின் அவர் பிரேதப்பரிசோதனைக்கு ஒப்புக் கொள்ள மறுத்தார். அவருடைய உடல்நிலை குறித்த 558 பக்க மருத்துவமனை அறிக்கை ஓர் ஆண் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அராபத்தின் சடலம் முகடா நினைவுச்சமாதி ஒன்றில் உள்ளது. துருப்புக்கள் இதற்குக் காவலாக உள்ளன.

அவருடைய இறப்பிற்குக் காரணத்தை அறிய ஒரு பிரேதப் பரிசோதனை வேண்டும் என்று சுஹாவிடம் இருந்து வந்த வேண்டுகோளுக்கு பிரதிபலிப்பாக பாலஸ்தீனிய அதிகாரத்தின் அறிவிப்பு வந்துள்ளது. அவருடைய வேண்டுகோளைத் தொடர்ந்து அல்ஜசீரா ஒளிபரப்பு ஒன்று பாலஸ்தீனியத் தலைவரின் மரணம் குறித்த விசாரணைகளின் ஒன்பது மாத கால கண்டுபிடிப்புக்களும் வந்தன. அத்தொலைக்காட்சி நிறுவனம் அவருடைய மருத்துவச் சான்றுகளை சுவிஸ் நாட்டுக் குற்றவியல் தடய ஆராய்வு நிலையம் ஒன்று ஆராய்ந்தது. அத்துடன் அவருடைய விதவையார் அளித்த அவருடைய சில பொருட்களான அவருடைய பல்துலக்கும் தூரிகை, ஆடைகள் அவருடைய தலையணி  ஆகியவை ஆராயப்பட்டன. இதில் பொலோனியத்தின் சுவடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஸ்விட்சர்லாந்தில் லௌவுசானில் உள்ள Institut de Radiophysique ன் இயக்குனரான Francois Bochud, அல் ஜசீராவிடம் கூறினார்: “ஒரு விளக்கப்படாத, கூடுதல் எண்ணிக்கையான எவ்வித தொடர்புமற்ற பொலோனியம் 210 ஐ உடல்கசிவுகளின் தடயங்களை கொண்டிருந்த திரு.அரபாத்தின் உடமைகளில் கண்டோம் என்பதை உறுதியாகக் கூறுவேன்.”

ஆனால் அக்கூடத்தின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான டார்ஸி கிறிஸ்டென், ராய்ட்டர்ஸிடம் திரு.அரபாத்தின் மருத்துவ அறிக்கைகளில் காணப்படும் மருத்துவமனைக் குறிப்பு அடையாளங்கள் பொலோனியம்-210 உடன் இயைந்து இருக்கவில்லை, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து உறுதியான முடிவு எதையும் கூறமுடியாது என்றார்.

பொலோனியம் அதிக ஆபத்துமிகுந்த அல்பா கதிரியக்கத்தை வெளியிடுகிறது. இது அதிக அளவில் இது திசுக்களுக்கும் உறுப்புக்களுக்கும் சேதங்களை விளைவிக்கலாம். இதே கதிரியக்க ஐசோடோப்தான் முன்னாள் ரஷ்ய உளவுப்பிரிவுத் தலைவர் அலெக்சாந்தர் லிட்வினென்கோவைப் படுகொலை செய்ய 2006ல் பயன்படுத்தப்பட்டது.

திருமதி அரபாத்தின் வேண்டுகோள் பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவர் மஹ்முத் அப்பாஸுக்கு ஆழ்ந்த சங்கடத்தைக் கொடுத்துள்ளது. இவர்தான் அராபத் இறந்த பின் நடைபெற்ற தேர்தல்களில் அவருக்கு அடுத்து வர வேண்டியவர் என வாஷிங்டன் விரும்பியது. பாலஸ்தீனிய அதிகாரம் அரபாத்தின் மரணம் குறித்து எந்த தீவிர விசாரணையையும் மேற்கோண்டதில்லை.

அப்பாஸ் தப்பித்துக் கொள்ள சாத்தியமான ஒரே வழியான சமய அடிப்படையில் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்படக்கூடாது என்பது, மேற்குக்கரையின் உயர்மட்ட முஸ்லிம் சமயகுருவான முப்தி முகம்மது ஹுசைன் பிரேத பரிசோதனைக்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என கூறியதால் தடைக்கு உட்பட்டுவிட்டது.

ஒரு பொலோனிய நஞ்சின் விளைவினால் அரபாத் இறந்துவிட்டார் என்பது பிரேதப் பரிசோதனையில் வெளிவந்தால், இறப்பிற்கான பொறுப்பு இஸ்ரேல் அல்லது அமெரிக்கா மீது சுட்டிக்காட்டப்படும். ஏனெனில் ஐசோடோப்பை பெறுவது இலகுவான விடயமல்ல. இக்காரணத்திற்காக, இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி Haaretz இடம் “இந்த அறிக்கை ஆதாரமற்றது.” எனக் கூறினார்.

அரபாத்தின் மருத்துவச் சான்றுகளை வெளியிட இஸ்ரேல் ஒன்றும் மறுக்கவில்லை என்றும், “சதித்திட்டம் பற்றிய கருத்துக்களைப் பரப்புவதற்குப் பதிலாக, பாலஸ்தீனியர்கள் ஆவணங்களைப் பகிரங்கமாக்கட்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

அரபாத் இஸ்ரேலினால் நச்சுக் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்னும் ஊகம் நீண்டநாளாக உள்ளது. பிரதம மந்திரி ஏரியல் ஷரோன் 2002, 2004லும், துணைப் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் 2003லும் அவரைப் படுகொலை செய்வதாக அச்சுறுத்திய ஆதாரங்கள் உள்ளன. அவர் உயிரைப் பறிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் நம்பப்படுகிறது.

நீண்டகாலம் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பிற்குள் மேலாதிக்கம் செலுத்திய பிரிவான பத்தாவின் –Fatah- தலைவராக இருந்த அரபாத், 1993 ஒஸ்லோ உடன்பாடுகளின்படி வருங்கால சுதந்திரப் பாலஸ்தீனிய நாட்டின் முன்னோடி என்பதற்கு அடையாளமாக பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அத்தகைய எதிர்காலநிலையில் வலதுசாரி குடியேற்றவாதிகளின் இயக்கத்தினருக்கும் அவர்களுடைய தலைவர் ஷரோனுக்கும் சிறிதும் உடன்பாடு இல்லை.

செப்டம்பர் 2000இல், அப்பொழுது எதிர்க்கட்சியாக இருந்த லிகுட்டின் தலைவரான ஷரோன் ஒஸ்லோ உடன்பாடுகளைக் கிழித்து எறிந்து, ஜெருசலேம் பழைய நகரத்தில் உள்ள மலைக்கோவில் வழியே பாதுகாப்புப் பிரிவினர் சூழ ஆத்திரமூட்டும் வகையில் நடந்தார். இவ்வாறு செய்கையில் அவர் வேண்டுமேன்றே இன்டிபாடாவைத் தூண்டிவிட்டார். அது பின்னர் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுடனும் அதன் அரசியல் தலைமையுடனும் ஒருதலைப்பட்ச இராணுவ மோதலை மேற்கொள்ளப் போலிக் காரணத்தை கொடுத்தது.

2001ல் பிரதமரான பின், ஷரோன் சுதந்திரப் பாலஸ்தீன நாடு உருவாக வாய்ப்பு இல்லாத வகையில் சதிகளை செய்யத் தொடங்கினார். அரசியலில் அரபாத் பெருகிய முறையில் ஒதுக்கிவைக்கப்பட்டு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக்கரையில் துப்பாக்கிமுனையில் பாலஸ்தீன அதிகாரத்தின் ரமல்லா தலைமையகத்தில் வைக்கப்பட்டார். அவருடைய வளாகத்திலேயே அராபத் சிறையில் அடைக்கப்பட்டு, மேற்குக்கரையில் மற்ற சிறு நகரங்கள், காசாப் பகுதி ஆகியவற்றிற்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரம், பாலஸ்தீனிய அதிகாரத்தின் கட்டிடங்களும், உள்கட்டமைப்புக்களும் தொடர்ந்த இஸ்ரேலிய இராணுவப் பிரிவுகளின் தாக்குதலுக்கும் உட்படுத்தப்பட்டன.

ஏப்ரல் 2002ல், இஸ்ரேலியப் படைகள் மேற்குக்கரைமீது முழு அளவு இராணுவத் தாக்குதலின் இலக்காக பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைமையகம் ஆயிற்று. கட்டிடம் டாங்குகளாலும் கவச வாகனங்களாலும் சூழப்பட்டதுடன், குண்டுகளும், இயந்திரத் துப்பாக்கிச் சூடுகளுக்கும் உட்படுத்தப்பட்டது. இதன் விளைவாக அதன் மாடிகள்  பலவும் அழிக்கப்பட்டு, அங்கிருந்த மின்சார, தொலைப்பேசிகளும் வசதிகளும் அழிந்தன.

குண்டுவீச்சிற்கு உட்பட்ட வளாகத்தில் அரபாத் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறினால், மீண்டும் திரும்பிவர அனுமதிக்கப்படமாட்டார் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது.

அரபாத் இறக்க வேண்டும் என்னும் தங்கள் விருப்பத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறினர். செப்டம்பர் 2003ல் துணைப் பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் பகிரங்கமாக இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனிய ஜனாதிபதியைப் படுகொலை செய்ய விரும்புகிறது என அறிவித்தார்.

அரபாத்தின் இறுதி நோய்வாய்படுதலுக்கு சில வாரங்கள் முன்பு, ஷரோன் அந்த அச்சுறுத்தலை மீண்டும் கூறி, Ma’ariv செய்தித்தாளிடம் இஸ்ரேல் ஹமாஸ் தலைவர்கள் ஷேக் அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல்-அசிஸ் அல்-ரன்டிசி இருவருக்கும் எதிராக எப்படி நடந்து கொண்டதோ “அதே வகையில் அரபாத்திற்கு எதிராகவும் செயல்படும்” என்று கூறினார். அந்த இருவருமே படுகொலையுண்டவர்கள். பலமுறையும் ஷரோன் 1982 பெய்ரூட் முற்றுகையின்போது பாலஸ்தீனியத் தலைவரைக் கொல்லாமல் விட்டதற்கு தான் வருந்தியதாகக் கூறினார்.

பாலஸ்தீனியத் தலைவர் “சமரசம், சமாதானம் ஆகிய வழிவகைகளுக்கு ஒரு தடை” என்ற காரணத்தால் இதை இஸ்ரேலிய அரசாங்கம் நியாயப்படுத்தியது. ஆனால் அதன் உண்மையான குற்றச்சாட்டு அரபாத் பாலஸ்தீனிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அல் அக்சா தியாகிகள் பிரிவு, இஸ்லாமிய ஜிகத் மற்றும் ஹமஸ் ஆகியவை இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குணமிக்க எதிர்ப்பை அடக்கவில்லை என்பதாகும். அவ்வாறு அவர் செய்வது தன் மக்களுக்கு எதிராகவே உள்நாட்டுப் போர் நடத்துவது போல் ஆகியிருக்கும்.

அவருக்குப் பின் பதவிக்கு வந்த மஹ்முத் அப்பாஸ் இந்த இயக்கங்களுக்கு எதிராகச் செயல்படும் பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அவர் அவ்வாறே செய்தார்.