சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

ASEAN summit breaks up amid feuding over South China Sea

தென் சீனக் கடல் பற்றிய குழப்பத்திற்கு மத்தியில் ஆசியான் உச்சிமாநாடு முறிவு

By Peter Symonds
14 July 2012

use this version to print | Send feedback

ASEAN (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) இன் மந்திரிமார் மட்டத்திலான உச்சிமாநாடு, நேற்று சீனாவுடன் தென் சீனக்கடல் பற்றிய பூசல்களில் மோசமாகி வரும்கப்பல்போக்குவரத்து குறித்து ஒரு உடன்பாட்டைக் காணமுடியாத நிலையில், கசப்புத்தன்மையில் முடிவடைந்தது. கருத்தொருமைப்பாடு இல்லாததால், அமைப்பின் 45 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் தடவையாக கூட்டு அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

இத்தகைய இராஜதந்திரரீதியிலான தேக்கநிலை ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான ஆசியாவில் “முன்னிலைப்படுத்தல்” என்ற கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ள கொள்கையின் விளைவுதான். அக்கொள்கை பிராந்தியம் முழுவதும் சீனாவில் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்தை கொண்டது. அமெரிக்க அரசாங்கத்தினால் ஊக்கம் பெற்று, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவை தென் சீனக்கடல் பகுதியில் இன்னும் உறுதியுடைய ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள விரும்புகின்றன. இது சீனாவுடன் சூடான மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது.

கப்பல்பாதை மோதல்கள் பற்றிய சீனாவுடனான விவாதங்களின்போது ஆசியான் ஒரு பொது நெறியை அடித்தளமாகக் கொள்ளும் என்று கூறிய அளவில் அமெரிக்கா பெய்ஜிங்கை சற்று பின்னடைவு கொள்ள செய்துள்ளது. இத்தகைய பலரும் இணைந்து ஏற்கும் செயற்பாடு, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நிலையை வலியுறுத்தும் நோக்கத்தைக் கொண்டது, சீனா ஆசியான் நாடுகளுடன் இருதரப்புப் பேச்சுக்கள் மூலம் மோதல்களை தீர்க்கும் முந்தைய முயற்சிகளுடன் நேரடியாக மோதியது.

கம்போடியத் தலைநகரான நோம் பென்னில் நடைபெற்ற இந்த வார உச்சி மாநாட்டில், பிலிப்பைன்ஸ் ஆத்திரமூட்டும்வகையில் நாட்டின் இரண்டு மாதகால சீனாவுடனான பூசலுக்கு உரிய ஸ்கார்பாரோ நீரடித்திடல் பற்றி குறிப்பு வெளியிடப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்து இறுதி அறிக்கையை வெளியிட்டது. வியாழன் அன்று வெளியிட்ட வெளிப்படையான அறிக்கை ஒன்றில், சீனாவின் வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சி சீனா இப்பகுதியின்மீது கொண்டிருக்கும் இறைமை பற்றி “மோதல் ஏதும் இல்லை” என்று கூறினார். “பிலிப்பைன்ஸ் உண்மையை நேரடியாகச் சந்திக்க வேண்டும், தொந்திரவுகளை உருவாக்குவதை நிறுத்தும் என்று சீனா நம்புகிறது”என்றும் கூறினார்.

ஆசியானிற்குள் உள்ள வேறுபாடுகளைப் பூசிமெழுகும் முயற்சிகள் கம்போடிய இறுதி அறிக்கை குறித்த சமரசச் சொற்களை நிராகரித்த அளவில் தோல்வியுற்றன. தற்பொழுது சுழற்சிமுறை மூலம் வரும் ஆசியானின் தலைமையைக் கொண்டுள்ள கம்போடியா, சீனாவுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்ட நாடாகும். சீனா ஆசியான் அங்கத்தவராக இல்லை என்றாலும் கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, ஆசியான் பிராந்திய அரங்கு இவற்றுடன் சீனா பிணைந்துள்ளது.

உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்ட தோல்வி, பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியாவிறகு இடையே கசப்பான கருத்துப் பறிமாற்றங்களைத் தூண்டியது. பிலிப்பைன்ஸ் வெளியுறவு மந்திரி இறுதி அறிக்கையை வெளியிடாததற்காக ஒரு அறிக்கை ஒன்றை, வெளியிட்டு அதில் கம்போடியா ஸ்கார்பாரோ நீரடித்திடல் பற்றி குறிப்பிடப்படுவதை எதிர்ப்பதற்கு குற்றமும் சாட்டினார். கம்போடிய வெளியுறவு அமைச்சரக அதிகாரி ஒருவர் அவருடைய நாடு சீனாவின் அழுத்தத்தின்கீழ் செயல்பட்டது என்பதை மறுத்து அது ஒரு “நியாயமற்ற குற்றச்சாட்டு” என்றும் கூறினார்.

பிலிப்பைன்ஸ் உடைய வெளியுறவு மந்திரி ஆல்பெர்ட் டெல் ரோசரியோ அழுத்தங்களை அதிகரிக்கும் வகையில் சீனா தென் சீனக் கடல் குறித்து இறைமையை வலியுறுத்துவது “ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு ஒரு அச்சுறுத்தலைக் கொடுக்கிறது” என்று எச்சரித்தார். “தடையற்று இது அனுமதிக்கப்பட்டால், இவ்வழிவகையில் தோற்றுவிக்கப்படும் பெருகும் அழுத்தம் எவரும் விரும்பாத நேரடித் தாக்குதல்களாக விரிவடையும்” என்றார்.

இந்தோனீசிய வெளியுறவு மந்திரி மாரட்டி நாடலேகவா ஆசியானுக்குள் இருக்கும் வெளிப்படையான பிளவுகள் குறித்துக் கவலை தெரிவித்தார். “இது எனக்கு விந்தையானதாக உள்ளது. இந்தக் கடைசி நேரத்தில் ஆசியான் தென் சீனக் கடல் குறித்து ஒரு உறுதியான பொது வார்த்தையை கூறமுடியவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நாம் கடந்த காலத்தில் பல பிரச்சினைகளைக் கடந்துள்ளோம், ஆனால் ஒருபொழுதும் ஒருமித்த உணர்வுடன் பேசத் தவறியதில்லை.”

தென் சீனக் கடலில் அதிகளவு விடயம் பணயத்தில் உள்ளது. இப்பகுதி கணிசமான எரிசக்தி இருப்புக்களையும் மீன்பிடிப் பகுதிகளையும் கொண்டுள்ளது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும ஐரோப்பாவில் இருந்து வட கிழக்கு ஆசியாவிற்குச் செல்லும் முக்கிய கடல் பாதைகளும் இங்கு உள்ளன. இவை உலகின் கப்பல்மூல வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டவை. இந்நீர்நிலை சீனாவின் தென் கடலோரத்திற்கு அருகே இருப்பதுடன், முக்கியமான சீன கடற்படைத் தளங்களும் உள்ளன.

ஒபாமா நிர்வாகம் நேரடியாக 2010ல் கடல்பாதை மோதல்களில் தலையிட்டது.  அப்பொழுது வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் ஒரு ஆசியான் உச்சிமாநாட்டில் அமெரிக்க  தென் சீனக் கடல் வழியே “தடையற்ற கப்பல் செல்லும் சுதந்திரத்தில்” “ஒரு தேசிய நலன்களை” கொண்டுள்ளது என அறிவித்தார். அமெரிக்க இராணுவம் வாடிக்கையாக இக்கடல்பகுதியில் ரோந்து வருகிறது. நெருக்கடி நிறைந்த சீன இராணுவ நிலையங்களுக்கு அருகேயும் சென்று வருகிறது.

இந்த வாரக் கூட்டத்தில் கிளின்டன் பிலிப்பைன்ஸை மிக மோதும் பங்கை வகிக்க அனுமதித்தன் மூலம், ஒரு இராஜதந்திர விரிசலைத் தோற்றுவித்துள்ளார். ஆனால் அவருடைய கருத்துக்கள் அமெரிக்கா இப்பிரச்சினையைப் பயன்படுத்திச் சீனாவை கீழறுக்க முனைகின்றது என்பது குறித்து சந்தேகம் எதையும் விட்டுவைக்கவில்லை. வாஷிங்டனின் தலையிடும் உரிமையை கிளின்டன் வலியுறுத்தும் வகையில் “அமெரிக்க இங்கு நிலைகொண்டுள்ள ஒரு பசிபிக் சக்தியாகும்” என்றார். “மீன்பிடிப்போருக்கு இடையே நடக்கு மோதல்களில் பொருளாதார அழுத்தம், இராணுவ, அரசாங்கக் கப்பல்கள் தொந்திரவு கொடுக்கும் வகையில் தலையிடும் கவலை தரும் நிகழ்வுகளை” அவர் குறிப்பாகக் குறைகூறினார்.

கிளின்டனுடைய கருத்துக்கள் அவ்வளவு நயமற்ற குறிப்பாகத்தான் ஸ்கார்பாரோ நீரடித்திடல் குறித்து இருந்தன. மற்றும் இப்பொழுது சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே கிழக்கு சீனக் கடலில் பூசலுக்குட்பட்ட சென்காகு தீவுகள் பற்றியும் அவ்வாறே இருந்தன. அந்தப் பூசல் இந்த வாரம் மீண்டும் ஜப்பானியப் பிரதம மந்திரி யோஷிகோ நோடா வார இறுதியில் தன்னுடைய அரசாங்கம் அதன் தற்பொழுதைய தனிப்பட்ட சொந்தக்காரரிடம் இருந்து பாறைகள் போன்றவற்றை  வாங்கும் என்று கூறினார். கடந்த ஞாயிறன்று கிளின்டன் டோக்கியோவில் நோடா, அவருடைய மந்திரிகளுடன் பேச்சுக்களுக்காக இருந்தார் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

சீனாவின் அரசாங்கச் செய்திஊடகம் அமெரிக்காவை தென் சீனக்கடல்  குறித்த புதுப்பிக்கப்பட்டுள்ள அழுத்தங்களுக்கு பொறுப்பு எனக் கூறியுள்ளது. China Daily ல் “அமெரிக்கா வேறுபாடுகளை விதைக்கிறது” என்ற தலைப்பில் வந்த கட்டுரை கிளின்டனுடைய கருத்துக்கள் “பொருத்தமற்றவை, தவறான நோக்கம் உடையவை” என முத்திரையிட்டது. அது மேலும் கூறியது. “இப்பிராந்தியத்திறகு வெளியே உள்ள அமெரிக்கா இப்பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளுக்கு அவற்றின் வேறுபாடுகளை எப்படித் தீர்க்க வேண்டும் எனக் கூறத் தேவையில்லை” இக்கட்டுரை ஆசியான் கூட்டங்கள் தென் சீனக் கடல் பற்றி விவாதிக்க உகந்த அரங்குகள் அல்ல என்றும வலியுறுத்தியது.

ஆசியான் உச்சிமாநாடுகளில் ஒபாமா நிர்வாகத்தின் தலையீடு இப்பிராந்தியம் முழுவதும் உள்ள நாடுகளுடன் அமெரிக்கா தன் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட, பரந்த, மூலோபாய, இராஜதந்திர தாக்குதலின் ஒரு பகுதிதான். ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன் நெருக்கமான இராணுவ நட்பு மற்றும் பங்காளித்தனத்தை கொண்டபின், வாஷிங்டன் பர்மா, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள் பெய்ஜிங்குடன் கொண்டுள்ள பிணைப்பில் இருந்து அகலுவதை ஊக்குவிப்பதை நோக்கி நகர்கின்றது.

அரை நூற்றாண்டு காலத்தில் இந்த வாரம் லாவோஸிற்கு வருகை தந்த வகையில் கிளின்டன் முதல் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஆவார். இது இங்குள்ள ஆட்சியுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கியமான அடி ஆகும். அவர் கம்போடிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தினார், அமெரிக்கா நோம் பென் கோரிக்கையான 400 மில்லியன் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்னும் கோரிக்கை ஏற்கக்கூடும் என்றும் தெரிவித்தார். அக்கடன் லோன் நோல் உடைய அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த இராணுவ அரசாங்கத்தின்போது சேர்ந்திருந்தது. கிளின்டன் பர்மாவின் மீதான அமெரிக்க முதலீட்டு தடைகளை நீக்கியவுடன் ஜனாதிபதி தெய்ன் சைன் இனை கிளின்டன் சந்தித்தார்.

கிளின்டனின் இராஜதந்திர செயல்பாடுகள் ஆசியாவில் ஒரு அமெரிக்க இராணுவத்தின் கட்டியெழுப்பலால் ஆதரவிற்கு உட்பட்டுள்ளன. தென் சீனக் கடல் மற்றும் முக்கிய சந்திகளான மலாக்கா ஜலசந்தி ஆகியவை அமெரிக்க மூலோபாயத் திட்டத்திற்கு மையமானவை ஆகும். அது அமெரிக்க கடற்படை சீனாவுடைய ஆபிரிக்காவில் இருந்து மந்திய கிழக்கு வரை உள்ள கப்பல் பாதைகளை தொடர்பறுக்கும் திறனை உறுதி செய்ய நோக்கம் கொண்டுள்ளது. அந்த இலக்கிற்காக, ஒபாமா நிர்வாகம் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் இராணுவத் தள உடன்பாடுகளை பெற்றுள்ளதுடன், பிலிப்பைன்ஸுடனும் அதேபோன்ற உடன்பாட்டைக் கோரியுள்ளது.

இந்த வார ஆசியான் உச்சிமாநாட்டில் உடன்பாடு இல்லாதது, ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயம் பொறுப்பற்ற முறையில் பிராந்திய அழுத்தங்களை அதிகரிப்பதற்கும், அதனால் இராணுவ மோதல்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்பதன் சமீபத்திய அடையாளம் ஆகும்.