சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Aurora Massacre: Once again, evasions rather than explanations

அரோரா படுகொலை: மீண்டுமொருமுறை விளக்கங்களைக் காட்டிலும் நழுவல்கள்

David North
23 July 2012

use this version to print | Send feedback

அரோரா திரையரங்குப் படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி பராக் ஒபாமா ஞாயிறன்று மாலை கொலராடா, டென்வர் பகுதியில் வந்திறங்கினார். அதன்பின் மக்களிடமும் சற்று நேரம் பேசிய அவர் அப்போது அறிவித்தார்:

இந்த கொடுஞ் செயலைச் செய்த நபருக்கு கடந்த சில நாட்களாய் ஏராளமான கவனம் கிட்டியிருக்கிறபோதிலும், அதெல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் மறைந்து போகும். இறுதியில், அந்த மனிதர் நமது நீதி அமைப்பின் முழு சக்தியையும் உணர்ந்ததற்குப் பின்னர், நினைவில் நீடித்திருக்கப் போவதெல்லாம் இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட நல்ல மனிதர்கள் தான்.”

இந்த அறிக்கை ஒரு சிந்தனையற்றதாகவும் சிடுமூஞ்சித்தனமானதாகவும் இருக்கிறது. உண்மையில், 12 பேரது படுகொலைக்கும் இன்னும் ஏராளமானோரது படுகாயத்திற்கும் காரணமான துப்பாக்கிதாரியாகக் கூறப்படும் ஜேம்ஸ் ஹோம்ஸ் குறித்து யாருக்குமே அதிகம் தெரியாது. இந்த மனிதப் படுகொலை வெறியாட்டத்தின் முடிவில் இந்த நபர் தனது சொந்த உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை என்பது அதிர்ஷ்டமே. ஹோம்ஸ் இன்னும் உயிருடன் இருப்பதானது குறைந்தபட்சம் இந்தப் படுகொலைக்கு மற்றும் இதே போன்ற மற்ற பாரிய கொலை சம்பவங்களுக்குப் பின்னமைகின்ற ஆழமான உளவியல் காரணங்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியத்தையேனும் வழங்குகின்றது

ஒரு இளைஞரை இதுபோன்ற ஒரு கொடூரமான செயலுக்குத் தள்ளிய நரம்பியல் மற்றும் உளவியல் நிகழ்வுப்போக்குகளைக் கண்டறிவதற்கான ஒரு தீவிரமான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபடுவர் என நம்புவோம். தன்னுடைய ஜனாதிபதி பதவிக் காலத்தில் இத்தகையதொரு பெரும்  கொலைச் சம்பவம் நடைபெறுவது இது மூன்றாம் முறை என்கின்ற வகையில், ஒபாமாவும் இத்தகையதொரு விசாரணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வார் என்றே ஒருவர் எண்ண முடியும். ஆனால் இந்த ஜனாதிபதி, பழிவாங்கலை மட்டுமே சிந்திக்க இயன்றவர் என்பதாகவே தோன்றுகிறது. இந்த சமீபத்திய துயர சம்பவத்தால் எழுப்பப்பட்ட மனச்சங்கடத்திற்குரிய துன்பங்கள் எல்லாம் ஹோம்ஸ்நமது நீதியமைப்பு முறையின் முழுச் சக்திக்கும்உட்படுத்தப்படுகின்ற போது தீர்க்கப்பட்டு விடும் என்றே அவர் நம்புகிறார்

இந்த துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பொறுத்தவரை, அவர்களையும் பெருந்துயரத்தில் மூழ்கியிருக்கும் அவர்களது குடும்பங்களையும் அரசியல் ஆளும்தட்டினரும் ஊடகங்களும் வெகு விரைவில் மறந்து விடும். கொலம்பைனில், வேர்ஜினியா டெக்கில், மற்றும் டுக்சனில் (Tucson) நடைபெற்ற படுகொலைகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இப்போதும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்ன? கடந்த காலத்தில் போலவே இப்போதும், இறந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களது சொந்த ஊழ் வலியை எண்ணி மனம் நொந்து வாழ விடப்படுவார்கள். தற்போது இருக்கும் வடிவத்திலான அமெரிக்க சமூகமானது பாதிக்கப்பட்டவர்களுக்கு எதையயும் செய்வதற்கோ, குறைந்தபட்சம் ஒரு விளக்கத்தைப் பெறுவதற்கான உரிமையேனும், இருக்கிறது என்று  நம்பவில்லை

இந்தக் குற்றத்தின் பின்னமைந்த உளவியல் பின்புலத்தை ஆராய்வது அத்தியாவசியமே என்ற போதிலும் அது, அரோரா கொலைகளுக்கான பகுதி விளக்கத்தை மட்டுமே அளிக்க முடியும். ஹோம்ஸ் சித்தம் பிறழ்ந்த ஒரு நபர். என்றபோதிலும் இந்தக் குற்றத்திற்கான காரணம் இந்த துப்பாக்கிதாரியின் உளவியலை மட்டுமே விசாரணை செய்வதன் மூலம் முழுமையாகவோ, அல்லது ஆரம்பமாகவோ கூட விளக்கப்படுத்தப்பட முடியாது. ஹோம்ஸின் இந்த மனிதக் கொலை வெறியாட்டமும், மற்ற மொத்தக் கொலையாளிகளின் செயல்களைப் போன்றே, ஒரு குறிப்பிட்ட சமூக உள்ளடக்கத்தினுள்தான் நடந்திருக்கிறது. தனிநபரின் நோய்க்கூறு இயலைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது, அவர் வளர்ந்து வந்த சமூகத்தின் நோய்க்கூறியலையும் நாம் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

கொலம்பைனில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு அமெரிக்காவும் உலகமும் அதிர்ந்து போய் நின்ற சம்பவம் நிகழ்ந்து 13க்கும் அதிகமான வருடங்கள் கடந்து விட்டன. “தீய சிந்தனைகள்மீதான அர்த்தமற்ற கண்டனங்களும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் துணைநிற்பதாய் கூறுகின்ற சம்பிரதாயமான மற்றும் வெகு விரைவில் மறந்து விடப்பட்ட அறிவிப்புகளும் அந்த சம்பவத்தைத் தொடர்ந்து வந்தன. ஆனால் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நகர்ந்து சென்று விட்டனர், அடுத்த பேரழிவுகள் பின் தொடர்ந்தன. அந்த துயரச்சம்பவத்தில் இருந்து ஏதேனும் படிப்பினை கற்றுக் கொள்ளப்பட்டதாக யாரேனும் கூற முடியுமா?

ஒருவர் இவற்றையும் கேட்க வேண்டும்: கொலம்பைன் கொலைகளின் ஆழமான காரணங்களில் ஏதேனும் அடையாளம் காணப்பட்டிருக்கிறதா, நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா? அமெரிக்கா சமூகரீதியாக செயலற்றிருப்பது 1999 இல் அது இருந்ததைக் காட்டிலும் குறைந்திருக்கிறதா அல்லது கூடியிருக்கிறதா? அநீதியையும் அசமத்துவத்தையும் அமெரிக்கா குறைத்திருக்கிறதா? சமூக இழை இற்றுப் போவது குறைந்திருக்கிறதா? அமெரிக்காவை வன்முறை குறைந்ததும் அக்கறை மிகுந்ததுமான ஒரு சமூகமாக ஆக்க முனைகின்ற எதுவொன்றேனும் கடந்த 13 ஆண்டு காலங்களில் நடைபெற்றிருக்கின்றதா? இன்றைய அமெரிக்க இளந்தலைமுறையினர் ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னதாய் வளர்ந்து வந்த இளந்தலைமுறையினரைக் காட்டிலும் வருங்காலத்தில் அதிக நம்பிக்கை கொள்வதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?  

ஜேம்ஸ் ஹோம்ஸ் 1987 டிசம்பரில் பிறந்திருக்கிறார். அவரது நனவான வாழ்க்கைக்கு வடிவம் கொடுத்திருக்கக் கூடிய நிகழ்வுகளும் சூழல்களும் தான் என்ன? கொலம்பைன் கொலைகள் நடந்தபோது அவருக்கு வெறும் 11 வயது. அவருக்கு 13 வயதாகும் போது 9/11 சம்பவங்கள்பயங்கரவாதத்தின் மீதான போரைசெயல்பாட்டில் விட்டிருந்தன. ஹோம்ஸ்க்கு வயது தெரிந்த வருடங்கள் முதல் அவர் வாழ்ந்த சமூகத்தில், அதன் தலைவர்கள் சமூகப் பாதுகாப்பற்ற நிலையின் ஒரு வடிவத்தை ஊக்குவித்துக் கொண்டும் விளம்பரம் செய்து கொண்டுமிருந்தனர். “சந்தேகப்படும்நபர்கள் குறித்தும் இனம்புரியாத அச்சுறுத்தல்கள் குறித்தும்உஷாராகஇருக்குமாறு மக்கள் கோரப்பட்டனர். ஆபத்து எல்லா இடங்களிலும் நிழலாடிக் கொண்டிருப்பதாய் மக்களிடம் கூறப்பட்டது. இந்த வகைதெரியாத ஆனால் ஏறக்குறைய எப்போதும் இருக்கக் கூடியதான அச்சுறுத்தலுக்கு எதிராய் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி வன்முறை. அதைத் தான் நாட்டின் தலைவர்கள் பெரிய அளவில் கடைப்பிடித்து வருகின்றனர். அன்றாடம் உலகின் ஏதோ ஒரு பகுதியில் அமெரிக்காஎதிரிகளைக் கொன்ற வண்ணமிருக்கிறது

பல ஆண்டுகால பொருளாதார நெருக்கடியின் சமூக அழுத்தங்களால் மேலும் சிக்கலாக்கப்பட்ட இந்த வன்முறைச் சூழல் ஜேம்ஸ் ஹோம்ஸின் மூளையில் வேலை செய்திருக்கிறது. ஹோம்ஸின் குற்றத்தில் மிகவும் அதிரவைக்கும் அம்சமாக இருப்பது அவர் எவ்வித இலக்குமற்று சுட்டது தான். ஒரு இருட்டான திரையரங்கிற்குள் பெரும் ஆயுதபாணியாக நுழைந்தவர், இருக்கையில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார். யாரைச் சுடுகிறோம் என்பதைக் கூட அவர் அறியவில்லை. அவர்களின் முகங்களைக் கூட அவரால் இருட்டில் பார்த்திருக்க முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அவர்கள் எல்லாம் அவரது ஆயுதங்களுக்கான இலக்குகளாக மட்டுமே தெரிந்தார்கள்.

ஆனால் ஆள்பேர் தெரியாமல் கொல்லும் இந்த வடிவம் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை (Drone) பயன்படுத்துகின்ற வழிமுறைகளின் மறு உற்பத்தியாகவே தோன்றுகிறது. ஏவுகணைகளில் கொல்லப்பட்ட பலரும் செய்த ஒரே தவறு தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்தது மட்டுமே என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து ஆளில்லா ஆயுத விமானங்களை இயக்கும்தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அவர்கள் யாரைக் கொலை செய்கிறார்கள் என்கிற அடையாள விவரங்கள் எல்லாம் தெரியாது. அவர்கள் எண்ணத்தைப் பொறுத்தவரை, ஏதோவொரு உருவமில்லாத அச்சுறுத்தலின் ஆள் அடையாளம் தெரியாத பிரதிநிதிகளை அவர்கள் இல்லாது செய்கிறார்கள், அவ்வளவு தான். ஜனாதிபதி ஒபாமாவினால் உத்தரவிடப்பட்டு, உத்தரவுளுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுகின்ற தொழில்நுட்ப அதிகாரிகளால் அமலாக்கப்படுகின்ற இத்தகைய செயல்கள் எல்லாம், திட்டமிட்டு உருவாக்கிய செயல்திட்டங்களையும் கணக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுபவையே.

அரசின் இந்தபகுத்தறிவுபட்டகொலைகள் சமூகத்திற்குள் பகுத்தறிவற்ற தன்மையை தூண்டிவிடுகின்றன. அரசாங்கத்தினால் ஆள் அடையாளம் அவசியமற்று பெருமளவிலான கொலைகள் நடத்தப்படுவது வழமைப்பட்டிருப்பதும் அவை வெகுஜன ஊடகங்களால் நியாயப்படுத்தப்படுவதும் அமெரிக்க சமூகத்திற்கு பெரும் துயரகரமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது. அந்தப் பின்விளைவுகளில் ஒன்று தான் அரோராவில் பாய்ந்த இரத்த வெள்ளம் என்று ஒருவர் வாதிடுவதற்கு உரிமை உண்டு.