சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European auto crisis requires a socialist answer

ஐரோப்பிய கார்த்தொழில் நெருக்கடிக்கு ஒரு சோசலிசப் பதில் தேவை

By Ulrich Rippert 
23 July 2012

use this version to print | Send feedback
 

ஐரோப்பிய கார்த்தயாரிப்பு பெருநிறுவனங்களின் தலைமையகங்களில் இருந்து கிட்டத்தட்ட அன்றாடமும் சாதகமற்ற தகவல்கள்தான் கார்த்தயாரிப்பு தொழிலாளர்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. முன்பு திட்டமிட்டதைவிட மிக அதிகமான வேலை வெட்டுக்களை ஜெனரல் மோட்டார்ஸ் ஐரோப்பிய ஆலைகளில் கோருகிறது.

 

ஓப்பல் உயர் அதிகாரி கார்ல் பிரீட்ரிஜ் ஐ கடந்த வாரம் பணிநீக்கம் செய்த மூன்று நாட்களுக்குள், அவருக்குப் பின் பதவிக்கு வந்த தோமஸ் செட்ரன் 500 ஓப்பல் மேலாளர்களைப் பணிநீக்கம் செய்த உத்தரவை அறிவித்தார். Frankfurter Allgemeine Zeitung  பத்திரிகை செவ்வாயன்று ஓப்பலின் மேற்பார்வைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் தலைவர் ஸ்டீபன் கிர்ஸ்கி இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை எனக் கோரியதாகவும், இதில் அனைத்து நிர்வாகிகளிலும் ஐந்தில் ஒரு பகுதியினர் பணிநீக்கம் பெறுவர் என்றும் தகவல் கொடுத்துள்ளது. இது உயர் மற்றும் மத்தியதர நிர்வாக மட்டத்திலுள்ள 2,400 ஊழியர்களை பதவியிழக்க வைக்கும்.

நிர்வாகத்தை இவ்வாறு மறுகட்டமைத்தல் என்பது GM-Opel உடைய பாரிய வேலை வெட்டுக்களின் ஒரு பகுதி ஆகும். இதில் இன்னும் ஓரிரு ஐரோப்பிய ஆலைகள் மூடப்படுதலும் அடங்கும்.

கடந்த வாரம். பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பாளர் PSA Peugeot Citroen மார்ச் மாதம் ஜெனரல் மோட்டார்ஸுடன் ஒரு கூட்டினை நிறுவியுள்ளதாக அறிவித்து, பிரான்ஸில் அது 8,000 வேலைகளை நீக்குவதாகவும், பாரிசுக்கு அருகே உள்ள ஓல்நே ஆலையை மூட இருப்பதாகவும் அறிவித்தது.

பியட்டின் Fiat தலைமை நிர்வாக அதிகாரி Sergio Marchionne அவருடைய நிறுவனம் அதிக ஆலைகளை வைத்துள்ளதுஎன அறிவித்தார். ஏற்கனவே 2011ல் பியட் சிசிலியில்  Termini Imerese ஆலையை மூடிவிட்டது. நிறுவனத்தின் முக்கிய ஆலை தூரினில் உள்ளது. இப்பொழுது அது அதிகம் பயன்படுத்தப்பட்டாத நிலையில் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. இதேநிலையில் வடக்கு இத்தாலியில் ஓர் ஆலையும் உள்ளது.

பைனான்சியல் டைம்ஸ் தன் ஐரோப்பிய ஆலைகள் ஒன்றை மூடலாம் என்று போர்டும் பரிசீலித்து வருகிறது எனத் தகவல் கொடுத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஐரோப்பாவில் அதன் உற்பத்தித் திறனைக் குறைந்து, ஜேர்மனியில் குறுகிய பணிநேரத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐரோப்பியக் கார்த்தயாரிப்புத் தொழிற்துறை நெருக்கடி தற்காலிகமானதோ, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு உரிய செயல்பாடோ அல்ல. மாறாக இது சர்வதேசப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் வங்கிகளின் ஆணையின் பேரில் சுமத்தும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றின் நேரடி விளைவு ஆகும். ஐரோப்பாவில் காருக்காகப் பதிவு செய்வோர் எண்ணிக்கை 2007ம் ஆண்டை ஒப்பிடும்போது 21 சதவிகிதம் குறைந்துவிட்டதுஅந்த ஆண்டு லெஹ்மன் பிரதர்ஸ் சரிவிற்கு ஓராண்டு முந்தையது ஆகும். இந்த ஆண்டு மட்டும் 7% சரிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Frankfurter Allgemeine Zeitung  ஒரு கார்த்துறை ஆய்வை மேற்கோளிட்டுள்ளது. அது கூறுவதாவது: நெருக்கடிக்குக் காரணம் வரும் பொருளாதார வளர்ச்சியைக் குறித்த பொதுவான பாதுகாப்பின்மை மட்டும் அல்ல. ஆனால் 25 வயதுவரை இருப்பவர்களிடையே பெருகும் அதிக வேலையின்மையினாலுமாகும். இவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் தெற்கு ஐரோப்பாவில் வேலையின்றி உள்ளனர். கார்த்தயாரிப்புத் தொழிற்முறை ஒரு தலைமுறை வாடிக்கையாளர்களை இழக்கும் ஆபத்தில் உள்ளது.

இத்தாலியில் நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் கடுமையாக உள்ளது. 1980க்கும் 1990க்கும் இடையே கார்த்தயாரிப்பு 1.4 மில்லியனில் இருந்து 1.9 மில்லியன் வாகனங்கள் என உயர்ந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்றில் இருபங்குச் சரிவைக் கண்டுவிட்டது. தொழில்துறையில் தொழிலாளர்களுடைய எண்ணிக்கை 42% குறைந்து 170,200 என உள்ளது.

பிரான்சில் கார்த் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று தசாப்தங்களில் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. இதில் பெரும்பாலான சரிவு கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்டதாகும்.

ஜேர்மன் நிறுவனங்களான VW, Mercedes, BMW ஆகியவை தங்கள் விற்பனையையும் உற்பத்தித் திறனையும் விரிவாக்கியுள்ளன. இதற்குக் காரணம் அவற்றின் விற்பனை ஆசியா, குறிப்பாக சீனாவிலும், சில இலத்தின் அமெரிக்க நாடுகளிலும் அதிகமாக இருப்பதுதான். ஆழமடையும் உலக மந்தநிலை தவிர்க்க முடியாமல் இப்பொழுது சந்தையின் முன்னணி வகிக்கும் பெருநிறுவனங்கள்மீது கடுமையான பாதிப்பைக் கொண்டிருக்கும்.

அமெரிக்காவில் இருப்பதைப் போன்றே, ஐரோப்பியக் கார்த்தயாரிப்பாளர்களும் நெருக்கடியைப் பயன்படுத்தி பெரும் பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள், பிற சலுகைக் குறைப்புக்கள் ஆகியவற்றைச் சுமத்த முற்பட்டுள்ளன. இதனால்  அவர்கள் கார்த்துறைத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை 1930களில் இருந்ததைப் போல் மாற்றுகின்றனர். இவ்வகையில், ஐரோப்பிய நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களுடன் கொண்டுள்ள நெருக்கமான கூட்டுழைப்பைத்தான் நம்பியுள்ளன. ஜேர்மனியை பொறுத்தவரை, IG Metall தொழிற்சங்கத்திலும், அதன் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களிலும் தங்கியுள்ளன. ஓப்பலில் அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பற்றிய பணிநீக்கங்கள், IG Metall நிர்வாகிகளை நேரடியாக முக்கிய நிர்வாகப் பதவிகளுக்குள் ஒருங்கிணைக்கும் திட்டங்களுடன் பிணைந்துள்ளது என்பதற்கான அடையாளங்கள் உள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் ஓப்பலின் தொழிற்சாலை தொழிலாளர் குழுவில் அதன் முன்னாள் தலைவர் கிளவ்ஸ் ஃபிரன்ஸ் இன் வழிநடத்தலில் ஓப்பலின் தொழிற்சாலை தொழிலாளர் குழு வளைந்து கொடுக்கும் ஊதிய நிலை, பணித்திட்டங்கள் என்று உற்பத்தியை அதிகரித்து, தொழிலாளர் தொகுப்பை வேலைநீக்கம் செய்வதை திட்டமிடுதல், வளர்ச்சி, செயல்படுத்துல் என்பதில் முக்கிய பங்கு வகித்தது. பல தொழில்துறை வல்லுனர்களைக் கொண்டுள்ள குழுவின் தலைவரான பிரான்ஸ் பணியாட்களுக்கான இரகசிய இயக்குனர் என்று அழைக்கப்படுகிறார்.

அவருக்குப் பின் பதவிக்கு வந்த டாக்டர்.ஷேவர்-குளூக் இன் கீழ் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் நிர்வாகப் பங்கு அதிகரித்துவிட்டது. ஷேவர்-குளூக் சமூக விஞ்ஞானத்தில் ஒரு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பல ஆண்டுகள் கூட்டு தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்குச் செய்தித் தொடர்பாளராகவும், அதன் சர்வதேச குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தியோகபூர்வமாக தொழிற்சாலை தொழிலாளர் குழுவில் சேர்வதற்கு முன் அவருடைய நிலை அதுதான். இதன்பின் அவர் விரைவில் உயர்ந்து, ஃபிரன்ஸிடம் இருந்து பதவியை எடுத்துக் கொண்டுள்ளார்.

ஜனவரி 2012 ன் முன்பகுதியில் Russelsheim தொழிற்சாலை தொழிலாளர் குழுவில் தலைவர் பதவியை எடுத்துக் கொண்ட அன்றே, அவர் கூட்டு நிறுவனங்களின் தொழிலாளர் குழுத் தலைவர் மற்றும் ஐரோப்பிய தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் தலைவர் என்ற பதவிகளையும் எடுத்துக் கொண்டார்.  

ஜூன் மாதம் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் IG Metall ம் தங்கள் ஓப்பலுக்கான சீரமைப்புத் திட்டத்தை முன்வைத்தன. ஜேர்மனித் திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் மிகக் கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகள், வேலைக்குறைப்புக்கள், நலன்கள் வெட்டுக்கள், ஊதியக் குறைப்புக்கள் ஆகியவை அடங்கும். முதல் படியாக தொழிற்சங்கம் 4.3% ஊதிய உயர்வு என்னும் திட்டத்தைக் கைவிட்டது. இந்த நடவடிக்கையே நிறுவனத்திற்கு 19 மில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்தியது.

ஜூன் 28ம் திகதி மேற்பார்வைக் குழுவில் இருக்கும் ஊழியர்களின பிரதிநிதிகள் அனைவரும் Bochum நகரில் உள்ள தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினர்களான ரைனர் ஐனென்கல், டியர்க் பிரேசர் உட்பட ஓப்பல் தலைவர் கார்ல் ஃபிரீட்றிச் ஸ்ராக்க கொடுத்த மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து டெட்ரோயிட்டில் இருந்து வந்த அழுத்தத்தை ஒட்டி ஸ்ராக்க இராஜிநாமா செய்தபின், பல ஆண்டு காலம் அமெரிக்க ஆலோசனை நிறுவனம் அலிக்ஸ் பார்ட்னர்ஸில் பல ஆண்டுகள் உழைத்து ஒப்பலுக்காகக் கடினமான செலவுக் குறைப்புக்களை திட்டமிட்டிருந்த தோமஸ் செட்ரன் அப்பதவிக்கு உயர்த்தப்பட்டதை தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் IG Metall உம் இந்த உயர்மட்ட மாற்றத்தை வரவேற்றனர்.

தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் IG Metall ம் தொழிலாளர்கள் நலன்கள் என்று இல்லாமல் நிறுவனத்தின் நலன்களைத்தான் பிரதிபலிக்கின்றன. அவை தம்மை நிர்வாகத்துடன் முழுமையாக இணைத்துக் கொண்டு, நிர்வாகக் குழுவுடன் விடுத்த ஒரு கூட்டு அறிக்கையில் எழுதியது போல், ஒப்பல் வணிக முத்திரையை வலுப்படுத்தும் திட்டத்தை முன்வைக்கின்றனவே தவிர ஊழியர்களின் உரிமைகளை வலுப்படுத்த அல்ல.

பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய, நலன்கள் வெட்டை எதிர்க்க முற்படும் தொழிலாளர்கள் இப்பொழுது இரு முனைகளில் போராடும் கட்டாயத்திற்கு உட்படுகின்றனர். அதாவது பெருநிறுவன நிர்வாகத்துடனும், தொழிற்சாலை தொழிலாளர் குழுவுடனும் மற்றும் IG Metall க்கு எதிராகவும்.

அனைத்து ஆலைகளிலும் அனைத்து வேலைகள் பாதுகாப்பு மற்றும் ஊதியங்கள், நலன்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு என்பது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் படி, மற்றும் அதன் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிலிருந்தும்  முறிக்கப்பட்டால்தான் இயலும். இதற்கு சமூகப் பங்காளித்துவ முறைக்கு மற்றும் ஜேர்மனியில் உறுதியாக நிலைபெற்றுள்ள வர்க்க ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டம் தேவை.

GM/Opel நிர்வாகமும் அவற்றுடன் இணைந்து செயலாற்றும் IG Metall உம் தற்போதைய சூழ்நிலையில் வேலைகள், ஊதியங்கள் இவற்றைக் பாதுகாப்பது என்பது இயலாதது என்று கூறுகின்றன. இவ்வாறு வாதிடுகையில், அவர்கள் முதலாளித்துவ இலாப முறை மக்களின் பரந்த பெரும்பான்மையின் தேவைகளுடன் இயைந்து நிற்க முடியாது என்பதைத்தான் ஒப்புக் கொள்ளுகின்றன. வேலைகளும் சமூகத்தரங்களும் பெருவணிகத்தின் இலாப நலன்களுக்கு மேலாக மக்களின் தேவைகளை வைக்கும் ஒரு அரசியல் முன்னோக்கான ஒரு சோசலிச அடிப்படையின் கீழ்தான் பாதுகாக்கப்படமுடியும்.

இந்த முன்னோக்கின் மையமாக ஐரோப்பிய தொழிலாளர்களுக்கும் அமெரிக்காவில் உள்ள அவர்களுடைய சக தொழிலாளர்கள், உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவையே உள்ளது. அனைத்து நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்கள் நல்ல ஊதியம் கொடுக்கும் வேலை, வசதியான ஓய்வுக்காலத்திற்கான உரிமையை அடைவதற்குப் போராட வேண்டும். இதற்கு முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிரான, உழைக்கும் மக்களை வறுமையிலும் இழிசரிவிலும் தள்ளும் அதன் பெரும் செல்வந்தர் உயரடுக்கிற்கு எதிரான போராட்டம் தேவை.

தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் கட்டுப்பாட்டை முறிப்பதற்கு ஆலை மற்றும் நடவடிக்கைக் குழுக்களை நிறுவுதல் தேவை. அவை கூட்டுச் சர்வதேச நடவடிக்கைகளையும், வேலைநிறுத்தங்களையும் செய்வதுடன், மூடப்படுதல் என்ற அச்சுறுத்தல் கொண்ட ஆலைகளை ஆக்கிரமிக்கவும் வேண்டும்

ஓப்பல் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள், சர்வதேச அளவில் இருக்கும் கார்த் தொழிலாளர்களுக்கு இத்தாக்குதல்களுக்கு எதிரான உலகளாவிய பிரச்சாரத்திற்காக WSWS இன் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.