சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Global markets fall as fears grow over Spanish debt crisis

ஸ்பெயின் கடன் நெருக்கடி குறித்த அச்சங்கள் பெருகியதை அடுத்து உலகச் சந்தைகள் சரிந்தன

By Nick Beams
24 July 2012

use this version to print | Send feedback

ஸ்பெயின் நெருக்கடி துரிதமாக மோசமடைந்து கொண்டிருக்கிறது என்றும் கிரீஸ் விரைவில் யூரோ மண்டலத்தில் இருந்து வெளித் தள்ளப்படும் என்றுமான அச்சங்களுக்கு இடையில் நேற்று உலகப் பங்குச் சந்தைகள் கணிசமான சரிவைச் சந்தித்து நிதியியல் குழப்பத்தின் ஒரு புதிய சுற்றினைத் தொடக்கி வைத்தன.

அரசாங்கத்தின் இறையாண்மைக் கடன் சுமையை அதிகரிக்காமலேயே ஸ்பெயினின் வங்கி அமைப்புமுறைக்குள் பணத்தைச் செலுத்துவதற்கான ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டாகி விட்டது என்கிற நம்பிக்கை பொங்க ஐரோப்பியத் தலைவர்கள் எல்லாம் உச்சிமாநாட்டுக் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இப்போது அந்தத் தீர்வு ஒரு கற்பனை தான் என்பதாக அம்பலமாகியிருக்கிறது. ஸ்பானிய வங்கிகளுக்கு 100 பில்லியன் யூரோக்களை வழங்குகின்ற ஒப்பந்தம் வெள்ளியன்று கையெழுத்தான போது அரசாங்கம் தான் முழுத் தொகைக்காகவும் கழுத்துச்சட்டை பிடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என்பது தெளிவானதை அடுத்து இந்த சமீபத்திய நெருக்கடி வந்து சேர்ந்திருக்கிறது.

ஐரோப்பாவில் சந்தைகள் திங்களன்று 2 சதவீதத்துக்கும் 3 சதவீதத்துக்கும் இடையில் சரிந்தன. ஸ்பெயின் சந்தை 5க்கும் அதிகமான சதவீதம் சரிந்தது. கையிலில்லாத பங்குகளை விற்பனை செய்வதை ஸ்பெயின் மற்றும் இத்தாலிய அதிகாரிகள் தடை செய்யாது விட்டிருந்தால் இந்த வீழ்ச்சி இன்னும் கூர்மையானதாய் இருந்திருக்கும். அமெரிக்காவில், Dow 200 புள்ளிகள் சரிந்து தொடங்கியது, இறுதியில் நாள் முடிவில் 100 புள்ளிகள் சரிந்திருந்தது.

பத்திரச் சந்தைகளிலான விளைவுகள் இன்னும் கணிசமாய் இருந்தன. ஐரோப்பா குறித்த அச்சங்கள் பெருகுவதைப் பிரதிபலிக்கும் முகமாக, 10-வருட அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் மீதான ஈவுத் தொகை நாளின் வர்த்தகத்தின் போது எப்போதும் கண்டிராத 1.396 சதவீதமளவுக்கு வீழ்ந்தது.

ஸ்பெயினின் 10 ஆண்டு பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் யூரோ சகாப்தத்தின் புதிய உச்சமாக 7.56 சதவீதத்தை எட்டியது. 7 சதவீத அளவுக்கும் அதிகமாயிருந்தால் நீண்ட காலப் பத்திரங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாது என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆயினும் குறைந்த காலப் பத்திரங்களிலான மாற்றம் தான் நெருக்கடி இன்னும் தீவிரப்பட்டிருக்கிறது என்பதை இன்னும் திடுக்கிடும் வகையில் சுட்டிக்காட்டியது.

இப்போது வரை, நீண்ட கால ஈவுகளில் அதிகரிப்பு ஏற்படுவதை எதிர்கொள்வதற்கு வட்டிவிகிதங்கள் குறைந்த குறைந்த-காலப் பத்திரங்களை விற்பதன் மூலமாகப் பணம் திரட்டுவது என்பது ஸ்பெயின் அரசாங்கத்திற்கு இயன்று வந்திருந்தது. ஆனால் அந்தத் தந்திரோபாயம் இனியும் சாத்தியமில்லாமல் போகலாம். நேற்று ஸ்பெயினின் இரண்டாண்டு காலப் பத்திரங்களுக்கான ஈவுகளும் 78 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து யூரோ சகாப்த உச்சமாக 6.54 சதவீதத்தை எட்டின. நெருக்கடி தொடங்கியதிற்குப் பிந்தைய காலத்தில் ஒரே நாளின் மிகப் பெரும் அதிகரிப்பு இதுவே

ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் வந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டவாறு, “நீண்ட கால மற்றும் குறைந்த கால வட்டிவிகிதங்கள் ஒன்றுகூடும் வகையில் ஈவு வளைகோடு செல்வதென்பது ஸ்பெயினுக்கு அச்சமூட்டும் சம்பந்தம் கொண்டிருக்கிறது.””ஸ்பெயினில் விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விட்டதான ஒரு உணர்வு உள்ளதாகஅந்த செய்தித்தாள் மேற்கோளிட்ட ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

அவசர உதவி கோரி வாலன்சியா பிராந்தியத்தில் இருந்து மாட்ரிட்டில் இருக்கும் மத்திய அரசாங்கத்திற்கு சென்ற வெள்ளியன்று வந்திருக்கும் கோரிக்கை குழப்பத்தை மேலும் கூட்டியிருக்கிறது. போர்த்துக்கல் அளவு பெரிய பொருளாதாரமான கட்டலோனியா உட்பட இன்னும் ஆறு பிற பிராந்திய அரசாங்கங்களிடம் இருந்தான கோரிக்கைகள் பின் தொடர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17 ஸ்பெயின் பிராந்தியங்களுக்கும் ஆண்டின் இரண்டாம் பாதியில் மறுநிதியாதாரம் செய்வதற்கென ஏறக்குறைய 16 பில்லியன் யூரோவுக்குக் கடன் இருக்கிறது.

பொருளாதாரத்திலான வீழ்ச்சி கடன் நெருக்கடியை அதிகப்படுத்த, அது மேலதிக செலவின வெட்டுகளுக்கு இட்டுச் சென்று, அதனால் பொருளாதாரம் இன்னும் மந்தநிலைக்குள் தள்ளப்படுகிற ஒரு நச்சுச் சுழற்சியின் பிடிக்குள் ஸ்பெயின் வலுவாக சிக்கிக் கொண்டிருக்கிறது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஜூன் வரையான மூன்று மாத காலத்தில் பொருளாதாரம் 0.4 சதவீதம் சுருங்கியிருப்பதாகவும், குறைந்தபட்சம் 2014 ஆம் ஆண்டுவரையாவது ஸ்பெயின் மந்தநிலையில் தான் தொடர்ந்து இருக்கும் என்றும் பேங்க் ஆஃப் ஸ்பெயின் அறிக்கை தெரிவித்தது.

நெருக்கடியின் தீவிரத்தைக் காணும்போது, ஸ்பெயின்பிணையெடுப்புஎன்பதான ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டு ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை கொண்டமுக்கூட்டின்நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுவது அநேகமாய் நடக்கலாம். அதாவது ஸ்பெயின் அரசாங்கம் சென்ற வாரத்தில் அறிவித்த 65 பில்லியன் யூரோ தொகுப்பில் தலைமை அம்சங்களாக மேலதிக வெட்டுகளும் சிக்கன நடவடிக்கைகளும் இருக்கும்.

ஜேர்மனியின் நிதி அமைச்சரான வொல்ஃப்காங் ஷொய்பிள க்கும் அவரது ஸ்பெயின் சகாவான லூயிஸ் டி கிடாஸுக்கும் இடையில்ஸ்பெயினின் வருங்காலம்தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்று பிற்பகல் நடைபெறவிருக்கின்றன. “நிச்சயமின்மையும் ஸ்திரமின்மையும்நிலவுகின்ற இப்போதைய சூழலில் செயல்படுவதற்கான ஒரே வழி என்பதுஅரசாங்கங்களின் செயல்திறனுக்கு நன்கு அப்பால்சென்று விட்டிருக்கிறது என்று டி கிடோஸ் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் திங்களன்று கூறினார்.

ஸ்பெயின் பிணையெடுப்பு அநேகமாய் நடக்கும் என்று கருதுவதாகவே தரமதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் (Moody's) தெரிவிக்கிறது. ஐரோப்பிய கடன் நெருக்கடி விடயத்திலானநிச்சயமற்ற தன்மையின் அதிகரிப்புஎன்ற காரணத்தினால் இந்நிறுவனம் ஜேர்மனி, நெதர்லாச்து மற்றும் லக்சம்பர்குக்கு கடன் தரமதிப்பீட்டை எதிர்மறைக்குக் குறைத்துள்ளது. ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கான கூட்டு உதவிக்கான அவசியத்தின்சாத்திய அதிகரிப்பைக் கூறி கண்டத்தின் வலிமையான பொருளாதாரங்களை நோக்கி மூடிஸ் தனது மதிப்பீட்டைத் திருப்பியுள்ளது. ஏனென்றால்யூரோ பகுதியானது அதன் நடப்பு வடிவத்தில் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் இந்த சுமையானது அநேகமாக மிகவும் அதிக தரமதிப்பீட்டைப் பெற்ற உறுப்பு நாடுகளின் மீதே விழும்”. 

ஸ்பெயின் நெருக்கடி உச்சமடைகின்ற அதே நேரத்தில், யூரோ மண்டலத்தில் இருந்து கிரீஸ் விரைவில் வெளியேற்றப்படலாம் என்கின்ற அறிகுறிகள் பெருகுவதன் மூலம் சந்தைக் குழப்பமானது எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் இனியும் நிதி உதவி வழங்குவதற்குத் தயாராக இல்லை என்று ஜேர்மன் வார இதழான Der Spiegel செய்தி தெரிவித்தது. இது செப்டம்பருக்குள்ளாக கிரீக் அரசாங்கத்திற்கு பணப் பற்றாக்குறை தோன்றும் என்கிற அச்சங்களைத் தூண்டியது.

இந்த செய்தியை IMF மறுத்தது. கிரீஸுக்கு தொடர்ந்து உதவிக் கொண்டிருப்பதாக அது கூறியது. பிணையெடுப்புத் திட்டத்தின் கீழான வெட்டு வேலைத்திட்டங்களையும் சிக்கன நடவடிக்கைகளையும் அமலாக்குவது குறித்து இன்று முக்கூட்டின் (troika)ஒரு குழு கிரேக்க அரசாங்கத்துடனும் ஏதென்ஸில் இருக்கும் நிதி அதிகாரிகளுடனும் விவாதங்களைத் தொடக்குகிறது.

Spiegel செய்தியை IMF உத்தியோகபூர்வமாக மறுத்திருக்கின்ற அதேசமயத்தில், கிரீஸ்க்கு நிதி விநியோகம் துண்டிக்கப்படலாம் என்பதற்கான பிற அறிகுறிகள் தோன்றியுள்ளன. வெள்ளியன்று ஐரோப்பிய மத்திய வங்கி, முக்கூட்டிடம் இருந்து ஒரு முழு அறிக்கையைப் பெறும் வரைக்கும் கிரேக்க பத்திரங்களை கடன்களுக்கான பிணையாக தான் ஏற்றுக் கொள்வதில்லை எனக் கூறியது. குறைந்தது செப்டம்பர் வரையேனும் இந்த அறிக்கை எதிர்பார்க்கப்பட முடியாது.

வார இறுதியின் போது வானொலி நிலையமான ARD யிடம் பேசிய ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் பிலிப் ரோஸ்லர் கிரீஸ் சர்வதேசரீதியாக கடனளித்தோருக்கான தனது உறுதியைக் அநேகமாகக் காப்பாற்ற இயலப் போவதில்லை என்றார். அவ்வாறு நிகழுமாயின் அந்நாட்டிற்கு இதற்கு மேல் பண உதவி கிடைக்காது என்றும் அவர் கூறினார். “கிரீஸ் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அதற்கு மேல் அது பணம் பெற முடியாது என்பது தெளிவுஎன்றார் ரோஸ்லர்.

அத்தகையதொரு நடவடிக்கை என்ன பின் விளைவுகளைக் கொண்டுவரும் என்று கேட்கப்பட்டபோது, தனக்கும் சரி மற்றவர்களுக்கும் சரியூரோ மண்டலத்தில் இருந்து கிரீஸ் வெளியேறுவது குறித்த பயங்கரத் தோற்றம் எல்லாம் வெகுகாலத்திற்கு முன்பே மறைந்து விட்டதுஎன்று அவர் சேர்த்துக் கொண்டார்.

ரோஸ்லர் ஜேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தவில்லை - அவர் அரசாங்கத்தின் இளைய கூட்டணிக் கூட்டாளியான சுதந்திர ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினர் - என்கிற அதேசமயத்தில் அவரது கருத்துகள் ஐரோப்பிய அரசியல் உயரடுக்கின் பிரிவுகளது ஒரு நகர்வை பிரதிபலிக்கின்றன. கிரேக்கக் கடனின் பெரும் பகுதி தனியாருக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் நிதி ஸ்தாபனங்களிடம் இருந்து அரசாங்க அதிகாரிகளுக்கு மாற்றப்படுவதை உறுதி செய்வதற்கென கடந்த இரண்டு ஆண்டுகளை செலவிட்டிருப்பதற்குப் பின்னர், இப்போது அவர்கள் கிரீஸை திசையற்ற நிலைக்குத் துண்டித்து விடுவதற்கு தயாரிப்புடன் இருக்கலாம்.

இது கட்டவிழ்த்து விடக் கூடிய பொருளாதார, நிதி மற்றும் சமூகக் குழப்பங்கள் எல்லாம் வங்கிகளின் கோணத்தில் இருந்து பார்க்கையில், ஸ்பெயினும் அதே போல் மற்ற நாடுகளும் அந்நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் கோரிக்கைகளை எதிர்க்குமானால் என்ன நடக்கும் என்பதை அந்நாடுகளின் மக்களுக்குக் காட்டுவதற்கான ஒரு உதாரணத்தை வழங்கி வங்கிகளுக்கு அனுகூலம் பயக்கக் கூடியவை.