சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

EU representatives discuss withdrawal of Greece from the euro zone

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் யூரோப்பகுதியில் இருந்து கிரேக்கம் விலகுவது குறித்து விவாதிக்கின்றனர்

By Christoph Dreier
25 July 2012

use this version to print | Send feedback

கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து விலகுதல் என்பது பெருகியமுறையில் நடக்கும் எனத் தோன்றுகிறது. சமீபத்திய நாட்களில் முக்கூட்டின் பிரதிநிதிகள் (சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை) இன்னும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை என்றால் கிரேக்கம் திவால் ஆவது குறித்து தங்களுக்கு விருப்பம்தான் என அடையாளம் காட்டியுள்ளனர்.

நேற்று முக்கூட்டின் பிரதிநிதிகள் சிக்கன நடவடிக்கைகள் செயற்பாட்டின் முன்னேற்றத்தை பரிசீலிக்க கிரேக்கத்திற்கு வந்தனர். செய்தி ஊடகத் தகவல்களின்படி, மக்களின் தொடர்ந்த எதிர்ப்புக்கள், குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது சிக்கன நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டது, கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தவர்கள் கோரிய சமூக வெட்டுக்களைச் செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கிரேக்க அரசாங்கம், ஆணையிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் இரண்டாண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும், சிறிது சிறிதாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது; ஏனெனில் மக்களுக்கு எதிராக இந்த வெட்டுக்களைச் செயல்படுத்தும் வாய்ப்பு இல்லை. செய்திச் சஞ்சிகை Spiegel உடைய கருத்தின்படி, அத்தகைய தாமதத்தினால் கிரேக்கத்தின் கடன் சுமையில். கூடுதலாக 10 முதல் 50 பில்லியன் செலவுகள் ஏற்படும்.

ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் பரந்த வறுமை, வேலையின்மை மற்றும் ஊதிய வெட்டுக்களை ஏற்படுத்தி ஆழ்ந்த மந்தநிலையையும் தோற்றுவித்துள்ளன. இந்த ஆண்டு கிரேக்கப் பொருளாதாரம் 7% சுருக்கம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது; இது முதலில் வந்த கணிப்பான 4.5 ல் இருந்து அதிகம் ஆகும்.

கிரேக்கத்தின் பொருளாதாரச் சரிவுடைய வேகத்தைப் பார்க்கும்போது, அதன் கடன் என்பதின் அளவு அதன் பொருளாதாரத்தோடு ஒப்பிடுகையில் உண்மையில் பெருகுகிறது; ஏனெனில் கிரேக்கம் கடனுக்கே பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கிரேக்க நிதி அமைச்சரகம் கடன் இலக்குகளை அடைவதற்கு இன்னும் 14.5 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களில் தேவை என்று கூறியுள்ளது; இது முதலில் திட்டமிட்ட 11.5 பில்லியன் யூரோக்களை விட அதிகமாகும்.

ஆயினும்கூட, முக்கூட்டின் பிரதிநிதிகள் சிக்கன நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துவது குறித்துக்கூட பரிசீலிக்க மறுத்துவிட்டனர். மாறாக அவர்கள் இப்பொழுது செப்டம்பர் மாதம் கிரேக்கத்தை திவாலாக்குவதற்கு கட்டாயப்படுத்த வெளிப்படையாக விவாதிக்கின்றனர்; அப்பொழுதுதான் இருக்கும் உதவித் தொகுப்பான12.5 பில்லியன் யூரோக்களின் அடுத்த தவணை வரவுள்ளது. அரசாங்கம் பின்னர் அதையொட்டி யூரோப்பகுதியில் இருந்து விலக நேரிடும்; கிரேக்கத்தின் நாணயமாக டிராஷ்மாவை அறிமுகப்படுத்தும்; தன் கடன்களை அடைக்க நாணயத்தை அச்சிட நேரிடும்.

கடந்த வெள்ளியன்று, முக்கூட்டு அதன் அறிக்கையை வெளியிடும்வரை இனி ECB கிரேக்கப் பத்திரங்களை கடன்களுக்கு உத்தவாரம் என ஏற்க முடியாது என்று அறிவித்துள்ளது. அறிக்கை செப்டம்பரில்தான் வரும் என்பதால், கிரேக்க வங்கிகள் கடுமையான நிதியப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. அவை கிரேக்கத்தின் மத்திய வங்கியை நிதி பெறுவதற்கு நாட வேண்டும்.

திங்களன்று ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கடனாக ஒரு பென்னி கூட முக்கூட்டில் இருந்து அறிக்கை பெறப்படும் வரை கொடுக்கப்படமாட்டாது என்பதைத் தெளிவுபடுத்தினார். இக்காரணத்தை ஒட்டி, ஏதென்ஸ் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இருந்து ஆகஸ்ட் மாதம் அவசரகால கடன்களை நாடியது; அப்பொழுதுதான் திவாலைத் தவிர்க்க முடியும் என்று. Der Spiegel இன்  கருத்துப்படி உயர்மட்ட IMF  அதிகாரிகள் கிரேக்கத்திற்கு இன்னும் கடன்கள் கொடுப்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விட்டனர்.

IMF க்கு அடுத்தாற்போல் கிரேக்கத்திற்கு அதிகப்பட்சம் கடன் கொடுத்திருக்கும் ஜேர்மனி, பெருகிய முறையில் யூரோப்பகுதியில் இருந்து கிரேக்கம் நீக்கப்படுவது குறித்து வெளிப்படையாக விவாதிக்கிறது.

ஜேர்மனியின் பொருளாதார மந்திரி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிலிப் ரோஸ்லர் தொலைக்காட்சி நிலையம் ARD  இடம், தான் கிரேக்கம் கடன்களைக் கொடுத்தவர்கள் கூறும் தேவைக்கேற்ப திருப்பிக் கொடுக்குமா என்பதில், கூடுதல் அவநம்பிக்கையைத்தான் கொண்டுள்ளதாகக் கூறினார்.

 கிரேக்கம் அதன் கடமைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த தவணைக் கடன்கள் கிடையாது என்று FDP இன் தலைவர் கூறினார்; நாடு பின்னர் திவாலாகிவிடும். இதைத் தொடர்ந்து நாட்டிலேயே விவாதம் தொடங்கும். கிரேக்கர்கள் அதன் பின்தான் இதுபற்றி நம்பிக்கை கொள்வர்; அதாவது யூரோப்பகுதியில் இருந்து வெளியேறுவது புத்திசாலித்தனம் என்று.

இக் காட்சியைத்தான் மந்திரி காண விரும்புகிறார். பல வல்லுனர்களுக்கு, FDP மற்றும் எனக்கும், கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து வெளியேறுவது என்பது அதன் திகில் தன்மையை இழந்துவிட்டது. என்றார் அவர்.

கிறிஸ்துவ சமூக ஒன்றியம் CSU (ஆளும் கூட்டணியின் ஒரு பகுதி) உடைய தலைமைச் செயலர் Alexander Dobrindt யூரோப்பகுதியில் இருந்து கிரேக்கம் விலகுவதைச் செயல்படுத்தத் திட்டங்களையும் தயாரித்துள்ளார். Welt am Sonntag பத்திரிகையில் அவர் டிராஷ்மா படிப்படியாக அறிமுகப்படுத்த வேணடும் என்று கூறியுள்ளார். கிரேக்க அரசாங்கம் இப்பொழுது முதல் அரசாங்க ஊழியர்களுக்கு பாதிச் சம்பளம், ஓய்வூதியங்கள் மற்றும் பிற செலவுகளை டிராஷ்மாவில் கொடுக்கத் தொடங்க வேண்டும் என்றார்.

Süddeutsche Zeitung உடைய கருத்துப்படி அரசாங்க வட்டாரங்கள் இப்பொழுது அங்கேலா மேர்க்கெல் மீண்டும் பாராளுமன்றத்திடம் கிரேக்கத்திற்கு மூன்றாம் மீட்பு நிதித் தொகுப்பிற்கு ஒப்புதல்கொடுக்க வருவார் என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. என்றார்.  கிரேக்க பிணை எடுப்புப் பொதிகளுக்கான முன்னய இரு வாக்களிப்புக் காலங்களிலுமே ஜேர்மனியில் ஆளும் கூட்டணிக்குள் ஏற்கனவே எதிர்ப்புக்கள் ஏற்பட்டுவிட்டன.

Bild Zeitung இடம் பேசிய நிதி மந்திரி Wolfgang Schäuble ஏதென்ஸிடம் தன் பிடிவாதத் தன்மையைக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தினார்; தாமதங்கள் இருந்தால், கிரேக்கம் அவற்றைக் கண்டிப்பாக ஈடு செய்ய வேண்டும். யூரோக்குழு முக்கூட்டின் அறிக்கை வந்தவுடன்  ஆலோசனை நடத்தும்.

இந்த நிலைப்பாடுகள் ஜேர்மனிய முதலாளித்துவத்திடையே கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. இப்பொழுது வெளிப்படையாக உச்சரிக்கப்பட்டுள்ளது என்னும் உண்மை கிரேக்க அரசாங்கத்திற்குப் பெரும் அழுத்தங்களை கொடுத்துள்ளது. ND, PASOK, DIMAR  ஆகிய கட்சிகளின் கூட்டணி, மொத்தத்தில் பதிவான வாக்குகளில் 50%க்கூட வெற்றி அடையமுடியாதது, பரந்த மக்கள் எதிர்ப்பை மீறி புதிய சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து விலக்கப்படுவது குறித்த விவாதங்கள் வெற்று அச்சுறுத்தல்கள் அல்ல.  கிரேக்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முக்கூட்டின் பிணைஎடுப்புக்களின் மூலம், அரச திவாலின் செலவுகளில் முக்கால் பகுதி இப்பொழுது பொது நிதியில் உள்ளது. தனியார் வங்கிகள் நீண்டகாலம் முன்னரே தங்கள் கிரேக்கப் பத்திரங்களை புதிய நாணயத்திற்காக மாற்றிக் கொண்டுவிட்டன. இதற்கான பணம் ஒருபுறம், கிரேக்கத் தொழிலாளர்களிடம் இருந்து பிழிந்து எடுக்கப்படுகிறது; மறுபுறமோ பிற யூரோ நாடுளால் அளிக்கப்படுகின்றன.

பொது அதிகாரங்கள் மீது கிரேக்க கடனைச் சுமத்துவது என்பதன் அர்த்தம், கிரேக்க தேசியத் திவாலின் நேரடித் தாக்கம் முக்கியமாக யூரோப்பகுதியிலுள்ள பொது நிதியிலும், IMF   க்கு அளிப்புக்கொடுக்கும் நாடுகளின் மீதும் விழும் என்பதாகும். இக்காரணத்தை ஒட்டி கிரேக்கத்தை யூரோவில் இருந்து வெளியேற்றவது என்பது நிதிய உயரடுக்கிடம் விருப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த வழியில், ஒரு எடுத்துக்காட்டாக முக்கூட்டின் மீது சார்ந்துள்ள மற்ற நாடுகளுக்கு ஒரு உதாரணமாகக் காட்டப்படலாம். குறிப்பாக ஸ்பெயினில்; அங்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு பெரும் எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ளது. கிரேக்கம் வெளியேற்றப்படுவது அங்கு இருப்பவர்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் பயன்படும்.

இந்நிலையில் மீண்டும் டிராஷ்மாவிற்குத் திரும்புதல் என்பது மக்களுக்குப் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். பெரும் பணவீக்கம் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூல நலன்களின் மதிப்பை ஒரே இரவில் குறைத்தவிடும்; பசி, வறுமை, பரந்த வறியநிலை ஆகியவற்றை தீவிரப்படுத்தும். கிரேக்கம் சர்வதேச நிறுவனங்களுக்கு ஒரு குறைவூதிய தொழிற்பட்டறையாகிவிடும்.

தொழிலாள வர்க்கத்திற்கான மாற்றீடு என்பது யூரோப்பகுதிக்குள் இருத்தலை பாதுகாத்தலின் மூலம் இயலாது. அடுத்த சிக்கன நடவடிக்கைகள் குறித்த தொகுப்பு தொழிலாளர்களின் நிலைமையை இன்னும் மோசமாக்கி உறுதியாக நாட்டைத்திவால் தன்மையில் தள்ளவிடும். இப்பொழுது அவசியப்படுவது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிதிய உயரடுக்கு மற்றும் அதன் ஐரோப்பிய அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் ஒரு ஐரோப்பிய அளவிலான அணிதிரளல் ஆகும்.