சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions sign concession deal with automaker PSA

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் கார்த் தயாரிப்பு நிறுவனம் PSA உடன் சலுகை அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன

By Kumaran Ira
30 July 2012

use this version to print | Send feedback

ஊதிய முடக்கங்கள், கூடுதலான வளைந்து கொடுக்கும் பணி நேரம் என்று பிரெஞ்சு கார்த்தயாரிப்பு நிறுவனம் PSA Peugot Citroen அதன் வடக்கு பிரெஞ்சு சிறுநகரான ஹோர்டைனில் உள்ள செவல்நோர்ட் ஆலையில் இரண்டு மாதங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு பின், ஜூலை 26 அன்று தொழிற்சங்கங்கள் மிக அதிக சலுகைகளை வளங்க ஒப்புக் கொண்டுள்ளன.

ஒரு "போட்டி உடன்பாடு" என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், பாரிஸிற்கு அருகே உள்ள அதன் ஒல்னே ஆலையை மூடி, நாடு முழுவதும் 8,000 வேலைகளை அகற்றிய PSA உடைய அறிவிப்பிற்குப் பின் வந்துள்ளது. தொழிலாளர்கள் இச்சலுகைகளை வளங்க உடன்படாவிட்டால் செவல்நோர்டையும் மூடிவிடுவதாக PSA அச்சுறுத்தியது; இதன் மூலம் அதன் வருங்கால K-Zero பயன்பாட்டு வாகனங்கள் இக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டால்தான் செவல்நோர்ட்டில் கட்டுவது பரிசீலிக்கப்படும் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.

2,700 தொழிலாளர்களைக் கொண்ட செவல்நோர்ட், வணிக வாகனங்களையும் Peugeot 807, Citroen C8 போன்ற கார்களையும், இத்தாலியக் கார்த்தயாரிப்பாளர் பியட்டின் Scudo மாதிரியையும் தயாரிக்கிறது. கூட்டு முயற்சியில் இருந்து பியட் அகற்றப்பட்டாலும்கூட, PSA  சமீபத்தில் மற்றொரு கூட்டு முயற்சி உடன்பாட்டை டோயோடாவுடன் சேர்ந்து ஜப்பானிய கார்த் தயாரிப்பாளருக்கு நடுத்தர வாகனங்களை உற்பத்தி செய்வதற்குக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் செவல்நோர்ட்டை தொழில்துறை நடவடிக்கைகளை சீராக வைப்பதற்கான வருங்காலத் திட்டங்களுக்கு உகந்த இடம் என்றும், போட்டித்தன்மை பற்றிய பிரச்சினை தேவையென்றும், நிறுவனத்தை நிர்ணயிப்பதற்கு உதவும் என்றும் கூறுகிறது.

ஐந்து ஆண்டு உடன்பாடு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்து, தன் போட்டித்தன்மை மற்றும் இலாபங்களை அதிகரிப்பதற்கான PSA திட்டத்தின் ஒரு பாகமாகும். PSA சமீபத்தில் இந்த ஆண்டு முதல் பாதியில் 800 மில்லியன் யூரோக்கள் செயற்பாட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிவித்துள்ளது; இதுதான் ஆலை மூடல்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை நியாப்படுத்துகிறது.

இந்த உடன்பாடு இரண்டு ஆண்டு காலத்திற்கு ஊதியத் தேக்கத்தை கொடுக்கும், பணிநேரத்தில் கூடுதலான வளைந்து கொடுக்கும் தன்மை இருக்கும் மற்றும் தொழிலாளர்களை குறைந்த தகுதி வேலைகளுக்கு PSA க்குள் வேறு கிளைகளுக்கு மாற்றுதல் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இலாபத்தோடு துணை போனஸ்களுக்கான வழிவகையை இது செய்துள்ளது; நிறுவனம் ஆண்டு ஒன்றிற்கு நூறாயிரக்கணக்கான மில்லியன்களை இழந்து கொண்டிருக்கிறது என்பது பொருளற்றது.

சலுகைகளை அகற்றுவதற்கான தொழிற்சங்க ஆதரவை PSA வரவேற்றுள்ளது. நிறுவன மட்டத்தில் பணி நிலைமைகளை மாற்றி வைத்தல், வேலைகளை தக்க வைத்தல், செவல்நோர்ட்டை வளர்த்தல் ஆகியவை CFE-CGC,FO, SPI-GSEA தொழிற்சங்கங்களால் கையெழுத்திடப்பட்டுள்ளனஎன்று PSA அறிவித்துள்ளது.

இந்த உடன்பாட்டை தொழிற்சங்கங்கள் ஆலையை காப்பாற்றுவதற்கு ஒரு நல்ல சமரசம் என விவரித்து பாராட்டியுள்ளன. FO எனப்படும் தொழிலாளர் போராட்ட தொழிற்சங்கத்தின் பிரதிநிதி Jean-François Fabre இழிந்த முறையில், இந்த உடன்பாடு நம்மை ஆலையைக் காப்பாற்ற உதவுகிறது... ஒல்னேயில் உள்ள நம் தோழர்கள் அனைவரும் ஆலையை மூடுவதற்கு பதிலாக இது போன்ற உடன்பாட்டை விரும்பியிருப்பார்கள் என்றார்.

CGTஎனப்படும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு முற்றிலும் அடையாள வாக்கை உடன்பாட்டிற்கு எதிராகப் போட்டது; இதையொட்டி அது போராட்டம் நடத்தும் திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. செவல்நோர்டில் இருக்கும் CGT பிரதிநிதி Ludovic Bouvier, ‘ஊதியத்துடன் விடுமுறை காலத்திற்கு முன் தொழிலாளர்களுக்கு தெரியாமல் உடன்பாட்டில் நாங்கள் கையெழுத்திடமாட்டோம் என்றார்.

CGT இன் முக்கிய உலோகத்துறைப் பிராந்திய அதிகாரியான Jean-Pierre Delannoy கூறினார்: இந்த நகரும் தன்மை, வளைந்து கொடுக்கும் தன்மை, ஊதியத் தேக்கங்களை கொண்ட இந்த உடன்பாடு எல்லா PSA நிறுவனங்களிலும் செயல்படுத்தப்படலாம், ஏன் முழு கார்த்தொழிலிலும் கூடச் செயல்படுத்தப்படலாம்... ஒல்னே ஆலையை மூடி அதிர்ச்சி ஏற்படுத்தியதை பயன்படுத்தி செவல்நோர்டில் அவர்கள் சலுகைகளை சுமத்திவிட்டு, முதலில் நீங்கள் கையெழுத்திடுங்கள், பின்னர் உங்களுக்கு K-Zero” பயன்பாட்டு வாகனங்கள் தயாரிப்பது கிடைக்கும்என்று கூறும் உரிமையைப் பெற்றிருக்கக் கூடாது. நாங்கள் ஒன்றும் ஏமாறவில்லை, இது ஒரு மிரட்டலாகும்.

CGT உடன்பாட்டிற்குப் பேச்சளவில் எதிர்ப்புக் காட்டுவது முற்றிலும் இழிந்ததாகும். ஒரு மாதத்திற்கும் மேலாக உடன்பாடு குறித்து பேரத்தை நிர்வாகம் நடத்துகையில் அது மௌனமாக இருந்தது; ஒல்னே ஆலை மூடப்படுவதற்கு அது எதிர்ப்பு எதையும் செய்ய மறுத்தது போல் செவல்நோர்டில், CGT பேச்சுவார்த்தைகளை வெறுமனே கவனித்துக்கொண்டிருந்ததோடு, பின்னர் மற்ற தொழிற்சங்கங்கள் உடன்பாட்டிற்கு ஒப்பதல் கொடுக்கும்வரை காத்தும் இருந்தது.

செவல்நோர்டில் உள்ள தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் அமெரிக்க ஐக்கிய கார் தொழிலாளர் தொழிற்சங்கம் (UAW) அமெரிக்க கார்த்தயாரிப்பு நிறுவனங்களுடன் வழக்கமாக ஒத்துழைத்து ஆழ்ந்த ஊதிய செலவு குறைப்பு நடவடிக்கைகளை சுமத்துவதை, ஆலை மூடல்களை, ஊதியங்கள், பிற நலன்கள் வெட்டப்படுதலை ஒத்திருக்கிறது. இது, அமெரிக்கக் கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் மேலும் போட்டித்தன்மை பெற்றுத் தங்கள் இலாபங்களை அதிகரிக்க பாதை அமைத்து கொடுத்த்து.

PSA நிர்வாகமும் தொழிற்சங்க அதிகாரிகளும் கார்த்தயாரிப்புத் துறை மற்றும் அதற்கு அப்பாலும் செயல்படுத்துவதற்கு செவல்நோர்ட் உடன்பாட்டை ஒரு மாதிரிபோல் பயன்படுத்த முயல்கின்றனர்.

உடன்பாடு அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னதாக, PSA உடைய தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வாரன் ஒரு பாராளுமன்ற பொருளாதார ஆணையத்திடம் இந்த உடன்பாடு கார்த் தொழில்துறையில் மற்ற பிரிவுகளுக்கு ஒரு வடிவமைப்பாக உதவும்.... இந்த உடன்பாட்டைப் பெற்றால், நாங்கள் எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுவோம், அதையொட்டி தொழில்துறை முழுவதும் படிப்பினைகளைப் பெறலாம். என்று கூறினார்.

அவர் மேலும் கூறியது: இதை நான்  [தேசிய] தொழிற்சங்க கூட்டமைப்புக்களுடன் விவாதித்துள்ளேன்; அவர்களும் இப்பிரச்சினை குறித்து ஆராய தயாராக இருப்பதை புரியக்கூடியதாக உள்ளது.

தொழிற்சங்கங்களும் இதேபோல் இத்திட்டம் முழுத் தொழிலாளர் தொகுப்பிற்கும் எதிராக செயல்படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர். FO உடைய அதிகாரி Fabre விளக்கினார்: இந்த உடன்பாடு மற்ற இடங்களிலும் பின்பற்றப்படலாம். துல்லியமாக அக்காரணத்திற்காகத்தான் நம் தேசிய கூட்டமைப்பு மற்றும் சட்டப்பணிப் பிரிவு மூலம் இது பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டது.

தொழிலாளர்கள் மீது சலுகைகளைச் சுமத்துகையில் PSA இன்னும் அதிக அரசாங்க உதவிநிதிகளையும் வரிச் சலுகைகளையும் தன் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்குக் கோருகிறது. FO தொழிற்சங்கம் உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுப்பதற்கு இதையும் மேற்கோளிட்டுள்ளது; Fabre இது பற்றி கருத்துக் கூறுகையில், இந்த உடன்பாடு அரசாங்கம் நமக்கு உத்தரவாதம் அளிக்க அனுமதிக்கிறது; மூடப்படாமல் இருக்கும் ஆலைகளுக்கு உதவிநிதி அளிக்க அது தயாராக உள்ளது.

செவல்நோர்ட் உடன்பாடு, தொழிற்சங்கள் மற்றும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் புதிய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பேரழிவு தரும் வெளிப்பாடாகும்; அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தொழிற்சங்கங்களும் குட்டி முதலாளித்துவ இடது குழுக்களான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்றவை ஆதரவு கொடுத்திருந்தன.

பிரான்சில் "மீண்டும் தொழில் மயமாக்கல்" மற்றும் போட்டித்தன்மைக்கு ஏற்றம் கொடுக்கப்படும் என்ற உறுதிமொழிகளை அடிப்படையில் பதவிக்கு வந்து பின்னர், ஹாலண்ட் உடைய நிர்வாகம் அதை எப்படிச் சாதிக்க விரும்புகிறது என்பதை இப்பொழுது தெளிவாக்கியுள்ளது. பெருவணிகத்தின் பிரச்சாரமான வேலைகளை, ஊதியங்களைக் குறைத்து, தொழிலாள வர்க்கத்தின் மீது வறுமை ஊதியத்தைச் சுமத்துவது என்பதற்கு அவர் ஆதரவு கொடுக்கிறார்.

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் சமீபத்தில் ஒரு திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது; இதற்கு கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் ஆதரவு கொடுத்தள்ளன; அது பிரெஞ்சுக் கார்த் தொழில்களுக்கு ஏற்றம் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இதில் கூடுதல் உதவி நிதிகள் மின்சார, கலப்பினக் கார்களுக்கு, புதிய தொழில்நுட்பங்களுக்கு முதலீடுகள் இருப்பதுடன், சிறு, நடுத்தர பாகங்கள் அளிக்கும் நிறுவனங்களுக்கு 600 மில்லியன் கடன் வழங்கப்படுதலும் அடங்கும். ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அது உழைப்புச் செலவுகளில் 1 பில்லியன் யூரோக்களுக்கும் மேலாகக் குறைக்கப்படுவதை விரும்புவதுடன், ஒல்னே, செவல்நோர்ட் போல் நிர்வாகத்தால் அச்சுறுத்தப்படும் ஆலைகளுக்கு எந்த நிவாரணம் அளிக்கவும் முன்வரவில்லை.