சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

Vote “No” in Ireland’s referendum on EU fiscal treaty

ஐரோப்பிய ஒன்றிய நிதிய உடன்படிக்கை பற்றி அயர்லாந்தின் சர்வஜன வாக்கெடுப்பில் “இல்லை” என வாக்களிக்கவும்

பிரித்தானிய, ஜேர்மன் சோசலிச சமத்துவகட்சிகளின் அறிக்கை
30 May 2012

use this version to print | Send feedback

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிய உடன்படிக்கை பற்றிய மே 31ம் திகதி அயர்லாந்துக் குடியரசில் நடைபெற உள்ள சர்வஜனவாக்கெடுப்பில், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சிகள் இல்லை என வாக்களிக்குமாறு அழைப்பு விடுகின்றன.

ஐரோப்பிய, உலக முதலாளித்துவத்தில் வரலாற்று நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இது 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியை அழிவுக்குட்படுத்திய பாரிய வேலையின்மை, வறுமை, இராணுவவாதம் மற்றும் போர் ஆகிய நிலைமைகள் மீண்டும் கொண்டுவந்துள்ளது.

நிதிய உடன்படிக்கை இந்த நெருக்கடிக்கு ஐரோப்பிய ஆளும் உயரடுக்கிற்கு ஒரு தீர்வைப் பிரதிபலிக்கிறது. இந்த ஜனநாயக விரோத இயங்குமுறை மூலம், கண்டம் ஒரு மிகப் பெரிய சிக்கன நடவடிக்கைகளின் பிராந்தியமாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் தங்கள் அமைப்புசார்ந்த பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.5% சதவிகிதத்திற்குக் குறைக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்கப்படாத முக்கூட்டு எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் அதிகாரத்துவத்தின் ஆணைகள் வலுக்கட்டாயமாகச் செயல்படுத்தப்படும். இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, 160 பில்லியன் யூரோக்கள் ($200பில்லியன்) மதிப்பான ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள மிருகத்தன நடவடிக்கைகள், செலவுக் குறைப்புக்கள் மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகள்  ஆகியவை ஐரோப்பா முழுவதும் நடைமுறைக்கு வரும்

நிதியக் கட்டுப்பாட்டுக் கொள்கை என்பது சமூக எதிர்ப்புரட்சிக்கு ஒரு இடரடக்கல் சொல்லாகும். இதில் ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள், தொழிலாளர் பாதுகாப்புக்கள் மற்றும் பொதுநலச் செலவு விதிகள் என கடுமையான வர்க்கப் போராட்டங்களினால் கடந்தகாலத்தில் வெற்றிகொள்ளப்பட்டவை அகற்றப்பட்டு, வங்கிகளுக்கு பாரிய பிணை எடுப்பு நிதி கொடுக்கவும், பெருநிறுவன இலாபங்களை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான தன்மை இப்பொழுது அனைவராலும் தெளிவாகப் பார்க்கப்பட முடியும். தேசியப்பிளவுகளைக் கடப்பதற்கு ஒரு வழி என பல தசாப்தங்கள் பாராட்டப்பட்ட மற்றும் ஒரு சமூக ஐரோப்பாவை தோற்றுவிப்பதற்கு உதவும் எனக் கூறப்பட்ட ஒரு அமைப்பு, வங்கிகள் மற்றும் பெருவணிகத்தின் கருவியாக வெளிப்பட்டு, தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் போரை நடத்துவதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது.

நிதியத் தன்னலக்குழுவின் பேராசை மிகுந்த கோரிக்கைகளுக்கு ஒரு முடிவு இல்லை என்பதைத்தான் கிரேக்கம் தெளிவாக்கியுள்ளது. ஐந்து ஆண்டு காலத்திற்கு தொழிலாளர்கள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவை இலட்சக்கணக்கான தொழிலாளர்களை திவால்தன்மையில் தள்ளி, அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்திவிட்டன. இந்நவடிக்கைகளுக்கு பெருகிய மக்கள் எதிர்ப்பு கடந்தமாத தேர்தல்களில் பிரதிபலித்தது. அதில் மரபார்ந்த ஆளும் கட்சிகளான PASOK, New Democracy ஆகியவற்றிற்கான ஆதரவு வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக எத்தகைய உறுதியான அரசாங்கமும் அமைக்கப்பட முடியாமல் போயிற்று.

இதை எதிர்கொள்ளும் வகையில், கிரேக்க முதலாளித்துவத்துடன் பங்கு போட்டுக் கொண்டுள்ள முக்கூட்டு, தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்குத் தங்கள் எதிர்ப்புக்களைக் கைவிட்டு, ஜூன் 17 நடக்க இருக்கும் புதிய தேர்தல்களில் சரியாக வாக்களிக்க வேண்டும் அல்லது கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்படும், அதன் பொருளாதாரம் பேரழிவிற்குட்பட்டு, இராணுவம் நாட்டின் எல்லைகளில் பொறுப்பை எடுத்துக்கொண்டு, சமூக அமைதியின்மையை கையாளும் என்று மிரட்டியுள்ளது.

இத்தகைய விபரீத எதிர்காலத்தை அது கோடிடுகையிலேயே, அதே சக்திகள் யூரோக்குள் இருந்தாலும் இல்லாவிடினும், கிரேக்கம் பொருளாதார அழிவைத்தான் எதிர்பார்க்க முடியும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளன.

இதேபோல் அயர்லாந்தும் நிதிய உயரடுக்கினால் அழுத்தத்தின்கீழ் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய கட்சிகளான Fine Gael, தொழிற்கட்சி  கூட்டணி அரசாங்கம் ஆகியவை Fianna Fail  உடன் சேர்ந்து கிரேக்கத்தின் கட்சிகள் வகித்த அதேபங்கைத்தான் வகிக்கின்றன.

அயர்லாந்து குடியரசில் நிலைமை முற்றிலும் கிரேக்கத்தில் இருந்து மாறுபட்டது என்று அவர்கள் முதலில் கூறி, அயர்லாந்து 30 பில்லியன் யூரோக்களை செலவுக் குறைப்புக்ளில் செய்து வெற்றி பெற்றதைப் பாராட்டுகின்றனர். ஆனால் அத்தகைய அறிக்கைகள் மூன்றாண்டுக்கால ஊதிய முடக்கம், பாரிய பணிநீக்கம்,  வேலையின்மை விகிதம் உத்தியோகபூர்வமாக 15% உயர்தல், நாட்டை விட்டு மக்கள் வெளியேறியிருப்பது இவற்றிற்கு இடையே வந்துள்ளது. அதுவும் குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறுதல் இளைஞர்களிடையே உயர்ந்து பெரிய பஞ்சக்காலமான 1840களுக்குப் பின் அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் இக்கட்சிகள் தொழிலாள வர்க்கம், அவற்றின் குடும்பத்தின் மீது கொண்டுள்ள இகழ்வுணர்வைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

அதே மூச்சில் அவர்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்றும் வாதிடுகின்றனர்.

யூரோப்பகுதியில் ஆழ்ந்துள்ள நெருக்கடி ஏற்கனவே அதன் இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புக்களைத் திருத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது. அதேபோல் அயர்லாந்தின் கடன்பத்திரத்திற்கான வட்டிவிகிதத்தையும் உயர்த்தியுள்ளது. இதனால் அயர்லாந்து தற்போதைய பிணைத் தொகையான 85 பில்லியன் யூரோக்கள் முடிந்தவுடன் அடுத்த பிணையெடுப்பை அடுத்த ஆண்டு கேட்கும் கட்டாயத்திற்கு உட்படும்.

கிரேக்கத்தைப் போலவே, பல ஆண்டுகள் தியாகங்கள் வீணாகிவிட்டன என்று ஏற்றுக்கொள்வது, உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டால் இன்னும் கெட்ட கனவு போன்ற விளைவுகள் வரும் என எச்சரிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.

Glen Dimplex, GlaxoSmithKline போன்ற நிறுவனங்களின் கடுமையான ஆதரவுடன் நடத்தப்படும் ஆம் பிரச்சாரம், இல்லை என வாக்களிக்கப்பட்டால் அயர்லாந்தில் பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சறுத்தலைக் கொடுத்துள்ளது. இதனால் அயர்லாந்து ESM எனப்படும் ஐரோப்பிய உறுதிப்பாட்டுக் கருவியை பிணையெடுப்பு நிதிக்காக அணுகும் வாய்ப்பை இழக்கலாம். அதையொட்டி முதலீட்டாளர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படலாம். ஏனெனில் அயர்லாந்தின் தொழிலாளர் தொகுப்பில் மூன்றில் ஒரு பகுதியை வேலைக்கு வைத்திருப்பதுடன், அதன் ஏற்றுமதிகளில் முக்கால் பகுதியைக் கொண்ட பெரிய சர்வதேச நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடக்கூடும் எனக்கூறப்படுகின்றது.

அவற்றின் கவலை மக்கள்மீது பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டுவிடுமே என்பது அல்ல. ஆனால் அயர்லாந்தின் முதலாளித்துவம் நிதியை பெறுவதற்காக அதன் பெருநிறுவனத்தின் மீதான வரியை 12.5% என உயர்த்தும் நிலை ஏற்படலாம் என்பதுதான்.

இப்படி ஒழிவுமறைவின்றி அப்பட்டமாக அச்சுறுத்துதல் என்பது வாக்கெடுப்பின் முடிவு மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற அசாதாரண உண்மையினால் இன்னும் தெளிவாகிறது. ஆனால் அந்நாடுகள் அப்படியும் இதற்கு கையெழுத்திடும்.

ஒரு இல்லை வாக்கு பற்றி, நிதியத் தன்னலக்குழு அஞ்சுவது அத்தகைய வாக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த விரோதப்போக்கை இன்னும் வெளிப்படுத்திவிடும் என்பதுதான். அது கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி இன்னும் பிற இடங்களில் வங்கிகள் மற்றும் பெருவணிகங்களின் சர்வாதிகாரங்களுக்கு உள்ள எதிர்ப்பிற்கு மேலும் எரியூட்டும்.

ஆனால் தொழிலாளர்களை எதிர்கொள்ளும் பெரிய அரசியல் பிரச்சினை, ”இல்லை பிரச்சாரத்திற்கு ஆதரவு தரும் SinnFein, ULA போன்ற கட்சிகள் அவ்வாறான ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்க தயாராக இல்லை என்பதுதான். சிக்கன உடன்பாட்டிற்கு நிராகரிப்பு என்ற வகையில் தங்கள் கொள்கைகளை இயற்றுகையில், அவை இல்லை வாக்கு என்பது அதே உடன்படிக்கையின் சில பிரிவுகளை மீண்டும் பேச்சுக்களுக்கு உட்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தலாம் என்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தன் முந்தைய எதிர்ப்பை Sinn Fein கைவிட்டுவிட்டது. இப்பொழுது யூரோ உறுதிப்படுத்தப்பட முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும், அதற்கு வளர்ச்சி உடன்பாடு, கடன் மறுகட்டமைப்பு தேவை, இது வழமையான சந்தை வட்டிவிகிதங்களுக்கு அயர்லாந்தை திரும்பச் செய்யும் என்று வாதிடுகின்றது.

இல்லை வாக்கு என்பது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஐரோப்பா தழுவிய போராட்டத்தின் ஆரம்பமாக இருக்கலாம் என்று வாதிடுகையில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியினால் வழிநடத்தப்படும் ULA இதே ஆபத்தான நப்பாசையான ஐரோப்பிய ஒன்றியம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை ஒட்டிச் சீர்திருத்தப்படலாம் என்பதையும் வளர்க்கிறது.

ULA பிரச்சாரத்தின் பெரும்பகுதி அயர்லாந்து இன்னமும் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு உதவி வாய்ப்பைப் பெறும், ஒருவேளை இல்லை வாக்கிற்கு வெற்றி கிடைத்தாலும், தற்பொழுது இருக்கும் சட்ட அமைப்புமுறைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவில் இருந்து அயர்லாந்து அகற்றப்படுவதைத் தடுக்கும் என்று வலியுறுத்துவது ஆகும்.

முதலாளித்துவ இலாபமுறை ஒரு நிலைமுறிவை எதிர்கொண்டுள்ள நிலையில், ஐரோப்பிய தொழிற்சங்கங்கள் ஓர் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கருத்தை ULA முன்வைத்துள்ளது. இது ஐரோப்பாவிலுள்ள முதலாளித்துவ வர்க்கங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்று அது கூறுகிறது.

இதே தொழிற்சங்கங்கள்தான் எல்லா இடங்களிலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேசிய அரசாங்கங்களின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான உண்மையான போராட்டத்தை எதிர்த்தவை. அயர்லாந்தில் அவை தொடர்ச்சியான அரசாங்கங்கள் செலவு வெட்டுக்களைச் சுமத்துவதற்கும், ஊதிய முடக்கத்தைச் செயல்படுத்தவும் வேலை நிறுத்தம் கிடையாது எனக்கூறிய Croke Park உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தன. இக்கொள்கையினால் அயர்லாந்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு -Irish Congress of Trade Unions- வாக்கெடுப்பு பற்றி உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை எடுக்க மறுத்துவிட்டது.

கிரேக்கத்தில் உள்ள சிரிசா கூட்டணியைப் போலவே, அதன் சோசலிஸ்ட் கட்சியின் சகோதர அமைப்பான ULA உள்ளது. ULA, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் சிக்கன நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு நண்பர் என அதனால் சுட்டிக் காட்டப்படுகிறது. இது முதலாளித்துவ ஆட்சியின் காவலர்கள் என்று போலி இடது குழுக்கள் கொண்டுள்ள பங்கை உறுதிபடுத்துவதுடன், அதேபோல் தொழிலாளர்களின் ஆட்சியதிகாரத்திற்கான போராட்டத்திற்கு அவர்களுடைய விரோதப் போக்கையும் காட்டுகிறது.

சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிராக பரந்த சமூக, தொழில்துறைப் போராட்டத்தை நடத்த தொழிலாளர்களை அணிதிரட்டுவதின் மூலம்தான் வெற்றி அடையமுடியும். ஐரோப்பிய ஒன்றிய நிதிய உடன்பாடு நிராகரிக்கப்படுவது என்பது ஐரோப்பா முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கம் ஒரு ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளை நிறுவும் முயற்சியில் ஒரு திருப்பு முனையாக இருக்க வேண்டும். அதனால் கண்டத்தின் பரந்த செல்வம் மற்றும் வளங்கள் ஆகியவை அனைவருக்கும் கௌரவமான வேலைகள், வீடுகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அயர்லாந்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களுக்கு இப்பொழுது உடனடியாகத் தேவைப்படும் உண்மையான சோசலிச சர்வதேசிய தலைமையை வழங்க முன்வருகிறது.