சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek crisis exposes bankruptcy of petty-bourgeois ex-left

கிரேக்க நெருக்கடி முன்னாள்-குட்டி முதலாளித்துவ இடதுகளின் திவால்தன்மையை அம்பலப்படுத்துகிறது

By Alex Lantier 
12 June 2012

use this version to print | Send feedback

கிரேக்கத்தைப் பேரழிவிற்குள் தள்ளியுள்ள தோல்வியுற்ற சமூகச் சிக்கனக் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகிவருவது ஐரோப்பாவின் குட்டி முதலாளித்துவ முதலாளித்துவ-எதிர்ப்பு இடதுகளின்திவால்தன்மையை அம்பலப்படுத்துகிறது. அதிகரித்துவரும் ஐரோப்பியக் கடன் நெருக்கடியினால் பீதி அடைந்துள்ள நிலையில், அவை பெருகிய முறையில் தங்கள் முதலாளித்துவ-எதிர்ப்புவார்த்தைஜால பிரயோகத்தை, நடைமுறை முதலாளித்துவ சார்பு அரசியலுடன் எப்படிச் சமரசப்படுத்துவது என்பது குறித்து  அவர்களுக்குள் வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர்.

இப்பிளவுகள் நான்காம் அகிலத்தின் பப்லோவாத ஐக்கிய செயலகத்தில் (UFSI) இருந்து வெளிப்பட்டுள்ளன. இதில் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA),  போர்த்துக்கல்லின் இடது முகாம் (BE) ஆகியவை உள்ளன. ஜூன் 1ம் திகதி நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் ஐரிஷ் இணைப்புக் குழுவான சோசலிச ஜனநாயகம் (Socialist Democracy) நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் கிரேக்கப் பிரிவான OKDE யில் இருந்து வந்த கடிதம் ஒன்றை வெளியிட்டது. அதில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் நிறைவேற்றுக் குழு, கிரேக்க கட்சியான சிரிசா (தீவிர இடது கூட்டணி) உடைய கருத்துக்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது தாக்கப்பட்டுள்ளது.

ஜூன் 17 தேர்தல்களில் சிரிசா 25 முதல் 30% வாக்குகளைப் பெறலாம் என்று கணிப்புக்கள் கூறுகின்றன. இதனால் அது முன்னணியில் இருக்கும், ஒருவேளை அரசாங்கத்தையும் அமைக்க முடியும். தொழில்நேர்த்தியாளர்கள், அரச மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் நிறைந்த இந்த அமைப்பு, முந்தைய கிரேக்க அரசாங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுக்களை நடத்தி பிணையெடுப்புக்கள் பெற்றது குறித்து சீற்றம் அடைந்துள்ளவர்கள் சார்பில் பேசுகிறது. இது, விதிகள் மறுபேச்சுவார்த்தைக்குட்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை இது குறைகூறியுள்ளது, வாக்காளர்களின் பரந்த பிரிவுகளிடம் இருந்து ஆதரவை ஈர்த்துள்ளது. அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க முற்படுகின்றனர்.

நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் நிறைவேற்றுக் குழுவின் அறிக்கை ஐயத்திற்கு இடமின்றி சிரிசாவிற்கு ஒப்புதல் கொடுக்கிறது—“கிரேக்க அரசியல் நிலைமையில் ஒரு மத்திய இடத்தை ஆக்கிரமித்துள்ளதற்கு, அதுவும் ஒரு ஐந்து அம்சத் திட்டத்துடன். இது சிரிசாவின் ஐந்து அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளது: சிக்கன நடவடிக்கைகளை ஒழித்தல், அரச நிதிகளைப் பெற்ற வங்கிகளைத் தேசியமயமாக்குதல், கிரேக்க அரசாங்கக் கடன் தணிக்கை செய்யப்படுகையில் கிரேக்கத்தின் கடன் பணம் கொடுத்தல் நிறுத்திவைக்கப்படுதல், குற்ற விசாரணையில் இருந்து மந்திரிகள் பாதுகாப்புப் பெற்றுள்ளதை அகற்றுதல், கிரேக்க தேர்தல் சட்டத்தை மாற்றுதல் என்பவையே அவை. நிறைவேற்றுக்குழு, “இடதின் உயர்கருத்துக்களைக் பாதுகாக்க விரும்பும் அனைவரும் சிரிசாவின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளது.

உண்மையில், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம், சிரிசாவின் சிடுமூஞ்சித்தனமான அரசியலுக்கு முழுமையான ஆதரவைக் கொடுக்கிறது. அது சிக்கன நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பிற்கு சைகை காட்டுகிறது. அதே நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நிதிய மூலதனம் மற்றும் கிரேக்க முதலாளித்துவத்தின் அடிப்படை நலன்களுக்கு எதிராகத் தான் ஏதும் செய்யாது என உத்தரவாதம் அளிக்கிறது.

 

சர்வதேச அளவில் கொடுக்கப்படும் பேட்டிகளில் சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் வங்கிகளுக்கு கடன்கள் திருப்பிக் கொடுக்கப்பதற்காக கிரேக்கத்தை தான் யூரோப்பகுதியில் நீடித்து வைத்திருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். இது தோற்று கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டால், அவருடைய கிரேக்க இராணுவத்துடனும் நிதிய அதிகாரிகளுடனான இரகசியபேச்சுவார்த்தைகள் கிரேக்க அரசாங்கத்தை பாதுகாத்து, வங்கிகளிடம் இருந்து பணம் திரும்பபெறுதலை நிறுத்தி, மக்கள் எதிர்ப்புக்களை அடக்குவது பற்றியும் இருந்தது.

சிரிசாவின் வேலைத்திட்டம் தொழிலாளர்களுக்கு ஒரு முட்டுச்சந்தியான பாதையாகும். இது ஒன்றும் கிரேக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டத்திற்கு அணிதிரட்டுவது அல்ல; மாறாக கிரேக்க முதலாளித்துவ அரசாங்கம் அரைமனத்துடன் ஏற்கும் உறுதிமொழிகள் அனைத்தையும் செயல்படுத்த ஆதாரம் இல்லாத நிலையில் அதை நடத்துதல் என்பதாகும். இந்த அரசாங்கம் கிரேக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் கடன் கொடுத்தவர்களின் தயவில் இருக்கும்; இதன் உறுதிமொழிகள், ஐரோப்பிய சமூகத்தை கிழித்தெறியும் புறநிலையான வர்க்க மோதல்களால் இல்லாதொழிக்கப்படும்.

வறிய கிரேக்கத்தில் இருந்து வங்கிகள் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை விரும்புகின்றன. கிரேக்க முதலாளித்துவம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் தான் வைத்துள்ள இதேபோன்ற நிதிகளைக் பாதுகாக்க விரும்புகிறது. ஆயினும்கூட ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக முக்கியமான வெட்டுக்களை அகற்றுதல் என்பது, கிரேக்கத் தொழிலாளர்களின் ஊதியங்களை 40% அல்லது அதற்கும் மேலாக அதிகரிப்பது என்ற பொருள் ஆகும். அதே நேரத்தில் சுகாதாரம், கல்விச் செலவுகளில் பெரும் அதிகரிப்புக்கள் இருக்கும். நிதிய மூலதனத்தினதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் இரண்டையும் திருப்தி செய்யப் போதுமான பணம் இல்லை. சமரசத்திற்கு இடமில்லாத வர்க்க முரண்பாடுகள் மோதல் நிலைக்கு வந்துவிட்டது.

நிதி நிலைமை வெடிக்கும் என்று எதிர்பார்த்து, சிரிசா அமைதியாக மோசமான நிலைக்குத் தயாரித்து வருகிறது; அதே நேரத்தில் வசதியான நம்பிக்கைகளுக்குப் பகிரங்க ஊக்கம் கொடுக்கிறது. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அது அனைவரையும் சமரசப்படுத்தும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெட்டுக்களின் விளைவான கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கீழ்நோக்கிய போக்கை அற்புதமான வகையில் மாற்றிவிடும் என்று கூறுகிறது.

சிரிசாவுடன் இணைந்துகொண்டதனூடாக, நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் தன்னை ஒரு முதலாளித்துவ அமைப்பு என்று அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது அதன் மோசடித்தன முதலாளித்துவ எதிர்ப்புஎன்னும் முத்திரை இருந்தாலும், அது ஒன்றும் முதலாளித்துவத்தை எதிர்க்கவில்லை, சிக்கன நடவடிக்கைகளைக்கூட எதிர்க்கவில்லை என்பதைக் கூறுகிறது. OKDE க்கு அச்சம் ஏற்பட்டுள்ள காரணம், இவ்வகையில் அம்பலமாகியிருப்பதுதான். நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் சுவடுகளை மறைப்பதில் அதிக முயற்சி தேவை என்று வாதிடுகிறது. சிரிசாவிற்கு நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் கொடுக்கும் ஒப்புதல் மூலம் முதலாளித்துவ-எதிர்ப்பு என்னும் அதன் மோசடித்தன அரசியலில் இருக்கும் நம்பகத்தன்மையை பணயம்வைக்க விரும்பவில்லை.

நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம், சிரிசாவிற்கு ஒப்புதல் கொடுப்பது பற்றி பிரசுரிப்பதற்கு முன் ஆலோசிக்கப்படக்கூட இல்லைஎன்று எதிர்ப்புக்கூறி, OKDE எச்சரிக்கிறது: சிரிசாவின் அரசியல் நோக்கங்கள் முதலாளித்துவம், முதலாளித்துவ ஜனநாயகம் இவற்றின் வடிவமைப்பிற்குள்தான் உறுதியாக உள்ளன என்பது தெளிவு.

நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் அதன் வலைத் தளமான International Viewpoint இல் வரும் கட்டுரைகளின் இறுதியில் தன்னை சோசலிசப் புரட்சிக்காகப் போராடும் ஒரு சர்வதேச அமைப்பு, அதன் கோட்பாடுகளையும் திட்டத்தையும் ஏற்றுச் செயல்படுத்தும் போராளிகள் பிரிவுகளையும் கொண்டதுஎன விளக்கியுள்ளது. ஆனால் என்ன கோட்பாடுகள், என்ன வேலைத்திட்டம்? என்று நாம் நம்மையே கேட்கும் நேரம் வந்துவிட்டது.

அரசியல் நேர்மை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தினுடைய போக்கில் முக்கிய மாற்றமாக இருக்கும் என்றாலும், OKDE ஆல் அதை வழங்க முடியாது, தன்னுடைய சொந்த திவால்தன்மை, குழப்பம் ஆகியவற்றிற்கு ஒத்திசைவான ஒரு விளக்கத்தையும் அளிக்க முடியாது. OKDE உடைய சொந்த கடிதம் பேரழிவு தரும் வகையில் இதை நிறுவுகிறது; ஆனால் அதே நேரத்தில் அது சோசலிசப் புரட்சிக்காக போராடும் அமைப்பின் ஒரு பகுதி என்று கூறிக் கொள்கிறது; இது உண்மை அல்ல.

நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் கிரேக்க தேசியப் பிரிவு என்ற முறையில் OKDE, கிரேக்கத்தில் அதன் கொள்கைகளை நிர்ணயிக்கும் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் நிறைவேற்றுக் குழு தம்முடன் ஆலோசிக்காமல் கொள்கையை முன்வைத்துள்ளது என்ற கோபத்தில் உள்ளது. நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் செயல்கள் அதன் நீண்டகாலக் கருத்தான USFI இன் சர்வதேச அமைப்புக்கள் தங்கள் பிரிவுகளை பகிரங்கமான அவற்றின் தேசிய தந்திரோபாயங்கள் குறித்துகுறைகூறக்கூடாது  என்பதுடன் முரண்படுவதாக OKDE கூறியுள்ளது.

இது எழுப்பும் கோட்பாட்டு ரீதியிலான பிரச்சினையை OKDE ஆராயவில்லை. அதாவது நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் தேசியப் பிரிவுகள் என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாக கொண்ட ஒரு உலக கொள்கையை செயல்படுத்தும் அமைப்பு அல்ல. ஆனால் தனித்தனியாக தேசிய தந்திரோபாயங்களால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவ கட்சிகளின் ஒரு தொகுப்பாகும். மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில், கடந்த தசாப்தத்தில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் பிற்போக்குத்தன நடவடிக்கைகளின் பட்டியலை முற்றிலும் கூறிவிடவும் இல்லை. இப்பட்டியலை இது பயன்படுத்தி மற்ற தேசியப் பிரிவுகளின் விவகாரங்களில் அணுகாத நிலையில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் எப்படி விரைவாக செயல்பட்டு OKDE ஐ சிரிசாவுடன் கூட்டுவைக்குமாறு வற்புறுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

OKDE எழுதுகிறது: மெக்சிகோவில் இருந்த தோழர்கள் Cuauhtemoc Cardenas  ஐனாதிபதிப் பதவிப் பிரச்சாரத்திற்கு ஒப்புதல் கொடுத்தபோது இந்த அணுகுமுறைதான் இருந்தது; அவர் முதலாளித்துவ PRD  யின் வேட்பாளராகத் தேர்தலில் நின்றார். பிரேசிலில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலக சார்பு  சமூக ஜனநாயகம் அரசியலில் புதிய தாராளவாத லூலா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனடி மாதங்களில் அரசாங்கத்தை அரசியல் அளவில் ஆதரித்தபோதும் இப்படித்தான் நடந்தது; இத்தாலியில் செனட்டில் ஒரு தோழர் ஆப்கானிஸ்தானத்திற்கு போர் நிதிக்காக வாக்களித்தபோது, Rifondazione கட்டுப்பாட்டைப் பின்பற்றும் தேவையை ஒட்டி இந்நிலை என நியாயப்படுத்தியபோதும்; டென்மார்க்கில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் டென்மார்க் பிரிவு SAP இடது சீர்திருத்தவாத முதலாளித்துவ அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆம்வாக்கு அளிப்பது சரியே என்று சிவப்பு-பசுமைவாதக் கூட்டுடன் ஒப்புக்கொண்டது; போர்த்துக்கல்லில் பாராளுமன்றத்தில் Left Bloc தோழர்கள் கடுமையான ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு கிரேக்கத்திற்கு என ஆதரவு அளித்து வாக்குப் போட்டபோது.

OKDE இப்பட்டியலை அதன் தோழர்களுக்குஒரு சாடல் என்று விரும்பினாலும், உண்மையில் இது நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் முதலாளித்துவ எதிர்ப்புபோலித்தன்மை என்னும் மோசடி குறித் ஒரு குற்றச்சாட்டுத்தான். முதலில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம், ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தின் பிணை எடுப்பிற்காக ஆணையிட்ட சிக்கனக் கொள்கைகளை தொடர்ச்சியாக எதிர்க்கவில்லை; அதன் போர்த்துக்சீயப் பிரிவு பாராளுமன்றத்தில் அதற்கு ஆதரவாகக் கூட வாக்களித்தது. இதன் கட்சிகள் ஆப்கானியப் போருக்கு நிதியளிக்க வாக்களித்து லிபியாவிலும் சிரியாவிலும் ஏகாதிபத்திய ஆதரவுடைய கெரில்லாப் படைகளுக்கும் ஆதரவு கொடுத்த வெளியுறவுக் கொள்கையைப் போலவே சமூகநலக் கொள்கைகளிலும், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் பிரிவுகள் சமூகப் பிற்போக்குத்தனக் கட்சிகள் ஆகும்.

 

நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் பிரிவுகள் முதலாளித்துவ பாராளுமன்றங்கள் மற்றும் அரசாங்கங்களில் முதலாளித்துவத்திற்கு புரட்சிகர சோசலிச எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாகப் பங்கு பெறுவதில்லைமுதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்குத்தன கொள்கைகளை அம்பலப்படுத்துவதும் தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரப் போராட்டத்திற்குத் தயாரிப்பதும் அதன் தளம் ஆகும். ஆனால் அரசாங்கத்தில் உயர் பதவியை அவர்கள் அடைந்தபின், அவர்கள் தங்கள் வாக்குகளை நிதிய மூலதனத்தின் தேவைகளுக்கு ஏற்ப போடுகின்றனர்.

இது ஒன்றும் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தால் செய்யப்படும் நனவுபூர்வமற்ற தவறுகளின் விளைவு அல்ல. ஆனால் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் முழு நனவுடன் கூடிய அது பிரதிநிதித்துவப்படுத்துவதாக சில நேரம் கூறிக்கொள்ளும் கொள்கைகளின் பொருட்படுத்தா தன்மை மற்றும் விரோதப் போக்கின் விளைவுதான். உண்மையில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் பகிரங்கமாக தான் இக்கொள்கைகளை கடந்த காலத்தில் காட்டிக் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு, மீண்டும் காட்டிக் கொடுக்கத் தயார் என்றும் அறிவிக்கிறது.

சமீபத்தில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் பிரிவுகள் அவற்றின் வரலாற்றைப் பற்றி New Parties of the LeftL Experiences from Europe என்ற தலைப்பில் வெளியிட்ட புத்தகத்தில், டேனிஸ் பப்லோவாத தலைவர் Bertil Videt எழுதுகிறார்: அரசியல் கட்சிகள் என்பவை நகரும் இலக்குகள்தான்: இவற்றைக் கைப்பற்றி வகைப்படுத்துவது என்பது கடினம். வகைப்படுத்தும் எந்த முயற்சியும் விரைவில் பழமையானதாகப் போய்விடும், ஒரு முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி அதிகாரத்தின் ருசியால் ஈர்க்கப்பட்டு அதன் முக்கிய கொள்கைகளைக் கைவிட்டுவிடாது என்பது குறித்து நமக்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது. இத்தாலிய கம்யூனிச Refoundation Party அப்படித்தான் இத்தாலிய இராணுவத் தலையீடு ஆப்கானிஸ்தானத்தில் நடந்ததற்கு ஆதரவு கொடுத்தது; இத்தாலியில் அமெரிக்கத் தளங்கள் அமைப்பதற்கும் ஆதரவைக் கொடுத்தது. (பக்கம் 21)

உண்மையில் சமீபத்தில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் தன்னை வகைப்படுத்திக் கொள்ளவில்லை, அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள முடியாத நகரும் இலக்குகள் என்று கருதுவதின் முக்கிய காரணம், அது அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கும் நலன்கள் குறித்த வர்க்கப் பகுப்பாய்விற்கு விரோதப் போக்கு காட்டுவதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக, அது அத்தகைய பகுப்பாய்வு அதைப்பற்றி வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தையும் அது கொண்டுள்ளது.

சிரிசா போலவே அதே சமூகத் தட்டுக்களில் இருந்து தளத்தைப் பெற்று, ஐரோப்பாவின் முக்கிய முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து நபர்களையும் கொண்ட நிலையில், சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தொழிற்சங்க அதிகாரத்துவம் மேலாதிக்கம் கொண்ட பயனற்ற எதிர்ப்புக்களுடன் பிணைத்த நிலையில், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் பகுதிகள் தொழிலாள வர்க்கத்தின் கட்சிகள் அல்ல. இவை முதலாளித்துவக் கட்சிகள், இதன் உறுப்பினர்கள் வசதி படைத்த மத்தியதர வர்க்கத்திடம் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; கட்டமைப்பு ரீதியாக இவை முதலாளித்துவ ஆட்சிக்கு உறுதிப்பாடு கொண்டவை, புறநிலையாக தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான கருத்துக்களைத்தான் தொடரும்.

இதுதான் OKDE உடைய கடிதத்தின் முடிவுரையில் பிரதிபலிக்கிறது; அங்கு அக் கட்சி தன் கவலைகளை சுருக்கிக் கூறி வருங்கால நடவடிக்கான அதன் முன்னோக்குகளையும் கூறுகிறது.

OKDE “துருவப்படல்என்னும் தன் அச்சத்தை வெளியிடும் வகையில் எழுதுகிறது: சிரிசாவின் எழுச்சி தேசிய மற்றும் சர்வதேச அமைப்புமுறைக்குக் கடைசி வாய்ப்பு ஆகும் (இது முக்கூட்டிற்கு, குறிப்பாக ஜேர்மனிய அரசாங்கத்திற்கு உரைக்கப்படுகிறது, ஆனால் ஜேர்மனியில் உள்ள பொதுக் கருத்திற்கும்உரைக்கப்படுகிறது); இயல்பான வழிவகைகள் போன்றவற்றால் நிலைமை காப்பாற்றப்பட வேண்டும். ஆனால் இந்த வெளியேறும், தப்பும் வழிவகை வேலைசெய்யுமா என்பது பற்றி உறுதியாகக் கூறமுடியாது. சிரிசா தோற்றால் (அல்லது இன்னும் துல்லியமாக சிரிசா தோற்கும் நிகழ்சிப்போக்கில் இருந்தால்) என்ன ஆகும்?

OKDE க்கு என்ன கேள்வியை எழுப்புகிறது, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு சாதாரணஅதாவது, தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளைக் கொண்ட நிலையில் செயல்படும் சிரிசா அரசாங்கத்திற்கு இடது புறம் வளர்கிறது. அரசியல் அளவில் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் கொள்கைகளால் சிரிசாவுடன் பிணைந்தால் என்ன ஆகும் என்று OKDE அஞ்சுகிறது. தொழிலாள வர்க்கம், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம், OKDE இவற்றிற்கும் மிகவும் இடதில் உள்ளது என்பது தெளிவு. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நிலையில் எவர் இருப்பர்?

அத்தகைய நிலைமையில் தன் பங்கு, சிரிசாவிற்கு சமரசத்திற்கு இடமில்லாத விரோதப் போக்கு இல்லை என்பதை OKDE தெளிவாக்குகிறது. ஆனால் சிரிசாவிற்கு அரசியல் ஆதரவு இருக்கும். இது சிரிசாவிற்கு ஒரு இடது மறைப்பு போல் செயல்படும் நோக்கத்தைக் கொண்டது; எப்படி கிரேக்கத்தின் சமூக ஜனநாயகக் கட்சியான PASOK க்கு அது 2009ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெட்டுக்களை செயல்படுத்துவதில் சிரிசா இருந்ததோ அப்படி.

அது எழுதுகிறது: வருங்காலத்தில் அனைத்துமே முதலாளித்துவ எதிர்ப்பின் புரட்சிகர சக்திகளின் முறையான தந்திரோபாய நடத்தை சிரிசாவுடன் எப்படி இருக்குமோ அதை நம்பித்தான் இருக்கும்; (இரண்டாம் பட்சமாகத்தான் ஸ்ராலினிச கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியான KKE உடன் கொண்டுள்ள போக்கு இருக்கும்). சிரிசா என்றால் சீர்திருத்தவாதம் என்று பொருள், எனவே அதை அகற்றுவோம் என்று கூறுவது போதாது என்பது வெளிப்படை.... சிரிசாவின் முடிவு குறித்த முன்கணிப்பு என்பது சிறந்த அணுகுமுறையாக இருக்காது.

இதுதான் அரசியல் ரீதியாக, தொழிலாள வர்க்கத்திற்கு ஆழ்ந்த விரோதப் போக்குடைய, நேர்மையற்ற தங்களை முன்னேற்றுவிக்கும், மத்தியதர செயல்பாட்டதிகாரிகள் கூறும் இழிந்த வாதமாகும். சிரிசாவின் கொள்கைகள் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தினுடையதைப்போல், OKDE யினாலேயே கோடிட்டுக் காட்டியுள்ளதைப் போல் சீர்திருத்தக் கொள்கைகள் அல்ல, அவை ஏகாதிபத்தியத்திற்கு பிரதிபலிப்பு காட்டுபவை ஆகும். தொழிலாள வர்க்கம், அதன் அரசியல் முன்னணிப்படை ஆகியவற்றின் பணி அவர்களுடன் சரியான தந்திரோபாய உடன்பாட்டிற்கு உழைப்பது அல்ல; மாறாக அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை முறித்து, வர்க்க விரோதிகளின் முகவர்கள் என அம்பலப்படுத்துவதுதான்.