சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Global crisis deepens after Spanish bailout

ஸ்பெயின் பிணையெடுப்பிற்குப் பின் உலக நெருக்கடி ஆழமடைகின்றது

By Nick Beams
14 June 2012

use this version to print | Send feedback

பங்குப்பத்திரச் சந்தைகளில் உயரும் வட்டி விகிதங்கள் கடந்த வாரம் வழங்கப்பட்ட 100 பில்லியன் ஸ்பெயின் பிணையெடுப்பு யூரோப்பகுதியின் நெருக்கடியைத் தீர்க்க ஏதும் செய்யவில்லை என்பதையும் மற்றும் அதை மோசமடையக்கூடச்செய்திருக்கலாம் என்பதையும் காட்டுகிறது. ஸ்பெயினின் 10 ஆண்டு பங்குப்பத்திரங்களின் வட்டிவிகிதம் ஆபத்தான அளவான 6.8 சதவிகிதத்திற்கு புதன் அன்று உயர்ந்தது. இத்தாலியின் ஓராண்டு பங்குப்பத்திரங்களின் வட்டிவிகிதம் கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பின் மிக உயர்ந்த தரங்களை எட்டியது.

உலக வங்கி எழுச்சி பெறும் சந்தைகள் என அழைக்கப்படுபவை ஐரோப்பிய நெருக்கடியில் இருந்து உயர்ந்த அபாயங்களை எதிர்கொள்ளும் என்ற எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டதில் இருந்து சமீபத்திய கொந்தளிப்பு வந்துள்ளது. உலக வங்கியின் சமீபத்திய Global Econoic Prospects அறிக்கை வளர்ச்சி பெறும் நாடுகளில் வளர்ச்சி 6.1%ல் இருந்து 2012ல் 5.3% எனக் குறையும் என்று கணித்துள்ளது. மொத்த உலக வளர்ச்சிக்கான கணிப்பு 2013ல் 3% இருக்கும். இது ஜனவரியில் வந்த மதிப்பீட்டில் இருந்து 0.1% குறைவாகும்.

வளர்ச்சி பெறும் நாடுகள் நீண்டகால ஸ்திரமின்மைக்கு தயாராக இருக்க வேண்டும் என வங்கி கூறியுள்ளது; மேலும் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா இரண்டும் குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்திற்கு உட்படலாம். ஏனெனில் அவற்றின் வணிக, நிதிய உறவுகள் ஐரோப்பிய பொருளாதாரங்களுடன் உள்ளன என்று எச்சரித்துள்ளது.

உலக வங்கியின் பொருளாதார வாய்ப்புக்கள் துறையின் இயக்குனர் ஹன்ஸ் ரிம்மர் நிதியச் சந்தைகளில் கொந்தளிப்பு என்பது கொள்கை இயற்றுவதைக் கடினமாக்கியுள்ளது என்றார்; ஒரு வெள்ளித் தோட்டா ஏதும் இல்லை என்ற அவர் வார இறுதியில் நாம் பிரச்சினைகளைத் தீர்த்துவிட இயலாது. என்றும் கூறினார்.

ஸ்பெயினின் பிணையெடுப்பைத் தொடர்ந்து சந்தை உணர்வில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றம் ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியனோ ரஜோய் யூரோ தப்பிப் பிழைப்பது உறுதியாக்கப்படுவதற்கு ஒரு போர்தொடக்கப்பட வேண்டும் என்று ஒரு பரிதாபகரமான முறையீட்டை கூறியதை அடுத்து வந்துள்ளது. பிணையெடுப்பிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு,  ஜூன் 6ம் திகதி, அவர் ஒரு கடிதம் எழுதி ஐரோப்பிய ஒன்றியம் அது ஆரம்பித்த்தில் இருந்து மிகப் பெரிய நெருக்கடியை முகங்கொடுக்கிறது என்றும் யூரோ பெரும் ஆபத்தில் உள்ளது என்றும் எச்சரித்தார்.

ஐரோப்பிய மத்திய வங்கி தலையிட்டு யூரோப்பகுதிக்கு நிதிய உறுதிப்பாட்டை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று ஐரோப்பாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் வந்துள்ள அழைப்புக்களுடன் தன் குரலையும் ரஜோய் சேர்த்துக் கொண்டார். உறுதிப்பாடு, நீர்மை என்று இன்று உள்ள சூழ்நிலைக்குத் தேவையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரே நிறுவனம் இப்பொழுது ஐரோப்பிய மத்திய வங்கிதான் என்றார் அவர்.

ஆனால் இன்னும் கூடுதலான ஐரோப்பிய மத்திய வங்கியின் தலையீட்டிற்கு வந்துள்ள அழைப்புக்கள், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதுதான் அக்கண்டத்தின் வங்கிகளின் நிதிய நலன்களைக் பாதுகாக்கும் என்பது ஜேர்மனியச் சான்ஸ்லர் அங்கேலா மேர்கெலால் எதிர்க்கப்பட்டுள்ளது. தேசியப் வரவுசெலவுத்திட்டங்கள் மிகவும் மத்தியப்படுத்தப்பட்ட கட்டுபாட்டிற்குள் வராவிட்டால் அத்தகைய கொள்கை ஜேர்மனிய நிதிய முறைக்கு ஆபத்து கொடுக்கக் கூடும் என்று அவர் அஞ்சுகிறார்.

ஒருங்கிணைப்பிற்கு ஜேர்மனி இன்னும் அதிகம் செய்யத் தயாராக இருக்கிறது. ஆனால் நாம் இன்று இருக்கும் நிலையை விட இன்னும் பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் விவகாரங்களில் நாங்கள் தலையீடுசெய்யக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் அவர். முக்கிய நாடுகள் என்று அழைக்கப்படுபம் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்றவற்றின் கடன்கள் மீதான வட்டி விகிதங்களின் அதிகரிப்பு,  இக்கவலை முழு முறையின் உறுதிப்பாடு குறித்த கவலைகளை பரப்பிக் கொண்டிருப்பதின் சான்று என விளக்கப்படுகிறது. பொதுவாக, வட்டி விகிதிங்கள் சுற்றியிருக்கும் நாடுகளில் அதிகமாகும்போது, மத்தியிலுள்ள நாடுகளில் சரியும். ஒரு நிதிய வணிகர் பைனான்சியல் டைம்ஸிடம் ஒரே நேரத்தில் பத்திரங்கள் விற்பனை இருந்தால் [வட்டி விகிதத்திற்கு வழிவகுக்கும் முறையில்] நாம் கவலை என்பதில் இருந்து பீதி நிலைக்கு மாறுவோம் என்றார்.

நெருக்கடியைக் குறைப்பதற்கு முற்றிலும் மாறாக, ஸ்பெயின் பிணையெடுப்பு சர்வதேச நிதியச் சந்தைகளின் கவனத்தை அடுத்த இலக்கான இத்தாலி மீது குவிப்புக் காட்டச் செய்துள்ளது.

இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மொன்டி அவருடைய நாடு அடுத்து வரிசையில் உள்ளது என்பதையும் மற்றும் ஆஸ்திரிய நிதி மந்திரியின் கருத்தான அதற்கும் ஒரு மீட்புத் தேவை என்பதும் பொருத்தமற்றது என்றார். இவருடன் இத்தாலியின் தொழில்துறை மந்திரியும் சேர்ந்து கொண்டார். இத்தாலிக்கு உதவி தேவைப்படும் என்ற சிந்தனையை இவர் மறுத்தார். ஆனால் இத்தகைய மறுப்புக்கள் உள்வாங்கப்படவில்லை. ஏனெனில் இதேபோன்ற கருத்துக்கள்தான் ஸ்பெயினின் அரசாங்கத்தாலும் கடந்த வார இறுதிவரை கூறப்பட்டன.

அதிகரிக்கும் இத்தாலிய நெருக்கடி கிரேக்க, ஸ்பெயின் பிணையெடுப்புக்களைத் தோற்றவித்த அதே முரண்பாடுகளின் உந்துதல்களால்தான் உந்துதல் பெற்றுள்ளது. யூரோவே ஏற்றது இத்தாலிய ஏற்றுமதிகளுக்கு பெருகிய முறையில் போட்டியற்ற தன்மையைக் கொடுத்துள்ளது. ஏனெனில் ஒற்றை நாணயத்தின் உயர்ந்த மதிப்பு, லிராவுடன் ஒப்பிடும்போது அதிகம். மேலும் நிலைமையை நாணய மதிப்புக் குறைவின் மூலம் சீராக்குவதும் இப்பொழுது சாத்தியமில்லை.

இத்தாலி இப்பொழுது நான்காம் ஆண்டு மந்தநிலையில் நுழைந்துள்ளது. இதனால் வரிமூலம் வரும் வருவாய்களில் சரிவு ஏற்பட்டு பற்றாக்குறையை அதிகரித்துள்ளதுடன் கடன் நிலைமையை மோசமாக்கிவிட்டது. சிட்டிக்ரூப் ஆய்வாளர்கள் பெரும்பாலான மற்ற கணிப்பாளர்கள் கணித்துள்ளதைவிட நாடு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் இன்னும் ஆழ்ந்த மந்தநிலையை அனுபவிக்கும், என்று எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பொருளாதார விமர்சகர் ஆலன் கோஹ்லர் Business Spectator இல் ஸ்பெயின்மீது கவனம் குவிக்கப்பட்டிருக்கையில், ஐரோப்பாவிற்குப் பெரிய பிரச்சினை இத்தாலி ஆகும். அது யூரோ தொடங்கியதில் இருந்தே அவ்வாறே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினைப் போலவே, இத்தாலி இப்பொழுது முழுக் கடன்பொறியில் அகப்பட்டுக்கொண்டுள்ளது. இங்கு பொருளாதார வளர்ச்சி மூலதனத்தின் தேசியச் செலவை விடக் குறைவு ஆகும். நாணயத்தின் மதிப்பைக் குறைக்கும் திறன் இல்லாத நிலையில், இத்தாலி இதை மாற்றுவதற்கு இயலாது.

இத்தாலிய நிலைமை கிரேக்கர்களுடைய ஊதாரித்தனம் என அழைக்கப்பட்டது அல்லது பிற மேம்போக்கான விளக்கங்களுக்கு முற்றிலும் மாறாக, யூரோ நெருக்கடி என்பது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படை முரண்பாடுகளான உற்பத்தியின் பூகோளமயமாக்கப்பட்ட தன்மைக்கும், போட்டி தேசிய அரசமைப்பு முறைக்கும் இடையே வேர்களைக் கொண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல் கொடுக்க ஐரோப்பாவின் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதன் தேவை யூரோவை நிறுவுவதற்குப் பின்னால் இருந்த உந்துசக்திகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் ஐரோப்பாவில் உள்ள தேசிய அரசுகளோ சுதந்திரமான, சிலசந்தர்ப்பங்களில் முரண்பாடுடைய பொருளாதாரக் கொள்கைகளைக்கூட தொடர்கின்றன.

இந்த முரண்பாடுகள் உலக நிதியக் குமிழி தொடர்ந்திருக்கையில் ஓரளவிற்கு மூடிமறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இது 2007-2008ல் முடிவிற்கு வந்தபோது, யூரோப் பகுதியின் சிதைவு என்பது தொடங்கிவிட்டது. இப்பொழுது அது சரிவின் விளிம்பில் உள்ளது. இதனால் கணிப்பிடமுடியாத விளைவுகள் ஐரோப்பிய மக்களுக்கு மட்டும் இன்றி, உலகப் பொருளாதாரத்திற்கே காத்திருக்கிறது. இந்த நெருக்கடிக்கு ஒரே முற்போக்கான தீர்விற்கு தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, ஐரோப்பாவை சோசலிச  திட்டமிடல் மூலம் இணைப்பதில்தான் உள்ளது.

மேலதிகமான பொருளாதாரப் பேரழிவு என்பதைத் தவிர ஆளும் உயரடுக்குகளிடன் விடை இல்லை. இந்த உண்மைதான் சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் கிறிஸ்டின் லகார்டினால் அடிக்கோடிட்டுக் காட்டுப்பட்டுள்ளது. செவ்வாயன்று ஒரு பொருளாதார மாநாட்டில் பேசிய அவர் நிதிய உறுதிப்பாட்டு இடர்கள் மீண்டும் பழிவாங்கும் நோக்கம் போல் வந்துவிட்டன என்றார். அழுத்தங்கள் மீண்டும் எழுச்சி பெறுகின்றன. என்று பொருளாதார அபிவிருத்திக்கான நிலையத்தில் ஓர் உரையில் கூறினார். நிதிய ஸ்திரப்பாட்டு அபாயங்கள் மீண்டும் முன்னணியில் வந்து மையத்தில் உள்ளன. உலகத்தின் எதிர்காலம் குறித்து பெரும் உறுதியற்ற தன்மை ஏற்பட்டுவிட்டது. என்றார்.