சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Education ministry bans advanced laved students from changing schools

இலங்கை கல்வி அமைச்சு உயர் கல்விக்கான பாடசாலை மாற்றத்தை தடை செய்கின்றது

Kapila Fernando
17 June 2012

use this version to print | Send feedback

தான் விரும்பிய பாடசாலையில் கல்வியைப் பெறுவதற்காக மாணவர்களுக்கு இருந்த ஜனநாயக உரிமைக்கு பெரும் அடியைக் கொடுத்த கல்வி அமைச்சு, இந்த மாத ஆரம்பத்தில் விசேட சுற்று நிரூபத்தை வெளியிட்டது. இந்த சுற்றுநிரூபத்தின் படி, ஒரு மாணவர் உயர் கல்வியில் கற்க விரும்பும் துறை, தான் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலையில் இருக்குமெனில் அவருக்கு உயர் கல்விக்காக வேறு பாடசாலைக்கு விண்ணப்பிக்க முடியாது.

கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் கட்டளையின் படி, கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம். குணவர்தனவால் அமுல்படுத்தப்பட்ட இது, 2009ல் வெளியான சுற்று நிரூபமாகும். இந்த சுற்று நிரூபத்தை மீறும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் ஜனநாயக உரிமைக்குத் தொடுக்கப்பட்டுள்ள இந்த புதிய தாக்குதலுக்கு எதிராக எழுந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்ப்பின் மத்தியில், கல்வி அமைச்சு இந்த சுற்று நிரூபத்தை தற்காலிகமாக சுருட்டிக்கொண்டாலும், அடுத்த ஆண்டிலேயே மீண்டும் அதை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவர்ணவாஹினி தொலைக்காட்சி சேவையில் தோன்றிய அமைச்சர் குணவர்தன மற்றும் செயலாளர் குணவர்தன சோடி, தேசிய பாடசாலைகளுக்கிடையில் மாணவர்கள் மாறுவதன் காரணமாக, பிரதேச பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு தேசிய பாடசாலைகளில் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாமல் போவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவித்தனர்.

பிரதேச பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் மீது காட்டப்படும் இந்த போலி பரிவை சகல மாணவர்களும் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் நிராகரிக்க வேண்டும். கிராமப்புற சிறுவர்களின் கல்வி வாய்ப்புகளை தூக்கி நிறுத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் இல்லாததோடு, பாடசாலைகளுக்கு இடையில் உள்ள பரந்த சமத்துவமின்மையின் காரணமாக, வசதிகள் உள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கு செல்வதற்காக மாணவர்கள் மத்தியில் நிலவும் கடும் போட்டியை பலாத்காரமாக ஒடுக்கி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை சிறுவர்களை குறைந்த வசதிகளைக்கொண்ட பாடசாலைகளுக்குள் முடக்கி வைப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் மேலோங்கி வரும் கடுமையான நெருக்கடியும், அதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பொதுக் கல்வி சம்பந்தாமக காட்டும் முழு அலட்சியத்தையுமே இந்த அவநம்பிக்கையான நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இலங்கையை அறிவின் மையமாக்கும் போலி செயற்பாடுகளின் கீழ், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி கல்விக்கான செலவை மீண்டும் மீண்டும் வெட்டிக் குறைத்து, கல்வியை இலாபம் பெருக்கும் தொழிற்துறையாக ஆக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்தால் அதிக வசதி கொண்டவையாக கணிக்கப்படும் தேசிய பாடசாலைகள் மத்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் பராமரிக்கப்படுவதோடு நாடு பூராவும் பரந்துள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான ஏனைய அரச பாடசாலைகள், அந்தந்த மாகாண சபைகளால் பராமரிக்கப்படுகின்றன. ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் கல்வி வெட்டு நடவடிக்கையை மூடி மறைப்பதற்கான ஒரு சாக்குப் போக்காகவே தேசிய பாடசாலை, புதிய உதயம் பாடசாலை, மஹா வித்தியாலயம், மத்திய மஹா வித்தியாலயம் போன்ற பல்வேறு பெயர்களின் கீழ் பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதி சிறப்பு பாடசாலை திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் இந்த மோசடியில் புதியதாகும்.

இந்த வெட்டுக்களின் ஆரம்பமாக, 1980களில் தேசிய பாடசாலைக் கொள்கை முன்கொணரப்பட்டு, ஒப்பீட்டளவில் உயர்ந்த வசதிகள் கொண்ட பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக குறிப்பிடப்பட்டன. எவ்வாறெனினும், தேசிய பாடசாலையாக பெயர் குறிப்பிடுவதற்கு சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். பாடசாலை மாணவர்கள் 2000க்கும் அதிகமாக இருத்தல், உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருத்தல், உயர் கல்வி பரீட்சை முடிவுகளில் பாடசாலையின் முன்னேற்றத்தை காட்டுதல், பண்புரீதியான கல்விக்கு அவசியமான கட்டிடங்கள், நூலகம், மற்றும் ஆய்வுக்கூடம் உட்பட வசதிகளை கொண்டிருத்தல் போன்றவை அந்த நிபந்தனைகளில் அடங்கும்.

இந்த வசதிகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யக் கூடிய பாடசாலைகள் மட்டும் தேசிய பாடசாலைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதே, அரசு அந்த வசதிகளை பூர்த்திசெய்யும் பணியில் இருந்து முழுமையாக ஒதுங்கிக்கொண்டு, அந்தப் பொறுப்பை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட பாடசாலை நலன் விரும்பிகள் மீது சுமத்தும் இலக்குடனேயே ஆகும்.

ஆரம்பத்தில் 18 பாடசாலைகள் மட்டுமே தேசியப் பாடசாலைகளாக பெயரிடப்பட்டிருந்தாலும், பின்னர் பிரதேச அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் கீழ், நாற்றுக்கணக்கான மிகவும் வசதி குறைந்த பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக அறிவிக்கப்பட்டதோடு, இன்று நாட்டில் மொத்தம் 323 தேசியப் பாடசாலைகள் உள்ளன. தமது பிள்ளைகளை வசதிகள் கொண்ட பாடசாலையில் சேர்க்கும் மக்களின் விருப்பத்தை சுரண்டிக்கொண்டு, இந்த போலி அறிவிப்புகள் மூலம் வாக்குகளை சுரண்டிக்கொள்வதே அரசியல்வாதிகளின் தேவையாகும். மக்கள் எதிர்பார்க்கும் வசதிகள் எதுவும் இந்த போலி தேசியப் பாடசாலைகளில் கிடைக்காததோடு அவற்றை பூர்த்தி செய்வதும் மேலும் மேலும் பெற்றோர்கள் மீதே சுமத்தப்படுகின்றது.

பல்வேறு பெயர்களின் கீழ் பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டாலும் ஆட்சிக்கு வருகின்ற முதலாளித்துவ அரசாங்கங்களினால் இரண்டு வர்க்கங்களின் கல்வியே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சில செல்வந்தர்களின் பிள்ளைகளுக்காக வசதிகள் கொண்ட பாடசாலைகளும் பல்கலைக்கழக கட்டமைப்பும் மற்றும் தொழிலாளர்களதும் கிராமப்புற வறியவர்களதும் பிள்ளைகளுக்காக தமது செலவில் நடத்திச் செல்ல நேரிட்டுள்ள, ஆட்டங்கண்டுப் போயுள்ள பாடசாலை கல்வியும் பல்கலைக்கழக கட்டமைப்புமாகும்.

கல்வி அமைச்சு முதல் முறையாக வெளியிட்டுள்ள முதல் தர பாடசாலை திட்டத்துக்காக 56 பாடசாலைகள் மட்டுமே தகமை பெற்றுள்ளன. இவற்றில் 25 பாடசாலைகள் மேல் மாகாணத்திலும் 9 பாடசாலைகள் மத்திய மாகாணத்திலும் உள்ளன. கிழக்கு, சப்பரகமுவ மற்றும் ஊவா போன்ற பின்தங்கிய மாகாணங்களில் ஒரு பாடசாலை மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் பரீட்சை கொள்கை மற்றும் எதிர்காலத் திட்டம் என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட மேல் குறிப்பிடப்பட்ட சுவர்ணவாஹினி கலந்துரையாடலில், அந்த பாடசாலைகள் எந்த மட்டத்தில் இருக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு அவற்றின் குறைபாடுகளை திருத்திக்கொள்வதற்காகவே இந்த புள்ளி விபரங்கள் இம்முறை வகுக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டன என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் பாடசாலைகளில் குறைநிறைகளை ஒழுங்கு செய்வது என்பது முழுமையாக பெற்றோர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், பாடசாலை அபிவிருத்திச் சபை மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் மூலம், ஆசிரியர்களின் சம்பளம் தவிர்ந்த ஏனைய சகல செலவுகளையும் பெற்றோர்கள் மீது சுமத்தி, தொழிலாள வர்க்கம் கடந்த காலத்தில் வெற்றிகொண்டவற்றில் எஞ்சியுள்ள, மட்டுப்படுத்தப்பட்ட இலவசக் கல்வியின் உரிமையையும் முழுமையாக துடைத்துக் கட்டுவதற்கு இப்போதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2005ல் நூற்றுக்கு 49 வீதமாக இருந்த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதம் இம்முறை 60 வீதமாக அதிகரித்துள்ளது பற்றி அமைச்சர் குணவர்தன இந்த கலந்துரையாடலில் பெருமைபட்டுக்கொண்டார். எவ்வாறெனினும், இந்தப் பரீட்சையில் 12,795 மாணவர்கள் 9 பாடங்களிலும் தோல்வியடைந்திருப்பது, கிராமப்புற பாடசாலைகளில் வசதிகளும் மற்றும் ஆசிரியர்களும் பெருமளவில் பற்றாக்குறையாக இருப்பதையே காட்டுகின்றது.

வெற்றிகொண்ட மட்டுப்படுத்தப்பட்ட கல்வி உரிமையின் கீழ் அடையப்பட்ட உயர்ந்த எழுத்தறிவு போன்ற அடிப்படை காரணிகள் மீண்டும் மறுபக்கம் திருப்பப்பட்டு, பாடசாலையை விட்டுச் செல்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதோடு கிராமப்புற பாடசாலைகளை மூடுவதும் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

உலக ரீதியிலான முதலாளித்துவ நெருக்கடியின் கீழ், இராஜபக்ஷ அரசாங்கத்தினால் கல்வி உட்பட நலன்புரிசேவை வெட்டுக்கள், துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நெருக்கடியின் சகல சுமையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவது, உலகம் பூராவும் சகல ஆளும் வர்க்கத்தினதும் கொள்கையாக ஆகியுள்ளதோடு அதற்குப் பதிலிறுப்பாக தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களதும் மற்றும் மாணவர்களதும் போராட்டங்கள் அபிவிருத்தியடைந்து வருகின்றன. சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புக்கள் மேற்கொள்ளும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தின் மூலம் முதலாளித்துவத்தின் தாக்குதலை தோற்கடிக்க முடியாது என்பதும், மாறாக முதலாளித்துவ அரசாங்கத்துக்கு தாக்குதலைத் தொடுப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது என்பதும் இதுவரையான அனுபவமாகும்.

இராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதற்கும், மற்றும் கல்வி உட்பட சமூக சேவைகளுக்காக ஒதுக்கப்படவேண்டிய பில்லியன் கணக்கான நிதியை விழுங்கிய இனவாத யுத்தத்துக்கும் ஆதரவளித்த மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும், முன்னாள் தீவிரவாதிகளதும் போலி இடதுகளதும் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் இலங்கை ஆசிரியர் சங்கமும், அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு எதிராக அரச நீதித்துறையில் முறைப்பாடு செய்வதையே தமது வேலைத் திட்டமாகக் கொண்டுள்ளன.

பாடசாலை கல்வியின் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டுவந்து, பண்பு ரீதியில் உயர்ந்த கல்வியை உறுதிப்படுத்துவதற்காக பில்லியன் கணக்கான நிதி ஒதுக்கப்பட வேண்டுமெனில், அது சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே சாத்தியமாகும். இந்த வேலைத் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் கல்வி வெட்டுக்கு எதிராக போராடுவதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நடவடிக்கை குழுவொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு  சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் சகல ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.