சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Conservatives narrowly win Greek election

பழமைவாதிகள் கிரேக்கத் தேர்தலில் குறுகிய வெற்றி

By Chris Marsden
18 June 2012

use this version to print | Send feedback

நேற்று கிரேக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சி சிரிசாவை குறுகிய அளவில் வெற்றி கொண்டது.

மொத்த வாக்குகளில் ND 30% பெற்றது. சிரிசா மிக நெருக்கமான இரண்டாம் இடத்தை 26.5% வாக்குகளைப் பெற்றது; இதற்குக் காரணம், பிந்தைய கட்சி, முக்கூட்டான ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணயநிதியம் (IMF), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவற்றுடன் கையெழுத்திட்டிருந்த உடன்பாட்டில் இருந்ந சிக்கன நடவடிக்கைகளைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்த வகையில் வெகுஜன ஆதரவைப் பெற்றிருந்ததுதான்.

இது புதிய கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்குத் கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு அரங்கத்தை அமைத்துள்ளது. கூட்டணிப் பேச்சுக்கள் 48 மணி நேரக் காலக் கெடுவைக் கொண்டுள்ள என்று பல நோக்கர்கள் கூறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், கட்சிகள் இரண்டாம் கிரேக்கப் பிணை எடுப்பான 130 பில்லியன் யூரோக்களுக்கான முக்கிய விதிகளுக்கு உறுதியளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது; இவை ஏற்கனவே நாட்டின் பொருளாதாரத்தை பேரழிவு வெட்டுக்களைக் கொடுத்துப் பெரும் சேதத்திற்கு உட்படுத்தியுள்ளன.

தேர்தல் முழுவதும், பிணை எடுப்பு விதிகளுக்கு எதிர்ப்புக் கூறினால் கிரேக்கத்திற்கு நிதி உதவி வெட்டப்பட்டுவிடும் என EU அச்சுறுத்தியிருந்தது. இது கிரேக்கத்தை அதன் நிதிய முறை சரிந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளும் அல்லது அதன் வங்கிகளுக்கு நிதியளிக்க கிரேக்க தேசிய நாணயத்தை மறுபடியும் அறிமுகப்படுத்தச் செய்யும். கடந்த வாரம் தாமதமாகிவிட்ட முக்கூட்டு நிதியின் 1 பில்லியன் தவணைக் கடன் கொடுக்கப்படாவிட்டால், ஓய்வூதியங்கள் மற்றும் பொதுத்துறை ஊதியங்களை ஜூன் 20க்குள் கொடுக்க முடியாது என்று கிரேக்க அதிகாரிகள் கூறிவிட்டனர்.

கிரேக்கத்தின் தொழிலாள வர்க்கத்தை மிரட்டுவதற்கான இம்முயற்சிகள் சிரிசாவின் வாக்குகள் கணிசமாக போனமாதம் நடைபெற்ற கிரேக்கத் தேர்தலில் கிடைத்த 16.7% ல் இருந்து அதிகம் பெறுவதைத் தடுக்க முடியவில்லை.

எண்கணித கணக்குப்படி ND ஒரு புதிய கூட்டணி அரசாங்கத்தை உடன்பாட்டிற்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகளுடன் சேர்ந்து அமைப்பது இயலும். கட்சித் தலைவர் அன்டோனிஸ் சமரஸ், கிரேக்கர்கள் யூரோவில் தொடர்ந்திருப்பதற்கு வாக்கு அளித்துள்ளனர் என்று கூறி, ஒரு தேசிய இடர்காப்பு அரசாங்கத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

சிரிசாத் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் ND தான் முதலில் கூட்டணி அமைப்பதற்கு முயல வேண்டும் என்று ஒப்புக் கொண்டார்.

ஆனால் வெளிப்படையான உடன்பாட்டுச் சார்புக் கூட்டணி அமைப்பது கணிசமான தடைகளை எதிர்கொள்கிறது. அத்தகைய கூட்டணியில் ND  இன் முக்கிய நட்பு அமைப்புசமூக ஜனநாயக PASOK, மொத்த வாக்குகளில் 12.5%ஐப் பெற்றதுநேற்று இரவு சிரிசா பங்கு பெறாவிட்டால் தான் கூட்டணியில் சேருவதற்கு இல்லை என அறிவித்தது. சிரிசா பெற்றுள்ள அதிக வாக்குகளும், குறைவான வாக்குப் பதிவினால் வெளிப்பட்டுள்ள பொது அதிருப்தியும் உடன்பாட்டுச் சார்பு உடைய கட்சிகள் ஆள்வதற்கு உரிமை பெற்றால் தொடர்வது ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் என்று PASOK யை நம்பவைத்துள்ளது.

நான்கு முக்கிய கட்சிகளையும் கொண்ட ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கம் தேவை என்ற கருத்தை PASOK முன்வைத்தது; இதில் சிறு ஜனநாயக இடது, சிரிசாவில் இருந்து பிரிந்த ஒரு வலது சாரியும் சேர்க்கப்பட வேண்டும். அதன் கணிப்பு தெளிவானது: சிரிசாவை ஒதுக்கி வைத்து கிரேக்கத்தில் சிக்கனத்திற்கு ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பை தெளிவாக மீறும் அரசாங்கம் மக்கள் எதிர்ப்பை முகங்கொடுக்க நேரிடும், திறமையுடன் ஆட்சி நடத்த முடியாது என்பதே அது.

அரசாங்கத்தை அமைப்பதில் தோல்வி என்பது மூன்றாம் தேர்தலை விளைவிக்கும்; யூரோப் பகுதியில் இருந்து கிரேக்கம் அகற்றப்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

புதிய ஜனநாயகக் கட்சியின் வெற்றியும், அது அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய வாய்ப்பும் முக்கியமாக ஐரோப்பிய, சர்வதேச ஆளும் உயரடுக்கின் அப்பட்டமான மிரட்டலின் விளைவுதான்.

வெள்ளியன்று Kathimerini க்கு, வெளியேற்றுவது குறித்து ஐரோப்பா வெறுமே பேசவில்லை என்ற தலைப்பில் புண்டர்ஸ் பாங்கின் தலைவர் ஜேன்ஸ் வைட்மான் கூறினார்: கிரேக்க அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளும் கையெழுத்திட்டுள்ள ஓர் உடன்பாடு உள்ளது.... எந்த நாடும் நம்மை தொற்று விளைவு என்று மிரட்டுவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது. இப்பேட்டி மற்ற ஐரோப்பிய செய்தித் தாட்களிலும் வந்துள்ளது; அதில் இத்தாலியின் Corriere della Sera, ஸ்பெயினின் El Pais ஆகியவையும் அடங்கும்; நிதியக் கரைப்பை எதிர்கொள்ளும் மற்ற நாடுகளுக்கு ஓர் அச்சுறுத்தல் என்னும் முறையில்.

யூரோக்குழுவின் தலைவர் Jean-Claude Juncker அதே தினத்தில் ஆஸ்திரிய செய்தித்தாளான Kurier இடத்தில், தீவிர இடது வெற்றிபெற்றால்நடக்காது எனக் கூறவதற்கு இல்லைநாணய ஒன்றியத்திற்கு விளைவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும்.

கிரேக்கத்தில் நிலையை ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோப்பகுதியிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என உறுதியாக இருக்கும் முதலாளித்து சார்பு அமைப்பான சிரிசா, இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தொழிலாள வர்க்கத்தை எதிர்ப்பதற்கு முறையிடுவதற்கு முற்றிலும் திறன் அற்று இருந்தது. உண்மையில், அதன் சிக்கன எதிர்ப்பு வனப்புரை இருந்தபோதிலும்கூட, தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்தைகளுக்கும் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தவர்களுக்கும் தன் நல்லநோக்கங்களை உத்தரவாதப்படுத்துவதற்கு அனைத்தையும் செய்தது.

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்றத் துணைத் தலைவருமான டாசோஸ் கௌரகிஸ் Athens News  இடம் வெள்ளியன்று சிரிசாவின் பொருளாதாரக் குழு செலவுகளைக் கட்டுப்படுத்துதல், புதிய நிதிகளை ஈர்த்தல், ஐரோப்பாவின் உள்கட்டுமான நிதிகளில் இருந்து போன்றவற்றைப் பற்றிப் பேச்சு நடதட்தும் என்று கூறினார்.

கிரேக்கக் கடன் குறித்து ஒரு சர்வதேச தணிக்கை தேவை என வலியுறுத்திய அவர், சீமென்ஸ், பாதுகாப்புப் பொருட்கள் வாங்கியதில் இலஞ்சம் கொடுக்கப்பட்டது போன்ற கடனின் அப்பகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றார். மற்றவற்றை நாங்கள் கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.

வங்கிகளோ, பெருநிறுவனங்களோ தேசியமயமாக்கப்படாது என்பதை தெளிவுபடுத்திய அவர் மேலும் கூறினார்: நாங்கள் சொல்வதைக் கேட்டால், நாங்கள் பொதுக் கட்டுப்பாடு தேவை என்கிறோம்.... பெரும்பான்மை பங்குதாரர் இல்லாமலேயே நீங்கள் நிர்வாகத்தைக் கொள்ளலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சிரிசா காட்டும் ஈர்க்கும் முறைகள் ஐரோப்பாவின் கடின நிலைப்பாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனத் தோன்றுகிறது. ஆனால் ஆளும் உயரடுக்கிற்கு ஐரோப்பா முழுவதும் மோசமான நிதிய நெருக்கடி சூழலாம், புரட்சிகர உட்குறிப்புக்களைக் கொண்ட தொழிலாள வர்க்க எதிர்ப்புக்களின் வெடிப்பு என்னும் ஆபத்தை முகங்கொடுக்க நேரிடலாம் என்பதை அது நன்கு அறியும்.

Sydney Morning Herald   “தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும்கிரேக்கம் இறுதியில் யூரோவில் இருந்து அகற்றப்படும் என்று கருத்துத் தெரிவிக்கும் பல ஏடுகளில் ஒன்று ஆகும். ஆனால் இப்பொழுது கிரேக்கம் கிட்டத்தட்ட ஆட்சி செய்யப்பட முடியாது என்றாலும்.... பிரச்சினைகள் பொருளாதாரத்தைவிடப் பரந்தவை. சமூக அமைதியின்மை காட்டுத்தீ போல் பரவும் திறனைக் கொண்டுள்ளது என அது எச்சரித்துள்ளது.

இச்சூழலில் சிரிசா இன்னமும் ஒதுங்கிய நிலையில் இருந்து தொழிலாள வர்க்கத்தை முக்கூட்டின் ஆணைகளுக்குத் தாழ்ந்து நிற்க வைக்கும் பங்கிற்கு கொண்டுவரப்படலாம்குறிப்பாக முக்கூட்டு சில பெயரளவுப் பூச்சுத் திருத்தங்களை பிணை எடுப்பு விதிகளில் கொண்டுவந்தால், அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லாவிடினும், சிரிசா தொழிலாள வர்க்கத்தின் சார்பை மாற்றி, கிரேக்க, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அடிப்படை நலன்களை அச்சறுத்தாத முன்னோக்கு வகையில்தான் அதை நிறுத்தவைத்துவிடும்.

நேற்ற இரவு, சிப்ரஸ் சற்றே எதிர்க்கட்சித் தோற்றத்தைக் கொண்டு, புதிய ஜனநாயகத் தலைவர் அன்டோனிஸ் சமரஸ் அரசாங்கத்தை அமைப்பும் வாய்ப்பை மக்கள் கொடுத்துள்ள உரிமை மற்றும் அவருடைய கொள்கைகளினால் கொண்டிருக்கிறார் என்பதை ஒப்புக் கொண்டார்.

 “வளர்ச்சிப் போக்குகளில் எதிர்க்கட்சி என்ற நிலைமையில் நாங்கள் இருப்போம் என்றார் அவர்; ஆனால் இது புதிய ஜனநாயகக் கட்சிக்கு அதன் கொள்கைகளை விசுவாசமாகக் குறைகூறும் நிலைப்பாட்டில் இருந்துதான். அரசாங்கம், புதிய ஜனநாயபம் இரண்டும் பெரிய பிரச்சினைகள் மக்களிடம் பேசாமல் செயல்படுத்தப்பட முடியாது என்பதை மனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய பிரச்சினை அடுத்த அரசாங்கத்தை மக்களிடம் பேசவைக்க எடுக்கப்படும் முயற்சி அல்ல. அத்தகைய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தைத் தாக்கும் கொள்கையில் உறுதியாகத்தான் இருக்கும்.

கிரேக்க முதலாளித்துவம் தன்னால் இயன்றது அனைத்தையும் செய்து, வழிவகைகள் அனைத்தையும் கையாளும்பொலிஸ், இராணுவ அடக்குமுறை உட்பட; முதலாளித்துவ ஊக வழக்கங்களினால் விளைந்துள்ள பொருளாதாரப் பேரழிவின் தாக்கத்தை தொழிலாளர்கள் அனுபவிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதற்காக. ஐரோப்பிய சக்திகள் தங்களுக்கு வர வேண்டிய சதையை வலியுறுத்தும்அவை யூரோப்பகுதியில் இருந்து கிரேக்கம் வெளியேற்றப்பட உடனே செயல்பட்டாலும், செயல்படாவிட்டாலும்.

கிரேக்கத் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் வாழ்க்கைத்தரங்களில் ஏற்கனவே வரலாற்றுத்தன்மை நிறைந்த சரிவைஅனுபவிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தும் பேச்சுக்கள் அவர்களுக்கு நிம்மதியைக்  கொண்டுவரும் என ஒரு கணம் நினைத்தாலும், அவர்கள் அழிக்கத்தான்படுவர், அற்பத்தொகைக்குத்தான் வேலை செய்ய வேண்டும், இழிந்த நிலைக்குத்தான் தள்ளப்படுவர்.

இப்பொழுது அனைத்துமே சுயாதீன அரசியல் அணிதிரள்வை கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதிலும் தொழிலாள வர்க்கம் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கொண்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும், அதன் அரசாங்கங்கள், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவதிலும்தான் தய்கியுள்ளது.